Thursday, 21 November 2013
டாக்டர் ராமதாஸ் தமிழ்நாட்டின் நரேந்திர மோடி - திருமாவளவன் விமர்சனம்
பிரபல தமிழ் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போது இவ்வாறு கூறியுள்ளார்.
''பா.ம.க. தலைவர் மருத்துவர் ராமதாஸ் தொடங்கியுள்ள 'அனைத்துச் சமுதாயப் பேரியக்கத்தை’ எப்படி மதிப்பிடுவீர்கள்?''
''பா.ஜ.க. என்பது கங்காரு என்றால், 'அனைத்துச் சமுதாயப் பேரியக்கம்’ என்பது அதன் வயிற்றுக்குள் அமர்ந்திருக்கும் கங்காருக் குட்டி. நரேந்திர மோடி இஸ்லாமியர்களைக் குறிவைத்து, இஸ்லாமிய வெறுப்பை வளர்த்தெடுத்து, அதன்மூலம் இந்துவெறியைத் தூண்டிவிட்டு இந்து வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறார். அதேபோல இவர் தலித் மக்களைக் குறிவைத்து, தலித் வெறுப்பை வளர்த்தெடுத்து, அதன்மூலம் இந்து ஆதிக்க சாதிவெறியைத் தூண்டிவிட்டு, அதை வாக்குகளாக மாற்ற முனைகிறார். ஆகவே, சாதியவாதமும் மதவாதமும் ஒன்றுதான். அவர், குஜராத்தின் ராமதாஸ்; இவர், தமிழ்நாட்டின் நரேந்திர மோடி!''
# நீங்க யாருங்க பாஸ்?
Subscribe to:
Posts
(
Atom
)