உலகின் முதன்முதல் உயிர் எப்படி உருவானது என்பதைப்பற்றி அறிவியலாளர்களிடையே பல்வேறு கருத்துக்கள் உலவுகின்றன.லேட்டஸ்ட்டாக இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானி சங்கர் சட்டர்ஜி ஒரு புது விளக்கத்தை அளிக்கிறார்.டெக்ஸாஸ் பல்கலைகழகத்தில் உயிர் படிமங்களை ஆராய்ச்சி செய்யும் பிரிவை சேர்ந்த இவர் "4.5 பில்லியன் வருடங்களுக்கு முன் பூமி உயிர் வாழ தகுதி இல்லாததாக, எரிமலைகளும், சூடான வாயுக்களும் நிறைந்ததாக இருந்தது.அந்த காலகட்டத்தில் ஒரு விண்கல் வந்து பூமியில் மோதியது.அதனால் ஏற்பட்ட பள்ளத்தில் தான் தண்ணீரும், உயிர் உருவாக தேவையான வேதியியல் பொருட்களும் உருவானது.அதனால் விண்கற்களினால் உயிர்களை அழிக்க மட்டுமல்லாது,உயிர்களை தோன்ற வைக்கவும் முடியும்" என்ற புது கூற்றினை தெரிவித்துள்ளார்.
# இது மட்டும் உண்மையா இருந்தா பலவருஷ கேள்விக்கு பதில் கிடைச்சமாதிரி இருக்கும்.