BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 31 July 2013

தேர்தலுக்கு விளக்கமாறு சின்னம்.

ஆரம்பத்தில் அன்னா ஹசாரேவுடன் சேர்ந்து ஊழலுக்கு எதிராக போராடி வந்த அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி என்ற கட்சியை ஆரம்பித்து அடுக்கடுக்காக காங்கிரஸ் மற்றும் பிஜெபி மீது குற்றசாட்டுகளை வீசி கொண்டிருந்தார்.

அவை அனைத்தும் விளம்பர நோக்கில் எங்கள் மீது வீசப்படும் குற்றசாட்டுகள் என இரு கட்சிகளும் சொல்லி வந்தாலும் எந்த குற்றசாட்டையும் மறுக்கவில்லை என்பது வேறு கதை

தற்பொழுது அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சி தேர்தலுக்கு தங்களது சின்னமாக விளக்கமாறு சின்னம் கேட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டை சுத்தம் செய்யும் துடைப்பமாக எங்கள் கட்சி இருக்கும் என ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி வேறு அளித்துள்ளார்.

# பட்டுகுஞ்சத்தோடு ஏகப்பட்ட விளக்கமாறு பார்த்துட்டோமே!


மீண்டும் பெட்ரோல் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் டாலருக்கு நிகரான ருபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது அறிந்ததே, சென்ற வாரம் 61 ருபாயை எதிர்கால வர்த்தகத்தில் கடந்த ருபாய் மீண்டும் 59 ருபாய் வரை வந்தது.

அப்போது ஏற்றிய பெட்ரோல் விலையை குறைக்க முயலாத பெட்ரோல் நிறுவனங்கள் நேற்று மீண்டும் டாலருக்கு எதிரான ருபாயின் மதிப்பு சரிந்ததை அடுத்து பெட்ரோல் விலையை .70 பைசா ஏற்ற திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை குறைந்தால் விலை குறைப்பை பற்றி யோசிக்காத அரசு, கொஞ்சம் ஏறினாலும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு ஆதரவாக பெட்ரோல் விலையை உயர்த்தி வருகிறது

மொத்த போக்குவரத்திற்க்கும் தற்பொழுது பெட்ரோல் மற்றும் டீசலையே நம்பியுள்ள இந்திய மக்கள் இதனால் பலமாக பாதிக்கப்படுவார்கள் என்றும் மற்ற பொருள்களின் விலையும் ஏறி இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் கொஞ்சமும் கவலைப்படாத மத்திய அரசு, அடுத்த வருடம் வர இருக்கும் தேர்தலில் மண்ணையே கவ்வும் என பல மத்தியதர மக்கள் பொதுவிலே பேசுவதை கேட்க முடிகிறது.

மக்களால் மக்களுக்காக அமைக்கப்படுவதே ஜனநாயக அரசு, ஆனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்களின் நலன் குறித்து எந்த அக்கறையும் காட்டுவதில்லை என்பது பல அரசியல் விமர்சகர்களின் கருத்து, இந்த போக்கு பி.ஜே.பி கட்சிக்கு ஓட்டு வங்கியாக மாறும் வாய்ப்புள்ளது என்று ஒரு தரப்பும், தேர்தல் நேரத்தில் விலை குறைப்பையும் சில சலுகைகளையும் காட்டி காங்கிரஸ் மீண்டும் வர முயற்சிக்கும் எனவும் சிலர் தகவல் தெரிவித்தனர்!

மீண்டும் பிசிசிஐ தலைவரானார் சீனுமாமா

மீண்டும் பிசிசிஐ தலைவரானார் சீனுமாமா

சீனுமாமாவின் மருமகன் குருநாதன் மெய்யப்பன் மீது ஸ்பாட்பிக்சிங் தொடர்பான புகாரை விசாரித்த பிசிசிஐ இரு நபர் குழு சீனுமாமாவின் மருமக புள்ளைக்கு க்ளீன் சர்ட்டிபிகேட் கொடுத்ததால் சீனு மாமா மீண்டும் பிசிசிஐ தலைவரானார். ஜக்மோகன் டால்மியா வகித்து வந்த இடைக்கால தலைவர் பதவி காலாவதியானது.

# சீனுவாசன்னா பொட்டு வச்சிக்கிட்டு பொங்கல் சாப்பிடுவார்னு நினைச்சிங்களா?

உத்திரபிரதேசத்தை 4 மாநிலமாக பிரிக்க மாயாவதி வலியுறுத்தல்.

உத்திரபிரதேசத்தை 4 மாநிலமாக பிரிக்க மாயாவதி வலியுறுத்தல்.

உத்திரபிரதேசத்தை பூர்வாஞ்சல், பண்டலேகாந்த், அவாத் மற்றும் மேற்கு உத்திரபிரதேசம் என 4 மாநிலங்களாக பிரிக்க கோருகிறார் உபியின் முன்னாள் முதல்வர் மாயாவதி, முன்பு உபியை சிறு மாநிலங்களாக பிரிக்க கோரிய சமாஸ்வாடி கட்சியோ தற்போது ஆட்சியில் இருப்பதால் அதன் தலைவர் அகிலேஷ் யாதவ் உபியை பிரிக்க கோருவதை எதிர்க்கிறார்.

மத்திய அரசு தலையிட்டு உபியை பிரிக்க வேண்டும் என மாயாவதி வலியுறுத்துகிறார்.

# 4 ஸ்டேட்ல ஒரு ஸ்டேட்லயாவது சி.எம்.மா இல்லாமல போயிருவோம் என்கிற ஆசை தானே மேடம்?

பாமக போராட்டத்தால் நட்டம் டாஸ்மாக் பாமகவிடம் 20 கோடி நஷ்ட ஈடுகேட்கிறது

பாமக போராட்டத்தால் நட்டம், அரசு போக்குவரத்து துறைக்கு அடுத்து டாஸ்மாக்கும் பாமகவிடம் 20 கோடி நஷ்ட ஈடுகேட்கிறது


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை கைதுசெய்த போது ஏற்பட்ட கலவரம் போன்றவற்றால் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழங்கள், டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பா.ம.க மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாமகவின் போராட்டத்தினால் மே 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை நேரத்துக்கு திறக்க முடியவில்லை, மாலை 6 மணிக்கே மூட வேண்டியது ஏற்பட்டதால் டாஸ்மாக் தரப்பில் ரூ.20 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரி விக்கப்பட்டது. இதை பாமகவிடம் வசூலிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட டாஸ்மாக் தரப்பு டாஸ்மாக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் வருகையும் பெருமளவில் குறைந்ததே வியாபாரம் குறைவுக்கு காரணம் ஆகும் என்றும் குற்றம் சாட்டினார்கள்.

# 20 கோடி கொடுத்தாலும் இந்த விளம்பரம் கிடைக்காதே பாமகவுக்கு

மதுவுக்கு எதிராக மதுரையில் மூன்றாம் நாளாய் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள்

மதுவுக்கு எதிராக மதுரையில் மூன்றாம் நாளாய் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்கள் 

மூன்றாவது நாளாக மதுரையில் ஜோ பிரிட்டோ மற்றும் நந்தினி உள்ளிட்ட ஐந்து மாணவர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.

சென்னை மற்றும் கோவையில் மது கடைகள் முற்றுகை, காரைக்குடி மற்றும் தஞ்சை மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை இன்று தொடங்குகின்றனர்......

தொடர்புக்கு 9080655521,9043912494

டிஜிபி ஆபிசில் காணாமல் போன 17 ஏஎஸ்பிகளின் ஆவணங்கள்

டிஜிபி ஆபிசில் காணாமல் போன 17 ஏஎஸ்பிகளின் ஆவணங்கள்

டெபுடி ஜெனரல் ஆஃப் போலிஸ் அலுவலகத்தில் பதவி உயர்வுக்காக காத்திருந்த 17 கூடுதல் எஸ்பி களின் ஆண்டு ரகசிய ரிப்போர்ட் காணாமல் போய்விட்டது, இந்த ரிப்போர்ட்டின் படி தான் அமைச்சகம் இவர்களுக்கு பதவி உயர்வு வழங்கும், இந்த ரிப்போர்ட் காணாமல் போனதால் இந்த 17 ஏஎஸ்பிக்களுக்கும் எஸ்பி பதவி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

# சங்கிலி திருடர்கள் ஆந்திரா ஓடிட்டாங்க, ஆவணத்திருடர்கள் டிஜிபி ஆபிஸ்ல புகுந்துட்டாங்களா?

அதிமுக- 29 திமுக 5- தேமுதிக- 2 தொகுதிகள்: டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

நாடாளுமன்ற‌ தேர்தல் கருத்து கணிப்பு: அதிமுக- 29 திமுக 5- தேமுதிக- 2 தொகுதிகள்: டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கட்சிகள் வெல்லக்கூடிய இடங்கள் என டைம்ஸ் நவ் கருத்துகணிப்பு முடிவுகள்

அதிமுக - 29
திமுக  - 5
தேமுதிக  - 2
காங்கிரஸ் - 1

2009 நாடாளுமன்ற‌ தேர்தலின் போதும் கூட திமுக கூட்டணி படுதோல்வி என்று இதே போன்றே கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டன, ஆனால் முடிவுகள் வேறு மாதிரி அமைந்தது.

# காங்கிரஸ் ஜெயிக்க போகும்னு சொல்கிற அந்த ஒரு தொகுதி எது?

மோடி பிரதமர் வேட்பாளர் இல்லையென்றாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை - நித்திஷ்குமார்.

மோடி பிரதமர் வேட்பாளர் இல்லையென்றாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை - நித்திஷ்குமார்.

மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்ப்பில் பாஜக கூட்டணியை விட்டு விலகிய பீகார் முதல்வர் நித்திஷ்குமார் மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வில்லையென்றாலும் கூட மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர இயலாது என்று கூறியுள்ளார்.

# கிளிக்கு றெக்கை மொளச்சிருச்சோ, பறந்து போயிருச்சி
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media