BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 7 June 2014

ஆம் ஆத்மி அனைத்து தலைவர்களின் ராஜினாமா கடிதத்தையும் வாங்க மறுத்தது .


இன்று ஆம் ஆத்மி தலைவர்கள் கூட்டம் இரண்டாவது நாளாக நடந்தது . அதில் முக்கிய தலைவர்களான கெஜ்ரிவால் , பிரஷாந்த் பூஷன் , மனிஷ் சிசோடியா , யோகேந்திர யாதவ் மற்றும் நவீன் ஜெய்ஹிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர் .  இந்த கூட்டத்தில் யோகேந்திர யாதவ் எழுப்பிய பிரச்சனைகள் குறித்து தீவிரமாக ஆலோசித்தனர் .

பிரஷாந்த் பூஷன் கூறுகையில் , " அனைவரும் ஒன்றாக யார் ராஜினாமாவையும் ஏற்றுக் கொள்ள வேண்டாம் என முடிவு எடுத்துள்ளோம் . கட்சியில் வேறுபாடு இருப்பது இயற்கை . நாம் தான் பேசி தீர்க்க வேண்டும் என்று அவர் கூறினார் .

இந்த கூட்டத்திற்கு பின்னர் ட்விட் செய்த கெஜ்ரிவால்  " யாதவ் எனது நெருங்கிய நண்பர் , மேலும் ஒரு முக்கிய தலைவர் . அவர் பல கேள்விகளை எழுப்பியுள்ளார் , அது குறித்து தீவிரமாக ஆராய்ந்து முடிவு எடுப்போம் . ஷாஜியா இல்மி அவர்களையும் மீண்டும் கட்சியில் இணைக்க முயற்சிப்போம் " எனக் கூறியுள்ளார் .


ராஞ்சியில் 18 வெடிகுண்டுகள் மீட்பு !!!

தேசிய புலனாய்வு நிறுவனமான (NIA) 6 டைமர்கள் மற்றும் 18 வெடிகுண்டுகளை ஜார்கண்ட் மாநிலத்தின் தலைநகரமான ராஞ்சியில் இருந்து எடுத்தது .


இந்த குண்டுகள் அனைத்தும் அக்டோபர் மாதம் மோடியின் பாட்னா பேரணியில்  வெடித்த குண்டுகளைப் போல இருந்தன என்று கூறினர் . பாட்னா குண்டு வெடிப்பு தொடர்பாக 4 பேரை மே 20 ஆம் தேதி கைது செய்தனர்  . அவர்கள் கொடுத்த பதிலின் படி நேற்று இரவு மேலும் இரண்டு பேரை கைது செய்தனர் . அந்த நேரத்தில் இந்த குண்டுகளை மீட்டனர் .

அந்த நான்கு பேரை விசாரித்ததில் அவர்கள் மோடியை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும் , அதுபோல ஐந்து இடங்களில் முயற்சி செய்தனர் - அக்பர்பூர் , பாட்னா , கான்பூர் , வாரணாசி , டில்லி .

ஆனால் மோடி அவர்களுக்கு பாதுகாப்பு பலமாக இருந்ததால் பாட்னா பேரணியில் குண்டு வைத்ததாக கூறினர் .

காங்கிரஸ் சார்பில் மோடியே கூட போட்டியிட்டிருந்தால், தோற்றிருப்பார்; மக்களுக்கு அந்தளவுக்கு காங்கிரஸ் மீது கடும் கோபம்

செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் செயலர் சஞ்சய் நிருபம் கூறியதாவது:

நாங்கள் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறோம். பல காரணங்களினால் பொதுமக்களுக்கு எங்கள் மீது கடும் கோபம் இருந்துள்ளது. காங்கிரஸ் கட்சி மீது பொது மக்களுக்கு தீவிர எதிர்ப்பு இருந்துள்ளது, அதாவது நரேந்திர மோடியே கூட காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டிருந்தால் படுதோல்வி அடைந்திருப்பார் என்ற அளவுக்கு மக்களுக்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிரான உணர்வு இருந்துள்ளது.

இந்தத் தேர்தல் வித்தியாசமானது. கடந்த 10 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆசி எடுத்த சிலமுடிவுகள் மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விலைவாசி உயர்வு, ஊழல், இதனை பாஜக அளவுக்கு மீறி ஊதிப்பெருக்கியது. ஆனால் ஒவ்வொரு தேர்தலும் ஒரு பாடம். ஆனால் இது நிரந்தரப் போக்காக இருக்காது. சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை போல் அமையாது என்று நான் கருதுகிறேன்”

இவ்வாறு சஞ்சய் நிருபம் கூறினார்.

இருதய பரிசோதனைக்காக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன்


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் அவருக்கான மருத்துவப் பரிசோதனைகள் சிறையில் உள்ள மருத்துவமனையில் நடத்தப்படும்.

இதற்கிடையில், தனக்கு இருதய பரிசோதனை நடத்த வேண்டும் என பேரறிவாளன் சிறை அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார். அதன்படி, வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் பேரறிவாளனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டு இருதயத்தின் செயல்பாடுகளை கண்டறியும் எக்கோ பரிசோதனை நடத்தப்பட்டது. சுமார் பத்து நிமிடங்களில் மருத்துவ பரிசோதனை முடிந்ததால் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டார்.

மோடியின் உடை அலங்காரத்தை புகழ்ந்து தள்ளும் அமெரிக்க ஊடகங்கள்!


நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்ற பின்னர் அவரது உடை அலங்காரம் அமெரிக்காவின் டைம், நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் ஆகிய முன்னணி ஊடகங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அங்கு, 'மோடி குர்தா' மிகவும் பிரபலமாகியுள்ளது.

மோடியின் பேஷன் குறித்து 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை, 'மிச்செல் ஒபாமாவே தள்ளியிருங்கள் இந்த உலகிற்கு புதிய பேஷன் நாயகர் கிடைத்துவிட்டார்' என புகழாரம் சூட்டியுள்ளது.

நேற்று, 'டைம்' பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில், 'இந்திய பேஷன் உலகில் நரேந்திர மோடிக்குத்தான் அடுத்த பெரிய இடம்' என குறிப்பிட்டிருந்தது.

‘A Leader Who Is What He Wears’ என்ற தலைப்பில் 'தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்டுள்ள கட்டுரையில், 'நரேந்திர மோடியின் உடை அலங்காரம் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக இருக்கிறது. சர்வதேச தலைவர்களை ஒப்பிடும்போது இந்திய தலைவர்கள் தங்கள் உடை அலங்காரத்தையே தங்கள் எண்ணங்களை உணர்த்தும் உபகரணமாக பயன்படுத்துவார்கள். ஆனால் மோடி அவர்களையும் விஞ்சிவிட்டார். அவரது உடை நிறையவே உணர்த்துகிறது.' என குறிப்பிட்டுள்ளது.

கூடங்குளம் அணுஉலை முழு உற்பத்தித் திறனை எட்டியது, உணர்வுப்பூர்வமான நிகழ்வு என அதிகாரிகள் அறிவிப்பு


கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணுஉலை, அதன் முழு உற்பத்தி திறனான‌ 1000 மெகாவாட் மின்சாரத்தை இன்று உற்பத்தி செய்தது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் கூறுகையில்: "கூடங்குளம் அணுஉலையில் மூன்று இலக்கங்களில் இருந்த மின் உற்பதித் திறன் 4 இலக்கத்தை எட்டிய நிகழ்வு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இத்துனை ஆண்டுகளாக எங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், கடந்த 5-ம் தேதி கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தித் திறன் 90 சதவீதத்தை எட்டிய போது, ஒரு வார காலத்திற்குள் முழு உற்பதித் திறனை எட்டும் என எதிர்பார்த்தோம். அணுஉலை உற்பத்தித் திறன் 900 மெகாவாட் எட்டிய போது அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் உற்பத்தி குறித்த அறிக்கையை அளித்து அடுத்த கட்டத்திற்கான அனுமதியை பெற சற்று கால அவகாசம் தேவைப்பட்டது என்றார்.

பல நாட்டின் அரசுகள் நமது மொபைல் அழைப்புகளை ஒட்டுக் கேட்கிறது :- ஒத்துக் கொண்டது வோடபோன் நிறுவனம் .



உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமான வோடபோன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் , 29 நாடுகள் (இந்தியா உட்பட) தங்கள் நிறுவனத்தின் அழைப்புகளை ஒட்டுக் கேட்க அனுமதி வாங்கியுள்ளது . மேலும் பல இரகசிய வயர்கள் மூலம் வாடிக்கையாளர்களின் அழைப்பு , எஸ்.எம்.எஸ் , இ-மெயில் ஆகியவற்றை பார்க்கும் அதிகாரமும் படைத்துள்ளது . மேலும் இந்த வயர்கள் மூலம் வாடிக்கையாளர்களின் இடங்களையும் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர் .

 மேலும் வோடபோன் நிறுவனம் வாடிக்கையாளர்களின் இரகசியங்களை மதிக்கிறது எனவும் ஆனால் நாட்டின் பாதுகாப்பிற்காக இயற்றப்பட்ட சட்டங்களுக்கு அது மதிப்பு கொடுத்து செயல்படும் எனக் கூறியது . வோடபோன் முக்கியமாக சேவை செய்யும் 29 நாடுகளில் பல நாடுகளில் இவ்வாறு ஒட்டுக் கேட்க வாரண்ட் தேவை . ஆனால் குறிப்பிட்ட ஆறு நாடுகளில் நிரந்தரமாக ஒட்டுக் கேட்க அனுமதி இருக்கிறது .


அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடன் அமெரிக்க நிறுவனத்தின் ஒட்டுக் கேட்பதை வெளிக்கொண்டு வந்தபின் வோடபோன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை பலரை ஆச்சரியப் படுத்தியுள்ளது .

அ.தி.மு.க எம்.எல்.ஏ குணசேகரனுக்கு அரிவாள் வெட்டு !!!



சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அ.தி.மு.க எம்.எல்.ஏ குணசேகரன் மீது மர்ம நபர்கள் அரிவாள் வெட்டு நடத்தினர் . இரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் அவரது இரண்டு ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர் .

ஆக்கிரமிப்பை அகற்றிய பிரச்சனையில் யோகேஷ்வரன் , சபரி உட்பட ஐந்து பேர் நேற்று அ.தி.மு.க எம்.எல்.ஏ குணசேகரனுடன் தகராறு செய்தனர் . அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது . அந்த நேரம் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் யோகேஷ்வரன் குணசேகரனை தாக்கினார் . தடுக்க வந்த ஆதரவாளர்களான ஆறுமுகம் மற்றும் சோமனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது . இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

தமிழக பாதிரியாரை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என‌ திக்விஜய்சிங் வலியுறுத்தல்


டெல்லியில் இருந்து சென்னை வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங், விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பாராளுமன்றத்தில் 55 உறுப்பினர்களும், மேல்-சபையில் 25 உறுப்பினர்களும் இருந்தால் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக்கப்படும். ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய எம்.பி.க்கள் இல்லை என்றாலும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்.

காங்கிரஸ் கட்சி வளர்ச்சியின் பின்னணியில் ராகுல்காந்தி உள்ளார். பாராளுமன்ற காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவர். காங்கிரஸ் கட்சிக்கு பல தியாகங்களை செய்து உள்ளார். அவரின் தியாகத்திற்காக நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்விக்காக நிர்வாகிகள் மாற்றப்படுவார்களா? என்பது பற்றி எனக்கு தெரியாது. நான் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிடையாது.

ஆப்கானிஸ்தானில் தமிழக பாதிரியார் கடத்தப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. தீவிரவாத செயலை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது. கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு திக்விஜய் சிங் கூறினார்.

அமெரிக்க இணைய தளத்தில், தான் எத‌ற்காக நரேந்திர மோடியை புகழ்ந்ததாக விளக்கம் அளிக்கிறார் சசி தரூர்


முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர், அமெரிக்க செய்தி இணைய தளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில், பிரதமர் நரேந்திர மோடியை  புகழ்ந்து இருக்கிறார். அதில் அவர், “தேர்தலுக்கு முன்பு வெறுக்கப்பட்ட நபராக திகழ்ந்தவர், இப்போது தன்னை நவீனமயத்தின், முன்னேற்றத்தின் சின்னமாக மாற்றி வருகிறார்” என கூறி உள்ளார்.

சசி தரூரின் கருத்து பற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறுகையில், சசிதரூரை ‘முதிர்ச்சி இல்லாதவர், சந்தர்ப்பவாதி’ என தாக்கினார்.

சசி தரூர் கருத்து, அவரது சொந்தக் கருத்து என காங்கிரஸ் மேலிடம் கூறியது. ஆனாலும், காங்கிரஸ் ஊடகத்துறையின் தலைவர் அஜய் மக்கானுக்கு தன்னிலை விளக்கம் அளித்து சசி தரூர் நேற்று ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர், “குறிப்பிட்ட சில விஷயங்களுக்காக மோடியை புகழ்ந்து உரைத்தேன். இதனால் மோடியின் தொடர் நடத்தை குறித்து மக்கள் எதிர்பார்ப்பு கொள்வார்கள். இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொள்வார்கள். அதன் வழியாக நாம் எதிர்காலத்தில் அவரை மதிப்பிட முடியும். எனவேதான் புகழ்ந்து உரைத்தேன்” என விளக்கம் அளித்துள்ளார்.

நாட்டில் முதல் முறையாக, ஒரே வழக்கில் 17 போலீசார்கள், கொலைக் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவிப்பு


2009ஆம் ஆண்டு உத்தராகண்ட் மாநில டெஹ்ராடூனிற்கு வேலை தேடிச் சென்ற ரன்பீர் சிங் என்ற நபரை திருடியதாகப் புகார் கூறி கைது செய்தனர் போலீசார். விசாரணையின் போது ரன்பீர் சிங் போலீஸ் காவலில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

இந்த வழக்கில் 17 போலீசாரும் குற்றவாளிகள் என்று டெல்லி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. ஒரே வழக்கில் 17 போலீசாரும் குற்றவாளிகள் என்று அறிவித்திருப்பது நாட்டில் முதல் முறை என்று கூறப்படுகிறது. இவர்கள் மீது கடத்தல், சதி, கொலை மற்றும் சாட்சிகளை அழிப்பது என்ற பல பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.

மேலும், ரன்பீர் சிங்கைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும் 17 போலீசார் மீது நீதிபதி மாலிக் குற்றம்சாட்டினார். இவர்களுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படவுள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு


2012ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது, தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஸ்மிருதி இரானி தன்னைப்பற்றி மோசமாகப் பேசினார் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சஞ்சய் நிருபம், அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பாக செப்டம்பர் 27 ஆம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

அதே தொலைக்காட்சி விவாதத்தில் சஞ்சய் நிருபம் தன்னை அவதூறு செய்ததாக ஸ்மிருதி இரானியும் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தப் புகாரின் மீதான விசாரணையில் சஞ்சய் நிருபம் விசாரிக்கப்பட்டார். சட்டப்பிரிவு 500-இன் கீழ் சஞ்சய் நிருபம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனைக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media