BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 11 October 2014

சில நாட்களாக வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பரவி வரும் அக்டோபர் 31இல் இண்டர்நெட் இணைப்பை நிறுத்த கோரி மெசெஜ் !!

For the past news days , one forward message was spreading faster in watsapp and facebook . The message called on the mobile users to stop their mobile data to show their protest against increase in mobile tariff .


கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப்பில் மொபைல் நிறுவனங்கள் அனைத்திற்கும் நமது கண்டனத்தை தெரிவிக்கும் விதமாக அக்டோபர் 31 இல் இண்டர்நெட் இணைப்பை நிறுத்தி வையுங்கள் என்னும் செய்தி பரவி வருகிறது . நெட் பேக்கின் விலையை மொபைல் நிறுவனங்கள் அதிகரித்து வருவதால் நாம் அனைவரும் இணைந்து கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என அந்த மெசெஜில் குறிப்பிட்டுள்ளனர் . அந்த மெசெஜ் கீழ் வருமாறு .

அன்பார்ந்த Whatsapp நண்பர்களுக்கு
சமீபகாலமாக நாம் உபயோகிக்கும் மொபைல் Network- ன் net Pack ஒரு காலத்தில் ரூ. 68 க்கு 1GB 30 நாட்கள் கிடைத்தது, பின்பு ரூ.80 க்கு விலையை உயர்த்தி MBயை 900 MB யாக குறைக்கப்பட்டது இதுவும் 30 நாட்ளுக்கு ரீச்சார்ஜின் விலை நாளுக்கு நாள் கம்பெனியாளர்கள் உயர்த்தி இன்றைய விலை ரூ.128 க்கு 1GB-2G 28 நாட்களாக, பின்பு இன்னும் காலாவரி நாட்கள் குறைக்கப்பட்டது, ரூ.128 க்கு கிடைத்த 3G 30நாள் netpack ரூ.198 க்கு 1GB- 3G -28 நாட்கள் இப்படியாக கம்பெனிகாரர்கள் விலையை மாற்றிக்கொண்டே இருக்கக் காரணம் இன்டர்நெட் Internet நம்முடைய அன்றாட தேவையாக இருப்பதால்தான், இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் Smart Phone ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறோம் ஆகவே ஸிம் கம்பெனி நெட் பேக் மூலமாக தனது வருமானத்தை பெருக்கிக்கொண்டது. இவர்களுக்கு தெரியும் நாம் ஒரு போதும் இதை எதிர்த்து குரல் எழுப்ப மாட்டோம் என்று. ஆனால் அது உண்மையல்ல நாம் இந்தியர் அனைவரும்
ஒன்றாக சேர்ந்து எதிர்ப்போம், வரும் 31 OCT 31 அக்டோபர் அன்று MOBILE DATA CONNECTION. DISABLE மொபைல் டேட்டா OFF செய்து எதிர்ப்பை வெளியிடுவோம், 31 அக்டோபர் அன்று கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மஹா ராஷ்ட்ரா, ராஜஸ்தான்,குஜராத், பஞ்சாப், ஒரிஸா, மேற்கு வங்கம், உத்திரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்கலிலும் இந்தச் செய்தி மொழிபெயர்ப்புடன் அனுப்ப பட்டுள்ளது, ஆகவே 31oct internet உபயோகிக்க வேண்டாம், இந்தத் தகவலை எல்லோருக்கும் FORWARD செய்யவும். வெளி நாடுகளில் இதே போலதான் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர், நமக்கென்ன போனது என்று இந்த தகவலை
Ignore (நிறாகரிப்பு) செய்ய வேண்டாம், நாம் நம் ஒற்றுமையை வெளிகாட்ட எத்தனையோ முறை முயர்ச்சித்திருக்கிறோம் ஆனால் இம்முறை ஒற்றுமை காண்போம், காட்டுவோம். Please forward to all ur whatsapp contacts

அமிதாப் பச்சனின் பிறந்த நாள் அன்று வெளியிடப்பட்ட குடும்ப செல்பி !!


A family selfie was released by Abishek bachan on the day of Amithab's birthday .

இன்று பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனின் 72 ஆம் பிறந்தநாள் . அவரது பிறந்தநாள் அன்று அவரது மகன் அபிஷேக் பச்சன் டிவிட்டரில் தனது குடும்பத்துடன் எடுத்த செல்பி ஒன்றை வெளியிட்டார் . அந்த செல்பியில் அபிஷேக் பச்சன் , அமிதாப் பச்சன் , ஐஸ்வர்யா ராய் , ஜெயா பச்சன் , ஸ்வேதா நந்தா ஆகியோர் இருந்தனர் .

இவரின் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் திட்டம் போட்டுள்ளனர் .

நோபள் பரிசு வென்ற மலாலாவுக்கு இன்னொரு கவுரவம் - கனடா நாட்டின் குடியுரிமை !!


Nobel peace prize winner offered Canadian citizenship by Canada prime minister Stephen Harper .



நோபள் பரிசு வென்ற மலாலாவுக்கு பல உலக தலைவர்கள் தங்கள் வாழ்த்தை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் . இது வரை அவருக்கு யாரும் அளிக்காத சிறப்பு பரிசாக கனடிய பிரதமர் மலாலாவுக்கு கனடா நாட்டின் குடியுரிமை அளித்து கௌரவப்படுத்தியுள்ளார் .

இது குறித்து கனடா பிரதமர் ஸ்டிபன் ஹார்பர் கூறுகையில் , " மலாலா 22 ஆம் தேதி ஓட்டாவா வர உள்ளார் . அப்போது அவருக்கு மதிப்பிற்குரிய கனடிய குடியுரிமை வழங்கப்படும் " என்றார் .

இது போன்று மதிப்பிற்குரிய கனடிய குடியுரிமை வாங்கும் 6 வது நபர் மலாலா . இவரை அமெரிக்க அதிபர் ஓபாமாவும் , ஐ.நா சபை தலைவர் பான் கீ மூனும் வாழ்த்தி தகவல் அனுப்பியுள்ளனர் . 

ஒவ்வொரு எம்.பி க்களும் 3 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் !! கிராமங்களை மேம்படுத்த மோடியின் புதிய திட்டம் !!


Modi on saturday launched the " Saansad aadharsh gram yojana " a scheme to develop the infrastrucuture of Indian villages . According to this plan every M.P had to take care of development of  three villages by 2019.


மோடி இன்று இந்தியாவில் உள்ள கிராமங்களை மேம்படுத்த " சான்சட் ஆதர்ஷ் கிராம் யோஜனா " என்னும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார் . இந்த கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் 2019 ஆம் ஆண்டுக்குள் மூன்று கிராமங்களின் உள்கட்டமைப்பு மற்றும் கிராம கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் .

இது குறித்து மோடி தெரிவிக்கையில் , " நாங்கள் 800 எம்.பி க்கள் இருக்கிறோம் . ஒவ்வொருவரும் 3 கிராமங்கள் எடுத்துக் கொண்டால் 2019 ஆம் ஆண்டுக்குள் 2,500 கிராமங்களை வளர்ச்சி அடைய வைத்துவிடலாம் . இது போன்று ஒவ்வொரு மாநிலங்களும் தங்களின் எம்.எல்.ஏ க்களை செய்ய வைத்தால் இன்னும் கொஞ்சம் கிராமங்களை மேம்படுத்தி விடலாம் " என்றார் . மேலும் அந்த கிராமங்களில் வாழும் மக்கள் தங்கள் ஊரைக் குறித்து பெருமைப்படும் அளவுக்கு நாம் சுற்றுச்சூழலை வளர்க்க வேண்டும் என்றார் .

இது போன்று பிரதமரும் வாரணாசியில் ஒரு கிராமத்தை தேர்ந்தெடுப்பார் . 

பயணிகளின் துயர் போக்க தீபாவளிக்கு 9088 சிறப்பு பேருந்துகள் !!

Special buses will be operatec for diwali . 9088 buses will be operated five days before diwali . Options are also made to book complaints on the omni buses which charge high ticket price.

தீபாவளி திருநாள் நெருங்கி உள்ள நிலையில் சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பை தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , இந்த அறிவிப்பில் தீபாவளியை முன்னிட்டு 9088 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார் .

சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை கீழ் வருமாறு :


சென்னையில் இருந்து கிளம்பும் பேருந்துகளின் எண்ணிக்கை

17/10/2014 - 501
18/10/2014 - 501
19/10/2014 - 699
20/10/2014 - 1,400
21/10/2014 - 1,652

மொத்தம் - 4,753

மாநிலத்தின் மற்ற இடங்களில் இருந்து கிளம்பும் பேருந்துகளின் எண்ணிக்கை :

17/10/2014 - 499
18/10/2014 - 501
19/10/2014 - 700
20/10/2014 - 1,234
21/10/2014 - 1,301

மொத்தம் - 4,355

இதேப் போன்று பண்டிகை முடிந்த பின்னரும் போதுமான அளவிலான பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவித்துள்ளார் . மேலும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் .

மேலும் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் , இது குறித்து புகார் தெரிவிக்க 24794709 என்ற எண்ணுக்கு மக்கள் அழைத்து புகார் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளனர் .

நோபள் பரிசைப் பெற்று 99 ஆண்டு சாதனையை முறியடித்தார் மலாலா !!

malala become the youngest winner to get the nobel prize beating william brag's 99 year record

அமைதிக்கான நோபள் பரிசின் வெற்றியாளர்களை நேற்று அறிவித்தனர் . இந்த விருதை பாகிஸ்தானின் மலாலா மற்றும் இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி வென்றனர் . நோபள் பரிசை வென்ற மலாலாவுக்கு வயது வெறும் 17 மட்டுமே . இதன் மூலம் இளம் வயதில் நோபள் பரிசை வென்றவர் என்ற சாதனையை படைத்தார் .

இதற்கு முன்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியளாரான  வில்லியம் பிராக் தனது 25 வயதில் நோபள் பரிசு பெற்றார் . இவர் தனது தந்தையுடன் இணைந்து இந்த பரிசை பெற்றுக் கொண்டார் . இந்த பரிசினை 1915 ஆம் ஆண்டு பெற்றார் . இப்போது 99 ஆண்டுகள் கழித்து யுசப் மலாலா அந்த சாதனையை முறியடித்தார் .

கருப்பு பேண்டு அணிந்து தங்கள் கிரிக்கெட் போர்ட் மீதான எதிர்ப்பை தெரிவித்த மேற்கிந்திய வீரர்கள் !!



மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது . இந்த தொடர் தொடங்குவதகு முன்னால் தங்களுக்கு சம்பளம் சரியாக வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர் . பின்னர் தொடர் தொடங்கியதால் சண்டையை அப்போதைக்கு நிறுத்திவிட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர் .

இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று தொடங்கியது . இந்த போட்டியில் மேற்கிந்திய தீவு அணி வீரர்கள் அனைவரும் கையில் கருப்பு நிற பேண்டு அணிந்து களத்துக்குள் இறங்கினர் .

முதலில் இவர்கள் போட்டியில் விளையாடுவதில்லை என அறிவித்தனர் , பின்னர் பி.சி.சி.ஐ உள்ளே இறங்கி பேசியதால் அவர்கள் விளையாட ஒப்புதல் அளித்தனர் . பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி பி.சி.சி.ஐ க்கு நன்றியை தெரிவித்தது .

இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முதல் ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது .

7 killed in stampede at opposition rally in Pakistan இம்ரான்கான் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் பலி


At least 7 people are dead and 40 others wounded in the the campaign of opposition protests led by cricketer-turned-politician Imran Khan, this accident occurred in Multan city after Imran Khan addressed a crowd to press his demand for the resignation of Prime Minister Nawaz Sharif who he accuses of vote rigging in last year’s elections.

பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தேர்தலில் முறைகேடுகள் நடந்ததால் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் அது செல்லாது, நவாஸ் பதவி விலக வேண்டும் என்றும் முன்னாள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கான் தலைமையிலான எதிர்கட்சி கடந்த சில மாதங்களாக போராடி வருகிறது, முல்தான் நகரில் நடந்த ஒரு கூட்டத்தில் இம்ரான்கான் உரைக்கு  பிறகு நடந்த தள்ளுமுள்ளுவில் நெரிசலில் சிக்கி 7 பேர் கொல்லப்பட்டனர், 40 பேர் காயமடைந்தனர் 

பல மடங்கு மருந்து விலை உயர்வை அனுமதித்த பாஜக அரசு , தடுத்து நிறுத்துமா உச்ச நீதிமன்றம் ?? விளக்குகிறார் பேஸ்புக் பதிவர்.

The BJP government decision to decontrol prices of 108 drugs -- used to treat tuberculosis, AIDS, diabetes and heart ailments -- has jacked up their prices. In some cases, prices have seen an unbelievable rise.

The price of Glivec, an anti-cancer tablet, for example, has risen from Rs 8,500 to Rs 1.08 lakh.

Plavix, used to treat blood pressure and heart ailments, will cost Rs 1,615, against the earlier Rs 147. An anti-rabi injection, Kamrab, priced at Rs 2,670, will now cost Rs 7,000.

The government has issued a circular to National Pharmaceutical Pricing Authority (NPPA), to withdraw its May 2014 guidelines on drug price control.

தேசிய மருந்து விலைநிர்ணய ஆணையம் என்று ஓர் அமைப்பு இருக்கிறது. மருந்துகளின் விலைகளை தனியார் நிறுவனங்கள் இஷ்டப்படி உயர்த்தாமல் கட்டுப்படுத்தும் நிறுவனம் இது.
2013 மே மாதத்தில் இந்த நிறுவனம் சில மருந்துகளுக்கு உச்சவிலை நிர்ணயித்து சுற்ற்றிக்கை விடுத்தது. மருந்து நிறுவனங்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுத்தன.
புதிய பாஜக அரசு அமைந்த பிறகு 2014 செப்டம்பர் 23ஆம் தேதி, முந்தைய சுற்றறிக்கையை ரத்து செய்கிறது ஆணையம்.
அதாவது, சுற்றறிக்கையில் குறிப்பிட்டப்பட்ட 108 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் அல்லவாம். அதனால் உச்சவிலை நிர்ணயிக்கத் தேவையில்லையாம்.
அந்த மருந்துகள் எதற்குத் தெரியுமா? காசநோய், புற்றுநோய், இதயநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட நோய்களுக்கானவை.
இந்தியாவில் இன்று மிகப்பரவலாக இருப்பது சர்க்கரை நோய் – நோயாளிகள் எண்ணிக்கை 4 கோடி. காசநோயாளிகள் எண்ணிக்கை 22 லட்சம். புற்றுநோய்க்கு ஆளானவர்கள் 11 லட்சம்.
சரி, இந்த சுற்ற்றிக்கை ரத்து செய்யப்பட்டதால் என்ன ஆகிவிடும்? உதாரணத்துக்கு -
புற்றுநோய்க்கான மருந்து கிளிவெக் விலை 8500 ரூபாயாக இருந்தது ஒரு லட்சத்து எட்டாயிரம் ஆகும்.
இரத்த அழுத்த்த்துக்கான மருந்து பிளாவிக்ஸ் விலை 147 ரூபாய் இருந்தது 1615 ஆகும்.
இதன் மூலம் Sanofi, Abbott, Zydus Cadila, Ranbaxy, Lupin, Sun, cipla ஆகிய மருந்து நிறுவனங்கள் லாபம் பெறும்.
மருந்து நிறுவனங்களின் வேண்டுகோள் காரணமாக, இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சகம், இந்த விஷயத்தை சொலிசிடர் ஜெனரலிடம் அனுப்பியதாம். ஆணையம் தன் வரம்பை மீறி விட்டது என்று அவர் தெரிவித்தாராம். எனவே, அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி இந்த சுற்ற்றிக்கை ரத்து செய்யப்பட்டதாம்.
இரசாயனங்கள் மற்றும் உரங்கள் துறை அமைச்சராக இருப்பவர் பெங்களூர் தொகுதியில் வெற்றி பெற்ற ஆனந்த் குமார். ஆர்எஸ்எஸ் வளர்ப்பு. ஏற்கெனவே நிறைய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர். முந்தைய பாஜக ஆட்சியின்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தபோது 14500 கோடி ஊழல் குற்றச்சாட்டு இவர்மீது உண்டு. கர்நாடகத்தில் உள்ள இந்து  அமைப்பான ராம் சேனாவே இவர்மீது 14000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. நீரா ராடியாவுக்கும் இவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. மேலும் குற்றச்சாட்டுகளை இணையத்தில் நீங்களே தேடி அறியலாம்.
மருந்துவிலை நிர்ணய ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக இப்போது உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமும் அந்த வழக்கை கையில் எடுத்துக்கொண்டுள்ளது.
நமக்கு இருக்கும் நம்பிக்கை எல்லாமே நீதிமன்றத்தின் மீதுதான்.
ஆ...ர...ம்...ப....ம்.
(காங்கிரஸ் ஊழல், திமுக ஊழல் மட்டுமே கண்டுக்கணும். இதெல்லாம் கண்டுக்காம போகணும் மக்கா... அப்பதான் இந்தியா வல்லரசாகும்)
-
பி.கு. - ஆணையத்தின் முடிவுக்கு எதிராத்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது, அதன் பின்னணியில் ஊழல் உள்ளதா என்பது அதில் வராது.

gowithflow A new way to save the water. மாணவர்களை குளிக்கும் போது சிறுநீர் கழிக்க அறிவுறுத்தி தண்ணீரை மிச்சம் செய்யும் கல்லூரி !!

#gowithflow A new way to save the water.

கிழக்கு அங்கிலியா பல்கலைக்கழகத்தில் இருக்கும் இரு மாணவர்கள் தங்கள் கல்லூரியில் புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்து தண்ணீரை மிச்சம் செய்ய தொடங்கியுள்ளனர் . அந்த திட்டத்தின் பெயர் #gowithflow . இதன் மூலம் அவர்கள் மாணவர்களை குளிக்கும் போது தண்ணீருடன் தண்ணீராக சிறுநீர் கழிக்க அறிவுறுத்தியுள்ளனர் .

இதனை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக முதலில் செய்து முடிக்கும் 15 மாணவர்களுக்கு 10 யுரோ பரிசாக அளித்தனர் . கிரிஸ் டாப்சன் மற்றும் டெப்ஸ் டார் என்ற இரு மாணவர்களும் இதனை பேஸ்புக் மற்றும் இணையத்திலும் பரப்பி வருகின்றனர் .

இது குறித்து கிரிஸ் கூறுகையில் , " நாங்கள் சில கணக்குகளைப் போட்டுப் பார்த்தோம் . எங்கள் பல்கலைக்கழகத்தில் 15,000 மாணவர்கள் இருக்கின்றனர் , நாங்கள் இதை பின்பற்றி வந்தால் ஒரு வருடத்தில் ஒலிம்பிக் மைதானம் போல் உள்ள இடத்தை 26 முறை நிரப்பும் அளவு தண்ணீரை மிச்சம் செய்யலாம் " என்றார் .

இது போன்ற திட்டங்கள் கிழக்கு அங்கிலியா போன்று மழைப்பொழிவு குறைவாக இருக்கும் இடங்களுக்கு மிகவும் தேவையான ஒன்று .

Who won the Nobel prize in India இந்தியாவில் இது வரை நோபள் பரிசு பெற்றவர்கள் யார் யார் ??

Who are all won the Nobel prize in India

Rabindranath Tagore, C. V. Raman, Mother Teresa, Amartya Sen, Kailash Satyarthi, Har Gobind Khorana, Subrahmanyan Chandrasekhar, Venkatraman Ramakrishnan

இந்தாண்டிற்கான அமைதிக்கான நோபள் பரிசை இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தியும் பாகிஸ்தானின் மலாலாவும் வென்றுள்ளனர் . ஆண்டுதோறும்  நோபள் பரிசு ஆறிவியல் , உலக அமைதி , இலக்கியம் ஆகியவற்றில் சிறப்பு பங்காற்றுபவர்களுக்கு வழங்கப்படும் . இதுவரை இந்தியாவில் இருந்து 8 பேர் இந்த விருதை வாங்கியுள்ளனர் . அவர்கள் யார் யார் என்று பார்ப்போம் .

ரபிந்திரநாத் தாகூர் :

இந்தியாவில் இருந்து இலக்கியத்திற்காக நோபள் பரிசை வென்ற ஒரே இந்தியர் . இவர் 1913 ஆம் வருடம் இந்த விருதை வென்றார் .


சி.வி.ராமன்

இவர் 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்காக நோபள் பரிசை வென்றார் . ஒளிச் சிதறல் பிரிவில் இவரின் பணிக்காக இந்த விருதை வென்றார் .


ஹர்கோபிந்த் குரானா .

இவர் மருத்துவத்திற்காக நோபள் பரிசை வென்றார் . 1968 ஆம் ஆண்டு மார்ஷல் நிரன்பர்க் மற்றும் ராபர்ட் ஹவுலி ஆகியோருடன் இணைந்து இந்த விருதை வென்றார் .


சந்திரசேகர்

இவர் 1983 ஆம் ஆண்டு இயற்பியல் நோபள் பரிசை வென்றார் . இவர் இந்த விருதை வில்லியம் போவ்லருடன் இணைந்து பெற்றார் .


அமர்த்தியா சென்

இவர் பொருளியல் பிரிவில் 1998 ஆம் ஆண்டு நோபள் பரிசைப் பெற்றார் .



அன்னை தெரசா

அமைதிக்கான நோபள் பரிசை 1979 ஆம் ஆண்டு பெற்றார் .


வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்

வேதியியல் பிரிவில் 2009 ஆம் ஆண்டு நோபள் பரிசைப் பெற்றார் .


கைலாஷ் சத்யார்த்தி

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபள் பரிசைப் பெற்றார் .


Private buses hiked ticket price தனியார் பேருந்துகளில் நடக்கும் கொள்ளைகள், ஜெயலலிதா இல்லாததால் பயம் போய்விட்டதா ??

Private buses increase ticket price like robbery

Private buses started robbery like price hike in the festival time, every year private buses uses the opportunity to hike the ticket price heavily like street robbery, last year Ex. Chief minister jayalalitha announced that the private bus licence will be cancelled if the private buses hike the price in the festival time, Jayalalitha went to prison due to the DAP case and the private buses now increasing the  ticket prices and selling in the internet.

தனியார் பேருந்துகள் கொள்ளையடிக்கும் காலம் வந்துவிட்டது. தீபாவளி பண்டிகை என்றாலே பேருந்துகள் தங்களது கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி விடுகின்றன. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதனை யாரும் தட்டி கேட்காததால் அவர்களும் பயம் இல்லாமல் இந்த வேலையை செய்து வருகிறார். தனியார் இணையதளங்கள் மூலம் அவர்கள் வெளிப்படையாக விலையை குறிபிட்டு உள்ளார்கள். ஆனால் யாரும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை.



 பண்டிகை காலங்களில் விலையை உயர்த்தினால் பேருந்து நிறுவனத்தின் லைசென்ஸ் கேன்சல் செய்யப்படும் என ஜெயலலிதா கூறி இருந்தார். ஆனால் இப்போது ஜெயலலிதா இல்லாதது அவர்களுக்கு வசதியாக போய்விட்டது. சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு தனியார் பேருந்தில் சாதாரண வகுப்பில் செல்வதற்கு கட்டணம் ரூ.715 மற்றும் குளிர்சாதண பேருந்தில் செல்வதற்கு கட்டணம் ரூ.880. பண்டிகை காலங்களில் அவை ரூ. 845 மற்றும் ரூ. 1040 என வசூலிக்கப்படலாம். ஆனால் அவர்களோ பல மடங்கு உயர்த்தி ரூ. 2000 க்கு மேல் விற்று வருகிறார்கள். அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் பொது மக்கள் கவலையில் உள்ளார்கள். 

Anirudh working hard for kathi movie - கத்தி படம் எப்போது வருகிறது, தூங்காமல் வேலை செய்து வரும் அனிருத் !!

Actor vijay and samanth action in Kathi movie, Anirudh is the music director for this movie, Music director Anirudh is working day and nigh to release the trailer for kathi movie

விஜய் சம்ந்தா நடிப்பில் உருவாகி உள்ள படம் கத்தி, இது தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்தது. ஆனால் இப்போது தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன்னதாகவே படம் வெளிவரும் என தகவல்கள் கூறுகின்றன. தீபாவளி அன்று கூடுதலாக 2 படங்கள் வெளிவருவதால் கத்தி படத்தின் வசூலை பாதிக்கும் என்பதால் நான்கு நாட்கள் முன்னதாக வெளியிடும் முடிவில் இருக்கிறார்கள். படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் கடந்த மாதம் வெளிவந்தது.

 இன்னும் படத்தின் டிரெய்லர் வெளிவரவில்லை. படத்தின் டிரெய்லர் மீதே அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. டிரெய்லர் இன்று வெளிவருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கத்திக்கு பின்னணி இசை அமைக்கும் பணிகள் வேகவேகமாக நடைபெற்று வருகிறது. அனிருத் இதற்காக இரவு பகலாக உழைத்து கொண்டு இருக்கிறார். டிவிட்டரில் கத்தி கூர்மையாகி கொண்டு இருக்கிறது என டிவிட் செய்து இருந்தார். 

சில இயற்கை மருத்துவ குறிப்புகள்

  • ஆரஞ்சுப் பழச்சாறில் மிளகுத்தூள் மற்றும் தேன் கலந்து குடித்தால், இருமல், சளியில் இருந்து விடுபடலாம்.
  •  இரண்டு வாரத்திற்கு ஒரு முறை, அகத்திக்கீரையையும் அதன் பூவையும் சமைத்துச் சாப்பிட, கண் பார்வை தெளிவு பெறும்.
  • கண்பார்வை தெளிவடைய, இரவில், துளசியை நீரில் ஊற வைத்து, காலையில் குடிக்க, கண்பார்வை தெளிவடையும்.
  • நொச்சி இலையை நீரில் போட்டு, நன்றாக காய்ச்சி, அந்நீரில் குளித்து வர, வாதத்தினால் ஏற்படும் உடல்வலி நீங்கும்.

Onion induce sexual intrest - வெங்காயம் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்

Onion is an important ingredient in Indian kitchen, Onion has lots of medical benefits, many people though that drumstick is increasing sexual interest and power, but onion has more power than drumstick to induce sexual interest and increasing sexual power

வெங்காயம் இன்றி இந்திய சமையலே கிடையாது அந்த அளவுக்கு எல்லா சமையலிலும் அது முக்கிய இடம் பிடிக்கிறது. தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும். இவர்கள் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும். வெங்காயத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கும் அளவுக்கு பொறுமை இல்லாதவர்கள் அப்படியே பச்சையாக வெங்காயத்தை சாப்பிடலாம் சில நிமிடங்களிலேயே நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும். வெயில் காலத்தில் சிலருக்கு உடம்பில் கட்டிகள் தோன்றும். இதற்கு வெங்காயத்தை நசுக்கி சாறுபிழிந்து கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் வெகு விரைவில் நிவாரணம் கிடைக்கும். வெங்காயத்தை துண்டுகளாக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

முருங்கைக் காயைத்தான் காய்கறிகளின் வயாகரா என்று சொல்லக் கேட்டு இருப்பீர்கள் அதைவிட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம் இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளன. மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்துவிடுவது உண்டு. தேனீ போன்றவை கொட்டிவிட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள் ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண் டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். அதைப்போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழலாம். வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம்.

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள் இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓடவைக்க உதவி செய்கிறது. பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்துவிடுகிறது.

பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கிவைப்பார்கள். இவ்வாறு அடக்கிவைப்பதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும் வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து அழற்சியைக் குறைத்து எல்லாவற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத் தொல்லை இருந்தால் நிறைய வெங் காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும். முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப்படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயை யும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்துவிடும். எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கு செலனியச் சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும்.

இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலனியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும். சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி சளிப்பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். உடல் எடை அதிகமாக இருந்தாலும்கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.

புற்றுநோயைத் தடுக்கும் அற்புத மருந்துப்பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்திவிடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது. முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்றவற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.

பெரியவெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவைதான். ஆனால் வைத்தியத்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காயத்தை சாப்பிடுவோம் நோய் இல்லாமல் வாழ்வோம்.

குறள் வழி



அன்பின் வெளிப்பாடு :

அன்பின் வெளிப்பாடாக ஏதாவது கொண்டுவாருங்கள் என்று நான்கு மாணவர்களை அனுப்பினார் ஆசிரியர். ஒரு மாணவர் கையில் மலருடன் வந்தார். இரண்டாவது மாணவர் ஒரு வண்ணத்துப் பூச்சியுடன் வந்தார். மூன்றாவது மாணவர் சிறு பறவையின் குஞ்சுடன் வந்தார். நான்காவது மாணவர் வெறுங்கையுடன் வந்தார். ஏன் நீ மட்டும் எதுவும் கொண்டு வரவில்லை என்று கேட்டார் ஆசிரியர். அந்த மாணவர் சொன்னார். நானும் மலரைப் பார்த்தேன் பறிக்கவேண்டும் என்றுதான் தோன்றியது ஆனால் மலர் செடியில் இருப்பதுதான் அழகு என்றும் தோன்றியது அதனால் விட்டுவிட்டேன். வண்ணத்து பூச்சியையும் பார்த்தேன். அதன் சுதந்திரமான வாழ்க்கையைப் பறித்துவிடக்கூடாது என்று விட்டுவிட்டேன். பறவையின் சிறுகுஞ்சையும் பார்த்தேன். அந்தக் குஞ்சை எடுத்து அதற்கு என்ன கொடுத்தாலும் அதற்கான தாயன்பை யாராலும் கொடுக்கமுடியாது என்று விட்டுவிட்டேன் என்றார். ஆசிரியர் மற்ற மூன்று மாணவர்களிடமும் சொன்னார் இதுதான் அன்பின் வெளிப்பாடு என்று.

பற்று தோற்றுவிக்கும் சுயநலம் :

ஒரு பொருள் மீது பற்று வரும்போதே சுயநலமும் சேர்ந்து வந்துவிடுகிறது. ஒரு ஞானி ஒரு பெரிய கடைக்கு அடிக்கடி செல்வாராம் எல்லாவற்றையும் சுற்றிப்பார்பாராம் எதையும் வாங்குவதில்லையாம். இதை தொடர்ந்து உற்றுநோக்கிவந்த கடைக்காரர் அந்த ஞானியிடம் . நாள்தோறும் வருகிறீர்கள் எல்லா பொருள்களையும் பார்க்கிறீர்கள் எதையும் வாங்குவதே இல்லையே ஏன்? என்று கேட்டாராம். அதற்கு அந்த ஞானி.. இல்லை இந்த மக்களுக்கு இவையெல்லாம் அடிப்படைத் தேவையாகிறது. இந்தப் பொருட்கள் இன்றி அவர்களால் வாழமுடியவில்லை. ஆனால் இவை எதுவுமே எனக்குத் தேவைப்படுவதில்லை. நானும் நிறைவாகத் தான் வாழ்கிறேன். எவை எவை இன்றி என்னால் நிறைவாக வாழமுடிகிறது என்று பார்க்கத்தான் நாள்தோறும் வருகிறேன் என்றாராம்.

பற்றுதல் இன்றி இருந்தால் சுயநலமின்றி வாழலாம்! அன்பிலாதவர்களுக்கு எல்லாமே சொந்தம்! அன்புடையவர்கள் உலகத்துக்கே சொந்தம்! என்பதைப் புரிந்து கொள்ள நிறைய அனுபவம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் பட்டத்தை இழந்துவிடுவீர்கள் - ரஜினிக்கு அணு உலை எதிர்ப்பு போராளி சுப. உதயகுமாரன் கடிதம், SP Udhayakumar warns Rajinikanth loose his Super Star title

SP Udhayakumaran, The activist against the koodankulam nuclear plant wrote a open letter to leading tamil actor Super Star Rajnikanth about his new thinking of political entry. SP Udhayakumar warns his political entry may cause to loose his "Super Star" title.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராளியான சுப.உதயகுமாரன் அவர்கள் ரஜினிக்கு அவரது அரசியல் பிரவேச ஆசை குறித்து ஒரு திறந்த மடல் எழுதியுள்ளார்.

திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்...
அக்டோபர் 10, 2014
முனைவர் சுப. உதயகுமாரன்
நாகர்கோவில்
திரு. ரஜினிகாந்த் அவர்கள்
போயஸ் கார்டன், சென்னை

அன்பார்ந்த ஐயா:

வணக்கம். எனது பெயர் சுப. உதயகுமாரன்; நான் ஒரு சமூகப் போராளி. தாங்கள் நடித்த பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். தாங்கள் ஒரு நல்ல மனிதர், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தாங்கள் நேரடி அரசியலில் ஈடுபடவிருப்பதாகவும், அது குறித்து தங்கள் ரசிகர் மன்றத் தோழர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. ஓர் இந்தியக் குடிமகன் என்ற முறையில் தேர்தல் அரசியலில் ஈடுபடவும், அதற்கான ஆயத்தங்கள் செய்துகொள்ளவும் தங்களுக்கு முழு உரிமை இருக்கிறது.
ஆனாலும் தமிழகத்தின் வாக்காளர் என்ற முறையில் எனது சொந்தக் கருத்துக்கள் சிலவற்றை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

தங்கள் சொந்த மாநிலமான கர்நாடகத்திலிருந்து வேலை நிமித்தம் இங்கே தமிழகத்துக்கு வந்தீர்கள். கடினமாக உழைத்து ஓர் உயர்ந்த நிலையையும் அடைந்தீர்கள். தங்கள் நடிப்பை தமிழக இளைஞர்கள் விரும்பி, தங்களை ஆதரித்து மாபெரும் வெற்றிபெறச் செய்தனர். கேளிக்கையும், வேடிக்கையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட இந்த உறவை மாற்றியமைத்து தமிழ் மக்களை வழிநடத்துவதற்கும், வருங்காலத்தை அமைத்துக் கொடுப்பதற்குமான அனுமதியாக தாங்கள் பார்க்கக்கூடாது.

திரைப்படத்துறையினர் தமிழக அரசியலில் புகுந்து, அசிங்கத்தையும், அவலத்தையும் ஏற்படுத்தி வைத்திருக்கின்றனர். தமிழக அரசியல் அறிந்த அனைவரும் இதனை ஆமோதிப்பார்கள். நடிகர் அரசியல்வாதிகளையும், அரசியல் நடிகர்களையும் ஒட்டுமொத்தமாக விரட்டினாலொழிய தமிழினத்துக்கு விடிவு கிடையாது எனக்கொண்டு, கோடம்பாக்கத்துக்கும் கோட்டைக்குமான தொடர்பை அறுத்தெறிய என் போன்ற பலர் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும்போது, தாங்கள் பொதுவாழ்வுக்கு வருவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகிறது.
தமிழ் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து கொழுத்துவிட்டு, மாநிலத்தின் பிரச்சினைகள் எதையும் கண்டுகொள்ளாது, எந்தப் பிரச்சினையிலும் ஒரு நிலைப்பாடு எடுக்காது, தங்கள் சுயநலன்களை மட்டுமேப் பேணிக்கொண்டு, தமிழ் மக்களின் முதுகுகளில் ஏறி அரசியல் அதிகாரமும் பெற்று மக்களைத் தொடர்ந்து ஏய்த்துக் கொண்டிருக்கும் சினிமாத் துறையே தமிழினத்தின் முதல் எதிரி என்று நான் உறுதியாக நினைக்கிறேன். தங்கள் விடயத்திலும் இது உண்மை என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
தமிழகப் பொதுவாழ்வில் இந்தத் துறையினரின் ஆதிக்கம் முடிவுக்கு வராதா என்று நாங்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில், தங்களின் அரசியல் வருகை தமிழ் மக்களை பெரும்புயலாகத் தூக்கிச் செல்லாது என்றாலும், ஒரு பின்னடைவை ஏற்படுத்தலாம். பாரதீய ஜனசங்க காலத்திலிருந்தே முயன்றும், தமிழகத்தில் ஒரு கல்லைக்கூட அசைக்கமுடியாத ஒரு மதவாதக் கட்சி தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் சில அரசியல் மாற்றங்களை பயன்படுத்தி தங்கள் தோளில் ஏறி கரைசேர விரும்புகிறது. அதேபோல வாழ்நாள் முழுவதும் தாங்களுக்காக உழைத்து தங்கள் வாழ்க்கையை இழந்துநிற்கும் ரசிகர்கள், தங்களால் ஓர் அரசியல் முக்கியத்துவம் வராதா, அதிகாரம் கிடைக்காதா என்று ஏங்கித் தவிக்கின்றனர். இவர்கள் எல்லோருமே தமக்கு ஓர் அரசியல் வாழ்வை ஏற்படுத்திக்கொள்ள தங்களை பயன்படுத்தப் பார்க்கின்றனர்.

இதனால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை தாங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கர்நாடகத்தில் காலூன்றியிருக்கும் பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தில் எத்தனை தலைமுறையானாலும் தலைதூக்காது. செல்லாக்காசான இந்தக் கட்சியில் சேர்ந்து தாங்கள் எங்கேயும் போய்ச்சேர முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரையும், அதன் காரணமாக இந்தியா முழுவதும் பெற்றிருக்கும் “சூப்பர் ஸ்டார்” எனும் புகழையும் இழந்து விடுவீர்கள். தங்களின் இனப் பின்புலம் கேள்விக்குள்ளாக்கப்படும். இந்தியர் ஒருவரை மணந்து, இந்தியாவை தாயகமாக ஏற்று, இந்தி மொழியினை சரளமாகப் பேசி, இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்ட பிறகும், திருமதி சோனியா காந்தி இந்திய தலைமைப் பொறுப்பை ஏற்பதை பெரும்பாலான இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போல, கன்னடத்துக்காரரான தாங்கள், தமிழகத்துக்கு தலைவராவதை தமிழர்கள் பலர் ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
இதனை இனவெறி என்று தாங்கள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடாது. நடிகர் ராஜ்குமார் விவகாரம் முதல் எத்தனையோ பிரச்சினைகளில் தாங்கள் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகள், நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய தாங்கள் தமிழ் மக்கள் இன்னல் களைய எதுவும் செய்யாத நிலை என பல விடயங்கள் மக்களால் பேசப்படும், அலசப்படும். இம்மாதிரியான பல கேள்விகளுக்கு தாங்கள் பதில் சொல்ல வேண்டிவரும்.
சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, மலேசியாவில் தமிழர்கள் மத்தியில் பேசிய நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் தமிழர்களுக்கு இப்படி அறிவுரைத்தார்: “நீங்கப் பாக்குறீங்க. அக்ட் நல்லா செய்றோம். சந்தோசப்பட்டுக்கிட்டுப் போங்கோ. கோவிலுக்குள் போறீங்கோ, சாமியைக் கும்பிடுங்கோ, மரியாதையா வெளியே வாங்கோ. சாமிகிட்டேயே உக்காந்துக்கிட்டு குடும்பம் நடத்தாதீங்க. நல்லாருக்காது. அதேமாதிரி எங்களப் பார்த்தா அபிப்பிராயம், நல்லாருக்குன்னு சொல்லிட்டுப் போயிடணும். அதனால நாங்கதான் பெரிசுண்ணும், காலம்பூரா எங்களையேவா நெனச்சுக்கிட்டு இருக்கிறது.” இந்த அறிவுரை தங்கள் ரசிகர்களுக்கும், பெரும்பான்மையான தமிழகத் தமிழர்களுக்கும் பொருந்தும்.

சினிமாக்காரர்கள் தலைவராவது பற்றி, எம். ஆர். ராதா அவர்கள் இப்படிச் சொன்னார்: “உங்களுடைய பணத்தாலே முன்னேறியக் கூட்டம் சினிமாக்காரர்கள். நீங்கள்தான் எங்களுக்குத் தலைவர்கள். அதை விட்டுட்டு எங்களை தலைவராக்கிட்டு ரொம்பப் பேரு இருக்காங்க. அந்த நிலைமை மக்களுக்கு வரக்கூடாது.” இதையும் மீறி ஒரு நடிகர் தலைவராக விரும்பினால், ராதா அவர்கள் அறிவுரைத்தார்: “ஜெயிலுக்குப் போய்ட்டு அப்புறம் அரசியலுக்கு வரணும். அரசியல் நடத்துறதா இருந்தா மொதல்ல ஜெயிலுங்கிற காலேஜில போய் படிக்கணும்.”
தங்கள் வாழ்வாதாரங்களைக் காக்கவும், வாழ்வுரிமைகளை மீட்கவும், வருங்காலத்தைப் பேணவும் தமிழகமெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது ஒரு போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களோடு ஜெயிலுக்கு வாருங்கள். சேர்ந்து படிப்போம். பட்டறிவும், பாங்கான தகுதிகளும் பெற்ற பிறகு, அரசியலுக்கு வாருங்கள். தங்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறோம்.

ஆனால் சினிமாப் புகழை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, பல்லக்குத்தூக்கிகள் துணையோடு தலைவராக எத்தனித்தால், தங்களை கீழேத் தள்ள என்னாலான அனைத்தையும் செய்ய நான் உறுதி பூணுகிறேன். தங்களின் பிரபலம், பணபலம், படைபலத்தில் ஒரு விழுக்காடுகூட எனக்குக் கிடையாதுதான். ஆனால் தமிழன் எனும் செருக்கும், தமிழினம் காக்க விரும்பும் அடிவயிற்று நெருப்பும் நிறையவே இருக்கின்றன.
தங்கள் அன்புள்ள,
சுப. உதயகுமாரன்
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media