இந்திய ராணுவத்தில் இருப்பவர் படன் குமார் பொடார் . இவர் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானை சேர்ந்த வேவு பார்க்கும் பெண்ணிடம் விற்று விட்டார். இதற்கு கைம்மாறாக அந்த பெண் இவருக்கு பணமும் , அந்த பெண்ணின் நிர்வாண வீடியோவையும் கொடுத்து உள்ளார்.
இவர் மேற்கு வங்க மாவட்டம் மல்டா மாவட்டத்தை சேர்ந்தவர் .அந்த பெண்ணின் பெயர் அனுஷ்கா அகர்வால். அந்த பெண் தன்னை ஒரு எம்.எஸ்ஸி மாணவி என பொடாரிடம் அறிமுகம் ஆகி உள்ளார். இவர்கள் இருவரும் பேஸ்புக்கில் நண்பர்கள் ஆகி உள்ளார்கள். அனுஷ்காவின் தந்தை ஒரு என்.ஜி.ஒ. வை நடத்தி வருவதாகவும், அதற்கு இந்திய ராணுவத்தை பற்றி ஒரு சர்வே எடுத்து தருவதற்கு 10 ஆயிரத்தை பொடாரிடம் மாத சம்பளமாக வழங்கி உள்ளார்கள்.
மானம் கெட்ட அந்த ராணுவ வீரனும் இந்த வேலைகளை செய்து உள்ளான். அனுஷ்காவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தான். இந்திய ராணுவத்தில் உள்ள முக்கியமான 50 ஆபிஸர்களின் நம்பரை வாங்கியுள்ளாள். யாரும் கண்டுபிடித்து விடாமல் இருக்க பிராக்சியில் ஈ-மெயில்களை அனுப்ப பொடாருக்கு அனுஷ்கா கத்துக்கொடுத்து உள்ளார். அனுஷ்காவின் கட்டளை படி தனது கம்யூட்டரில் ட்ரொஜான் வைரஸை அப்லோட் செய்து உள்ளார். இதன் மூலம் அந்த கம்யூட்டரை அனுஷ்காவால் நேரடியாக இயக்க முடியும்.
இந்திய ராணுவத்தை பற்றிய சில முக்கியமான போட்டோக்களை அனுஷகாவுக்கு பொடார் அனுப்பி உள்ளார், பதிலுக்கு அவள் தனது நிர்வாண போட்டோக்களை அனுப்பி உள்ளார். இதன் மூலம் நமது பல முக்கியமான ரகசியங்கள் பாகிஸ்தானுக்கு சென்று உள்ளது. இப்போது பொடாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.