விகடன் VS நக்கீரன்: தொடரும் ஆரிய திராவிட யுத்தம் என்ற தலைப்பில் நாடோடி என்பவர் ஃபேஸ்புக்கில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள் இங்கே
இந்தியர்கள்/தமிழர்கள், அவர் தம் நிறுவனங்கள் எல்லாமே ஏதோ ஒரு ஜாதிய/வர்க்க நலனை முன்வைத்தே இயங்குகின்றன(ர்) என்கிற அடிப்படை உண்மையை பல சமயங்களில் பெரும்பான்மையான “பொதுமக்கள்” உணர்வதில்லை. இந்திய/தமிழக ஊடகங்கள் அவர்களை அதை உணரவிடுவதில்லை.
காரணம், பெரும்பான்மை இந்திய தமிழக ஊடகங்கள் உயர்ஜாதி அல்லது உயர்தர வருவாய் கொண்ட இந்தியர்/தமிழர்ககளால் நடத்தப்படுபவை; அவர்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்படுபவை. எனவே “நடுநிலை” முகமூடியில் இவர்கள் முன்னெடுப்பதெல்லாம், முழுக்க முழுக்க உயர்ஜாதிய/உயர் வருவாய் பிரிவு மக்களின் பிரச்சனைகள்; நலன்கள மட்டுமே.
சமூகத்தின் மற்ற பிரிவு மக்களின் பிரச்சனைகளுக்காக இவர்கள் குரல் கொடுப்பதாக சொல்வதும், செயற்படுவதும், காட்டிக்கொள்வதும் இந்த ஊடகங்களின் “நடுநிலை” வேஷத்தின் நம்பகத்தன்மையை அதிகமாக்கத் தேவைப்படும் அத்தியாவசிய நடிப்பு மட்டுமே. அதில் இந்த ஊடகங்களுக்கு உளப்பூர்வமான ஈடுபாடோ, உண்மையான அக்கறையோ, தொடர்ச்சியான பார்வையோ கிஞ்சிற்றும் கிடையாது என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு.
அதற்கான சமீபத்திய உதாரணம் தமிழ்நாட்டு அரசியலில் தற்போது தீயாய் எரியும் வன்னியர் சங்கம் நடத்திய சித்ரா பவுர்ணமி விழாவும், அதில் அவர்கள் கக்கிய ஜாதித்துவேஷம் தொடர்பான தமிழக அரசின் கைதுகளும், அதையொட்டிய களேபரங்களும். இந்த பிரச்சனையை ஒட்டி விகடன் நிறுவனம் சார்பில் ஒரு வீடியோவை தயாரித்து அவர்களின் அதிகாரப்பூர்வ இலச்சினையுடன் விகடன் இணையதளத்தில் உலவ விட்டிருக்கிறார்கள்.
சாதிதாஸ் என்கிற தமிழ் தலைப்புடனும், ஆங்கிலத்தில் “Rise & Fall of Dr.Ramadoss -Ananda vikatan” என்கிற தலைப்புடனும் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோ சுமார் ஐந்து நிமிடம் ஓடுகிறது. வன்னியர் சங்கம் மற்றும் பாமகவின் தலைவர் மருத்துவர் ராமதாஸின் அரசியல் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை இது அலசுகிறது. ஆனால் முழுக்க முழுக்க அவரது எதிர் நிலையிலிருந்து இதை விகடன் அலசுகிறது. அந்த வீடியோவை பார்க்க விரும்புபவர்கள் இந்த இணைப்பில் சென்று காணலாம்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=azvX3znM_TM
மேலெழுந்தவாரியாக இந்த வீடியோவை பார்க்க நேரும் யாருக்கும் ராமதாஸை கிழி கிழியென்று கிழித்துத் தொங்கப்போட்ட விகடனின் ஊடக தைரியத்தை பாராட்டத்தோன்றும். அதிலும் நீங்கள் தலித் ஆதரவாளராகவும் இருந்தீர்களானால், தலித்துகளுக்கு எதிரான ராமதாஸ் மற்றும் காடுவெட்டி குரு அன் கம்பெனியின் ஜாதிய வன்மத்துக்கு எதிராக விகடன் ஓங்கி ஒலித்திருக்கிறது என்று பூரித்து புளகாங்கிதப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
ஆனால், விகடனை இதற்காக பாராட்ட முடியுமா என்றால் இல்லை என்பதே நேர்மையான பதிலாக இருக்கமுடியும். காரணம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னிய அரசியல் தலைமையான ராமதாஸின் அரசியல் தவறுகளை, இப்படி தைரியமாக, எந்தவித சமரசமுமின்றி அலசிய விகடன் நிறுவனம், இந்திய அளவில் செல்வாக்கு மிக்க மடாதிபதிகளாக விளங்கிய காஞ்சி சங்கராச்சாரிகள் இரண்டுபேருமே சங்கர ராமன் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றதையோ, அவர்களின் காமக்களியாட்ட விவரங்களையோ கடந்த காலத்திலோ அல்லது அவர்கள் இந்த வழக்கிலிருந்து தப்பிக்கவேண்டி அந்த வழக்கை விசாரித்த நீதிபதியிடம் பேரம் பேசிய விவரம் சமீபத்தில் வெளியான போதோ அவர்கள் குறித்தும் இப்படி நேர்மையாக அலசியிருந்தால், ராமதாஸ் குறித்த விகடனின் தற்போதைய இந்த அலசலை நாம் எந்த தயக்கமும் இன்றி பாராட்டலாம். கொண்டாடலாம்.
ஆனால் சங்கராச்சாரியாரின் கொலை வழக்குக் கைதுகள், அப்போது வெளியான அவர்களின் காமக்களியாட்டங்களையெல்லாம் மயில் இறகால் வருடி மறைக்கப்பார்த்த வரலாற்றுக்கு சொந்தமான விகடன் நிறுவனம், இப்போது வன்னியன் ராமதாஸின் அரசியல் வீழ்ச்சியை மட்டும் கொண்டாடுவது எப்படி நடுநிலையாக இருக்கமுடியும்? இதென்ன ஊடக அறம்? தலித் ஆதரவு, வன்னியர்களின் ஜாதித்திமிர் எதிர்ப்பு என்கிற பெயரில் விகடன் நடத்தியிருப்பது கடைந்தெடுத்த பார்ப்பண ஜாதித் திமிர்பிடித்த தனிப்பட்ட தாக்குதல் தானே?
விகடன் நிறுவனம் இப்படி செய்வது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தையும் விகடன் இப்படித் தான் கையாண்டது. அதில் வடநாட்டு ஊடகங்களைவிட ஒரு படி மேலே போய் “சொல்லுங்க ராசாவே” என்று திமுகவைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆண்டிமுத்து ராசாவை தனிப்பட்ட முறையில் குறிவைத்து தனியாக தொடர்கட்டுரையே எழுதியது. அதில் எல்லா ஊடக அறங்களையும் புறந்தள்ளி ராசாவின் மகள் சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்டது, கனிமொழிக்கும் ராசாவுக்கும் கள்ளத்தொடர்பு என்று அட்டைப்படக் கட்டுரையே வெளியிட்டது. அந்த அவதூறுகள் மற்றும் ஆபாசத்தைல்லாம் தொகுத்து தனி புத்தகமாக போட்டு காசுபார்த்த, இன்னும் காசுபார்த்துக் கொண்டிருக்கும் கயமைத்தனத்தை செய்தது இந்த விகடன் நிறுவனம்.
அந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்திலேயே கூட, ராசாவையும், கனிமொழியையும் மட்டும் குறிவைத்து குதறிய விகடனின் ஜாதித்திமிர் பிடித்த பேனாக்கள், உண்மையிலேயே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தின் மலை முழுங்கி மகாதேவன்களான மாறன் சகோதரர்கள் குறித்து அடக்கியே வாசித்தனர்.
காரணம் மாறன்களின் சன் டிவியில் விகடன் நிறுவனத்தின் தொலைக்காட்சித் தொடர்கள் ஒளிபரப்பாகிவருகின்றன. மாறன்களை பற்றி பேசினால் சன் டிவி வருமானம் போய் விடும் என்பது விகடனாருக்குத் தெரியும். எனவே ஆண்டிமுத்து ராசா செய்ததாக சொல்லப்பட்ட ஊழலுக்கு எதிராக ஓங்கி ஒலித்த விகடன், மாறன்கள் என்றதும் மலத்துவாரத்தை கூட கையால் பொத்திக்கொண்டது. இது தான் விகடனின் “ஊழல்” ஒழிப்பு லட்சணம்.
சரி ராமதாஸ் விஷயத்தில் ஜாதிவெறிக்கு எதிராகவும், ராசா விஷயத்தில் ஊழலுக்கு எதிராகவும் இப்படி ஓங்கிக் குரல் கொடுத்த விகடன் என்கிற ஊடக நிறுவனத்தின் பெருமைமிகு முதலாளி பி சீனிவாசன் இந்த இரண்டு விஷயங்களில் (சாதி, ஊழல்) சொந்த வாழ்க்கையில் எப்படி நடந்துகொண்டார்?
குமுதம் நிறுவனத்தில் அதன் உண்மையான முதலாளி எஸ்ஏபிக்கு, வரதராஜனின் அப்பனுக்கு எஸ்ஏபி அனுபவ பாத்தியதைக்காக தனது நிறுவனத்தில் சில பங்குகளை இலவசமாக கொடுத்தார். அந்த பங்குகளை வைத்துக்கொண்டு, எஸ்ஏபி மனைவி உள்ளிட்ட உண்மையான வாரிசுகளை ஏமாற்றி, ஒட்டுமொத்த குமுதம் நிறுவனத்தையுமே அபகரிக்கப் பார்த்த 420 பேர்வழியான குமுதம் வரதராஜனுக்கு எதிராக எஸ்ஏபியின் உண்மையான வாரிசுகள் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்கள். அதைத் தொடர்ந்து காவல்துறை, வரதராஜனை கைது செய்தது.
இது விகடனின் பிரதான தொழில் எதிரியான குமுதத்தில் நடந்த முழுக்க முழுக்க உள்வீட்டு பிரச்சனை. ஆனால் விகடனின் சீனிவாசன், குமுதம் வரதராஜனுக்கு ஆதரவாக நீதிமன்றத்திற்கு ஓடோடிப்போனர். அடிப்படையில் மோசடி மற்றும் கிரிமினல் வழக்கை, ஊடக சுதந்திரம் சம்பந்தப்பட்டது என்று ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்தார். ஒருவழியாக தனது சகல செல்வாக்கையும் பயன்படுத்தி சிறைக்கு செல்லவேண்டிய குமுதம் வரதராஜனை ஜாமீனில் எடுத்தார் விகடன் சீனிவாசன்.
இந்த பிரச்சனையில் விகடன் சீனிவாசனையும், குமுதம் வரத ராஜனையும் இணைத்தவை இரண்டு. இருவரின் முதுகிலும் இருந்த பூணூல், நெற்றியில் இருந்த திருமண். இருவருக்கும் இடையில் இருந்த பார்ப்பண ஜாதிப்பற்றை தாண்டி வேறு ஒரு இணைப்புமே இல்லை. அதென்ன விகடன் முதலாளிக்கு இருக்கும் சுயஜாதிப்பற்று, வன்னியனான ராமதாஸுக்கு வந்தால் ஜாதிவெறியா? ராசா கைதானால் அது ஊழல், குமுதம் வரதராஜன் கைதானால் அது ஊடக சுதந்திரமா?
இது தான் விகடனின் ஊடக அறம்; தலித் ஆதரவு மற்றும் ஊழல் ஒழிப்பின் லட்சணம். ஆனால் பெரும்பான்மையான முற்போக்குகள், தலித் அறிவுஜீவிகள், திராவிடத் திலகங்களே கூட விகடனின் இந்த சுயஜாதி பார்ப்பண வெறி குறித்து ஒன்று தெரிந்துகொள்வதில்லை; தெரிந்தாலும் காட்டிக்கொள்வதில்லை. காரணம் அவர்கள் தரும் இலவச ஊடக விளம்பர வாய்ப்பு.
அதுமட்டுமல்ல, தற்போது தலித் ஆதரவு என்கிற பெயரில் அதிமுக அரசு ராமதாஸ் மீது எடுக்கும் சட்டவிரோதமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை பொறுப்புள்ள நடுநிலை ஊடகம் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் விகடன் கண்டிக்காமல் மறைமுகமாக ஆதரிப்பதும் அதன் பார்ப்பண அணுகுமுறையின் ஒரு பகுதியாகவே பார்க்கத் தோன்றுகிறது.
தலித் ஆதரவு திடீர் சாமியாடிகளை தவிர்த்துவிட்டு இந்த பிரச்சனையை கொஞ்சம் ஆழமாக பார்ப்பவர்களுக்கு ஒரு உண்மை புரியும். தமிழ்ச் சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் வன்னியர், தலித் ஆகிய இந்த இரு ஜாதிக்குழுமங்களுக்கு இடையிலான ஜாதிய பகையை மேலும் ஊதிவிடுவது இரு ஜாதிகளுக்குமே நல்லதல்ல.
இதில் உண்மையான அக்கறையுள்ளவர்கள் யாருமே, இந்த நெருப்பை அணைக்கவே விரும்புவார்கள். ஆனால் வன்னிய ஆதரவு என்று ஒருபக்கம் காடுவெட்டி குருவும், தலித் ஆதரவு என்கிற பெயரில் அதிமுக அரசும் செய்வது இந்த பகையை மேலும் கூர்மைப் படுத்தும் செயல்களே. இதில் விகடன் தன் பங்குக்கு ஆளும் அதிமுகவின் அரசியல் முன்னெடுப்பை ஊடகத்தில் செய்வதன் ஒரு வடிவமே இந்த காரசாரமான காணொளி.
இதே பிரச்சனையை ஒட்டி, விகடனின் போட்டி ஊடகமான நக்கீரனும் ஒரு வீடியோவை தயாரித்து வெளியிட்டிருக்கிறது. “அந்த நாள் வரவேண்டும்” என்கிற தலைப்பிலான இந்த வீடியோ சுமார் நான்கு நிமிடம் ஓடுகிறது. அதில் ராமதாஸும் திருமாவளவனும் அரசியலில் ஒன்றாக இருந்த உருப்படியான காலகட்டத்தையும், தற்போது இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதலையும் மாற்றி மாற்றிக் காட்டி இவர்கள் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என்கிற கோரிக்கை விடுக்கிறது நக்கீரனின் வீடியோ. அதில் இரு தரப்பு தவறுகளையும் காட்டி, இருவரும் மீண்டும் இணைவதே ஒட்டுமொத்த நன்மை தரும் என்கிற பொது நன்மைக்கான பார்வை நக்கீரனின் வீடியோவில் வெளிப்படுகிறது.
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=98966
வன்னியர், தலித் ஆகிய இரண்டு ஆடுகளை மோதவிட்டு ரத்தம் குடிக்க ஆரிய விகடனும், இரண்டு ஆடுகளும் மோதிச்சாகாதீர்கள் என்கிற கோரிக்கை விடுக்கும் திராவிட நக்கீரனுமாக தமிழ் ஊடகத்துறையின் ஆரிய திராவிட யுத்தம் தொடர்கிறது.
இதில் நாடோடியின் ஆதரவு நக்கீரனுக்கு. நீங்கள் யார் பக்கம் என்பதை உங்கள் மனசாட்சி முடிவெடுக்கட்டும்.