இந்தியன் வங்கி தலைவர் எம்.கோபாலகிருஷ்ணனை நினைவிருக்கிறதா? அவருடையை பதவியின் இறுதி காலத்தில் தமிழக பத்திரிக்கைகளில் இந்தியன் வங்கி தலைவர் கோபாலகிருஷ்ணன் கோபாலகிருஷ்ணன் என்று புகழ்ந்து தள்ளின, பல பள்ளிகளின் விழாக்கள் சமூக நல கிளப்புகள் விழாக்கள் தலைமையேற்பு என ஒரு சில மாதங்கள் எங்கும் கோபாலகிருஷ்ணன் மயம் தான். ஓய்வு பெறும் நேரத்திலேயே அவர் மீது பல குற்றச்சாட்டுகள் கிளம்பின, அதிலும் மறைந்த தலைவர் மூப்பனார் அவர்களின் ரெக்கமண்டேஷனில் கொடுத்த பல கடன்கள் திரும்பி வரவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் கிளம்பின.
ஓய்வு பெற்ற ப்பின் இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக எம்.கோபாலகிருஷ்ணன் பதவி வகித்த போது பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதில் முறைகேடாக செயல்பட்டார் என்பது புகார். அவர் மீது மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் அவர் விடுதலையானார்.
இந்த வழக்குகளில் ஒன்று அகிலம் கட்டுமான நிறுவனத்துக்கு ரூ1.75 கோடி கடன் கொடுத்தது. 1998ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் கோபாலகிருஷ்ணன், இந்தியன் வங்கி முன்னாள் மண்டல மேலாளர் சண்முகசுந்தரம், கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த தனசிங், ஆனந்த் பிள்ளை ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை சி.பி.ஐ முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்விமாலதி இந்த வழக்கை விசாரித்து
எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தன்சிங்குக்கு 2 ஆண்டு சிறறத் தண்டனையும் ரூ.1.75 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆனந்தப்பிள்ளை இறந்து விட்டதால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
#கோபாலகிருஷ்ணனிடம் விழாக்களில் பரிசு வாங்கிய மாணவர்கள் இப்போது என்ன நினைப்பார்கள்?
Indian Bank charman M.Gopalakrishnan convicted and sentenced by chennai CBI court for one year jail