BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 19 June 2014

பீரித்தி ஜிந்தா வழக்கில் சாட்சியாக சச்சினின் மகன் !!

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை பீரித்தி ஜிந்தா தன்னுடைய பழைய நண்பன் பாலியல் தொல்லை கொடுப்பதாக காவல் துறையினரிடம் பூகார் கொடுத்தார் .

மேலும் நெஸ் வாடியாவின் தந்தை நுஸில் வாடியாவிற்கு நிழல் உலக தாதாவிடம் இருந்து மிரட்டல் வந்தது .

மேலும் இந்த வழக்கில் புதிய திருப்பமாக கிரிக்கெட் வீரர் சச்சினின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் சாட்சி சொல்ல அழைக்கப்பட்டுள்ளார் . பாலியல் தொல்லை சம்பவ இடமான வாங்கடே மைதானத்தில் சம்பவம் நடக்கும் போது அர்ஜூன் டெண்டுல்கர் அந்த இடத்தில் இருப்பதாக தெரிகிறது .


தொடரை வென்றது இந்தியா !! நம்பிகையை இழந்த ரசிகர்கள் !!


வங்கதேச அணியுடனான ஒரு நாள் தொடரைக் இந்தியா 2-0 என்று வென்றது .இன்று 3வது போட்டி நடைபெற்றது .முதலில் பேட் செய்த இந்திய அணி 34.2 ஓவர்களில் 119/9 என்று எடுத்து இருந்தது .அப்போது மழை குறுகிட்டது .இதனால் ஆட்டம் நடக்காமல் இருந்தது .மழை நிற்காததால் 8.10 மணிக்கு ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவித்தார்கள் .

இதனால் இந்தியா தொடரை வென்றது .பின்னி தொடர் நாயகன் விருதை வென்றார் .

இந்தியர்கள் தொடரை வென்றாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் .ஏனென்றால் நமது இளைஞர் பட்டாளம் அங்கு ஜொலிக்கவில்லை . இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக இருந்தது .மொத்தத்தில் நாம் நன்றாக விளையாண்டதால் வெல்லவில்லை அவர்கள் சரியாக விளையாடததால் தான் வென்றோம் .

இந்திய மாடல் உடன் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் திருமணம் !!

ஆஸ்திரேலியா நாட்டின் வேகபந்து வீச்சாளர் ஷான் டைட் .இவர் அதிவேகமாக பந்து வீசுபவர் .இவர் ஒருநாள் போட்டிகளில் 62 விக்கெட்டுகளையும் ,டி20 போட்டிகளில் 35 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளார் .இவருக்கு 31 வயதாகிறது .

இவர் மஷூம் சிங்க்ஹா என்ற இந்திய மாடல்லை காதலித்து திருமணம் செய்து உள்ளார் .இவர்கள் இருவரும் 4 வருடங்களாக பழகி வந்தார்கள் .கடந்த ஆண்டு காதலிப்பதாக ஒப்பு கொண்டார்கள் .இந்த திருமணம் ஜூன் 12ஆம் தேதி நடைபெற்றது .இந்த திருமணத்திற்கு ஆஸ்திரேலியாவில் இருந்து அவரது நண்பர்கள் வந்து இருந்தார்கள் .


இந்தியாவின் கிரிக்கெட் நட்சத்திரங்கள் யுவராஜ் சிங்கும் ,ஜாகிர் காணும் வந்து இருந்தார்கள் .இவர்களுது வாழ்கையை மும்பையிலும் ,அடிலெய்டிலும் மாற்றி மாற்றி வாழபோவதாக கூறினார்கள் .

திருமாவளவனால் உயிருக்கு ஆபத்து - கோவை கவிதா மீண்டும் புகார் [வீடியோ இணைப்பு]

திருமாவளவனால் உயிருக்கு ஆபத்து - கோவை கவிதா மீண்டும் புகார் [வீடியோ இணைப்பு]

கோவையை சேர்ந்த கவிதா என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பழகி தன்னை ஏமாற்றிவிட்டார் என்று சென்ற ஆண்டு காவல்துறையில் புகார் அளித்தார், மேலும் தனது சொத்துக்களை ஏமாற்றி பிடுங்கிவிட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.


பரபரப்பு அடங்கி இருந்த நிலையில் நேற்று மீண்டும் காவல்துறையில் புகார் அளித்த கோவை கவிதா தன்னால் திருமாவளவனுடன் சேர்ந்து வாழ்வது நடக்காது என்று தெரியும், எனது சொத்துக்களை மீட்டுக்கொடுத்தால் போதும் என்று தெரிவித்தார், கோவை கமிஷனரிடம் நேற்று அளித்த புகாரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு  தனது பிரச்சினைகளை சுமுகமாக முடித்து தருவதாக கூறினார் ஆனால் அதை செய்யவில்லை என்றும் தனது சொத்துக்களை விஜயக்குமார் என்பவர் நாகராஜ் என்பவரிடம் விற்க முயலுவதால் அதை மீட்டு தர வேண்டும் என்றும் கூறினார், மேலும் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தனது உயிருக்கு ஏதேனும் பிரச்சினை வந்தால் அதற்கு திருமாவளவன் தான் முழு பொறுப்பு என்றும் கூறினார்.

திருமாவளவனுக்காக வன்னியரசு கோவை கவிதாவிடம் பேச்சு வார்த்தை நடத்திய வீடியோவை சில வாரங்களுக்கு முன் சவுக்கு சங்கர் என்பவர் வெளியிட்டிருந்தார், அது உங்கள் பார்வைக்கு.


உலக கோப்பையில் சிலி நாடு வென்றதால் 12 மணி நேரம் செக்ஸ் பார்ட்டி வைக்கும் பார்ன் ஸ்டார் !!


சிலி நாட்டின் பிரபல பார்ன்ஸ்டார் மற்றும் மாடல் மார்லென் டால் . இவர் உலக கோப்பை தொடர் ஆரம்பிக்கும் போது தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் , ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் சிலி வென்றால் , தொடர்ந்து எட்டு மணி நேரம் செக்ஸ் பார்ட்டி நடத்துவதாக அறிவித்து இருந்தார் " .

அதன்படியே சிலி அணியும் போட்டியில் வென்றது . அவர் சொன்ன வாக்கை நிறைவேற்றும் படியாக அந்த பார்ட்டியை நடத்தினார் . மேலும் தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அந்த செக்ஸ் பார்ட்டியை 12 மணி நேரமாக மாற்றினார் .

இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தன்னை தொடர்பு கொள்ளும் விதமாக தன்னுடைய மொபைல் எண்ணையும் சமுக வலைதளத்தில் கொடுத்து இருந்தார் .

மேலும் ஸ்பெயின் அணியுடன் சிலி வென்றால் 16 மணி நேரம் செக்ஸ் பார்ட்டி வைப்பதகாக கூறினார் . அதேப் போல சிலி அணியும் நேற்று ஸ்பெயின் அணியை வென்றது .

இந்தியாவில் பிறந்த விஞ்ஞானி சஞ்சயா ராஜராமுக்கு உலக உணவு பரிசு வழங்கப்பட்டது !!!


பிரபல தாவர விஞ்ஞானி சஞ்சயா ராஜராம் தன்னுடைய கோதுமை ஆராய்ச்சியினால் இந்த உலகில் கோதுமை வளர்ச்சியை அதிகப்படுத்தியதால் உலக உணவு பரிசை கைப்பற்றினார் .

இந்த விருதை உலக உணவு பரிசிற்கான வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும்  எம்.எஸ்.ஸ்வாமிநாதன் புதங்கிழமை அறிவித்தார் . இந்த விருதை அவர் கோதுமை பயிரை வளப்படுத்த செய்த ஆராய்ச்சிக்காகவும் , உலகில் கோதுமை உற்பத்தியை அதிகப்படுத்தியதற்காகவும் சஞ்சயா ராஜராமுக்கு  இந்த விருது வழங்கப்படுவதாக எம்.எஸ்.ஸ்வாமிநாதன் தெரிவித்தார் .

சஞ்சயா ராஜராம் 480 வகையான கோதுமை வகைகளை கண்டறிந்துள்ளார் . இந்த 480 வகை கோதுமை பயிர்கள் 51 நாடுகளில் சிறு மற்றும் பெரிய விவசாயிகளால் பயன்படுத்தப் படுகிறது .

இந்த உலக உணவுப் பரிசு முதன் முதலாக 1986 ஆம் ஆண்டு போர்லாக் என்பவரால் வழங்கப்பட்டது . உலக மக்களின் பசியைப் போக்க சிறப்பாக ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது .

பூடானில் சாதனை செய்த மோடி !!

மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பூட்டான் சென்றார் . ஏன் பூட்டானை தேர்வு செய்தார் என்று நாம் பார்த்தோம் ..

மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக முடிந்து உள்ளது .அவர்களின் மரபை மீறி மோடியை பாராட்டி உள்ளார்கள் .

விவரம் என்னவென்றால் பூடான் நாடாளுமன்றத்திலும் ,பொதுகூட்டங்களிலும் யார் பேசுவதையும் ரசிப்பதை காட்டுவதற்காக கைதட்ட மாட்டார்கள் .ஏனென்றால் கைதட்டுதல் என்பது தீய சக்திகளை ,கெட்ட ஆவிகளை விரட்டுவதற்கு மட்டுமே செய்யபடுகிறது .

ஆனால் மோடியின் உரையை கேட்டு பல இடங்களில் கைதட்டி ரசித்தார்கள் .தங்களது மரபை மறந்து கைதட்டி ரசித்தார்கள் .மோடியின் பேச்சில் பூட்டான் மக்களும் வீழ்ந்துவிட்டார்கள்

30 மாடிக் கட்டிதத்தை 15 நாளில் கட்டி சாதனை !!!

நம்ம நாட்டில ஒரு குழியைத் தோண்டி அதை மூடுவதற்கே ஒரு மாசம் ஆயிடும் . ஆனா சீனாவில் 30 மாடிக் கட்டிதத்தை பதினைந்தே நாளில் கட்டி சாதனை படைத்துள்ளனர் .

பொதுவாக அஸ்திவாரம் தோண்டவே பல நாட்கள் ஆகும் . ஆனால் சீனக் கட்டிட கலைஞர்கள் இவை அனைத்தையும் 15 நாளில் முடித்து உள்ளனர் .

இந்தக் கட்டிதத்தை ஹுனான் புரோவின்ஸ் என்னும் நிறுவனம் கட்டி கொடுத்துள்ளது . ஒரு நாளைக்கு 2 மாடி என்ற வீதத்தில் கட்டியுள்ளனர் . இந்த சாதனைக்கு முக்கியமாக அவரகள் கூறுவது , கட்டிடம் கட்ட தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் சேர்த்த பின் கட்டிட்டம் கட்ட ஆரம்பித்ததே என கூறுகின்றனர் .

சரி , இவ்வளவு வேகமாக கட்டியாச்சு கட்டிடத்தோட தரம் எப்படி இருக்கும் அப்படி கேள்வி வருமே ??

குறுகிய காலத்தில் கட்ட பட்டு இருந்தாலும் கட்டிடம் நல்ல வலுவானதாக சான்றழிக்கப் பட்டுள்ளது . 9 ரிக்டர் அளவு நில அதிர்வை தாங்கும் சக்தி கொண்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது .

இவர்களின் முயற்சியை நாமும் வாழ்த்தலாமே !!!

தனது வீட்டீற்கு வெளியே நிர்வாணமாக சூரியக் குளியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து முடங்கியது!!

ஆஸ்த்ரியா நாட்டின் வியன்னா என்னும் பகுதியில் பெண் ஒருவர் தனது வீட்டின் மூன்றாவது மாடியில் வசித்து வருகிறார் . அவருக்கு சூரியக் குளியல் எடுக்க வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது .

இதனால் தனது வீட்டின் ஜன்னலைத் திறந்து , மெத்தையை விரித்து நிர்வாணமாக தனது உடலைக் காட்டியவாறு படுத்து இருந்தார் . தீடீரென ஒரு பெண் நிர்வாணமாக படுத்து கிடப்பதை பார்த்ததால் அங்கே கூட்டம் கூடியது . பல ஆண்கள் அந்த இடத்தில் கூடினர் .

அந்த இடத்தில் தீடீரென கூட்டம் கூடியதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது . பின்னர் போலிசார் வந்து அந்த கூட்டத்தை அப்புறப்படுத்தினர் . சிலர் இந்த நிகழ்ச்சியை படம் எடுத்த்னர் . பலர் வீடியோ எடுத்தனர் .


பீரித்தி ஜிந்தா அடுத்து என்ன செய்யப் போகிறார் ??

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை பீரித்தி ஜிந்தா தன்னுடைய பழைய நண்பன் பாலியல் தொல்லை கொடுப்பதாக காவல் துறையினரிடம் பூகார் கொடுத்தார் .

மேலும் நெஸ் வாடியாவின் தந்தை நுஸில் வாடியாவிற்கு நிழல் உலக தாதாவிடம் இருந்து மிரட்டல் வந்தது .

இதற்கு பின்னர் அவர் தன்னுடைய ஐ.பி.எல் அணியை விற்க போவதாகவும் , அமெரிக்காவில் குடியேறப் போவதாகவும் செய்திகள் வந்து கொண்டு இருந்தன . ஆனால் இந்த செய்திகளை முற்றிலுமாக மறுத்து விட்டார் பீரித்தி ஜிந்தா .

அவர் தன்னுடைய டிவிட்டர் இணைய தளத்தில் தெரிவித்துள்ளதாவது , " மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் . மீடியாவில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளதை நினைத்து ஆச்ச்ர்யப் படுகிறேன் . நான் என்னுடைய அணியை விற்கவில்லை . மேலும் அமெரிக்காவில் குடியேறப் போவதும் இல்லை . வதந்திகளை நம்பவேண்டாம் . நாட்டில் இதை விட முக்கியமான பிரச்சனைகள் பல உள்ள்ன " என்று கூறி இருந்தார் .

ஐபில் முடிந்ததையே தெரியாத ஏர்டெல் நிறுவனம் !!

ஐபில் திருவிழா ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதியோடு முடிவு பெற்றது .இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது .

ஆனால் இந்த முடிவுகள் ஏர்டெல் நிறுவனத்திற்கு தெரியவில்லை போலும் .தெரியவில்லையா அல்லது இது அவர்களின் தொழில் தந்திரமா என்று தெரியவில்லை .ஐபில் போட்டியின் அனைத்து அசைவுகளையும் லைவ் ஆக தெரிந்து கொள்ள ஒரு நம்பருக்கு அழைக்க சொல்கிறார்கள் .இதன் மூலம் பணம் பறிப்பது அவர்களது திட்டம் ஆகும் .

சில நபர்கள் தெரியாமல் அதற்கு அழைத்து விட்டால் அவர்களிடம் மாத கட்டணம் 30,45 என்று வாங்கிவிடுவார்கள் .இதனை போல பல சேவைகளை வைத்து உள்ளார்கள் .இந்த மோசடி ஏர்டெல்லில் மட்டும் அல்ல எல்லா நிறுவனங்களிடமும் உள்ளது .அவர்கள் இவ்வாறு செய்வதிற்கு பதில் காசு
 வேண்டும் என்கிற செய்தியை குறுந்தகவல் சேவையில் வாடிக்கையாளருக்கு அனுப்பலாம் .

பீரித்தி ஜிந்தாவை விட்டு விலகி இருங்கள் , இல்லாட்டி அவ்ளோ தான் - நிழல் உலக தாதா மிரட்டல் !!

 வாடியா குடும்பம் தெற்கு மும்பையின் சிகரம் என்றும் மிகவும் நேர்த்தியான குடும்பம் என்று பெயர் பெற்றது . ஆனால் கடந்த சில நாட்களாக அந்த குடும்பத்தின் நெஸ் வாடியா பீரித்தி ஜிந்தாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர்மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது !  ( http://www.satrumun.net/2014/06/blog-post_14.html )

நெஸ் வாதியாவின் அப்பா நுஸ்லி வாதியாவுக்கு நிழல் உலக தாதாவிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது . இதனால் நுஸ்லி வாதியா காவல் துறையிடம் இது குறித்து பூகார் செய்துள்ளார் . நிழல் உலக தாதவான ரவி பூஜாரி கூட்டத்தில் இருந்து மிரட்டல் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார் .

பிரிந்தி ஜிந்தாவை இனிமேல் தொல்லை செய்யக் கூடாது என்றும் , மீறி அப்படி நடந்தால் அவர்களின் வணிக நிறுவனத்துக்கு பலத்த அடி ஏற்படும் என்று மிரட்டி உள்ளனர் .

இதனால் வாடியா குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்கப் பட்டு வருகிறது ..

இலங்கை கடற்படையினர் அட்டகாசம் !!


கடலில் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர் . அவர்களின் 11 படகுகளையும் கைப்பற்றிச் சென்றனர் .

அவர்கள் அனைவரும் இந்திய எல்லையிலேயே மீன் பிடித்து கொண்டு இருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்கள் தங்கள் எல்லைக்குள் வந்து மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களைக் கைது செய்தனர் என்று தெரிகிறது .

ஹோமி ஜே பாபாவின் வீடு ஏலம் விடப்பட்டது !!


நேற்று இந்தியாவின் அனுசக்தி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் ஹோலி ஜெ பாபாவின் வீடு ஏலத்திற்கு வந்தது . அவரின் அந்த பிரம்மாண்ட பங்களாவை மெஹ்ராங்கிர் என்றும் அழைப்பர் .

இந்த  மெஹ்ராங்கிர் பங்களா 1,593 சதுர.மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது . இந்த பங்களா மூன்று மாடிகளைக் கொண்டது . இதன் தொடக்க விலையாக 257 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது . ஏலத்தில் இன்னும் ஒரு 115 கோடியைப் பெற்றது . மொத்தமாக அந்த பங்களா 372 கோடிக்கு ஏலத்தில் சென்றது .

புதிய மொபைலை வெளியிட்டது அமேசான் நிறுவனம் !!

அமேசான் தன்னுடைய மொபைலை ஜூன்18 ஆம் தேதி வெளியிடுவதாக தெரிவித்தது அதன் படி நேற்று தன்னுடை மொபைலை வெளியிட்டது அந்த மொபைலுக்கு பயர் ( FIRE ) என்று பெயரிடுள்ளது . ஏடி&டி நிறுவனத்தின் இரண்டு ஆண்டு ஒப்பந்தத்துடன் தன்னுடைய மொபைல் போனை வெளியிட்டது .



32 ஜிபி 12,000 ரூபாயும் , 64 ஜிபி 18,000 ரூபாய் என்றும் விலையிடப்பட்டுள்ளது . இந்த மொபைலின் அனைத்து மூலைகளிலும் சென்சார் பொறுத்தப்பட்டுள்ளது . இந்த நாங்கு சென்சார்களிலும் இன்ப்ராரெட் பொறுத்தப்பட்டுள்ளது . இதன் மூலம் அனைத்து பார்கோட் , பாடல்கள் , நம்பர்கள் முதலிய அனைத்தையும் ஃஸ்கேன் செய்திட முடியும் .

இந்த மொபைலில் டைனாமிக் முன்னோக்கு வசதியை புகுத்தியுள்ளது . இதன் மூலம் நாம் ஒரு படத்தைப் பார்க்கையில் நம் தலையை எந்த கோனத்தில் வைத்து பார்க்கிறோமோ அந்த கோனத்திற்கேற்ப படம் வேறுபட்டு நம் திரையில் தோன்றும் . நம் தலையின் கோனத்தைக் கண்டறிய மொபைலில் நான்கு இன்ப்ரா ரெட் கேமராக்கள் உள்ளது .

மேலும் ஏதாவது உணவுப் பொருட்களை அதன் முன் வைத்தால் அந்த உணவின் சத்து அளவை எவ்வளவு என்பதைக் காட்டும் .

மேலும் அமேசான் நிறுவனத்தின் சிறப்பு சேவைகளான எஃஸ் ரே மற்றும் செகண்ட் ஃஸ்கிரின் ஆகிய சேவைகளும் இந்த மொபைலில் உள்ளது ..

Wild World Cup Clash ஆஸ்திரேலியா-நெதர்லாந்த் மேட்சில் நடந்த அடிதடிகள்

வெளியவாடா பார்த்துக்கிறேன், கிரவுண்டை தாண்டிவிடுவியா, ஆஸ்திரேலியா-நெதர்லாந்த் மேட்சில் நடந்த அடிதடிகள்

Wild World Cup Clash என்று வர்ணிக்கப்படும் அளவிற்கு ஆஸ்திரேலியா-நெதர்லாந்த்போட்டியில் வீரர்களிடையே அடிதடிகள் நடந்தன.

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தோற்றாலும் ஜப்பான் அணி டீசண்ட்டாக விளையாடி பெயர் வாங்கியது என்றால் நேற்று நடந்த ஆஸ்திரேலியா-நெதர்லாந்த் போட்டியில் வீரர்களுக்கு இடையே அடிதடி.

வேண்டுமென்றே மோதுதல், ஓடும் போது கால் இடுக்கில் கால் விடுதல், காலை தட்டி விடுவது , இடிப்பது, அடிப்பது என நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியினர்கள் கால்பந்து மைதானத்திலேயே மோதிக்கொண்டனர், அது மட்டுமின்றி வெளிய வா பார்த்துக்கிறேன் என்று ஆரம்பித்து மைதானத்தை தாண்டிவிடுவியா என்ற ரேஞ்சில் சவால் மோதல்களும் நடந்தன, ஆங்கில கெட்டவார்த்தையான F*** நிமிடத்திற்கு ஒன்று என‌ வீரர்கள் வாயிலிருந்து விழுந்து கொண்டிருந்தது போட்டி முடிந்த பின்னும் கூட இந்த சண்டைகள் தொடர்ந்து கொண்டிருந்தது. இவர்கள் தான் இப்படி என்றால் இவர்களை ஒழுங்கு படுத்த வேண்டிய பயிற்சியாளர்களோ ஒரு படி மேலே போய் இவனை அடி, அவனை அடி என்று கத்திக்கொண்டிருந்தார்கள். நடுவர் பலமுறை எச்சரித்தும் போட்டி முழுவதும் மோதல்கள் தொடர்ந்தது, ஒழுங்கு நடவடிக்கையாக 2 ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்த போட்டியில் விளையாட முடியாது.

ஆஸ்திரேலியா 18 ஃபவுலும் நெதர்லாந்து 25 ஃபவுலும் செய்தார்கள்,

கடைசியில் 3-2 என்ற கோல்கணக்கில் நெதர்லாந்து வென்றது, ஆனாலும் சண்டை முடிந்த பாடில்லை, மேட்சிற்கு பின்பும் கூட இரு அணியினரும் திட்டிக்கொண்டனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media