BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 7 July 2013

வாபஸ் ஆகுமா வேலை நிறுத்தம்!



மத்திய அரசு நெய்வேலி நிலக்கரி சுரங்க நிறுவன பங்குகள் 5% விற்பதாக அறிவித்ததை அடுத்து அந்நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்தனர்.

அந்த 5% பங்களை தமிழக அரசின் பொதுநிறுவனமே வாங்கி கொள்வதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். தற்பொழுது பங்குவர்த்தக விற்பனை ஒழுங்கு கட்டமைப்பு(செபி) சம்மதம் அளித்த நிலையில் மீண்டும் மத்திய அரசுடன் ஊழியர் சங்கம் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தது.

ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தத்தில் இருக்கும் ஊழியர்கள், பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும் பட்சத்தில் மீண்டும் நிலக்கரி உற்பத்தி தொடங்கிவிடுவார்கள் என தெரிகிறது.

# தமிழகத்தை இருண்ட மாநிலம் ஆக்காம இருந்தா சரி.

மீண்டும் மினி குவார்ட்டர்

மதுபான விற்பனையை அதிகரிக்க மீண்டும் மினி குவாட்டர் முறையை கொண்டுவரலாமா என டாஸ்மாக் யோசிப்பதாக தகவல்.

தற்போதே சம்பாரிப்பதை எல்லாம் இளைஞர்கள் ஒயின்ஷாப்பிலேயே இழந்து விட்டு செல்கிறார்கள், மிச்சமிருக்கும் நாற்பது, ஐம்பதை கூட பிடுங்கி கொண்டு தான் அரசு வீட்டுக்கு அனுப்பும் போல என மிடில்கிளாஸ் மாதவன் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

தனியார் நடத்த வேண்டிய மதுபானக்கடையை அரசு நடத்துது.
அரசு நடத்த வேண்டிய கல்விதுறையை தனியார் நடத்துது # சினிமா வசனம்!


யுக்தாமுகி வழக்கு ஏற்றுக்கொள்ளபட்டது.


முன்னாள் உலக அழகியும், நடிகையுமான யுக்தாமுகி தனது கணவர் கொடுமைபடுத்துவதாகவும், இயற்கைக்கு முரணான செக்ஸுக்கு பலவந்தபடுத்துவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்

எந்த பிரிவின் கீழ் இந்த வழக்கை பதிவு செய்வது என போலீஸார் குழம்பியநிலையில், இதையும் வரதட்சணை மற்றும் வன்கொடுமை பிரிவின் கீழ் எடுத்துக்கொள்ளலாம் என நிபுணர்களின் கருத்தை அடுத்து யுக்தாமுகியின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் தமிழ்படத்தில் ஒன்றிலும் நடித்துள்ளார்!



இஸ்லாமிய விவாகரத்து சட்டம்.

இஸ்லாமிய விவாகரத்து சட்டம்.

சமீபத்தில் இஸ்லாமிய பெண்ணொருவர் தலாக் சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்

இதை எதிர்த்து இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கருத்தும், பெண்ணியவாதிகளும், முற்போக்குவாதிகளும் வழக்குக்கு ஆதரவான கருத்துகளும் சொல்லி வருகிறார்கள்.

ஏற்கனவே இந்தியநீதிமன்றம் இஸ்லாமிய பெண்களுக்கும் மறுமணம் ஆகினால் மட்டுமே ஜீவனாம்சம் தர தேவையில்லை என வழக்கு தொடர்ந்தவர்களுக்கு தீர்ப்பளித்துள்ளது.

சிறுவிசயத்திற்கெல்லாம் பள்ளிவாசல் காஜிக்கள் மூலமாக தலக் கொடுக்கிறார்கள் என்பது இஸ்லாமிய பெண்கள் பலரது கருத்தாக இருக்கிறது.

பெண்களின் அடிப்படை உரிமைகள் குறித்து நல்லொதொரு சட்டம் வரவேண்டும் என எதிர்பார்ப்போம்!

22 ஐ மணந்த 92!

92 வயது மணமகன், 22 வயது மணமகள்!

ஈராக்கை சேர்ந்த 92 வயது விவசாயி முசாலி முகமது இரண்டாவது திருமணமாக 22 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அவரது முதல் மனைவி மூன்று வருடங்களுக்கு முன்பு தான் இறந்தார், இருவரும் ஏறத்தாழ 60 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள்.

இத்திருமணத்தை நான்கு மணி நேர ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடி இருக்கிறார்கள், ஊர் பெரியவர்கள் இத்திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.

இத்திருமணத்திற்கு பின் தான் 20 வயது இளைஞனை போல் உணர்வதாக முசாலி முகமது தெரிவித்திருக்கிறார்.


வலுக்கும் போராட்டம்!

மேலும் வலுக்கும் போராட்டம்

நெய்வேலி நிலக்கரி சுரங்க பணியாளர்கள் நான்காவது நாளாக அரசின் பங்கு விற்பனை கொள்கையை எதிர்த்து போராடி வருகின்றனர்

அரசு தனது கொள்கையை வாபஸ் பெறும்வரை போராட்டம் தொடரும் எனவும், வரும் ஜூலை 9 ஆம் தேதி சுரங்க முற்றுகை போராட்டம் நடக்கும் எனவும் தொழிற்சங்க அமைப்புகள் தெரிவித்தன

ஏற்கனவே கையில் இருந்த இருப்பை வைத்து தான் தற்போதய மின் உற்பத்தி நடக்கிறது. கையிருப்பு குறையும் பட்சத்தில் தமிழகத்தில் மின் தடை ஏற்படும் அபாயம் உள்ளது என நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.


செய்திகள்

விழிப்புணர்வு மாராத்தான்.

உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்த சென்னை பெசண்ட்நகரிலிருந்து மெரினா வரை இன்று விழிப்புணர்வு மாராத்தான் நடக்கிறது.

வயது வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.


அமெரிக்காவில் விமான விபத்து.

தென்கொரிய நிறுவனத்துக்கு சொந்தமான ஏசியன் போயிங் விமானம் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோவில் தரை இறங்கும் போது டயர் வெடித்து விபத்துகுள்ளானது.

அதில் இரண்டுபேர் பலியானதாகவும், 30 க்கும் மேற்பட்டார் காயமுற்றிருப்பதாகவும் தெரிகிறது.


 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media