BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 1 July 2013

எகிப்தில் மீண்டும் வெடித்த மக்கள் புரட்சி

ஆண்டவனும் சரியில்லை, இப்போ ஆள்பவனும் சரியில்லை எகிப்தில் மீண்டும் வெடித்த மக்கள் புரட்சி

2011ம் ஆண்டு எகிப்தில் சர்வாதிகாரி ஹோசினி முபாரக்கை எதிர்த்து மக்கள் போராட்டம் நடைபெற்றது, தெக்ரிக் மைதானத்தில் கூடிய பொதுமக்கள் முபாரக் பதவி விலகும் வரை போராட்டத்தை விலக்கவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு பல சலுகைகள் சம்பள உயர்வுகளை அறிவித்தும் மக்கள் அதை ஏற்கவில்லை.இதைத் தொடர்ந்து முபாரக் பதவி விலகினார். அதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் மீது கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, கடந்த ஆண்டு முதன்முறையாக ஜனநாயக முறையில் அதிபர் தேர்தல் நடந்தது. மக்கள் ஓட்டு போட்டு முகமது முர்சியை அதிபராக தேர்ந்தெடுத்தனர். அவரது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் பதவி விலக கோரியும், பொதுமக்கள் மீண்டும் போராட தொடங்கினர். கடந்த ஒரு வாரமாக தலைநகர் கெய்ரோ மற்றும் அலெக் சாண்டிரா நகரிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அதில் ஒரு அமெரிக்க மாணவர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர்.

புதிய அதிபராக முகமது முர்சி பதவி ஏற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இந்தநிலையில் அவர் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் நேற்று கண்டன பேரணி நடத்தினர். அதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

அலெக்சாண்டிராவில் சுமார் 2 லட்சம் பேர் தெருக்களில் திரண்டனர். அங்கும் சகோதரத்துவ கட்சி அலுவலகங்களுக்கு தீவைக்கப்பட்டது. இதற்கிடையே, அதிபர் மாளிகையை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர். எனவே, ராணுவத்தினரும் அதிபர் முர்சியின் சகோதரத்துவ கட்சியை சேர்ந்த சுமார் 20 ஆயிரம் பேரும் காவலாக நிற்கின்றனர்.


Egypt protest against Mohamed Morsi after one year of his government, lacks of people in cairo's streets

ஆசிய அத்லெட்டிக்ஸ் சங்க தலைவர் தேர்தலில் தோற்றுப்போன ஸ்டேடியம் முழுங்கி கல்மாடி

ஆசிய அத்லெட்டிக்ஸ் சங்க தலைவர் தேர்தலில் தோற்றுப்போன ஸ்டேடியம் முழுங்கி கல்மாடி


டெல்லி காமன்வெல்த் போட்டி ஊழலில் சிக்கிய சுரேஷ் கல்மாடி, சில காலம் திகார் சிறையில் காய்ந்த ரொட்டி தின்று விட்டு ஜாமீனில் வெளிவந்தார், ஆசிய அத்லெட்டிக்ஸ் சங்கத் தலைவர் பதவிக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். கல்மாடியை எதிர்த்துப் போடிட்யிட்ட கத்தார் அத்லெட்டிக்ஸ் சங்கத்தின் தலைவர் தல்ஹாம் அல் ஹமாத் வெற்றி பெற்றுள்ளார்.

# ஒரு முறை திகாரில் போய் ரொட்டி தின்று விட்டு வந்துவிட்டால் ஊழல் வாதிகள் உத்தமர்களாகிவிடுவார்களோ?

Suresh Kalmadi loses bid for Chief of Asian Athletics Association

அரசு வக்கீலை கோர்ட்டில் வைத்து அடித்த விஜயகாந்த் கட்சி வக்கீல்கள், கடுப்பாகி வெளியேறினார் நீதிபதி

அரசு வக்கீலை கோர்ட்டில் வைத்து அடித்த விஜயகாந்த் கட்சி வக்கீல்கள், கடுப்பாகி வெளியேறினார் நீதிபதி

முதலில் சொந்த வேட்பாளரை அடித்தார் விஜயகாந்த், அதன் பின் பத்திரிக்கையாளர்களை நாயே பேயே என்று திட்டினார், தற்போது  அரசு வக்கீலை விஜயகாந்த் வக்கீல்கள் அடித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

விஜயகாந்த் மீது நாகர்கோவில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக அவதூறு வழக்குத்தொடரப்பட்டுள்ளதால் இன்று கோர்ட்டில் ஆஜரானார் விஜயகாந்த், சினிமாக்காரர்களை பார்க்க கூட்டம் கூடும் தமிழகத்தில் விஜயகாந்தை காண கோர்ட் ஹாலிலேயே கூட்டம் முண்டியடித்துள்ளது. அதை கண்டித்து அரசு வக்கீல் பேச கோபமடைந்த விஜயகாந்த்தின் வக்கீல்கள் ராஜசேகரை அடித்து விட்டனர். அதில் அவர் காயமடைந்தார். அதிர்ச்சி அடைந்த நீதிபதி கோபத்துடன் கிளம்பிச் சென்று விட்டார்.

# மாற்று வேண்டும் என்று கேட்ட தமிழக மக்களுக்கு விஜயகாந்த் கொடுத்துள்ள மாற்று இது தான்.

vijayakanth advocates beat public prosecutor in front of Nagarkovil magistrate in the court hall
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media