BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 13 August 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news


யுவன்சங்கர் ராஜா யாரால் எதற்காக இஸ்லாம் மதத்திற்கு மாறினார்? அவரின் விளக்கம்
http://www.satrumun.net/2014/08/why-yuvan-shankar-raja-converted-to.html

10 செக்ஸ் உண்மைகள்...
http://www.satrumun.net/2014/07/10.html

இந்தியக் கொடியை ப்ரோபைல் போட்டோவாக வைப்பது சட்டப்படி குற்றமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
http://www.satrumun.net/2014/08/can-we-use-our-tricolor-flag-in-dp.html

ஷங்கரின் ‘ஐ’ படம் ரிலீஸ் தாமதம் ஏன்? : பரபரப்பான தகவல்கள்!!!
http://goo.gl/uKQ6e9

பெண்களுக்கு முத்தம் தர ஏத்த இடம், சிறந்த இடம் எந்த இடம்?
http://www.satrumun.net/2014/08/romantic-places-to-get-kiss.html

செல்பி எடுக்க ஆசைப்பட்டு உயிரை விட்ட ஒரு ஜோடி
http://www.satrumun.net/2014/08/a-couple-dies-while-taking-selfie.html

கங்குலியை அழ வைத்த இந்திய அணியினர், 2005 இல் நடந்த நிகழ்ச்சி தற்போது வெளிவந்துள்ளது
http://www.satrumun.net/2014/08/yuvraj-made-april-fool-prank-and-made.html

பேஸ்புக்கில் பதிவிடும் போட்டோவுக்கு அதிக லைக் வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்குள்ள மனச்சிக்கல்கள்
http://www.satrumun.net/2014/08/fb-photos-uploading-shows-your-character.html

'முதல் மரியாதை' படம் எனக்குப் புடிக்கல...: பாரதிராஜாவை அழ வைத்த இளையராஜா!
http://goo.gl/cAc3rZ

ஆப்பிள் ஐ-ஓஎஸ் தான் மிகவும் பாதுகாப்பான ஆப்பரேட்டிங் சிஸ்டம் - ஆய்வு முடிவுகள் !!
http://www.satrumun.net/2014/08/ios-is-the-most-secured-os-for-mobile.html

இந்த ஆண்டு நோபல் பரிசை வென்றார் இந்திய வம்சவாளி கணித மேதை
http://www.satrumun.net/2014/08/ios-is-the-most-secured-os-for-mobile.html

செல்பி எடுப்பதற்கு என ஸ்பெஷலாக ஒரு மொபைல் போன் வரவுள்ளது
http://www.satrumun.net/2014/08/microsofts-selfie-lumia-730-looks-set.html

தனுஷின் வரிகளில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், இளையராஜாவின் குரலில் உருவாகி உள்ள பாடல்
http://www.satrumun.net/2014/08/a-new-song-by-great-combo.html

ஆப்பிள் ஐ-ஓஎஸ் தான் மிகவும் பாதுகாப்பான ஆப்பரேட்டிங் சிஸ்டம் - ஆய்வு முடிவுகள் !!


முந்தைய காலங்களில் மொபைல் ஓஎஸ்க்கு மக்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை . ஆனால் விண்டோஸ் மொபைல் வந்த பிறகு மக்கள் அனைவரும் ஓஎஸ் மீது ஒரு கண் வைக்க தொடங்கி உள்ளனர் . எனவே இப்போது உள்ள ஆப்பரேட்டிங்க் சிஸ்டங்களில் எது பாதுகாப்பானது என ஒரு நிறுவனம் ஆய்வு நடத்தியது .

இந்த ஆய்வுக்காக பைன்ஸ்பை என்னும் ஒரு ஃஸ்பைவேரை உருவாக்கி ஆண்ட்ராய்ட் , விண்டோஸ் , ஐ-ஓஎஸ் ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் செலுத்தி அதன் பாதுகாப்புத் தன்மையை சோதித்தனர் .

ஆண்ட்ராய்ட் , விண்டோஸ் ஆகிய உள்ளே புகுந்து தனது வேலையைக் காட்டிய அந்த ஸ்பைவேரால் , ஐ-ஓஎஸ் ஸில் ஒன்றும் செய்யமுடியவில்லை . ஆனாலும் ஐ-ஓஎஸ்ஸில் ஜெயில் பிரேக் செய்து இருந்தால் மட்டுமே அந்த ஃஸ்பைவேரால் உள்ளே நுழைய முடியும்

இந்திய வம்சவாளி மஞ்சுல் பார்கவா கணித நோபல் பரிசை வென்றார் !!


கணித துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கா கொடுக்கப்படும் விருதுகளில் ஒன்று பீல்ட்ஸ் மெடல் . இதனை கணிதத்தின் நோபல் பரிசு என்றும் அழைப்பர் .

4 வருடங்களுக்கு ஒரு முறை கொடுக்கப்படும் , இந்த விருதை இந்திய வம்சவாளியான மஞ்சுல் பார்கவா இம்முறை வென்றுள்ளார் . இவர் பிரின்ஸ்டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார் .

இந்தமுறை முதல் முறையாக பெண் ஒருவர் வென்றுள்ளார் . ஈரான் நாட்டின் மரியாம் மிசக்கானி என்பவர் இந்த விருதை வென்றுள்ளார் .

செல்பி எடுப்பதற்கு என ஸ்பெஷலாக ஒரு மொபைல் போன் வரவுள்ளது




உலகமே இப்போது செல்பி போட்டோவுக்கு அடிமையாகி வருகிறது. எங்கு பார்த்தாலும் ஒரே செல்பியாக தான் இருக்கிறது. இந்த மாதம் செப்டம்பர் மாதம் எல்லாரும் ஐ போன் 6 ஐ தான் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்கு போட்டியாக ஒன்று வந்துள்ளது.  செல்பி எடுப்பதற்காக ஸ்பெஷலாக ஒரு மொபைல் போன் செப்டம்பர் மாதம் வரவுள்ளது.

அது தான் நோக்கியா லுமியா 730 . இதன் முன் கேமரா 5 மெகா பிக்சல் ஆகும். இதன் லென்சுகள் செல்பி எடுப்பதற்கு என பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு உள்ளன. இப்போது இதனை செல்பி போன் என்று தான் அழைத்து வருகிறார்கள்.

செல்பி எடுக்க ஆசைப்பட்டு உயிரை விட்ட ஒரு ஜோடி




உலகமே இப்போது செல்பிக்கு மாறி வருகிறது. எங்கு பார்த்தாலும் ஒரே செல்பி மோகம் தான். உலகி உள்ள போட்டோகிராபர்களுக்கு எல்லாம் வேலை இல்லாத நிலைக்கு சென்று விடுவார்கள் போல. இதன் உச்சக்கட்ட சம்பவம் ஒன்று போர்ச்சுகலில் நடந்து உள்ளது. போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள பிரபல சுற்றுலா தலமான லிஸ்பன் அருகேயுள்ளது கபோ டே ரோகா. இங்கு மலை குன்றை ஒட்டி, அட்லான்டிக் கடல் அமைந்துள்ளது.

இந்த பகுதிக்கு தங்களது ஐந்து மற்றும் ஆறு வயது குழந்தைகளுடன் போர்ச்சுக்கல் தம்பதி ஒன்று வந்துள்ளது. குழந்தைகளை ஓரமாக நிற்க செய்துவிட்டு மலை குன்றின் உச்சியில் நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளது அந்த தம்பதி. பின்பக்கம் இருந்த கடலும் சேர்ந்து படத்தில் விழ வேண்டும் என்பதற்காக கொஞ்சம் கொஞ்சமாக மலையின் உச்சிபகுதிக்கே வந்த அந்த கணவனும், மனைவியும், குழந்தைகள் கண் எதிரிலேயே கடலில் விழுந்தனர். அவர்களது சடலங்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.


தனுஷின் வரிகளில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், இளையராஜாவின் குரலில் உருவாகி உள்ள பாடல்




தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் ப்ரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் வை ராஜா வை.  3 படத்துக்கு பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம் இது. இந்த படத்தை அவர் அதர்வாவுக்காக செய்தார் , ஆனால் அவரிடம் டேட் இல்லை. இதில் டாப்ஸி, விவேக் ஆகியோரும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இதில் தனுஷின் வரிகளில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், இளையராஜாவின் குரலால் ஒரு பாடல் அமைக்கப்பட்டு உள்ளது. அப்படியானால் அந்த பாட்டு எப்படி இருக்கும் என யோசித்து பாருங்கள். ஏற்கனவே தனுஷ் எழுதிய கொலைவெறி பாடல் மெகா ஹிட் ஆனது. இதில் மூவரின் கூட்டணி அமைந்து உள்ளதால் இந்த பாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த ஒரு பாடல் மட்டும் நாளை வெளியாகிறது.

2005 இல் ஒரு பொய் சொல்லி கங்குலியை அழ வைத்த இந்திய அணியினர்





கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி முழுவதும் கொச்சியில் இருந்தார்கள். அன்று ஏப்ரல் முதல் தினம் என்பதால் யுவராஜ் , ஹர்பஜன் , நெஹ்ரா போன்ற வீரர்கள் கங்குலியை ஏமாற்ற நினைத்துள்ளார்கள். அதற்க்காக ஒரு செய்திதாளை ஏற்பாடு செய்துள்ளார்கள். அதில் கங்குலி யுவராஜ், ஹர்பஜன் , சேவாக் பற்றி தவறாக கூறி இருப்பதாக இருந்தது.

இதனை பார்த்த கங்குலிக்கு கடும் அதிர்ச்சி. இது குறித்து அந்த வீரர்கள் அணி மேலாளரிடம் புகார் செய்தார்கள். ஆனால் கங்குலி தான் அவ்வாறு செய்யவில்லை தன்னை நம்புமாறு கூறி கொண்டு இருந்தார். ஆனால் யாரும் நம்பவில்லை. கங்குலிக்கு ஆதரவாக யாரும் இல்லை. அவரது கண்களில் தண்ணீர் வரும் நிலைக்கு சென்றுவிட்டார். கங்குலி தனது கேப்டன் பதவியை தனது ராஜினாமா செய்வதாக கூறினார். ஆனால் டிராவிட்டால் இதற்கு மேல் கங்குலி கவலை படுவதை பொருக்க முடியவில்லை. அது ஒரு ஏப்ரல் ஃபூல் என்னும் உண்மையை சொல்லிவிட்டார்.

அவ்வளவு தான் டிரஸிங் ரூம் நிலை மாறியது. கங்குலி தனது பேட்டை எடுத்துக் கொண்டு அனைத்து வீரர்களையும் துரத்த ஆரம்பித்து விட்டார். இதை இன்று நினைத்து கூட சிரித்துக் கொண்டு இருப்பார் யுவராஜ் சிங்.

ஏ.ஆர்.ரஹ்மான் வழியில் யுவன்சங்கர் ராஜா? இஸ்லாத்துக்கு ஏன் மாறினேன் என்று விளக்கம்


பிரபல ஆங்கிலப்பத்திரிக்கை ஒன்றில் இளையராஜாவின் மகனும் பிரபல இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜாவின் பேட்டி வெளியாகியுள்ளது, அதில் இஸ்லாத்துக்கு ஏன் மாறினீர்கள் என்று கேட்டதற்கு நீண்ட விளக்கம் அளித்திருந்தார்ம் அதில் கூறியிருந்ததாவது.

என் தந்தையும் தாயும் தீவிர கடவுள் பக்தியாளர்கள், வீட்டில் கண்ணாடி விழுந்து உடைந்தால் கூட வேதியர்களை அழைப்பார் என் தந்தை, ஆனால் எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு எண்ணம் உண்டு, அகில உலகத்தையும் அனைத்தையும்  ஆட்டுவிக்கும் எல்லாவற்றுக்கும் மேலான  கடவுள் எப்படி ஒரு உருவத்தை கொண்டிருப்பார் என்று யோசிப்பேன்.

மும்பையிலிருந்து சென்னை திரும்பிய போது என் தாய்க்கு உடல்நிலை சரியில்லாமல் அதிகமாக இரும ஆரம்பித்தார், அவரை நானும் என் தங்கையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம், மருத்துவமனையில் படுத்திருந்த நிலையில் என் கையை பிடித்துக்கொண்டிருந்த தாய் உயிர் துறந்தார், சில நொடிகளுக்கு முன் உயிருடன் இருந்தவர் இப்போது இல்லை, அவரது ஆத்மா எங்கே போயிருக்கும் என்று நினைத்தேன்.

அதற்கான பதிலை தேடும் போது அல்லாவிடம் இருந்து அழைப்பு வந்தது, எனது நெருங்கிய நண்பர் ஒருவர் தொழுகை செய்யும் விரிப்பை கொடுத்தார், அவர் புனிதமான மெக்காவிற்கு சென்றிருந்த போது கொண்டு வந்தது என்றும் இது மெக்காவை தொட்ட தொழுகை பாய் என்றும் சொன்னார், எப்போதெல்லாம் கடினமாக உணர்கிறாயோ அப்போது இதன் மேல் அமர்ந்து கொள் என்றார்.
அதை சுருட்டி ஒரு மூலையில் வைத்துவிட்டேன், அதன் பின் சில மாதங்கள் கழித்து என் தாய் பற்றி உறவினருடன் பேசிவிட்டு அழுது கொண்டே அறைக்கு வந்த போது அந்த தொழுகை விரிப்பை பார்த்தேன், அது வரை அது அங்கிருந்ததையே மறந்திருந்த நான் அதை விரித்து அதன் மேல் அமர்ந்து கடவுளே என் பாவங்களை மன்னித்தருளவும் என்றேன், என் மனபாரம் குறைந்து லேசானதை போல உணர்ந்தேன், அதன் பின் குரானையும் மொழிபெயர்ப்புகளையும் படிக்க ஆரம்பித்தேன், இஸ்லாத்தை பின்பற்ற ஆரம்பித்தேன் 2014 ஜனவரி மாதத்தில் தொழுகை செய்வதையும் கற்றுக்கொண்டேன்.

எனது தந்தையிடம் கடைசியாகத்தான் தான் இஸ்லாத்துக்கு மாறப்போவதாக கூறினேன், அவர் அதை விரும்பவில்லை என்றார். தற்போது தான் யுவன்சங்கர் ராஜா என்ற பெயரில் பிரபலமாகியிருப்பதால் உடனடியாக பாஸ்போர்ட் உட்பட ஆவணங்களில் பெயர் மாற்றப்போவதில்லை என்றும் பின்பு அதை மாற்றலாம் என்றும் அதில்  கூறினார்

Yuvan shankar raja explained in the interview with famous english daily that why he converted to islam.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media