BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 19 May 2013

மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த ஒரு சிறப்பு திருமணம்


மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் நடந்த ஒரு சிறப்பு திருமணம்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தையடுத்த என்.வேடப்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் -உலகுமுத்து தம்பதியினர் மகன் முத்துப்பாண்டிக்கும் (32),மதுரை தெற்கு பழங்காநத்தத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் - மகேஸ்வரி தம்பதியினர் மகள் முத்துலட்சுமிக்கும்(27) திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி சன்னதியில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இருவரும் சுமார் 3 அடி உயரம் மட்டுமே உள்ளவர்கள். முத்துலட்சுமி 9 வரையிலும், முத்துப்பாண்டி 7 வரையிலும் படித்துள்ளனர்.

இவர்களுக்கு புதூர் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ், வேடப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் ஆவுடையப்பன், மதிமுக மாநில விவசாய அணி துணை செயலர் அ.வரதராஜன் ஆகியோர் முன்னிலையில் இத்திருமணம் நடந்தது.

#நாமும் ஒரு லைக் போட்டு இந்த தம்பதிகளை வாழ்த்துவோம்

நன்றி நெல்லை ஆன்லைன்.காம்

ஓட்டுக்கோ படையாட்சி சாதி, டிவியிலோ சாதியில்லை முழக்கம் இது தான் முற்போக்கு


ஓட்டுக்கோ படையாட்சி சாதி, டிவியிலோ சாதியில்லை முழக்கம் இது தான் முற்போக்கு

சிதம்பரம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர் பாலகிருஷ்ணன், மற்ற பல கம்யூனிஸ்ட் தோழர்களை போலவே இவரும் நல்லவர், லஞ்சம் வாங்காதவர், எம்.எல்.ஏ பதவியை வைத்து கட்டைப்பஞ்சாயத்து செய்யாதவர், அதிகார துஷ்பிரயோகம் செய்யாதவர், சொத்து சேர்க்காதவர். தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரிய இழப்பை ஏற்படுத்த இருந்த அண்ணாமலை பல்கலை நிர்வாகத்தை எதிர்த்து கடும் முயற்சிகளுக்கு பின் அண்ணாமலை பல்கலையை அரசு கையகப்படுத்த முக்கிய காரணமாக இருந்தவர், இதற்காக யாருக்கும் விலை போகாதவர்.

சமீபத்திய சாதி மோதல்கள் தொடர்பாக டிவியில் விவாதத்தில் வன்னியர்கள் சாதிவெறியோடு நடந்து கொள்கிறார்கள் என்றும் சாதியில்லை என்றும் வன்னியர் சங்கத்தையும் வன்னியர் சமூகத்தையும் கடுமையாக சாடி பேசினார்.

சென்ற தேர்தலில் இவர் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் பல இடங்களில் தோழர் பாலகிருஷ்ணன் என்று மட்டும் எழுதாமல் பாலகிருஷ்ணன் படையாட்சி (படையாட்சி என்பது வன்னியர்களை குறிப்பது) என்று அவரது சாதிப்பெயரையும் இணைத்தே சுவர் விளம்பரங்கள் எழுதி வாக்கு கேட்டனர்.

அரசியலுக்கும் ஓட்டுக்கும் சாதிப்பெயரை சொல்வது, டிவியிலும் மேடையிலும் சாதியில்லை என்று முழங்குவது எல்லா கட்சிகளுக்கும் வழக்கமாகி போய்விட்டது.

கொதிக்க வைத்த குடிநீரே பாதுகாப்பானது. கேன் வாட்டர் தேவையா?


கொதிக்க வைத்த குடிநீரே பாதுகாப்பானது. கேன் வாட்டர் தேவையா? அனுமதிபெறாத மினரல் வாட்டர் நிறுவனங்களை மூடியது தொடர்பாக அனைத்து மினரல் வாட்டர் நிறுவனங்களின் ஸ்ட்ரைக்.

திருட்டு விசிடி ரெய்டு நடத்தினால் சினிமாக்காரர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், போலி மருத்துவர்கள் மீது நடவடிகை எடுத்தால் ஒரிஜினல் மருத்துவர்கள் மகிழ்வார்கள் ஆனால் அனுமதி பெறாத மினரல் வாட்டர் நிறுவனங்களை மூடினால் ஏன் அனுமதி பெற்ற மினரல் வாட்டர் நிறுவனங்கள் ஏன் ஸ்ட்ரைக் செய்கின்றன? அப்படி என்றால் இதில் இவர்களின் பங்கு என்ன?

ஏற்கனவே சென்னையில் கேன் வாட்டர்களில் 30%க்கும் மேலும் பாக்கெட் வாட்டரில் 70%க்கும் மேலான தண்ணீரும் குடிப்பதற்கு கூட தகுதியில்லாத தண்ணீர்கள் என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் கேன் வாட்டரை வாங்கி அதை கொதிக்க வைத்து குடிக்கும் நிலையில் உள்ளது. மேலும் கேன் வாட்டரை வீட்டில் புழங்குவது தற்போது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகவும் போய்விட்டது.


சாதாரண க்ளோரினேட்டட் மெட்ரோ வாட்டரை கொதிக்க வைத்து, துண்டால் வடிகட்டினாலே போதும்.. இதுவேமிக ஆரோக்கியமான குடிநீர்தான்.. இதை விடுத்து கேன் வாட்டர் மட்டும் குடித்தால்தான் உயிருடன் இருக்க முடியும் என்பது மிகப்போலியான அபத்தமான வியாபார உத்தி..என டாக்டர் அருணாசலம். இந்திய மருத்துவ சங்கம்.. தெரிவித்துள்ளார்.

மினரல் வாட்டர் நிறுவனங்களின் இந்த ஸ்ட்ரைக்கை பயன்படுத்தி அனைவரும் தண்ணீரை கொதிக்க வைத்து குடித்து பயன்படுத்தி அதனால் தீங்கு எதுவும் ஏற்படுவதில்லை என்பதை உணர்ந்து இந்த மினரல் வாட்டர் நிறுவனங்களை ஊத்தி மூட வையுங்கள்.

#தண்ணீரும் காற்றும் காசுக்கு விற்கும் நிலையை ஒழிப்போம்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media