BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 7 August 2014

இன்றைய செய்திகள் - Satrumun Special daily News


ஜாக்கிரதை! ஃபேஸ்புக் "பயன்படுத்துபவர்கள் , மொபைலில் நெட்கார்டு போட்டு  பயன்படுத்துபவர்கள் உடனடியாக செட்டிங்கை மாற்றுங்கள்
http://www.satrumun.net/2014/08/how-to-disable-autoplay-videos-on.html

அட்டர்காப்பி "சரபம்"  போன்ற படங்களை தயாரிக்கலாமா அட்டக்கத்தி தயாரிப்பாளர் சி.வி.குமார்?
http://goo.gl/Jt0SVA

தன்னுடைய கணவர் தான் தன்னுடைய சகோதரர் என்று கண்டுபிடித்த பெண், அம்மாவை தேடியபோது தெரியவந்த அதிர்ச்சி
http://www.satrumun.net/2014/08/woman-finds-mom-had-a-suprise.html

மைனர் குஞ்சை கட் பண்ணிவிடுவார்களாம், கற்பழிப்புகளில் ஈடுபடும் சிறுவர்களுக்கு கடும் தண்டனை
http://www.satrumun.net/2014/08/juvenile-act-passed-in-union-cabinet.html

தனுஷும், நானும் ஒண்ணா..? : சீறும் சிவகார்த்திகேயன்!
http://www.soundcameraaction.com/hot-news/sivakarthikeyan-no-comparison/

சியோமி மொபைலை வாங்கும் முன் நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !!
http://www.satrumun.net/2014/08/things-to-do-before-buying-xiomi.html

கூகிளில் பெற்றோரை தேடி கண்டுபிடித்த பெண், 17 ஆண்டுகள் கழித்து பெற்றோருடன் சேர்ந்தார்
http://www.satrumun.net/2014/08/17.html

15 நிமிடத்தில் சார்ஜ் செய்திடும் உலகின் அதிவேக போன் சார்ஜர் !!
http://www.satrumun.net/2014/08/mobile-charger-whi-can-recharge-in-15-minutes.html

பேஸ்புக்கில் புரொபசர் போட்டோவுக்கு கமென்ட் அடித்து விட்டு விஷம் குடித்த தமிழக இன்ஜினியரிங் மாணவர்
http://www.satrumun.net/2014/08/blog-post_34.html

உயர் அதிகாரிகள் ஆப்பிள் போன், ஐபேட்கள் பயன்படுத்த தடை
http://www.satrumun.net/2014/08/china-say-no-to-apple-products-for-government-official.html

சிலந்தியைக் கொல்லுவதற்காக வீட்டிற்கு தீ வைத்த வாலிபர் !!
http://www.satrumun.net/2014/08/man-fires-his-own-house-to-kill-spider.html

கே.எப்.சி யில் பறிமாறப்பட்ட பெப்சியில் பூச்சி !!
http://www.satrumun.net/2014/08/living-moth-in-kfc-served-pepsi.html

பாகிஸ்தான் , வங்கதேசம் நாட்டு பெண்களை திருமணம் செய்யக் கூடாது - சவூதியில் புது சட்டம் !!
http://www.satrumun.net/2014/08/saudi-ban-foerign-marriage.html

120 கோடி பேரின் பாஸ்வேர்ட்களை திருடிய ரஷ்ய ஹேக்கர் குழு !!
http://www.satrumun.net/2014/08/russian-hacker-group-steals-password.html

முன்னாள் கேப்டன் கங்குலி தமிழ் நாளிதழில் கட்டுரை எழுத உள்ளார்
http://www.satrumun.net/2014/08/blog-post_25.html

ஜிமெயிலில் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்து இருந்தால் கூகுள் கண்டுபிடித்துவிடும் . கூகுளின் புதிய முயற்சி
http://www.satrumun.net/2014/08/google-find-way-to-catch-paedophile.html


ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒரே மேடையில் தோன்றினால் எப்படி இருக்கும் ?
அந்த அதிசயம் பீஹாரில் நடக்க உள்ளது
http://www.satrumun.net/2014/08/blog-post_92.html

உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளார் நடிகை அசின் !!
http://www.satrumun.net/2014/08/blog-post_11.html

போலியோவை வென்று காமென்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்திய வீரர், கண்டு கொள்ளாத மீடியாக்கள்
http://www.satrumun.net/2014/08/blog-post_41.html

இந்தியா , நிறைய தங்கம் வென்று இருக்கும் , ஆதங்கத்துடன் சொல்கிறார் வெள்ளி வென்ற வீராங்கணை
http://www.satrumun.net/2014/08/cwm-medalist-asks-for-better-medelists-to-win-more-gold.html

என் மேனேஜர் என மோசடி பேர்வழிகளிடம் ஏமாறாதீர்கள்: ஹன்சிகா
http://goo.gl/nvZHAC

டாஸ்மாக் கடையில் ஒரே நாளில் அதிரடி சோதனை, 61 பேர் சஸ்பென்ட்
http://www.satrumun.net/2014/08/61.html

நான் திருமணமே செய்துகொள்ள மாட்டேன்: லட்சுமிமேனன்! ஏன்? என்னாச்சு..?
http://goo.gl/zSZvPD

Hansika motwani warned about their cheating managers, A woman found her husband is her own brother,  A girl found her parents through google and join with their parents after 17 years
things to do before buying xiomi, china banned higher officials to use apple inc corp products
An engineering college student commented in his professors  facebook photo and attempted suicide and many more news

கே.எப்.சி யில் பறிமாறப்பட்ட டிரிங்க்சில் பூச்சி !! நடந்தது இங்கிலாந்தில் !!



கே.எப்.சி என்னும் உணவகம் அனைவரும் விரும்பிச் சென்று உண்ணும் உணவகங்களில் ஒன்று . இந்தியாவில் இது மிகவும் பிரபலமடைந்த ஒன்றாக மாறி வருகிறது . சில வாரங்களுக்கு முன் அந்த கே.எப்.சி யில் பறிமாறப்பட்ட உணவில் பூச்சி இருந்ததாக செய்திகள் வந்தது . உடனே சிலர் இந்தியாவில் தான் இப்படி நடக்கிறது . மற்ற நாட்டில் இது போன்ற சம்பவங்கள் நடப்பதில்லை என்று இந்தியாவை குறை கூறினர் .

ஆனால் இங்கிலாந்தின் துர்ஹாம் நகரத்தில் ஜோடி ஒன்றிற்கு வழங்கப்பட்ட பெப்ஸியில் உயிருடன் இருந்த ஒரு பூச்சி இருப்பதை அந்த ஜோடி பார்த்தனர் . இதனால் கோவமடைந்த அந்த ஜோடி அவர்களுடன் சண்டை போட்டனர் . ஆனால் அங்கே பணிபுரிபவர்கள் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டனர் .

ஆனால் அந்த நாள் இரவில் அவர்களாகவே இந்த ஜோடிக்கு கால் செய்து மன்னிப்பு கேட்டு , அவர்களுக்கு மீண்டும் உணவு வழங்கினர் .

தனது அம்மாவை தேடி செல்லும் போது , தனது கணவர் தான் தன்னுடைய சகோதரன் என்று கண்டுபிடித்த பெண் !!



பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் அட்ரியனா (37) மற்றும் லியன்ட்ரோ (39) . இருவரும் கடந்த ஏழு வருடங்களாக திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் . இருவருக்கும் ஆறு வயதில் ஒரு மகளும் உள்ளார் .

அவர்கள் இருவரும் நீண்ட காலமாக தன்னுடைய அம்மாவை தேடிக் கொண்டு இருந்தார்கள் . ஆனால் இருவரும் தேடியது ஒரே நபர் தான் என்று அவர்களுக்கு தெரிந்து இருக்கவில்லை . இருவரையும் சிறு வயதில் அவர்களின் அம்மா விட்டுவிட்டு பிரிந்தார் .

அட்ரியனா தனது அம்மாவைக் கண்டுபிடிக்க ரேடியோ நிகழ்ச்சியின் உதவியை நாடினார் . அந்த ரேடியோ அவரின் அம்மாவைக் கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்தது . ஆனால் அதற்கு அடுத்து தான் அவருக்கு அதிர்ச்சி காத்து இருந்தது . அவரது அம்மா ரேடியோவில் பேசும் போது , தனக்கு ஒரு மகன் இருந்ததாகவும் , மகனின் பெயர் லியன்ட்ரோ என்றும் கூறினார் . இதைக் கேட்ட அட்ரியனா அதிர்ச்சியின் உச்சிக்குச் சென்று அவர் தன்னுடையக் கணவர் என்பதை தெரிவித்தார் .

இது குறித்து அட்ரியனா கூறுகையில் , " நாங்கள் முதலில் எங்கள் இருவரின் அம்மா பெயர் ஒன்றாக இருக்கும் போது , இது ஏதோ தற்செயலாக நடந்தது என்று நினைத்தோம் . ஆனால் இப்போது தான் தெரிகிறது எங்கள் இருவருக்கும் ஒரே தாய் . ஆனால் நான் அவரை மிகவும் நேசிக்கிறேன் . இது எங்கள் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை " என்றார் .

சிலந்தியைக் கொல்லுவதற்காக வீட்டிற்கு தீ வைத்த வாலிபர் !!



வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டின் அவசர எண்ணான 999 கால் செய்து வீட்டில் தீ பிடித்து விட்டது என்று பதற்றத்துடன் கூறினார் . தீ அணைப்பு வீரர்கள் விரைந்துச் சென்று தீயை அணைத்தனர் .

தீ பிடித்தற்கான காரணத்தைக் கேட்கையில் , தனது வீட்டிற்குள் ஒரு சிலந்து வந்துவிட்டதாகவும் , அதனைக் கொழுத்த நினைத்த போது , அந்த தீ வீடு முழுவதுமாக பரவி விட்டதாக வீட்டின் உரிமையாளர் கூறினார் .

அவர் நினைத்து இருந்தால் ஒரு செருப்பை வைத்து அடித்தோ , பேப்பரினால் எடுத்து வெளியேவோ போட்டு இருக்கலாம் . ஆனால் அவரோ சிலந்தியைக் கொழுத்த , இறுதியில் அது வீடு முழுவதும் பரவி அவருக்கு 60 ஆயிரம் டாலர் செலவு அவர் தலையில் விழுந்துள்ளது .

பேஸ்புக்கில் ஆசிரியர் போட்டோவுக்கு கமென்ட் அடித்து விட்டு விஷம் குடித்த இன்ஜினியரிங் மாணவர்




காரைக்காலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. இங்கு மதுரை வத்தலகுண்டை சேர்ந்த நாகூர் மொய்தீன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் காரைக்கால் பூவத்தை சேர்ந்த கார்த்திகா, பேராசிரியையாக உள்ளார். அந்த ஆசிரியர் பேஸ்புக்கில் தனது  போட்டோவை அப்லோட் செய்து உள்ளார். அதற்கு நாகூரி மொய்தீன் கமென்ட் செய்து உள்ளார். இதனால் கோபமான அந்த ஆசிரியர் தனது கணவருடன் சென்று போலீஸில் புகார் செய்து உள்ளார்.

போலீஸார் அந்த மாணவனை தாக்கி அவனை அந்த ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்க கூறியுள்ளார்கள். இதனால் அந்த மாணவன் மனமுடைந்து பூச்சி மருந்தை குடித்து விட்டார். பின்னர் அவரது நண்பர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள். அந்த மாணவனை தாக்கிய போலீஸார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சக மாணவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் கூடி, துணை கலெக்டர் மாணிக்க தீபனிடம் மனு கொடுத்தனர். 

17 ஆண்டுகள் கழித்து கூகுள் உதவியால் பெற்றோருடன் சேர்ந்த பெண்




குடியா என்னும் பெண் பீஹார் மாநிலத்தில் உள்ள ரயிலில் 6 வயதாக இருந்த  போது காணாமல் போனார். அது பாட்னாவில் இருந்து கவுஹாத்திக்கு செல்லும் ரயில். அப்போது தனது மாமாவுடன் அந்த ரயிலில் சென்று கொண்டு இருந்தார். அவர் உணவு வாங்குவதற்காக ரயிலில் இருந்து இறங்கினார். ஆனால் அவரால் சரியான நேரத்தில் ரயிலை பிடிக்க முடியவில்லை. இதனால் குடியா தனிமையானார். அவளுக்கு அவள் யார் என்பதே தெரியவில்லை. எனவே அங்கு உள்ள குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். அவரிடம் கேட்டதற்கு , தனது மாமா பாட்னாவில் தன்னுடைய வீட்டிற்கு முன் உள்ள ரயில்வே கிராசிங்க்கு அருகில் இருக்கும் பிஸ்கட் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்' என்பது மட்டுமே நினைவில் உள்ளதாக கூறியுள்ளார்.

இப்போது அவருக்கு 23 வயது ஆகிறது. அசாம் மாநிலத்தில் குழந்தை பாதுகாப்பு சமூகத்தின் அதிகாரியான நீலாக்ஷீ சர்மா, குடியாவின் பெற்றோரை கண்டுபிடிக்க முடிவு எடுத்து முயற்சி செய்தார். இதற்காக தீவிரமாக தேடினார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனால் கூகுளில் தேடினார். அவரது கடின உழைப்பிற்கு பலன் கிடைத்தது. குடியாவின் மாமாவின் பிஸ்கட் தொழிற்சாலையின் நம்பர் கிடைத்தது. இதன் மூலம் அவளது பெற்றோர்களை கண்டுபிடிக்க முடிந்தது. பிறகு அவர் தனது பெற்றோருடன் இணைந்தார். அவள் அரசாங்க அதிகாரிக்கும் மற்றும் கூகுள் தேடலுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

உயர் அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்த சீனாவில் தடை !



சீன அரசு அதிகாரிகள் அப்பிள் நிறுவனத்தின் பொருட்களை பயன்படுத்த சீன அரசு தடை விதித்துள்ளது . அமெரிக்க நிறுவனமான ஆப்பிளை பயன்படுத்தி அமெரிக்கா சீனாவை வேவு பார்க்க வாய்ப்பு இருக்கிறது என ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை தடை செய்துள்ளனர் .


கடந்த சில வருடங்களாக இரு நாடுகளும் மாறி மாறி வேவு பார்ப்பதைக் குறித்து சண்டை போட்டு வருகின்றனர் . அமெரிக்க அரசு சீன நிறுவனமான ஹுவாய் , மற்றும் இசட்.டி.இ போன்ற நிறுவனங்களின் பொருட்களை அமெரிக்காவில் வியாபாரம் செய்ய தடை விதித்துள்ளனர் .

கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க நிறுவனங்களி ஆண்டி வைரஸ் ப்ரோகிரம்களையும் வாங்க வேண்டாம் என அறிவிருத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . இப்போது சீனாவின் இந்த தடை ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை .

போலியோவை வென்று காமென்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்திய வீரர்




நடந்து முடிந்த காமென்வெல்த் போட்டியில் இந்திய வீரர் ராஜிந்தர் ரஹேலு பளுதூக்குதலில் 185 கிலோ தூக்கி வெள்ளி பதக்கம் வென்றார். இவர் ஏற்கனவே 2004 ஒலிம்பிக்ஸில் வெண்கல பதக்கம் வென்று இருந்தார். பதக்கம் வென்ற பிறகு அவர் சொன்ன முதல் வார்த்தை அவரது தாய்க்கு நன்றி சொல்வதாக கூறினார்.

இவர் போலியோவால் பாதிக்கப்பட்டவர். அதனை பொருட்படுத்தாமல் தனது கடின உழைப்பின் மூலம் பதக்கம் வென்று உள்ளார். ஆனால் இவரது இந்த சாதனை எந்த ஊடகங்காளும் பாராட்டப்படவில்லை. கடின உழைப்புக்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைப்பதில்லை.

இன்று ஃபேஸ்புக்கில் கவனித்தீர்களா? உங்கள் டைம் லைன் வீடியோ தானாக ப்ளே ஆகிறதா? அதை நிறுத்தும் வழிகள்

ஃபேஸ்புக் டைம் லைனில் உள்ள வீடியோக்கள் நீங்கள் செட்டிங்கஸ் எதுவும் மாற்றாமல் இருந்தால் தானாக ப்ளே ஆகாது, ஆனால் தனது கடந்த ஏப்ரல் மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் வீடியோக்களை தானாக ப்ளே ஆக வைப்போம் என்று கூறியிருந்தது, இது ஃபேஸ்புக் தனது வீடியோ விளம்பரங்களில் சம்பாதிக்க‌ இவ்வாறு நடைமுறை படுத்துகிறது என்று பலரும் கருதினர்.

இந்நிலையில் இன்று காலையில் இருந்து பலரது டைம்லைன்களில் ஃபேஸ்புக் வீடியோ தானாக ப்ளே ஆகிறது, இது பலருக்கும் தொந்தரவாக உள்ளது, இப்படி தானாக வீடியோக்கள் ப்ளே ஆவதை நிறுத்தும் வழிகள் கீழே காண்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஃபேஸ்புக் வெப்பில் தனியாகவும், ஃபேஸ்புக் மொபைல் அப்ளிகேஷனில் தனியாகவும் இந்த செட்டிங்கு களை செய்ய வேண்டும், வெப்பில் மட்டும் மாற்றிவிட்டு மொபைலில் மாற்றவில்லை என்றால் வீடியோ மொபைலில் ஆட்டோ ப்ளே ஆகும்

மொபைல் டேட்டா மூலம் இண்டெர்நெட் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் பேக் ஆட்டோ ப்ளே வீடியோவால் தீர்ந்துவிடும், எனவே வை-ஃபை இருந்தால் மட்டுமே வீடியோ ப்ளே ஆகுமாறு ஆப்பிள் ஐஓஎஸ் செட்டிங்க்ஸை மாற்றும் வழிகள் கீழே தரப்பட்டுள்ளன‌

இதை ஷேர் செய்து அனைவருக்கும் தெரிவியுங்கள்





ஆப்பிள் ஐஓஎஸ் களில் மாற்ற‌

அதிலும் மொபைல் டேட்டா மூலம் இண்டெர்நெட் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் பேக் ஆட்டோ ப்ளே வீடியோவால் தீர்ந்துவிடும், எனவே வை-ஃபை இருந்தால் மட்டுமே வீடியோ ப்ளே ஆகுமாறு ஆப்பிள் ஐஓஎஸ் செட்டிங்க்ஸை மாற்றும் வழிகள் கீழே தரப்பட்டுள்ளன‌




உங்கள் மெயிலில் அது போன்ற படங்களை வைத்து இருந்தால் கூகுள் கண்டுபிடித்துவிடும் . கூகுளின் புதிய முயற்சி !!



தொழில்நுட்பத்தில் முன்னனி நிறுவனமான கூகுள் குழந்தைகளுக்கு எதிரான முறைகேடுகளை தடுக்க புதிய மென்பொருள் ஒன்றை தயாரித்துள்ளது . இந்த மென்பொருள் பல மெயில்களை ஸ்கென் செய்து , குழந்தைகளுக்கு எதிரான போட்டோ இருந்தால் , உங்களைப் பற்றிய தகவலை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி விடும் .

இதன் மூலன் பயனாளர்கள் குழந்தைகளுக்கு எதிரான போட்டோவை , இனிமேல் தங்கள் மெயில் மூலம் அனுப்பிடவோ , பெற்று விட்வோ முடியாது . இந்த மென்பொருள் குழந்தைகளுக்கு எதிரான முறைகேடுகளை தடுக்க பெரிய அளவில் உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

அந்த மென்பொருள் ஸ்கென் செய்திடும் போது , அது குறித்து எந்த தகவலும் அனுப்பாது என்பதால் , யாரின் மெயிலை ஸ்கென் செய்கிறது என்று யாருக்கும் தெரியாது .

லாலுவும் நிதிஷும் ஒரே மேடையில் தோன்றுவார்களா ??




பீகார் மாநிலத்தில் காலியாக உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஆகஸ்ட் 21 ஆம்  தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள, காங்கிரஸ் ,ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஆகிய மூன்று கட்சிகளும் மூவர் கூட்டணி ஏற்படுத்தியுள்ளன.
கிட்டதட்ட 24 ஆண்டுகள் கழித்து அரசியல் எதிரிகளான லாலுவும் நிதிஷும் கைக்கோர்த்து உள்ளார்கள்.

இவர்கள் இருவரும் தற்போது சூறாவளி பிராசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வரும் 19 ஆம் தேதி இவர்கள் இருவரும் ஒரே மேடையில் பிராச்சாரம் செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதனால் இரு கட்சி தொண்டர்களும் உற்சாகத்தில் உள்ளார்கள். 

டாஸ்மாக் கடையில் ஒரே நாளில் அதிரடி சோதனையால் 61 பேர் சஸ்பென்ட்




மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் கூடுதலாக தொகை பெற்று மது வகைகளை விற்பனை செய்வது போன்ற முறைகேடுகள் நிகழ்வதாக வந்த புகாரில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலிருந்து சோதனை நடத்த உத்தரவிட்டப்பட்டது. இதனை அடுத்து திருச்சியில் உள்ள 230 மதுக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அதில் கணக்கில் இருப்பதை விட அதிக  தொகை இருந்தது . இதனால் அவர்கள் அதிக தொகைக்கு விற்பது தெரிய வந்தது.

அதன் பிறகு தொடர் விசாரணைக்குப் பின்னர் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் 9 பேர், டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் உள்பட 61 பேரை தாற்காலிக இடைநீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

120 கோடி பாஸ்வேர்ட்களை திருடிய ரஷ்ய ஹேக்கர் குழு !!



ரஷ்ய ஹேக்கர் குழுக்களில் ஒன்று அமெரிக்க போன்ற நாடுகளின் இணையத்தில் இருந்து இதுவரை 120 கோடி பாஸ்வேர்ட்களை திருடியுள்ளது . இது தான் உலகத்தில் இதுவரை நடந்துள்ள பெரிய அளவிலான ஹேக்கிங் .

அவர்கள் இந்த 120 கோடி பாஸ்வேர்ட்களை 4,20,000 வெப்சைட்களில் இருந்து எடுத்துள்ளனர் . அவர்கள் 500 மில்லியன் இ-மெயில் ஐடிக்களை ஹேக் செய்து உள்ளனர் . அவர்கள் அமெரிக்க நிறுவனம் என்று பார்க்காமல் சிறியது முதல் பெரியது என அனைத்து இணையதளங்களையும் ஹேக் செய்து உள்ளனர் .

இது குறித்து ஒரு அதிகாரி தெரிவிக்கையில் , " அந்த குழுவில் 12 க்கும் குறைவான நபர்கள் தான் இருப்பார்கள் . வேலைகளை பிரித்து செய்கிறார்கள் . சிலர் ப்ரோகிரம் எழுதுகிறார்கள் , சிலர் தரவுகளை திருடுகிறார்கள் " என்றார் .

உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளார் நடிகை அசின்




தமிழில் கஜினி, போக்கிரி உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்தவர் நடிகை அசின். இவர் கஜினி படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார். அதன் பிறகு தமிழ் பக்கம் வரவில்லை. இப்போது தமிழ் படத்தில் நடிப்பதற்காக சில கதைகளை கேட்டு வருகிறார். இவர் பல சமூக சேவைகளை செய்து வருகிறார். ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி வருகிறார். மும்பையில் ஒரு சமூக அமைப்பு சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் அசின் கலந்து கொண்டதுடன், ரத்த தானமும் செய்தார். அத்துடன் கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்யவும் அவர் முன்வந்தார். அதற்கான உறுதி மொழி பத்திரத்தில் அவர் கையெழுத்திட்டார். 

முன்னாள் கேப்டன் கங்குலி தமிழ் நாளிதழில் கட்டுரை எழுத உள்ளார்




கங்குலி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்று விட்டாலும் அவரது ரசிகர்கள் இன்னும் அவரை பின்தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர் எப்போது எந்த கருத்து சொல்வார் என ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். ஏனென்றால் மோசமாக இருந்த இந்திய அணியை தனது சிறப்பான கேப்டன்சியால் சிறந்த அணியாக மாற்றியவர் அவர். இவர் அடுத்து இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் தொடர் பற்றி தினத்தந்தி வாசகர்களுக்கு கட்டுரை எழுத உள்ளார். 

15 நிமிடத்தில் சார்ஜ் செய்திடும் உலகின் அதிவேக போன் சார்ஜர் !!



ஆஸ்டான் யுனிவர்சிட்டி பட்டதாரியான  லேய்க் பர்னெல் என்பவர் உலகின் அதிவேக சார்ஜர் ஒன்றை உருவாக்கியுள்ளார் . இந்த சார்ஜரின் மூலம் உங்கள் மொபைலை நீங்கள் 15 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்திட முடியும் .

இந்த சார்ஜரை நீங்கள் உங்கள் பாக்கெட்டிலோ அல்லது பேக்கிலோ வைத்து இருக்கலாம் . இனிமேல் நீங்கள் சார்ஜ் செய்திட பிளக் பாய்ண்டையோ , யு.எஸ்.பி கேபிளையோ தேடி அலைய வேண்டாம் . இந்த பிளஸ் பேட்டரி கூடிய விரைவில் விற்பனைக்கு வர உள்ளது .

இன்னும் வசதிகள் கூட இருந்து இருந்தால் இந்தியா , நிறைய தங்கம் வென்று இருக்கும் , ஆதங்கத்துடன் சொல்கிறார் வெள்ளி வென்ற சுஷிலா தேவி !!



காமன்வெல்த் போட்டியில் ஜூடோ விளையாட்டில் தங்கம் வென்றவர் சுஷிலா தேவி .

சுஷிலா கூறுகையில் , " ஜூடோவை பொறுத்தவரை நமது நாட்டில் அனைத்து திறமைகளும் இருக்கிறது . ஆனால் வசதிகள் குறைவாக உள்ளதால் , மற்றவர்களைவிட நாம் பின்னால் இருக்கிறோம் . ஜூடோ விளையாட்டு பிரபலமான விளையாட்டு இல்லை என்பதால் , அரசு அதற்கு உதவித் தொகை அளிப்பது இல்லை . ஆனால் இந்த நிலைமை இப்போது மாறும் என நினைக்கிறேன் . " என்றார் .

மேலும் அவர் அதிக போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அது பயிற்சி ஆக அமையும் எனவும் தெரிவித்தார் . இவர் 2010 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது .

சியோமி மொபைலை வாங்கும் முன் நீங்கள் கண்டிப்பாக அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் !!



சீனாவின் ஐ-போன் என்று அழைக்கப்படும் சியோமி எம்.ஐ-3 மொபைல் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது . இந்த மொபைலை வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்து இருந்தால் , இந்த 5 விஷயங்களைக் கண்டிப்பாக படியுங்கள் :

1 ) எளிதாக வாங்கிவிட முடியாது :

இந்த மொபைல் பிளிப்கார்ட் நிறுவனத்தில் மட்டுமே விற்பனைக்கு வருவதால் ,வந்த வேகத்தில் விற்று விடுகிறது . மிக குறைந்த அளவில் மட்டுமே வருவதால் அது பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதில்லை . எனவே உங்களுக்கு உடனடியாக மொபைல் கிடைக்க வேண்டுமானால் , உங்களுக்கு எதாவது அதிர்ஷ்டம் இருந்தால் தான் கிடைக்கும் .

2 ) மெமரி கார்ட் பயன்படுத்த முடியாது :

மொபைலுடன் நீங்கள் பயன்படுத்த அவர்கள் 16 ஜிபி கொடுத்தாலும் , உங்களால் தனியே மெமரி கார்ட் பயன்படுத்தி , மெமரியை அதிகப்படுத்த முடியாது .

3 ) ஹெட்போன் கொடுப்பதில்லை

நீங்கள் சியோமி மொபைலை வாங்கினால் , உங்களுக்கு சார்ஜர் மற்றும் , யு.எஸ்.பி கேபில் மட்டுமே கொடுக்கப்படும் . ஹெட்போன் நீங்கள் தான் வாங்கிக் கொள்ள வேண்டும் . மேலும் சியோமி மொபைல் தங்களுக்கென்று தனியே ஸ்கிரின் கார்ட் , மற்றும் மொபைல் ஹெட்செட் அறிமுகப்படுத்தவில்லை . எனவே நீங்கள் வேறு நிறுவனத்தை தான் பயன்படுத்த வேண்டும் .

4 ) சேவை மையங்கள்

போனை வாங்கும் முன்னர் அனைவரும் கேட்கும் கேள்வி , சேவை மையம் இருக்கிறதா என்பது தான் . சியோமி இந்தியாவில் சில இடங்களில் சேவை மையம் திறந்து இருக்கிறது . ஆனால் சேவைத் தரம் பற்றி இனிமேல் தான் தெரிய வரும் .

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media