பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை - அமைச்சர்களின் கார் மீது கல் வீசித் தாக்குதல், சென்னையிலும் களைகட்டிய தேவர் பூஜை
இன்று பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குரு பூஜை நடைபெற்றது, முந்தைய காலங்களில் அதிமுக அரசு என்பது முக்குலத்தோர் சமூகத்திற்கு இணக்கமான அரசாகவும், முக்குலத்தோர் சமூகம் அரசில் அதிகார மையம்மாகவும் செயல்பட்டு வந்தது. முதல்வர் ஜெயலலிதாவை முக்குலத்தோர் சமூகத்தில் பலரும் தமது சொந்த சகோதரியை போல ஆதரித்து வந்தனர்.
முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்த உடன்பிறவா சகோதரி சசிகலா குடும்பத்தினரின் லாபி அதிமுகவில் செல்வாக்கிழந்தனர், சென்ற ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது முக்குலத்தோர் - தலித் மக்களிடையே நடந்த கலவரத்தில் முக்குலத்தோர்கள் பலரும் கொல்லப்பட்டனர். இதையடுத்து முக்குலத்தோருக்கு அதிமுக விற்குமான இடைவெளி அதிகரித்தது, இந்த ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவுக்கு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்தது. 144 தடையுத்தரவும் போட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அமைச்சர் செல்லூர் கே. ராஜு, அமைச்சர் சுந்தரராஜனும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு காரில் சென்றுள்ளார். அவர்கள் சென்ற காரை மறித்து 144 தடை உத்தரவை போட்டுவிட்டு எதற்காக அஞ்சலி செலுத்த வந்தீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அமைச்சர்களின் கார் மீது கற்கள் மற்றும் கம்புகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் அமைச்சர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
வழக்கமாக தென் மாவட்டங்களிலும் பசும்பொன்னிலும் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழா இந்த ஆண்டு சென்னை, சேலம், என்று வடமாவட்டங்களிலும் புதுக்கோட்டை, திருச்சி உட்பட பல மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்றது, பல இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல கிராமங்களில் ஒரு இலட்சம் முதல் ஒன்றரை இலட்சம் ரூபாய் வரை இந்த விழாக்களுக்கு செலவழித்துள்ளனர்.
சென்னையில் நந்தனத்தில் உள்ள தேவர் சிலையில் முதல்வர் ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உட்பட பல திமுக, அதிமுக பிரமுகர்கள் மாலை அணிவித்தனர், அது மட்டுமின்றி சென்னையில் முன்பெப்போதும் இல்லாதவகையில் இந்த ஆண்டு நந்தனம் தேவர் சிலைக்கு முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்கள் பேரணியாக வந்தனர்.
தங்களுடைய செல்வாக்கை அரசுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் காட்ட வேண்டும் என்ற எண்ணம் முக்குலத்தோர் சமூக மக்களிடம் உள்ளது என்பதே இம்முறை எப்போதும் இல்லாத அளவில் பல்வேறு இடங்களில் தேவர் குருபூஜை கொண்டாடப்பட்டது காண்பிக்கின்றது.