செல்வகணபதி ஊழல் வழக்கு காரணமாக தனது எம்.பி
பதவியை இழந்ததால் அதற்கு இடைதேர்தல் வந்தது. முதல் நாள் அன்றே அதிமுக வேட்பாளர்
நவனீதகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார் .இன்று வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு
இன்று கடைசி நாள். இன்று வரை நான்கு சுயேச்சை வேட்பாளர் மட்டுமே மனுதாக்கல் செய்து
இருந்தனர்.
கட்சிகளின் சார்பில் யாரும் மனுதாக்கல்
செய்யவில்லை. 4 வேட்பாளர்களில் எல்லா தேர்தலில்களிளும் மனுதாக்கல் செய்யும் பத்மநாபன்
அனைவரும் அறிந்தவர். அந்த 4 வேட்பாளர்களின் மனுக்களும் தள்ளுபடி செய்யபட்டது .அதிமுகவிற்கு
போதிய எம்.எல்.ஏ.களின் ஆதரவு இருப்பதால் அதிமுக வேட்பாளர் போட்டியின்றி தேர்வாவது
உறுதியாகி விட்டது. இதன் மூலம் ராஜ்ய சபாவில் அதிமுக உறுப்பினர்களின் எண்ணிகை 11
ஆகிறது. அதனால் மோடி அமைச்சரவையில் இடம் கிடைக்குமா என்று அவர்கள் ஆவலுடன்
எதிர்பார்கிரார்கள்.