BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 15 January 2014

கமல் நடிக்கும் 'உத்தம வில்லன்'

விஸ்வரூபம் 2 படத்தின் வேலை இறுதி கட்டத்தை நெருங்கியிருப்பதை அடுத்து, 'உத்தம வில்லன்' என்ற படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து, இயக்குநர் பாலசந்தரும் நடிக்க இருக்கிறார். இயக்குநர் லிங்குசாமி தயாரிக்க,  கமலின் நண்பரான நடிகர் ரமேஷ் அரவிந்த் இப்படத்தை இயக்குகிறார். படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

சந்தானம் முதன் முதலாக, கமலுடன் இப்படத்தில் நடிக்க இருக்கிறார். உத்தம வில்லன் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பார். இந்த படம், தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் உருவாக இருக்கிறது. விஸ்வரூபம் 2 வெளியானதும், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

60 வருடங்களாக குளியல் இல்லை, கெட்டுபோன முள்ளம்பன்றி இறைச்சி உணவு



அறுபது வருடங்களாக தன் மேல் தண்ணீரே படாமல், கெட்டு போன முள்ளம்பன்றி இறைச்சி மட்டுமே உணவு என இரானில் உள்ள ஹஜ் வாழ்ந்து வருகிறார். இவருக்கு வயது 80.

சுத்தமாக இருந்தால் தான் ஆரோக்கியம் கெட்டுவிடும் என இவர் நம்புகிறார். அதனால் அவர் அறுபது வருடங்களாக குளிக்க கூட இல்லை. உணவு கூட புதிதாக தயாரிக்கப்பட்டிருந்தால் அதை உட்கொள்வதில்லை. துருப்பிடித்த எண்ணெய் கேனில் இருந்து, தினமும் ஐந்து லிட்டர் தண்ணீர் குடிப்பார். தலை முடியை வெட்ட மாட்டார், தேவைப்பட்டால், முடியை கொளுத்தி கொள்வார்.

இந்தியாவை சேர்ந்த கைலாஷ் சிங்க் என்கிறவர் இதற்கு முன், 38 வருடங்களாக குளிக்காமல் இருந்து இருக்கிறார்.

தேவயாணியின் தந்தை மக்களவை தேர்தலில் நிற்க முடிவு

தேவயாணியின் தந்தை உத்தம் கோப்ரகேட், வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிட போவதாக தன் முடிவை தெரிவித்துள்ளார். இவர் ஒரு ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி.

இதைப் பற்றி பேசுகையில், "இதில் புதிதாக கூற ஒன்றுமில்லை. பணியில் இருந்து ஒய்வு பெற்ற உடனே, அரசியலில் ஈடுபடுவது பற்றிய பேச்சு துவங்கியது. லோக் சபா தேர்தலில் நான் போட்டியிட இருக்கின்றேன். இதற்காக பல அரசியல் கட்சிகளுடனான பேச்சு வார்த்தை போய் கொண்டிருக்கிறது. சரியான நேரம் வரும் போது, இதை பற்றிய அறிவிப்பு விடுப்பேன்." என்று உத்தம் கோப்ரகேட் தெரிவித்தார். தேவயாணியின் பிள்ளைகளை பற்றி கேட்ட போது, "அவர்கள் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்கள். டெல்லியில் உள்ள பள்ளியில் சேர்க்கப்படுவார்கள்." என்றும் கூறினார்.

ஆத் ஆத்மியை சேர்ந்த குமார் விஷ்வாஸ் மீது வழக்கு பதிவ செய்யப்பட்டுள்ளது

முகரம் பண்டிகையை குறித்து, குமார் விஷ்வாஸ் கேலி செய்யும் வகையில் கருத்துகள் கூறியிருக்கிறார் என்றும், அக்கருத்துகள் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும்,  இஸ்லாமியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இதையடுத்து, குமார் விஷ்வாஸ் மீது, போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

முகரத்தை பற்றி கேலியாக பேசியதற்கு, குமார் விஷ்வாஸ், மன்னிப்பு கோரியிருந்தாலும், அதெல்லாம் போதாது எனவும், இஸ்லாமியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக, அவரை சிறையில் தள்ள வேண்டுமென, அனைத்திந்திய ஜன் சேவா குழுவின் தலைவர் நதீம் கூறியிருக்கிறார். போலீஸார், குமார் விஷ்வாஸ் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு முழுவதும் போராட்டம் நடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1984ல், பஞ்சாப் பொற்கோவிலில் நடந்த தாக்குதலுக்கு இங்கிலாந்து உதவியதா?



1984 ஆம் ஆண்டு, இந்திரா காந்தியின் ஆட்சியின் போது, பஞ்சாப்பில் உள்ள பொற்கோவிலை தாக்க ராணுவத்திற்கு, இங்கிலாந்து உதவியது என செய்தி வெளிவந்துள்ளது.

சீக்கியர்களின் பொற்கோவிலை தாக்குவதற்கு, அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி இங்கிலாந்து அரசின் உதவியை நாடியதாகவும், அதற்காக அப்போது இருந்த இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட் தாட்சர் சிறப்பு விமானப்படையை கொடுத்து உதவி புரிந்தார் என்றும் லண்டனில் உள்ள ஒரு இணையதளம் இந்த திடுக்கிடும் செய்தியை வெளியுட்டள்ளது.

இதை பற்றி விசாரணை நடத்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவிட்டுள்ளார்.

இந்திரா காந்தி அரசு, சீக்கியர்களின் கோவிலை தாக்க, இங்கிலாந்து உதவியை நாடியிருப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது என பா.ஜ.க தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி மீது போலீஸில் புகார்

கடந்த திங்கட்கிழமை அன்று, ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நூரநாட்டில் பாதயாத்திரையில் கலந்து கொண்டார் ராகுல் காந்தி. அப்போது, அங்கு கூடியிருந்த கட்சியினர், ராகுல் காந்தியை பார்க்க முண்டியடித்தனர். இதனால், ராகுல் காந்தி, அருகில் இருந்த போலீஸ் வாகனத்தின் மீது ஏறி, கட்சியினரை பார்த்து கை அசைத்தார்.

இது குறித்து, ராகுல் காந்தி மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 123 ஐ மீறிவிட்டார், அதனால் அவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் முஜீப் ரஹ்மான் நூரநாடு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

பொது மக்களுக்கு இடையூறாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினார் என்றும், அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்தினார் என்றும் ராகுல் காந்தி மீது அளித்துள்ள அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த புகாரின் பேரில் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

சுற்றுலாவிற்கு வந்த 51 வயது வெளிநாட்டு பெண் டெல்லியில் பலாத்காரம்

சுற்றுலாவிற்காக, டென்மார்க்கில் இருந்து டெல்லி வந்த 51 வயது பெண், டெல்லி ரயில் நிலையம் அருகே ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

டெல்லியில் ஒரு ஓட்டலில் தங்கியிருப்பதாகவும், நேற்று மாலை அருங்காட்சியகத்திற்கு சென்று விட்டு, திரும்பி ஓட்டலுக்கு செல்ல வழி தெரியாமல் இருந்த போது, ஒரு கும்பல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தது எனவும் அந்த பெண் போலீஸில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.

புகாரின் பேரில் இது வரை 6 பேரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜப்பானில் சுனாமியில் சிக்கிய 70,000 ஆயிரம் மரங்களில் தப்பிய ஒரே ஒரு மரம்(தி மிராக்கிள் பைன்)

ஜப்பானில் சுனாமியில் சிக்கிய 70,000 ஆயிரம் மரங்களில் தப்பிய ஒரே ஒரு மரம்(தி மிராக்கிள் பைன்). அதிசய மரத்திற்கு அழிவே இல்லாத நினைவிடம்

இரண்டு ஆண்டுகளில் 59 பெண்களை கற்பழித்த சேலம் கும்பல் கைது

இரண்டு ஆண்டுகளில் 59 பெண்களை கற்பழித்த சேலம் கும்பல் கைது

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media