BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 15 August 2013

கலங்கிய தலைவா பட தயாரிப்பாளர், எதுவும் தெரியலை - தயாரிப்பாளரின் பிரஸ் மீட் - முழுவிபரங்கள்

டயலாக்கை உடனே வெட்டிடறோம், எங்களுக்கு டயலாக் முக்கியமில்ல, படம் வெளிவரணும் அதுதான் முக்கியம் : தலைவா பட தயாரிப்பாளர் பிரஸ் மீட்

ஒரு பக்கம் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்க, அவரின் பின்பக்கம் நின்ற அவருடைய மகனும் கண் கலங்கினார். மற்றொரு பக்கம் அவரின் சகோதரர்கள் வேகமாக ஓடிவந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு, சோகமே உருவாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றனர்.

“இப்போ தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் அவர்கள் உங்ககிட்ட ஒரு அறிக்கையை வாசிப்பார்”னு சொன்னவுடனே.., கையில பேப்பரை பிடிச்ச சந்திரபிரகாஷ் ஜெயின் விஷயத்தை நேரடியாகவே சொன்னார்.

ஒரு கட்டத்தில் அதற்கு மேல பேச முடியாது என்ற சூழலில், வந்திருந்த ரிப்போர்ட்டர்களின் கூட்டம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். ஆனால் பெரும்பாலான கேள்விகளுக்கு “எங்களுக்கு எதுவுமே தெரியல” என்ற ஒரே பதிலைத்தான் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும், டைரக்டர் ஏ.எல்.விஜய்யும் ‘மழுப்பலாக’ சொன்னார்கள்.

இதோ அவர்களின் முழுமையான நேரடி கேள்வி-பதில்களின் தொகுப்பு :

+ படத்தில் சில டயலாக்குகள் ஆளும் கட்சியை தாக்குவது போல இருப்பதாக சொல்லப்படுகிறதே?

தயாரிப்பாளர்  : யார் வேணும்னாலும், எப்போ வேணாலும் இந்தப் படத்தை பார்க்கலாம். அப்படிப்பட்ட எந்த டயலாக்கும் படத்துல கெடையாது. அப்படி யாரோட மனசையாவது புண்படுத்தும் படியான டயாலாக் இருந்தா அது உடனடியா வெட்டப்படும். ஏன்னா… எங்களுக்கு டயலாக் முக்கியமில்ல, படம் வெளிவரணும் அதுதான் முக்கியம்.

காவல்துறையில பாதுகாப்பு கேட்டிருக்கலாமே?

தயாரிப்பாளர் : அதுக்காகத்தான் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கோம், யாரால இந்தப்படம் தடை பட்டிருக்கு, எதனால இந்தப்படம் நிக்குது?ன்னு எங்களாலேயே ஒன்னும் சொல்ல முடியல. மற்ற மாநிலங்களுக்கும், ஊர்களுக்கும் பிரிண்ட்டை அனுப்பிச்சிருக்கோம், எல்லா ஊர்களிலும் படம் வெற்றிகரமா ஓடிக்கிட்டிருக்கு. ஆனா தமிழ்நாட்டுல மட்டும் ஏன் படத்தை வெளியில முடியலேன்னு எங்களுக்கு தெரியல.

+ இந்த படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு கவர்மெண்ட்டுக்கிட்டே இருந்து உங்களுக்கு மிரட்டல் ஏதாவது வந்ததா?

தயாரிப்பாளர் : அப்படி எதுவும் எங்களுக்கு செய்தி வரல. நாங்க ரிலீஸ் பண்றதுக்கு ரெடியா இருக்கோம்.

+ தியேட்டர்களுக்கு பாதுகாப்பு இல்லேங்கிற ஒரே காரணத்துக்காகத்தான் இந்தப்படம் ரிலீஸ் ஆகலையா? இல்லேன்னா வேற ஏதாவது காரணம் இருக்கா?

டைரக்டர்  : அது மட்டும் தான் காரணம்னு திரையரங்க உரிமையாளர்கள் எங்ககிட்ட சொல்றாங்க, வேற எதுவும் எங்களுக்கு தெரியல.

+ நீதிமன்றதுக்கு போகலாமே? ஏன் போகல?

டைரக்டர்  : நாங்க தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருக்கோம். அவரை நேரில் சந்திச்சி பிரச்சனையை சொல்லலாம்ணு முடிவு பண்ணியிருக்கோம். ஆனா அவங்க எப்போ எங்களை மீட் பண்ணுவாங்கன்னு தெரியல, அதுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கோம்.

+ நடிகர் விஜய் தரப்பிலிருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையா?

டைரக்டர்  : நேத்து ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார். இதுல என்ன ஒரு விஷயம்னா, இந்தப்படத்துல தப்பான வசனங்கள் இருக்கு, கவர்மெண்ட்டுக்கு எதிரான படம்னு இந்தப்படத்தைப் பத்தி தப்பான ஒரு ரூமர் வந்துக்கிட்டிருக்கு. ஆனால் அப்படியெல்லாம் படத்துல எதுவுமே கெடையாது. இந்தப்படம் ஒரு அரசியல் படமே கிடையாது. தயவு செஞ்சி யாரும் இதை நம்ப வேண்டாம்.

+ எஸ்.ஆர்.எம் குரூப் லஞ்சமா வாங்குற பணத்துல தான் இந்தப்படத்தை ரிலீஸ் பண்றாங்க, அதுனால தான் நாங்க மிரட்டல் கடிதம் அனுப்பிச்சிருக்கோம்னு மாணவர் புரட்சிப்படை சொல்றாங்கன்னு சொல்றாங்களே… அது உண்மையா?

டைரக்டர்  : இல்ல சார் அதைப்பத்தி எங்களுக்கு எதுவும் தெரியாது.

+ வெடிகுண்டு மிரட்டல் தான் ஒரே காரணம்னா, அந்த மிரட்டல் விடுத்தவர்களை போலீஸ் கைது பண்ணியிருக்காங்களா?

டைரக்டர் : அதுபத்தி தயாரிப்பாளர் ஏற்கனவே புகார் கொடுத்திருக்காரு… மத்தபடி எதுவும் தெரியல.

+ முதல்வரை எப்போ சந்தீப்பீங்க?

டைரக்டர்  : நாங்க அவங்களை மீட் பண்ண பெர்மிஷன் கேட்டிருக்கோம். ஆனா அவங்க இன்னும் அப்பாயிண்ட்மெண்ட் குடுக்கல.

+ அதுக்கு என்ன காரணம்னு நெனைக்கிறீங்க?

டைரக்டர்  : அவங்களுக்கு பல வேலைகளை இருக்கும். அவங்க கிட்ட அப்பாயிண்ட்மெண்ட் கேட்கத்தான் முடியும். அவங்க எப்போ பெர்மிஷன் தர்றாங்களோ, அப்போ தான் அவங்களை மீட் பண்ண முடியும். நடுவுல இப்போதான் நீங்க எங்களை மீட் பண்ணனும்னு அவங்களுக்கு நாங்க கண்டிஷன் போட முடியாது. அவங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கோம்.

+ உங்களோட அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

டைரக்டர்  : நாங்க முயற்சி தான் பண்ணிக்கிட்டிருக்கோம், எங்க கையில எதுவுமே இல்ல. நாங்க தியேட்டர்காரங்களை கெஞ்சிக்கிட்டிருக்கோம், அவங்களும் எங்களுக்கு சரியான ஒரு தகவல் கிடைக்கிறப்போ நாங்க சொல்றோம்ணு சொல்றாங்க. நாங்க முதல்வரை மீட் பண்ணும் போது எங்களுக்கு இந்த சிக்கலுக்கு ஒரு தீர்வு கிடைக்கலாம்னு காத்துக்கிட்டிருக்கோம்.

+ ஒவ்வொரு படத்துக்கும் முதல்வரை சந்திச்சா தான் போலீஸ் பாதுகாப்பு தருவாங்களா?

டைரக்டர்  : நாங்க இப்போ அந்த விஷயத்துக்குள்ளேயே போகலை. எங்களுக்கு படம் ரிலீஸாகணும் அதுதான் முக்கியம்.

+ வரிச்சலுகை கிடைக்காததுனால தான் படத்தை ரிலீஸ் பண்ணலையா?

டைரக்டர்  : அது மாதிரியெல்லாம் இல்லை சார்.

+  குறிப்பிட்ட ஒரு தொலைக்காட்சிக்கு சாட்டிலைட் ரைட்ஸை கொடுக்காததுனால தான் இந்த தடையா?

டைரக்டர்  : அப்படியெல்லாம் இல்லை சார். அதெல்லாம் ஒரு ரூமர் அவ்ளோதான்.

+ உண்மையான காரணம் தான் என்ன?

இருவரும் : எங்களுக்கு தெரியல சார்.

+ கேளிக்கை வரிக்குழு படத்தை பார்த்து என்ன சொன்னாங்க?

டைரக்டர்  : அவங்க படம் பார்த்தப்போ நாங்க யாருமே ஊர்ல இல்லை. என்ன சொன்னாங்கன்னு எங்களுக்கு தெரியல. ( தயாரிப்பாளர் இடைமறித்து ) அந்தப்படத்தை பார்த்துட்டு எங்க படத்துக்கு கேளிக்கை வரிச்சலுகை இல்லேன்னு லட்டர் வந்துடுச்சு.

+ வரிவிலக்கு சலுகை கொடுக்காததுக்கு என்ன காரணம்?

இந்தக் கேள்விக்கு டைரக்டரும், தயாரிப்பாளரும் எந்த பதிலும் சொல்லவில்லை.

+ முதலமைச்சரை பார்க்கிற வரைக்கும் நீங்க கோர்ட்டுக்கு போகலேன்னா, நீங்க அவங்களுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருப்பீங்களா?

தயாரிப்பாளர்  : அவங்க தான் எங்களை கூப்பிட்டு பேசணும்.

+ படம் நாளைக்கு ரிலீஸாகலேன்னா உங்களுக்கு எவ்ளோ கோடி இழப்பு வரும்?

தயாரிப்பாளர் : போன வாரமே படம் ரிலீஸாகியிருந்தா தமிழ்நாட்டுல மட்டும் சுமார் 30 கோடி ரூபாய் வசூலாகியிருக்கும், இன்னைக்கு வந்தருந்தா நாங்க கொஞ்சமாவது நஷ்டத்திலிருந்து தப்பிச்சிருப்போம்னு விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரங்களும் சொல்றாங்க. இனிமேலும் லேட் ஆக ஆக இதோட நெலைமை என்னன்னு எனக்கே புரியல. ஆனா இதை என்னோட பிரச்சனையா பார்க்காம திரையுலகினர் அவங்களோட பிரச்சனையா எடுத்துக்கிட்டு ஆதரவு தரணும்.

இதே சினிமாவுல நான் எத்தனையோ படங்களை எடுத்திருக்கேன், பைனான்ஸ் பண்ணியிருக்கேன். என்னால எந்தப்படமும் ஒருநாள் கூட லேட்டானதில்லை. அப்படித்தான் பல படங்களை நான் ரிலீஸ் பண்ணியிருக்கேன். அதனால திரையுலகினர் எல்லோரும் இந்த விஷயத்துல எனக்கு ஆறுதலா இருக்கணும்.

+ நீங்க படத்துல அண்ணாவோட வாரிசா விஜய்யை காட்டியிருப்பதாகவும், அதனால தான் இந்தப்படத்தை… ( இந்தக்கேள்வியை ஒரு நிருபர் கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கு போதே… நன்றி, வணக்கம் சொல்லி டைரக்டர் விஜய்யும், தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயினும் எஸ்கேப் ஆகி விட்டார்கள். )

ஆதலால் காதல் செய்வீர் FIR (பட விமர்சனம்)

ஆதலால் காதல் செய்வீர் FIR

படத்தின் இயக்குனர் சுசீந்திரன் ஏற்கனவே  வெண்ணிலா கபடி குழு, அழகர் சாமியின் குதிரை, நான் மகான் அல்ல போன்ற சிறப்பான படங்களை எடுத்தவர் என்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது இந்த படம்.

படத்தின் கதை இந்த கால டீன் ஏன் காதல் கதை, அதில் சாதி புகுந்தால் ஏற்படும் பிரச்சினை அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது தான், எங்கே "கெளரவம்" படம் போல ஓவர் டோஸ் கருத்து சொல்கிற படமாகிவிடாமல் அளவாக அழகாக எதார்த்தமாக எடுத்துள்ளார் இயக்குனர்.

டீன் ஏஜ் விளையாட்டு காதல் ஒரு நேரத்தில் மேட்டராகி மேட்டர் கருவாகிவிடுகிறது, பையனும் பெண்ணும் திருமணம் செய்துகொள்ள சாதி தடையாகிவிடுகிறது. பையனின் தந்தையின் சாதி, அரசியல் பின்புலன்கள் பெண்ணை கருகலைக்க சொல்ல கடைசியில் எப்படி அனாதைகள் பிறக்கிறார்கள் என்று சொல்லி முடிகிறது படம்.

முற்பகுதி படம் விளையாட்டு காதலும் சிரிப்புமாக சென்றாலும் பையனின் தந்தையாக நடிக்கும் ஜெயபிரகாஷ், பெண்ணின் தாயாக நடிக்கும் துளசி ஆகியோரின் சிறப்பான நடிப்பு, இரண்டாம் பகுதி படத்தின் கனம் எல்லாம் படம் ஒரு சிறந்த படமாக அமைய வைத்துள்ளது.

ஆதலால் காதல் செய்வீர் என்று சொல்லிவிட்டு காதல் செய்தால் கருவாகி உருவாகி என்னென்னவாகும் என்ற விபரீதத்தை எடுத்து சொல்லி பயமுறுத்துகிறது.

ஆதலால் காதல் செய்வீர் இளைஞர்களுக்கான படம் மட்டுமல்ல, பெற்றோர்களுக்குமான படமும் கூட‌

மதிப்பெண்கள் 3.5/5.0

படம் பற்றிய உங்கள் கருத்தை கமெண்ட்டில் போடவும்.

1,00,000 லைக்குகளை பெற்றது சற்றுமுன் ஃபேஸ்புக் பக்கம்

நன்றி! நன்றி!! நன்றி!!! ஒரு இலட்சம் லைக்குகளை பெற்றது சற்றுமுன் செய்திகள் பக்கம்.

சரியாக 8 மாதங்களுக்கு முன்பு 16ம் தேதி டிசம்பர் 2012ம் ஆண்டு "சற்றுமுன் செய்திகள்" ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. எட்டே மாதங்களில் இன்று ஆகஸ்ட் 15, 2013ல் ஒரு இலட்சம் லைக்குகளை பெற்றுள்ளது சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கம்.  மே மாதம் தான் 50,000 லைக்குகளை பெற்றிருந்த நிலையில் அடுத்த 50,000 லைக்குகளை மூன்று மாதங்களுக்குள் பெற்றுள்ளது. இதற்கு காரணமான சற்றுமுன் செய்திகள் பக்கத்தின் வாசகர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்.

சற்றுமுன் செய்திகள் எப்போதும் குரல் அற்றவர்களின் குரலாக உள்ளது, டிவி, பிரஸ் மீடியாக்க்கள் தொடக்கத்தில் மாணவர்களின் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டத்திற்கு கவரேஜ் கொடுக்காமல் அலட்சிய படுத்திய போது இணைய ஊடகமே அவர்களின் போராட்டத்தை உலகுக்கு சொன்னது. அப்போது மாணவர்களின் நேர்மையான போராட்டத்தின் பக்கம் நின்று செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து வெளியிட்டோம்.

மே மாதம் +2 ரிசல்ட் வெளியானபோது சலூன்கடைக்காரர் மகன் ஏழை மாணவர் டி.தினேஷ்குமார் 1165 / 1200 மதிப்பெண்கள் எடுத்திருந்த போதும் அவருக்கு  மருத்துவம் படிக்க வாய்ப்பிருந்தும் அதற்கான பொருளாதார வசதி இல்லாமல் இருந்த நிலையில் சற்றுமுன் செய்திகள் தொடர்ந்து அவர் குறித்து செய்திகள் வெளியிட்டது மட்டுமின்றி சற்றுமுன் செய்திகள் பக்கத்தில் விளம்பரம் செய்ய அனுமதித்து அந்த விளம்பரதாரர்கள் மாணவர் டி.தினேஷ்குமாருக்கு ரூ.8,000 பண உதவி செய்தனர். மேலும் @Kumaresan Manoharan என்கிற சற்றுமுன் செய்திகள் வாசகர் முயற்சி எடுத்து அம் மாணவருக்கு கவுன்சிலிங் செல்வதற்கான பண உதவிகள் செய்தார், மேலும் அம்மாணவன் மருத்துவ கல்வி முழுவதும் படிப்பதற்கு தேவையான பொருளாதார செலவுகளை @Kumaresan Manoharan என்பவரின் நண்பர்கள் முயற்சியால் கோவையை சேர்ந்த டிரஸ்ட் ஏற்றுக்கொண்டது. அம்மாணவனும் தற்போது கோவை அரசு மருத்துவ கல்லூரியில் முதலாண்டு மருத்துவம் படிக்கிறார், இந்த நேரத்தில் @Kumaresan Manoharan அவர்களுக்கு எமது நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

பல நேரங்களில் செய்திகளை முந்தி தருகிறோம், நிறைய செய்திகளை பிற காட்சி ஊடகங்கள், பிற இணையதளங்கள் தருவதற்கு முன்பே தந்துள்ளோம், அப்படி ஒரு செய்தியாக நடிகை கனகா உயிருடன் இருந்த போதே இறந்துவிட்டதாக  தமிழகத்தின் அனைத்து ஊடகங்களும் வெளியிட்ட செய்தியை போலவே நாங்களும் வெளியிட்டுவிட்டோம், அதற்கு அப்போதே மன்னிப்பு கோரியிருந்தோம், மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கோருகிறோம்.

சற்றுமுன் செய்திகள் பக்கம் ஒரு இலட்சம் லைக்குகள் பெற்றதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவிக்கும் அதே நேரம் தொடர்ந்து எங்கள் செய்திகளை படிப்பது மட்டுமின்றி உங்களிடம் செய்திகள் இருந்தால் அதை பகிர நினைத்தால் எங்கள் பக்கத்தில் அனுப்புங்கள், நாங்கள் பகிர்கிறோம். உங்கள் விமர்சனங்களையும் எங்களுக்கு தொடர்ந்து அனுப்புங்கள்,

சற்றுமுன் செய்திகள் எப்போதும் குரலற்றவர்களின் குரலாகவும், உண்மையின் பக்கம் இருப்போம் என்றும் இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்கள் நண்பர்களுக்கும் நமது சற்றுமுன் செய்திகள் பக்கத்தை ஷேர் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்

சற்றுமுன் செய்திகள் இணையதளம் http://www.satrumun.net/
எங்கள் மின்னஞ்சல் முகவரி satrumun.net@gmail.com
சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கம் http://www.fb.com/Satrumun
சற்றுமுன் செய்திகள் டிவிட்டர் பக்கம் http://www.twitter.com/satrumun_

மீண்டும் கவுண்டமணி!...

தமிழ் திரையுலகில் என்றும் மறுக்க முடியாத நகைச்சுவை நாயகனாக பெயரெடுத்தவர் நடிகர் கவுண்டமணி, இவரது நக்கல், நையாண்டிக்காகவே ஒரு நேரத்தில் திரைப்படங்கள் ஓடின, பெரிய இயக்குனர்களாக இருந்தாலும் எத்தனையோ வெற்றி படம் கொடுத்தவர்களும் கவுண்டமணி கால்ஷீட் கொடுத்தால் தான் சூட்டிங் என்று காத்திருந்த காலமும் இருந்தது.

2003 வாக்கில் மஞ்சல்காமாலையால் பாதிக்கபட்ட அவர் அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டார், சற்றே இளைந்த உடலுடன் மீண்டும் நடிக்க வந்தாலும் சிம்பு நடித்த மன்மதன் படத்தோடு மீண்டும் சிகிச்சைக்கு சென்று விட்டார், இவர் 750 திரைப்படங்களுக்கும் மேல் நடித்தவர், மூன்று படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார்.

தற்போது கே.பாக்யராஜ் மகன் சாந்தனு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து கொண்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மீண்டும் கவுண்டமணியின் நகைச்சுவையை ரசிக்கலாம் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி, கவுண்டமணி 490 என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இவராகவே இட்டுகட்டி நக்கலாக பேசும் சில வசனங்கள் திரை தவிர்த்து பொது வாழ்விலும் மக்கள் புழக்கத்தில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது.

சில உதாரண்ங்கள்

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

பெட்டர்மாஸ் லைட்டே தான் வேணுமா

இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா

நாட்டுல இந்த தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடிலப்பா



சுதந்திர தின நிகழ்வுகள்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடக்கூடாது என விமானநிலையம்,  ரயில்நிலையம் பகுதிகளில் காவல்துறை தொடர் சோதனையில் இருந்து கொண்டிருந்தது நாம் அறிந்ததே, சென்னை விமானநிலையத்தில் வாயிலில் இருந்து ஏழடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இன்று காலை சோதனையில் ஈடுபட்டிருந்த போலிஸார் குமார் மற்றும் முகமது ஆகியோர் மீது சந்தேகம் கொண்டு மறைவிட பரிசோதனைக்கு அழைத்து சென்றனர், அப்பொழுது அவர்களிடம் போதை மருந்து இருந்தது கண்டுபிடிக்கபட்டது, அவை எந்த வகை போதைபொருள் என்பது இப்போது வரை தெரியவில்லை, எப்படியாகினும் இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என காவல்துறை தெரிவித்தது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை தொடங்கலாம் என அணுமின் உற்பத்தி குழுமம் தெரிவித்ததன் அடுத்து இன்று கூடங்குளத்தில் உற்பத்தி தொடங்கியது, இன்று இரவிற்குள் 400 லிருந்து 500 மெகாவாட் வரை உற்பத்தி இருக்கும் என்றும் படிப்படியாக இது ஆயிரம் மெகாவாட்டாக உயரும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் இன்று காலை சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது, ஏற்கனவே பாட்னா பகுதியில் நேற்று ஒரு குண்டு வெடித்திருந்தது, அது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள், இன்று மீண்டும் குண்டு வெடித்தது பெரும் அதிர்ச்சிகுள்ளாக்கியது, தீவிரவாதிகள் ஊடுருவலுக்கு வாப்பியில்லை இந்த சம்பவத்திற்கு காரணம் உள்நாட்டு நக்ஸலைட்டுகளாக இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது

இன்று காலை மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்தார், அதற்கு முன்னரே நமது இந்திய பிரதமர் தமது உரையில் பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடந்தால் மட்டுமே சுமூகமான பேச்சு வார்த்தை சாத்தியம் என தெரிவித்திருந்தார், பாகிஸ்தான் அதை காதில் போட்டு கொண்ட மாதிரியே தெரியவில்லை, நிச்சயம் இது போரில் தான் முடியப்போகிறது என பலர் எச்சரித்து வருகிறார்கள்.


மீண்டும் உயருமா டீசல் விலை...



எப்போதும் இல்லாத வகையில் இந்த காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலையை தனியாரே ஏற்றிக்கொள்ளலாம், அதில் கட்டுபாடாக பெட்ரோல் வாரம் 3 ரூபாயும், டீசல் வாரம் .50 பைசாவும் ஏற்றிக்கொள்ளலாம் என அனுமதி அளித்திருந்தது.

தொடர்ந்து கச்சா எண்ணைய் விலை உயர்ந்து வந்ததாலும், கடந்த சில நாட்களாக டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாலும் எண்ணைய் நிறுவனங்கள் பெரும் நட்டத்தை சந்தித்து வருவதாக கூறி தொடர்ந்து எண்ணைய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கொண்டே இருந்தது.

பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவந்து விடுவோம் என சுதந்திர தின உரையில் பிரதமர் சொல்லி வந்தாலும் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமே பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான் என அறியாமல் இருப்பது வியப்பு, ஒரு பொருளில் தயாரிப்பு விலையுடன் அதன் போக்குவரத்து செலவுகளும் சேர்ந்து தான் சில்லறை விற்பனை விலை நிர்ணயிக்கப்படுகிறது, பெட்ரோல், டீசல் விலை குறையாமல் எவ்வாறு பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரப்போகிறார் பிரதமர்.

இந்நிலையில் இன்று பெட்ரோலிய நிறுவனங்கள் ஐம்பது, ஐம்பது பைசாவாக ஏற்றுவதால் நட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை, டீசல் விலையை ஒரே தடவையில் 3 ரூபாய் ஏற்ற அரசு அனுமதிக்க வேண்டும் என எண்ணைய் நிறுவங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது.

இது ஜனநாயக அரசா அல்லது முதலாளிகள் அரசா என்ற சந்தேகம் மக்களுக்கு பல நாட்களாகவே இருக்கிறது, இம்முறையும் எண்ணைய் நிறுவனங்களுக்கு சாதகமாகவே அரசு செயல்படம் என்றே தங்கள் தலைவிதியை நினைத்து நொந்து கொண்டுள்ளார்கள் இந்திய மக்கள்.

மேலும் அந்நிய முதலீடு இந்தியாவில் வேலை வாய்ப்பையும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் என நிதி அமைச்சர் சொல்லி வருகிறார், சிறு வியாபாரிகள் குறித்து அவருக்கு சிறிதும் கவலை இருப்பதாக தெரியவில்லை.

நட்டத்தில் இயங்கும் எண்ணைய் நிறுவங்களின் 2009-2010 லாப பட்டியலை பாருங்கள்

 

சுதந்திரதினம் - மாணவர்கள் கறுப்புதின ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைநகர் பூமா கோயில் முன்பு சுதந்திரதினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 26 மாணவர்களை அண்ணாமலைநகர் போலீஸார் கைது செய்தனர்.

அண்ணாமலைநகர் பூமா கோயில் முன்பு ஈழத்தமிழர் பாதுகாப்பு மாணவர் கூட்டமைப்பு மற்றும் மாணவர் விடுதலை இயக்கம் சார்பில் நீதிவள்ளல் தலைமையில் மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து இந்தியஅரசு எவ்வித நடவடிக்கை இல்லை. இதுவே ஒரு வடநாட்டினர் தாக்கபட்டால் குரல் கொடுக்கிறார்கள், இந்தியாவில் முழுமையான சுதந்திரம் இல்லை எனவே சுதந்திரதினத்தை கறுப்பு தினமாக அனுஷ்டிப்பதாக கூறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த டிஎஸ்பி ஆர்.ராஜாராம், அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.உதயகுமார் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவர்கள் 26 பேரை கைது செய்தனர்.


இன்று 67 வது சுதந்திர தினம்.

சுதந்திர தினத்தை ஒட்டி இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இந்தியர்களுக்கு வாழ்த்து உரை ஆற்றினார், அதில் இந்தியாவில் தீவிரவாதம், பிரிவினைவாதம் பெருமளவு குறைந்து விட்டதாகவும் மக்களும் குறுகிய மனப்பான்மை இல்லாமல் அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்தில் வாழவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்திய ராணுவர்கள் ஐந்து பேர் பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டதை குறித்து  பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் எல்லை பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து செயல்படவேண்டும், இப்பேச்சு வார்த்தை இனி ஒரு பொழுதும் இம்மாதிரி சம்பவங்கள் நடக்காமல் இருக்க இது உதவும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு மக்கள் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர், பண வீக்கத்தை குறைக்க தேவையானவற்றை அவரது மந்திரி சபை செய்து வருவதாக தெரிவித்தார், புதிய திறன் உள்ளவர்களுக்கு மாதம் 10,000 மானியமாக வளங்கப்படும் திட்டம் விரைவில் அறிமுகமாகும் என்றும் தமது உரைவில் பிரதமர் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தினத்தில் கொடியேற்ற வேண்டும் என்பதற்காக கடந்த 12 ஆம் தேதி கொடாநாட்டில் இருந்து சென்னை திரும்பியிருந்தார், சர்ச்சைக்குள்ளாகாது என்று இருந்தால் ஒருவேளை அங்கிருந்தே வீடியோ மூலம் கொடி ஏற்றியிருப்பார் - இது நமது செய்தியல்ல நாட்டு மக்கள் பேசிக்கொண்டது.

சுதந்திரம் நமது உரிமை என்றாலும் அதை நம் கடமை போல் நினைத்து செயலாற்ற வேண்டும், தன்னலமற்று கடமையோடு பணியாற்றினால் இந்தியாவை வல்லரசாக்கி விடலாம் என தமது உரையில் தெரிவித்தார்.

தமிழக முதல்வரின் அடுத்த டார்கெட் பிரதமர் பதவி தான், அதனால் தான் மொத்த இந்தியாவின் வல்லரசு ஆவதை குறித்து பேசியுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media