இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளமான www.defence.lk என்ற இணையதளத்தில் இந்திய இலங்கை மீனவர் இடையேயான பிரச்னை குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.. குறிப்பாக தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் அத்துமீறி நுழைந்து தாக்கப்படுவது குறித்தும், கைது செய்யப்படுவது குறித்தும் இந்திய பிரதமருக்கு தமிழக முதல் அமைச்சர் கடிதம் எழுதுவது தொடர்பாக மிகவும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சனங்கள் அந்த கட்டுரையின் முகப்பு பகுதியில் இடம்பெற்றிருந்தது.
நமது பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா எழுதுவது காதல் கடிதங்கள் என அந்த கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தது. இதற்கு தமிழகத்தில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது , இதனால் அந்த கட்டுரை அந்த இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. இந்த கட்டுரை இலங்கை அரசின் அனுமதி இல்லாமல் வெளியிடப்பட்டு இருந்தது என அவர்கள் தெரிவித்து இருந்தார்கள். இந்த விவகாரத்திற்காக அவர்கள் மோடியிடமும் ஜெயலலிதாவிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.
இந்த விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்தார்கள். இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் இன்று ஆர்பாட்டம் செய்தனர். இலங்கை அரசு இதில் ஜெயலலிதாவிடம் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்கள்.இந்த போராட்டத்தில் நடிகர்கள் விஜய், சூர்யா, பிரபு, சிவகுமார், பார்த்திபன், ஸ்ரீகாந்த், பாக்யராஜ், விவேக், ஜீவா, விக்ரம்பிரபு, இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.ஜே.சூர்யா, சீமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பேசிய நடிகர் விஜய், "இலங்கைத் தமிழர்களையும், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களையும் காப்பாற்ற முயற்சியெடுக்கும் தமிழக முதல்வரை கேலி செய்யுமாறு இணையதளத்தில் சித்தரித்த இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இது ஒட்டுமொத்த தமிழர்களையே இழிவுபடுத்தும் செயல் ஆகும் என்றார். அது மட்டுமில்லாமல் ஜெயலலிதாவை தவறாக பேசியது தனது தாயை தவறாக பேசியது போல் இருந்ததாக கூறினார். விஜய்யின் இந்த பேச்சு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
கடந்த வாரங்களில் வெளிவந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய், ஒரு படத்தின் வெற்றியை ரசிகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும் அதனை சூழ்நிலைகள் முடிவு செய்ய கூடாது. தலைவா வெற்றி பெற்று இருக்க வேண்டிய படம் ஒரு சிலரால் அது தோல்வியடைந்தது என்று அவர் மறைமுகமாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை குற்றம்சாட்டினார். ஆனால் அதில் இருந்து முற்றிலும் மாறி இப்போது பேசி உள்ளார். இப்போது இவர்கள் நடத்தியுள்ளது வெறும் கண்துடைப்பு நாடகம் தான் என அனைவருக்குமே தெரியும். இவர்கள் நடத்தும் போராட்டத்தால் ஒன்றும் ஆகபோவது இல்லை.
விஜய் திட்டினால் ஒவராக திட்டி விடுகிறார்,
விஜய் புகழ்ந்தால் ஒவராக புகழ்ந்து விடுகிறார்.