BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 14 June 2014

கடத்தப்பட்ட சிறுமிகளுக்கு 800 மாடுகள் கேட்ட தீவிரவாதிகள் !!

நைஜிரியாவில் போக்கோ ஹாரம் என்னும் தீவிரவாத அமைப்பு மேற்கத்திய கல்வி முறைகளை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்து வருகின்றனர் . இரண்டு மாதங்களுக்கு முன் 200 பள்ளி சிறுமிகளை கடத்திச் சென்றனர் . இந்த ஜனவரி முதல் 3,000 த்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்துள்ளனர் .

இப்போது வந்துள்ள அறிக்கையில் , தீவிரவாதிகள் அந்த சிறுமிகளை விடுவிக்க மாடுகளை கேட்கின்றனர் . ஒரு சிறுமிக்கு 20 மாடுகள் என 800 மாடுகளை அனுப்பும்படி கேட்கின்றனர் .

இந்த வருடத்தில் தான் போக்கோ ஹாரம் தீவிரவாதிகளின் கைவரிசை அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ..


தங்கள் கிராம மக்களைக் காப்பாற்ற அங்க உள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் .

மோடியின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் வர வாய்ப்பு !!!

மோடி அவர்கள் இன்னொரு சாதனை செய்ய காத்து இருக்கிறார் . இந்த முறை நடந்த தேர்தலில் அதிக பேரணியில் கலந்து கொண்டதற்காக கின்னஸ் புத்தகத்தில் மோடியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது . இந்த தேர்தலில் அவர் 1,800 க்கும் மேற்பட்ட தேர்தல் பேரணிகளில் கலந்து கொண்டு பேசினார் . இதுதான் உலக சாதனை ஆக இருக்கும் என்று கருதுகிறார்கள் . 

பிரதமர் மோடி இந்தியாவின் பெரிய போர்க்கப்பலை பார்வையிட்டார் !!!

இன்று பனாஜி வந்த பிரதமர் மோடி இந்தியாவின் மிகப் பெரிய போர்க்கப்பலை பார்வையிட்டார் . பிரதமருக்கு கப்பற் படையினர் தங்கள் அணிவகுப்பின் மரியாதையை செலுத்தினர் . மேலும் ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா போர்க்கப்பலைப் பற்றி அறிவித்தனர் . இன்று முதல் ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா இந்தியாவின் கப்பற் படைக்காக செயல்படும் .

284 மீட்டர் நீளமும், 60 மீட்டர் விட்டமும் கொண்ட இக்கப்பல் 3 கால்பந்து மைதான அளவுக்கு பரப்பளவு கொண்டது ஆகும். 22 மாடிகளுடன் 1600 கடற்படை வீரர்கள் இதில் தங்கலாம். 

மேலும் அவர் எம்.ஐ.ஜி வகை விமானத்தில் அமர்ந்து பார்த்தார் . இந்த ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா ரஷ்யாவிடம் இருந்து 15,000 கோடி மதிப்பில் வாங்கப்பட்டது . இந்த போர்க்கப்பலில் பல்வேறு வகையான விமானங்கள் உள்ளன .

அப்போது மோடி பேசுகையில் , " இன்று நமது கப்பற் படைக்கு முக்கியமான நாள் . என்னைப் பொறுத்தவரை ஐஎன்எஸ் விக்கிரமாதித்யா நம் கப்பற் படையில் இணைப்பது மகிழ்ச்சியும் , பெருமையும் அடைகிறேன் . நாம் ஏன் ராணுவ ஆயுதம் செய்வதில் மற்ற நாடுகளை நம்பி இருக்க வேண்டும் . ராணுவத் தொழிலில் தன்னிறைவு நாம் பெற வேண்டும் . நமது ஆய்தங்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்ய வேண்டும்" என்றார் . 

டில்லியில் நடக்கும் மின்வெட்டு எதிர்த்து காங்கிர்ஸ் ஆர்பாட்டம் !!!

டில்லியில் காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி மற்றும் 150 காங்கிரஸ் தொண்டர்கள் டில்லியில் ஏற்பட்டுள்ள தீவிர மின்வெட்டு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தினர் .

இந்த போராட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜியும் கலந்து கொண்டார் . இது குறித்து அவர் அளித்த பேட்டியில் , " நானும் காங்கிரஸின் ஒரு அங்கம் மற்றும் டில்லியில் வசிக்கும் குடிமகள் . நான் கடந்த 15 வருடங்களாக டில்லியில் இப்படி ஒரு மின்வெட்டை அனுபவித்தது இல்லை . ஒரு குடிமகனாக இதை எதிர்ப்பது என் கடைமை " என்றார் .

பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூடு தாக்குதலை சமாளிக்கும் அளவு பலம் இந்திய ராணுவத்திற்கு இருக்கிறது - அருண் ஜெட்லி.

பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஐம்மு மற்றும் காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் . முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேசினார் . பின்னர் ஐம்மு மற்றும் காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லாவை சந்தித்து பேச உள்ளார் .

அப்போது அளித்த பேட்டியில் , நான் இங்கு முக்கிய அதிகாரிகளை சந்தித்து நிலமையை கேட்டு அறிந்து கொள்ள உள்ளேன்  . பாகிஸ்தானின்  தாக்குதலை சமாளிக்கும் அளவு பலம் இந்திய ராணுவத்திற்கு இருக்கிறது என்றார் .

தூள் சொர்ணக்கா காலமானார் !!

தூள் , சிவகாசி போன்ற படங்களில் வில்லி பாத்திரத்தில் நடித்த சொர்ணக்கா நம் அனைவரின் மனதிலும் ஒரு சிறந்த வில்லியாக இடம் பிடித்தவர் தெலுங்கானா சகுந்தலா .

63 வயதான சகுந்தலா நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் .

தன்னுடைய இணை உரிமையாளர் தொழிலதிபர் நெஸ் வாடியா மீது பாலியல் பூகார் அளித்தார் பீரித்தி ஜிந்தா !!!

ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்கு உரிமையாளராக பீரித்தி ஜிந்தா இருக்கிறார் . பஞ்சாப் அணியின் இணை உரிமையாளராக இருப்பவர் நெஸ் வாடியா . ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் போது இவரை நாம் அனைவரும் பீரித்தி ஜிந்தா உடன் இருப்பதை பார்த்து இருப்போம் .

நேற்று அதிர்ச்சி அளிக்கும் விதமாக தொழிலதிபர் நெஸ் வாடியா மீது பாலியல் பூகார் அளித்தார் பீரித்தி ஜிந்தா . அந்த பூகாரில் , தொழிலதிபர் நெஸ் வாடியா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் , இந்த நிகழ்வு மே 30 ஆம் தேதி நடந்ததாகவும் தெரிவித்துள்ளார் .

இந்த பூகாரின் பேரில் 3 பிரிவுகளில் தொழிலதிபர் நெஸ் வாடியா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media