BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 7 October 2014

வேளாண்மை என்ற சொல்லின் விளக்கம்



வேள் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல் பொதுவாக கொடை, ஈகை ஆகியற்றைக் குறிக்கும்.நிலமானது தரும் கொடையாதாலால் இப்பெயர் வழங்கியிருக்கலாம். வேளான் என்னும் சொல் வெள்ளத்தை (நீரை) ஆள்பவன் என்னும் பொருளது என்பர்.வேளாண்மை என்ற சொல் “விருப்பத்துடன் பிறரைப் பேணுதல்” என்ற பொருளும் கொண்டதாகும். வேளாண்மையைக் குறிக்கின்ற agriculture என்னும் ஆங்கிலச் சொல் agricultūra என்னும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறக்கிறது. ager என்பது “நிலம்” என்றும், “cultura” என்பது “பண்படுத்தல்” என்றும் பொருள்தரும். எனவே, “நிலத்தைப் பண்படுத்தும்” செயல்பாடு “agricultūra” (“agriculture”) என்று அழைக்கப்படலாயிற்று. மேலும், “cultura” என்னும் சொல்லே “பண்பாடு” என்னும் செம்மைப் பொருளை ஏற்றது. அதைத் தொடர்ந்து, “cult” என்னும் சொல் “வழிபாடு” என்னும் பொருளிலும், உள்ளத்தைப் பண்படுத்தல் “கல்வி” என்னும் பொருளிலும் வழங்கலாயிற்று. 

தமிழில் “கல்வி” என்பது “அகழ்தல்” என்னும் பொருள் தருவதையும் இவண் கருதலாம்.இவ்வாறு, நிலத்தோடு தொடர்புடைய வேளாண்மைத் தொழில் மனித இனத்தின் உயர்நிலைச் செயல்பாடுகளை உணர்த்துகின்ற காரணி ஆயிற்று.

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

பெண்கள் பற்றிய 10 அதிரடி செக்ஸ் உண்மைகள்
http://www.satrumun.net/2014/07/10-s-facts-about-woment.html

ஜெயலலிதாவுக்கு பெயில் கிடைக்காதது ஏன் ??
http://www.satrumun.net/2014/10/ram-jethmalini-on-no-bail.html

இண்டர்நெட்டின் ரேட்டினை பல மடங்கு உயர்த்திய ஏர்டெல் , வோடாபோன் மற்றும் ஐடியா !!
http://www.satrumun.net/2014/10/2g-internet-prices-are-increased-by-mobile-operators.html

வயதோ 40, ஆனால் இன்னும் இந்த நடிகைகளின் கவர்ச்சி குறையவில்லை
http://www.satrumun.net/2014/10/look-like-20-but-actually-40.html



ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது என்று நினைத்து கோவிலுக்கு தீ வைத்து கொண்டாட்டம்
http://www.satrumun.net/2014/10/what-happened-today-evening.html

வாட்ஸ் ஆப்பை வாங்கி விட்டது பேஸ்புக், டீல் முடிந்து விட்டது
http://www.satrumun.net/2014/10/fb-buys-whatsapp.html

எகிறிக் கிடக்கும் எதிர்ப்பார்ப்பு : ‘கத்தி’ ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?
http://goo.gl/eRzk81

‘யான்’ படத்தை காய்ச்சி எடுக்கும் ரசிகர்கள் : ட்விட்டர், ஃபேஸ்புக்கில் தலை காட்ட முடியாமல் தவிக்கும் ஜீவா
http://goo.gl/8wiOEe

அதிக லைக் வாங்கி தருகிறேன் என்று ஏமாற்றுபவர்களை குறி வைத்து நடவடிக்கை எடுக்க உள்ளது பேஸ்புக் !!
http://www.satrumun.net/2014/10/faccebook-going-to-take-action-on-fake-likers.html

சிப்ஸ் பாக்கெட்டில் சிப்ஸ் இல்லை, காற்றுதான் இருக்கிறது என கடுப்பானவர்கள் நடத்திய நூதன போராட்டம்
http://www.satrumun.net/2014/10/south-koreans-protesting-in-a-different-way.html

சக்தி குறைந்த எல்.இ.டி லைட்டுகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபள் பரிசு !!
http://www.satrumun.net/2014/10/physics-nobe-prize-announced.html

வன்முறையில் ஈடுபட வேண்டாம் என முதல்வர் வேண்டுகோள்
http://www.satrumun.net/2014/10/new-order-from-new-cm.html

வாட்ஸ்அப் மூலம் பல இலட்சம் மெசெஜ்களை அனுப்பி தங்கள் மகளை கண்டுபிடித்த பெற்றோர் !!
http://www.satrumun.net/2014/10/how-they-find-a-missing-girl-from-watsapp-and-facebook.html

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மறுப்பு !! இதற்கு முன்னர் ஜாமீன் என்ற தகவல் நீதிமன்றத்திற்கு வெளியே பரவிய வதந்தி !!
http://www.satrumun.net/2014/10/jayalalaitha-granted-bail.html

முருங்கைக் கீரையின் மருத்துவ பயன்கள்
http://www.satrumun.net/2014/10/blog-post_50.html

ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு !
http://www.satrumun.net/2014/10/blog-post_10.html

மாதுளம்பழம் சாப்பிடுபவருக்கு மார்பக புற்று நோய் வராது
http://www.satrumun.net/2014/10/blog-post_7.html

ஐபோன் 6 இன் விலை வெளிவந்தது - அக்டோபர் 17 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது
http://www.satrumun.net/2014/10/iphone-6-prices-revealed.html

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் முதன் முதலாக இனிப்பு பறிமாறாமல் முடிந்த பக்ரீத் !!
http://www.satrumun.net/2014/10/for-the-first-time-no-excahnge-of-sweets-in-border.html

பள்ளிகளும் கல்லூரிகளும் இயங்கும் ஆனால் போராட்டமும் நடக்கும்
http://www.satrumun.net/2014/10/schools-and-colleges-will-function-as.html

மைக்ரோசாப்ட் நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்துக்கு அளித்த பரிசு !!
http://www.satrumun.net/2014/10/microsoft-gifts-twitter-account-to-facebook.html

மோடியுடன் இணைந்தார் சச்சின்
http://www.satrumun.net/2014/10/sachin-joins-with-modi-in-swach-bharath.html

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்த சந்தோஷம், கோவிலுக்கு தீ வைத்து கொண்டாட்டம்

இன்று ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது . அதன் தீர்ப்பு மாலை வந்தது. அதில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு விட்டதாக முதலில் செய்திகள் வந்தது. எண்டிடிவி முதற்கொண்டு எல்லா சேனல்களிளும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வந்து விட்டது என பிளாஷ் நியூஸ் வந்தது. இதனை பார்த்தவுடன் தமிழகம் முழுவதும் அதிமுக வினர் கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

எல்லா இடங்களிளும் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையர் கோவில் பகுதியில் உள்ள சொர்ணகாளிஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக மராமத்து பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதற்காக கோயிலை சுற்றி ஓலை தட்டியால் அடைக்கப்பட்டிருந்தது. அப்போது அதிமுகவினர் அங்கு பட்டாசு வைத்து கொண்டாடினர். அப்போது அந்த பட்டாசில் இருந்த தீ பொறிகள் கோவில் ஒலையின் மீது பட்டு அங்கு தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.

அப்போது அந்த பகுதியில் மழை பெய்ததால் பெரிய தீ விபத்து தவிர்க்கப்பட்டது. அதன் பிறகு அதிமுகவினர் கோவிலுக்கு தீ வைத்து விட்டதாக இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது;


ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்காதது குறித்து அவரது வழக்கறிஞர் என்ன சொன்னார் ??




சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் தனது தரப்பு வாதங்களை வைத்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் ஜெயலலிதா நிபந்தனை ஜாமீன் வழங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி விட்டார். இருந்தாலும் நீதிபதி சந்திரசேகரா ஜாமீன் வழங்க விரும்பவில்லை. அதனால் ஜாமீன் வழங்கவில்லை என தீர்ப்பு அளித்தார்.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. இந்த தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் ராம் ஜெதமாலனி கூறியுள்ளார். ஜாமீன் கேட்டு நாளை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய போவதாக தெரிவித்தார். 

சிப்ஸ் பாக்கெட்டில் அதிக அளவு காற்று இருக்கிறது என நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கொரியர்கள் !!



எப்போதாவது உங்கள் சிப்ஸ் பாக்கெட்டில் அதிக அளவு காற்று தான் இருக்கிறது என வருத்தம் அடைந்து இருக்குறீர்களா ?? அப்படி வெறுப்படைந்த சில கொரியர்கள் , கொஞ்சம் அறிவியலை சேர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் .


தென் கொரியாவில் சிப்ஸ் பாக்கெட்டில் அதிக அளவு காற்று இருப்பதால் , இதை எதிர்த்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர் . 160 சிப்ஸ் பாக்கெட்டை வாங்கிய அவர்கள் அதனை ஒன்றாக வைத்து கப்பல் போன்ற ஒன்றை அமைத்தனர் . திறக்கப்படாத 160 பாக்கெட்களை ஒன்றிணைத்து செய்த இந்த கப்பலில் இரண்டு பேர் அமர்ந்து பயணம் செய்தனர் . இவர்கள் இந்த சிப்ஸ் கப்பலில் 1.3 கிமீ பயணித்தனர் .

இந்த நிறுவனங்கள் அளித்த அறிக்கையின்படி , ஒரு குறிப்பிட்ட அளவு நைட்ரஜன் வாயு இருந்தால் தான் உள்ளே உள்ள சிப்ஸ் பாதிப்படையாமல் இருக்கும் . 

அதிக லைக் வாங்கி தருகிறேன் என்று ஏமாற்றுபவர்களை குறி வைத்து நடவடிக்கை எடுக்க உள்ளது பேஸ்புக் !!


சில நேரங்களில் சமூக வலைதளங்களில் உங்களின் வியாபாரத்துக்கோ அல்லது உங்கள் பக்கத்திற்கோ அதிக லைக் வாங்கி தருகிறேன் என்ற பெயரில் விளம்பரம் வரும் . இவ்வாறு வரும் அனைத்து விளம்பரங்களும் பொய் என்பதால் இவர்களை நீக்குவது குறித்து பேஸ்புக் நிறுவனம் யோசித்து வருகிறது .

இதற்காக பேஸ்புக் தனி திட்டம் ஒன்றை உருவாக்கி இது போன்ற பொய்யாக லைக் வாங்குபவர்களை தடுக்க திட்டமிட்டு வருகிறது .

இது குறித்து பேஸ்புக் அதிகாரி மாட் ஜோன்ஸ் கூறுகையில் , " இவர்கள் அனைவருக்கும் பணம் சேர்ப்பது தான் குறிக்கோளாக இருக்கிறது . பக்கத்திற்கு அதிக லைக்  வாங்கி தருகிறேன் என்று கூறுபவர்கள் பதிலுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை . இது போன்று லைக் வருவதனால் தங்கள் வியாபாரத்துக்கு எந்த இலாபமும் இல்லை என்று உணராதவர்களே இது போன்ற தாக்குதலுக்கு ஆளாகின்றனர் . இது போன்று ஏமாற்றுபவர்கள் மீது இனி தீவிர நடவடிககி எடுக்கப்படும் " என்றார் .


வாட்ஸ் ஆப்பை வாங்கி விட்டது பேஸ்புக், டீல் முடிந்து விட்டது

செல்போன்களில் மெசஜ் அனுப்புவதற்கு என பயன்படுவது வாட்ஸ் ஆப் ஆகும் . இது உலகம் முழுவதும் பிரபலமானது ஆகும். இதனை 450 மில்லியன் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனை சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமான பேஸ்புக் வாங்குவது என கடந்த பிப்ரவரி மாதம் முடிவு செய்தது.



ஆனால் விலை மட்டும் சரியாக முடிவாகவில்லை. அது இத்தனை நாட்களுக்கு பிறகு இப்போது முடிவுக்கு வந்துள்ளது. அதனை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் கோடிக்கு வாங்க உள்ளார்கள். பேஸ்புக் இந்தியாவில் மிகவும் பிரபலமாகி விட்டது. இப்போது அதற்கு அடுத்து வாட்ஸ் ஆப் பிரபலமாகி வருகிறது. இப்போது இருவரும் ஒன்று சேர்ந்து கலக்க உள்ளார்கள்.

சக்தி குறைந்த எல்.இ.டி லைட்டுகளை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபள் பரிசு !!



ஜப்பானிய விஞ்ஞானிகளான இசாமு அகசாகி , ஹிரோஷி அமனோ மற்றும் அமெரிக்க விஞ்ஞானியான ஷுஜி நகமுரா ஆகிய மூவருக்கும் 2014 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபள் பரிசு வழங்கப்பட உள்ளது . இவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சக்தி குறைந்த எல்.இ.டி லைட்டுகளை தயாரித்ததால் இவர்களுக்கு நோபள் பரிசு வழங்கப்பட உள்ளது .

அறிவியல் அமைப்பான ராயல் ஸ்விடிஷ் இது குறித்து கூறுகையில் , " உலகில் நான்கில் ஒரு பங்கு கரண்ட் லைட் எறிய வைப்பதற்காக பயன்படுவதால் இவர்களின் எல்.இ.டி உலகின் சக்திகளை பாதுகாக்க பயன்படும் " என்றனர் .



வயதோ 40 ஐ நெருங்கி விட்டது , ஆனால் இன்னும் இந்த நடிகைகளின் கவர்ச்சி குறையவில்லை

* ஐஸ்வர்யா ராய் (வயது 40)






* கரீனா கபூர் (வயது 34)




* ராணி முகர்ஜி (வயது 36)




* வித்யா பாலன் (வயது 36)




வன்முறையில் ஈடுபட வேண்டாம் என முதல்வர் வேண்டுகோள்


ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு செய்தார்கள். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவுக்கு எதிராக இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானால் அவர் வழக்கின் போக்கை மாற்றக் கூடும் என எதிர்தரப்பு வாதாடினர் . அரசு தரப்பில் வாதாடிய பவானி சிங் அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை என தெரிவித்தார்



நீதிபதி ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய அவசியம் இல்லை என்றும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தார் . அதோடு ஜெயலலிதாவுக்கு ஜாமீனும் வழங்கவில்லை. இது கர்நாடக அரசின் திட்டமிட்ட சதி என அதிமுக வினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்களுக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் யாரும் கடையடைப்பு மற்றும் வேலை நிறுத்த நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வழக்கு அம்மாவின் அரசியல் வாழ்க்கையை முடிக்க அவரது எதிரிகள் செய்துள்ள திட்டமிட்ட சதி என்றும் கூறினார்.

வாட்ஸ்அப் மூலம் பல இலட்சம் மெசெஜ்களை அனுப்பி தங்கள் மகளை கண்டுபிடித்த பெற்றோர் !!



செப்டம்பர் 28 ஆம் தேதி ஜானவி என்னும் மூன்று வயது குழந்தை தங்கள் பெற்றோருடன் இந்தியா கேட்டை சுற்றி பார்க்கையில் காணாமல் போனது . இதனால் பதற்றமடைந்த பெற்றோர்கள் தங்களால் முடிந்த வரை விளம்பரம் கொடுத்து குழந்தையைத் தேட தொடங்கினர் .

இறுதியில் அக்டோபர் 5 ஆம் தேதி தங்கள் மகளை மொட்டை அடித்த நிலையில் கண்டுபிடித்தனர் . இதற்காக அவர்கள் பல இலட்ச ரூபாய்களை செலவு செய்தனர் .

இது குறித்து அந்த குழந்தையின் அம்மாவின் சகோதரர் கூறுகையில் , " நாங்கள் பல பேர் ஒவ்வொருவரும் ஒரு வேலையைச் செய்தோம் . ஒருவர் அமைச்சரைப் பார்க்கவும் , ஒருவர் போலிசுடன் பணி புரியவும் , ஒருவர் பேஸ்புக் மற்றும் வாட்ஸப்பில் விளம்பரம் செய்தோம் . இந்த விளம்பரம் மூலம் ஜானவி குறித்த தகவல் பலருக்கு அனுப்பப்பட்டது . பேஸ்புக் விளம்பரத்துக்கு காசு கொடுப்பதன் மூலம் , பல பயனாளர்களுக்கு இந்த விளம்பரம் சேர்க்கப்படும் . இதற்கு அவர்கள் பெரும் செலவு செய்தனர் .

இந்த விளம்பரம் பரவி வருவதைப் பார்த்த குழந்தையை எடுத்தவர்கள் பயத்தில் அந்த குழந்தையை விட்டுவிட்டார்கள் . பின்னர் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் .

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மறுப்பு !! இதற்கு முன்னர் ஜாமீன் என்ற தகவல் நீதிமன்றத்திற்கு வெளியே பரவிய வதந்தி !!



இதற்கு முன்னர் ஜெயலலிதாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்று வந்த செய்திகள் அனைத்தும் நீதிமன்றத்திற்கு வெளிய பரப்பப்பட்ட வதந்திகள் . தவறான செய்திகளைப் பரப்பியதற்காக வருந்துகிறோம் . உண்மையி அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது .

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று விசாரனைக்கு வந்தது . ஜெயலலிதா சார்பாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜாரானார் .

ராம் ஜெத்மலானி முதலில் வழக்கை விரைவில் விசாரனைக்கு கொண்டு வர வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார் . ஆனால் நீதிமன்றம் அவரது முறை வரும் வரை காத்து இருக்க வேண்டும் என்று கூறியது . அவர் இந்த ஜாமீனை சில புள்ளிகளை முன்வைத்து வாதாடினார் . உடல் நிலைக் காரணம் காட்டி ஜெயலலிதா ஜாமீன் மனுவை வைத்தார் .

இவருக்கு எதிராக இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானால் அவர் வழக்கின் போக்கை மாற்றக் கூடும் என எதிர்தரப்பு வாதாடினர் . அரசு தரப்பில் வாதாடிய பவானி சிங் அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு இல்லை என தெரிவித்தார்

நீதிபதி ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய அவசியம் இல்லை என்றும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்தார் .

முருங்கைக் கீரையின் மருத்துவ பயன்கள்


கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக் கூட்டி உடல் வளர்ச்சியுறவும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில் நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.

முருங்கைக் கீரை - இதில் முக்கியமாக வைட்டமின் A, வைட்டமின் C, கால்ஷியம், இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஒரு கோப்பை முருங்கைச் சாறில் 9 முட்டை அல்லது அரை கிலோ வெண்ணை அல்லது 8 கோப்பை பாலில் உள்ள அடங்கியுள்ள வைட்டமின் A உள்ளது. தாது விருத்திக்கு மிகவும் ஏற்றது. உடல் சூடு, தலைவலி, அஜீரணம், தோல் சம்பந்தமான வியாதி, பார்வைக் குறைகளை நீக்கும்.
 

ஊழல் செய்தவர்கள் ஆதரவு தேவையில்லை: மோடியின் பேச்சுக்கு அ.தி.மு.க.,வில் எதிர்ப்பு !

 
 
ஊழல் வழக்கில் தண்டனை அடைந்து சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை' என, அரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசியிருப்பது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியானா மாநில சட்டசபை தேர்தல், வரும் 15ம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பிரசாரம் அம்மாநிலத்தில் உச்சகட்டத்தில் இருக்கிறது. மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் அரியானாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் நேற்று, பிரதமர் மோடி, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அரியானாவில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அரியானா மாநிலம், ஹிசார் என்ற இடத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.அப்போது, ''ஊழல் வழக்கில் தண்டனை அடைந்து, சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை,'' என, அவர் கடுமையாகப் பேசினார். அரியானாவில் முன்னாள் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டு, 10 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றுஇருக்கிறார்.

ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் உடல்நிலையை காரணம் காட்டி, பரோலில் வெளியே வந்திருக்கிறார். அரியானா மாநிலத்தில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, தீவிர பிரசாரத்திலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.இந்நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடியும் பிரசாரத்தில் ஈடுபட்டு, ஊழல் செய்தவர்களின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என பேசி, சவுதாலாவை மறைமுகமாக தாக்கியிருக்கிறார்.அவர், சவுதாலாவைக் குறிப்பிட்டே அப்படி பேசியிருந்தாலும், ஊழல் வழக்கில் சிக்கி, தற்போது ஜெயலலிதாவும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், அவரைக் குறிப்பிட்டே மோடி பேசியிருப்பதாக, அ.தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.

இதுகுறித்து, அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதும், தமிழகத்தில் அ.தி.மு.க.,வினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். உடனே, அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அதேபோல, தீர்ப்பை வரவேற்று, முதன்முதலில் அறிக்கை கொடுத்தவரும் அவர்தான்.ஆக, அ.தி.மு.க., எதிர்ப்பு நிலையில், தமிழக பா.ஜ.,வும், அகில இந்திய பா.ஜ.,வும் சென்று கொண்டிருக்கிறது. சுப்ரமணியன் சாமியும், ஜெ.,வை கடுமையாக விமர்சிக்கிறார். அவரை பா.ஜ., தலைவர்கள் யாரும் கட்டுப்படுத்தவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடியும், சவுதாலாவை விமர்சிப்பது போல, ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.நாளையே, மேல்முறையீட்டில், ஜெயலலிதா விடுதலையாகி வந்துவிட்டால், மோடி என்ன செய்வார்? இவ்வாறு, அவர் கூறினார்.ஊழல் வழக்கில் தண்டனை அடைந்து சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை' என, அரியானா சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசியிருப்பது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியானா மாநில சட்டசபை தேர்தல், வரும் 15ம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பிரசாரம் அம்மாநிலத்தில் உச்சகட்டத்தில் இருக்கிறது. மாநிலத் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் அரியானாவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் நேற்று, பிரதமர் மோடி, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, அரியானாவில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அரியானா மாநிலம், ஹிசார் என்ற இடத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார்.அப்போது, ''ஊழல் வழக்கில் தண்டனை அடைந்து, சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை,'' என, அவர் கடுமையாகப் பேசினார். அரியானாவில் முன்னாள் முதல்வராக இருந்த ஓம் பிரகாஷ் சவுதாலா, ஆட்சிப் பொறுப்பில் இருந்த போது, ஆசிரியர்கள் நியமனத்தில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டப்பட்டு, 10 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றுஇருக்கிறார்.

ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவர், சமீபத்தில் உடல்நிலையை காரணம் காட்டி, பரோலில் வெளியே வந்திருக்கிறார். அரியானா மாநிலத்தில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலுக்காக, தீவிர பிரசாரத்திலும் அவர் ஈடுபட்டிருக்கிறார்.இந்நிலையில்தான், பிரதமர் நரேந்திர மோடியும் பிரசாரத்தில் ஈடுபட்டு, ஊழல் செய்தவர்களின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என பேசி, சவுதாலாவை மறைமுகமாக தாக்கியிருக்கிறார்.அவர், சவுதாலாவைக் குறிப்பிட்டே அப்படி பேசியிருந்தாலும், ஊழல் வழக்கில் சிக்கி, தற்போது ஜெயலலிதாவும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், அவரைக் குறிப்பிட்டே மோடி பேசியிருப்பதாக, அ.தி.மு.க.,வினர் கடும் அதிருப்தி அடைந்திருக்கின்றனர்.

இதுகுறித்து, அ.தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டதும், தமிழகத்தில் அ.தி.மு.க.,வினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். உடனே, அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவர், தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அதேபோல, தீர்ப்பை வரவேற்று, முதன்முதலில் அறிக்கை கொடுத்தவரும் அவர்தான்.ஆக, அ.தி.மு.க., எதிர்ப்பு நிலையில், தமிழக பா.ஜ.,வும், அகில இந்திய பா.ஜ.,வும் சென்று கொண்டிருக்கிறது. சுப்ரமணியன் சாமியும், ஜெ.,வை கடுமையாக விமர்சிக்கிறார். அவரை பா.ஜ., தலைவர்கள் யாரும் கட்டுப்படுத்தவில்லை. இந்நிலையில், பிரதமர் மோடியும், சவுதாலாவை விமர்சிப்பது போல, ஜெயலலிதாவை மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.நாளையே, மேல்முறையீட்டில், ஜெயலலிதா விடுதலையாகி வந்துவிட்டால், மோடி என்ன செய்வார்? இவ்வாறு, அவர் கூறினார்.

மாதுளம்பழம் சாப்பிடுபவருக்கு மார்பக புற்று நோய் வராது

மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தின் “கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்” பத்திரிகையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது. அண்மைக் காலமாக, மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்று நோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது” என கலிபோர்னியாவின் டாரேட்டில் உள்ள சிட்டி ஆப் ஹோப் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்தின் இணை தலைவர் ஷியுவான் சென் தெரிவித்துள்ளார்.

மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழம் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான அமிலம் இருப்பது தெரியவந்துள்ளது. மாதுளையில் மருத்துவ குணங்கள் அதிகம். எனினும், இது ஆய்வக முடிவுதான். நிஜமாக இது சாத்தியமா என்பதை உறுதியாக கூற இயலாது” என ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் இன்டர்னல் மெடிசின் துறை பேராசிரியர் கேரி ஸ்டோனர் கூறினார்.

ஐபோன் 6 இன் விலை வெளிவந்தது - அக்டோபர் 17 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது

அதிக எதிர்பார்ப்புகளுடன் உள்ள ஐபோன் 6 இன் விலை வெளிவந்துள்ளது. இது வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனைக்கு வந்துவிட்டது.

16 ஜிபி வசதி கொண்ட ஐபோன் 6 இன் விலை - ரூ. 53,500
16 ஜிபி வசதி கொண்ட ஐபோன் 6 பிளஸ் இன் விலை - ரூ. 62,500


64 ஜிபி வசதி கொண்ட ஐபோன் 6 இன் விலை - ரூ. 62,500
128 ஜிபி வசதி கொண்ட ஐபோன் 6 இன் விலை - ரூ. 71,500

64 ஜிபி வசதி கொண்ட ஐபோன் 6 பிளஸ் இன் விலை - ரூ. 71,500
128 ஜிபி வசதி கொண்ட ஐபோன் 6 பிளஸ் இன் விலை - ரூ. 80,500

இதனை இன்று முதல் புக்.செய்யலாம். இவை அக்டோபர் 17 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.


10 நாட்களாக ஜெயிலில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா ?? - இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது

கடந்த வாரத்துக்கு முந்தைய சனிக்கிழமை அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு எழுதப்பட்டது. இதனை எதித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு செய்து இருந்தார்கள். இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால நீதிபதி ரத்னகலா இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.



இந்நிலையில், ஜாமீன் மற்றும் தீர்ப்புக்கு எதிரான மனுக்களை உடனடியாக விசாரிக்க வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் தேசாயிடம் கொடுக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்டார் அவர்.  அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதனால் அக்டோபர் 7 ஆம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடையாது ,

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மாலனி வாதாட உள்ளார். 10 நாட்களா ஜெயிலில் இருந்து வரும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்குமா என்று பார்ப்போம்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் முதன் முதலாக இனிப்பு பறிமாறாமல் முடிந்த பக்ரீத் !!




இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் வீரர்களும் இந்திய வீரர்களும் பக்ரீத் தினம் அன்று வாழ்த்துக்களையும் இனிப்புகளையும் பறிமாறிக் கொள்வது வழக்கம் . ஆனால் இந்த முறை எல்லைப் பகுதியில் நிறைந்து இருக்கும் பிரச்சனையால் இந்த நல்லெண்ண நடவடிக்கை முதல் முறை நடக்காமல் இருந்தது .

எல்லை பாதுகாப்பு துறை கூறுகையில் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் நுழைவதாலும் அத்துமீறுவதாலும் இந்தியப் படைகள் இனிப்புகளை வாங்க மறுத்துவிட்டது என்றனர் .

கடைசியாக நடந்த சண்டையில் காஷ்மீர் பகுதியில் 5 பொது மக்கள் இறந்தனர் . இந்த முடிவை இந்திய ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை மாலையில் எடுத்தனர் .

இந்த இரு பக்க வீரர்களும் முக்கியமான நிகழ்ச்சிகளின் போது ஒருவரையொருவர் வாழ்த்திக் கொள்வது வழக்கம் . கடைசியாக ஆகஸ்டு 14 , 15 தேதிகளின் போது வாழ்த்திக் கொண்டனர் .

பள்ளிகளும் கல்லூரிகளும் இயங்கும் ஆனால் போராட்டமும் நடக்கும்

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கி 4 வருட சிறை தண்டனையுடன் சிறையில் அடைத்து உள்ளார்கள். இதனை எதிர்த்து தமிழ்நாட்டில் ஒவ்வொரு அமைப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த வாரம் கேபிள் டிவி நிறுவனம் போராட்டம் நடத்தியது. அதற்கு அடுத்து தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் ஒடவில்லை. இந்நிலையில் இன்று  போராட்டத்தில் இறங்குவதாக தனியார் பள்ளிகள் அறிவித்து இருந்தது



இதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு வந்தது. போராட்டத்தில் இறங்குவதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அவர்கள் நலனுக்காக போராட்டத்தில் இறங்கலாம், ஒரு பொது நலனுக்காக போராட்டத்தில் இறங்கலாம். ஆனால் எந்த நலனும் இல்லாமல் ஒரு ஊழல் குற்றவாளியை தண்டித்ததற்காக போராட்டத்தில் இறங்குவது என்பது முட்டாள்தனமான செயல் ஆகும். இது ஊழல் தொடர்பான கண்ணோட்டத்தில் மாணவர்களின் மனதை பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும். ஊழல் செய்வது தவறில்லை என்று கூட அவர்கள் எண்ணுவார்கள்.

அது மட்டுமில்லாமல் இந்த சமயத்தில் விடுமுறை என்பது அவர்களின் கல்வியை பாதிக்கும். இன்று தேர்வுகள் வேறு நடக்க உள்ளன. இதனால் பள்ளி கல்வி துறை அதிகாரிகள் இதில் தலையீட்டு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். பள்ளிகள் இன்று வழக்கம் போல் இயங்கும். பள்ளி தாளாளர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். 

மைக்ரோசாப்ட் நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்துக்கு அளித்த பரிசு !!


மைக்ரோசாப்ட் நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்துக்கு பரிசு ஒன்றை அளித்துள்ளது . தனது மெசஞ்சர் டிவிட்டர் கணக்கினை பேஸ்புக்கிற்கு கொடுத்துவிட முடிவு செய்துள்ளது . 

பேஸ்புக் மெசஞ்சர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே . அந்த மெசஞ்சருக்கு என்று தனி டிவிட்டர் கணக்கு இல்லை . ஏனென்றால் @messanger என்னும் கணக்கினை மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எம்.எஸ்.என் மெசஞ்சர் என்பதற்காக பயன்படுத்தியது . 

இப்போது இந்த எம்.எஸ்.என் மெசஞ்சரை மைக்ரோசாப்ட் நிறுவனம் மூட உள்ளதால் இந்த கணக்கினை பேஸ்புக்கிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது . இதனை தங்கள் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் . 

கடந்த 15 ஆண்டுகளாக எம்.எஸ்.என் மெசஞ்சர்  இயங்கி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது . 

மோடியுடன் இணைந்தார் சச்சின்

அடுத்த 5 வருடத்திற்குள் இந்தியாவை சுத்தப்படுத்த " சுத்தமான இந்தியா " திட்டத்தை   மோடி துவங்கி வைத்தார் . காந்தியின் பிறந்த நாள் அன்றுஅவரின் கனவான சுத்தமான இந்தியாவை நிறைவேற்ற மோடி தன்னுடைய முதல் படியை எடுத்து வைத்துள்ளார் . இதனை தொடங்கும் விதமாக மோடி அவர்கள் கையில் துடைப்பத்துடன் சுத்தம் செய்து தொடங்கி வைத்தார் . மேலும் அனைத்து அரசு அலுவலகங்களில் உள்ள அரசு அதிகாரிகளும் சுத்தமான இந்தியாவை அமைக்க உறுதி மொழி ஏற்றுள்ளனர் . இந்த உறுதிமொழி மூலம் அரசு அதிகாரிகள் அனைவரும் ஒரு வருடத்தில் 100 மணி நேரங்களை சுத்தம் செய்ய பயன்படுத்துவோம் என உறுதிமொழி எடுத்துள்ளனர் .  இந்தியாவின் பெருவாரியான நகரங்கள் சுத்தமாக இல்லாததால் இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.



மேலும் இந்த திட்டத்தில் இணையுமாறு 9 நபர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று அவர்கள் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவை சுத்தப்படுத்துவதற்காக சச்சின் டெண்டுல்கர் இந்த திட்டத்தில் இணைந்து உள்ளார். அவரது ரசிகர்கள் பலரும் இந்தியாவை சுத்தப்படுத்த உதவுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் மோடியின் இந்த திட்டம் ஒரு அருமையான தேவையான திட்டம் ஆகும்.

2ஜி இண்டர்நெட்டின் ரேட்டினை பல மடங்கு உயர்த்திய ஏர்டெல் , வாடபோன் மற்றும் ஐடியா !!



மொபைல் ஆப்பரேட்டர்களான ஏர்டெல் ,வாடபோன் மற்றும் ஐடியா தனது 2ஜி இண்டர்நெட் சேவையின் விலையை அதிகபட்சமாக 100 சதவீதம் உயர்த்தியுள்ளது . அதுவும் ஜுன் முதல் செப்டம்பர் மாதத்துக்குள் இந்த விலையை உயர்த்தி உள்ளது .

சமீபத்தில் ஏர்டெல் 33 சதவீதம் விலையை உயர்த்தியுள்ளது . மற்ற இரண்டு நிறுவனங்கள் ஜூன் மாதம் முதல் விலையை உயர்த்த் தொடங்கிவிட்டன . இந்த மூன்று நிறுவனங்களும் மொபைல் சேவையில் 57 சதவீத வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது .

இந்த மூன்று நிறுவனங்களும் 155 ரூபாய்கு இருந்த 1 ஜிபி 2ஜி இண்டர்நெட் பேக்கின் விலையை 175 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளது . இது போன்று பேக் எதுவும் போடாமல் 10 கேபிக்கு 2 பைசா என்று வசூலித்து வந்த நிறுவனங்கள்
இப்போது 10 கேபிக்கு 4 பைசா வசூலிக்கிறது . அதாவது 100 சதவீதம் விலையை உயர்த்தியுள்ளது . 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media