BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 21 August 2014

சந்தையைக் கலக்கி வரும் டாப் பட்ஜெட் மொபைல்கள் !!



1 ) அசுஸ் ஜென்போன் - 4

விலை - ரூ.5,999



2 ) மைக்ரோமஸ் கேன்வாஸ் பையர் 

விலை ரூபாய் - ரூ.6,290


3 ) சியோமி எம் ஐ - 3 

விலை - ரூ. 13,999


4 ) மோட்டோ இ 

விலை - ரூ. 6,999


5 ) லுமியா 630

விலை - ரூ.10,193




சமந்தாவை தாக்கும் மகேஷ்பாபு ரசிகர்கள் !! அஞ்சான் பிகினியால் வந்த சலசலப்பு !!



தற்போது வெளியான அஞ்சான் திரைப்படத்தில் சமந்தா எப்போதும் இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டி நடித்து இருந்தார் . சமந்தாவின் இந்த கிளாமருக்காகவே நிறைய ரசிகர்கள் படத்தைக் காண தியேட்டருக்கு சென்றனர் .

இந்த சமந்தாவின் தாராளமான கிளாமரினால் மகேஷ்பாபு ரசிகர்கள் கோவம் அடைந்துள்ளனர் . இதற்கு முன்னர் மகேஷ் பாபு மற்றும் கிரிட்டி சனோன் இணைந்து நடித்த படத்தின் போஸ்டரை சமந்தா பிற்போக்காக இருக்கிறது என்பது போல குறை கூறினார் . இதனால் மகேஷ் பாபு ரசிகர்கள் கோவமாகி சமந்தாவைப் பற்றி குறை கூற ஆரம்பித்தனர் . இந்த சண்டை இப்போது தான் ஓரளவுக்கு தீர்ந்தது .


ஆனால் இப்போது சமந்தாவின் கிளாமரைப் பார்த்த மகேஷ் பாபு ரசிகர்கள் , அவரே அப்படி நடிக்கும் போது மற்றவரை குறை கூற கூடாது என்று மீண்டும் சண்டையை ஆரம்பித்துள்ளனர் .


அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜெயலலிதா பேனர்களை அகற்ற கோர்ட் உத்தரவு




ஜெயலலிவை வரவேற்று மதுரையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ் பேனர்களை உடனடியாக அகற்றவேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை நகருக்கு வரும் ஜெயலலிதாவை வரவேற்று பல்வேறு பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே மதுரையில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் முறைகேடாக வைக்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பிளக்ஸ் அனைத்தையும் நீக்க உத்தரவிட்டார்.


இந்திய அணியின் புதிய கோச் ஆகிறார் ராகுல் டிராவிட் ??




சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-1 என படுதோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் என்று கூறப்பட்டு வருகிறது. எனவே அவரை தூக்குவதற்கு பிசிசிஐ யோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன. அப்படி அவரை தூக்கினால் அந்த இடத்தை யார் நிரப்புவது என்று யோசித்து வருகிறது. இந்நிலையில் அவர்கள் முதல் சாய்ஸ் ஆக இருப்பது ராகுல் டிராவிட் தான். விரைவில் டிராவிட் அந்த பதவிக்கு வருவார் என எதிர்ப்பார்க்கலாம்.

நிர்வாணத்துக்கு பிறகு அமீர் கான் எப்படி உள்ளார்



ஆமிர் கான் தற்போது நடித்து வரும் படம் பிகே. இந்த படத்தின் முதல் போஸ்டர் கடந்த வாரம் வந்தது. அதில் ஆமிர் கான் நிர்வாண போஸ் தந்ததால் அது கடும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் நேற்று அதன் 2 வது போஸ்டர் வந்தது. அதில் பேண்டு  உடன் புதிதாக தோன்றியுள்ளார்.


ஆவின் அறிமுகம் செய்துள்ள லாங் குல்பி




நுகர்வோர் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற ஆவின் ஐஸ்கிரீம் வகைகளான குல்ஃபி, மேங்கோ டூயட், சாக்கோபார், பைனாப்பிள் டூயட் உள்ளிட்ட பால் பொருள்கள் புதிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று லாங் குல்பி என புதிதாக அறிமுகம் செய்து உள்ளார்கள்.இதற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.  புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ.30 விலையுள்ள லாங் குல்ஃபி ஆவின் பாலகம், ஆவின் உரிமம் பெற்ற சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி இன்று நாட்டுக்காக தேவையான ஒன்றை தர உள்ளார்




நாக்பூர் மாவட்டம் ராம்டெக் தாலுகாவில் உள்ள மவுடாவில் தேசிய அனல் மின்சார கழகம் சார்பில் சூப்பர் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக ரூ.5 ஆயிரத்து 459 கோடி மதிப்பீட்டில் தலா 500 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட இரு மின் உற்பத்தி பிரிவுகள் அமைக்கும் பணி முடிந்து உள்ளது. இந்த முதல்கட்ட மின் உற்பத்தி பிரிவுகள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மராட்டியம் மட்டுமின்றி குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கோவா, ஜம்மு– காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த மின்நிலயத்தை மோடி இந்தியாவுக்கு அர்பணிக்க உள்ளார்.

இந்த விநாயகர் சதுர்த்திக்கு வருகை தர இருக்கும் புதிய விநாயகர்




இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி 29 ஆம் தேதி கொண்டாட பட உள்ளது. இந்த விநாயகர் சதுர்த்திக்கு புதிய விநாயகர் வருகை தருகிறார். இந்நிலையில் இந்த முறை சுற்றுசூழலை அதிகம் பாதிக்காத வண்ணம் காகித்தத்தால் ஆன விநாயகர் சிலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவை காகிதம், மற்றும் டீ கப் ஆகியவற்றால் செய்யப்பட்டவையாக உள்ளன.

தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா





அதிமுக பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அ.தி.மு.க. சட்ட திட்ட விதிகளின் படி, கட்சி அமைப்புகளுக்கான பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும். அந்தவகையில் கடந்த 2008-ம் ஆண்டு பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடந்தது. தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வரும் 29-ந் தேதி நடைபெறும் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பெயரில் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்வதால் அவர் வெற்றி பெறுவது உறுதி ஆகும்.

ராஜா ராணி நாயகிக்கு நாளை திருமணம்




நடிகை நஸ்ரியா தமிழில் ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமாகி ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ படங்களில் நடித்தவர். இயக்குநர் பாசில் மகனும் மலையாள நடிகருமான பகத் பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களுக்கு நாளை இஸ்லாம் முறைப்படி திருமணம் நடைபெறுகிறது.

தோனிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி தந்துள்ள சில முக்கியமான அறிவுரைகள்




சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து உடனான டெஸ்ட் தொடரில் படுதோல்வியடந்த இந்திய அணியை வழிநடத்திய கேப்டன் தோனிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

* அயல்நாடுகளில் அவரது பேட்டிங்கில் முன்னேற்றம் வந்து விட்டது. ஆனால் கேப்டன்சியில் மாற்றம் தேவை.

* பலர் அவரை விமர்சனம் செய்கிறார்கல், சிலர் அறிவுரை கூறுகிறார்கள், அவை அனைத்தும் தனது நல்லதுக்கு என தோனி புரிந்து கொள்ள வேண்டும்.

* அவர் இன்னும் சாதுரியத்துடனும், கற்பனையுடனும் செயல்படுவது அவசியம். டெஸ்ட் போட்டிகளில் நல்ல கேப்டனாக அவர் வரவேண்டுமெனில் விரைவு முடிவுகளை எடுக்க வேண்டும்.

* ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதை போல் , டெஸ்ட் போட்டிகளிளூம் சிறப்பாக செயல்பட வேண்டும்.

* அயல்நாடுகளில் டெஸ்ட் கிரிக்கெட்டை எதிர்கொள்வது எப்படி என்பதை அறிய தோனி வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தோனி தோல்வியடைந்து வருகிறார்.

* இன்னும் 2 மாதங்களில் ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன் தோனி தன்னை சுயபரீசீலனை செய்து நல்ல கேப்டனாக மாற வேண்டும்.

ஜி-மெயில், யூடியூபில் வர இருக்கும் புதிய மாற்றம்




13 வயதுக்கு உட்பட்டவர்கள், இணைய சேவை கணக்குகளைப் பெற, ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய இரு நிறுவனங்களும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. ஆனால், பலர் வயது வரம்பை மறைத்து, சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கூகுள் நிறுவனமே அவர்களை நேரடியாக கணக்கு தொடங்க அனுமதிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இனி 13 வயதுக்குட்பட்டவர்களூம் ஜி-மெயில், யூடியூப் போன்றவற்றில் கணக்கு தொடங்கி கொள்ளலாம் என அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.  ஆனால் இவர்களின் அக்கவுன்ட் பெற்றோர்களின் கண்காணிப்பின் கீழ் செயல்படும்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media