BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 12 June 2014

பிரபலமான தந்தை யார் ???

இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் வருகிறது .

அதற்கு முன்னால் ஷாதி.காம் என்னும் இணையதளம் உலகின் மிக பிரபல தந்தை யார் என கருத்து கணிப்பு நடத்தியது .

இந்தியாவின் பிரபல தந்தை யார் என்ற கேள்விக்கு ஷாருக் கான் அதிக ஓட்டுக்களை பெற்றார் . உலகின் பிரபல தந்தை யார் என்ற கேள்விக்கு பெரும்பாலனோர் அமெரிக்க அதிபர் பராக் ஒபமாவை பதிலாகக் கூறினர் .



இந்தியாவின் பிரபல தந்தையாக ஷாருக்கானும் அவரைத் தொடர்ந்து சச்சின் டெண்டுல்கரும் , அடுத்த இடத்தில் அமிதாப் பச்சனும் இருந்தனர் .


உலகின் அதிகம் பார்த்து வியந்த தந்தைகளின் பட்டியலில் முதலிடத்தில் ஒபமாவும் இரண்டாவது இடத்தில் வில் ஸ்மித்தும் இருந்தனர் .

அதிகம் பார்த்து வியந்த தந்தை மகள் பட்டியலில் முதலில் ஷாருக்கான் அவரது மகள் சுஹானாவும் , இரண்டாம் இடத்தில் மகேஸ் பாட் அவரது மகள் ஆலியா பாட் , மூன்றாவது இடத்தில் தீபிகா படுங்கோனே மற்றும் அவரது தந்தை இருந்தனர் .



அதிகம் பார்த்து வியந்த தந்தை மகன் பட்டியலில் முதலில் ரிஷி கபூர் மற்றும் அவர்து மகன் ரன்பீர் கபூர் , இரண்டாம் இடத்தில் அமிதாப் மற்றும் அவரது மகன் அபிஷேக் , மூன்றாவது இடத்தில் ஷாருக்கான் அவரது மகன் ஆரியனும் இருந்தனர் .


பாலியல் வன்முறையால் தாக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!

பொள்ளாச்சியில் , மாக்கினாம்பட்டியச் சேர்ந்த 15 வயது சிறுமியை , அதே கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவன் 31ஆம் தேதி அந்த சிறுமியை பாலியல் வன்முறை செய்துள்ளான் .

இதை அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் கார்த்திக் பெற்றோரிடம் தகறாரில் ஈடுபட்டனர் . ஏற்கனவே சோகத்தில் இருந்த அந்த சிறுமி மனமுடைந்து தீக்குளித்தார் .

இந்த சம்பவத்தால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள் அந்த சிறுமி . ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . 

கார்த்திக் மற்றும் அவரதுவ் பெற்றோர் , உறவினர் ஒருவர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
 

ஆறாவது மாடியில் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு கீழே விழுந்து பலியான ஜோடி !!

தெற்கு லண்டனில் 19 வயது பெண்ணும் 18 வயது ஆணும் ஆறாவது மாடி பால்கனியில் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டு முயற்சி செய்தனர் . ஆனால் நிலமை கை மீறிப் போக இருவரும் தடுமாறி கீழே விழுந்து இறந்தனர் .


இதை நேரில் பார்த்தவர்கள் கூறும் போது , " அவர்கள் ஏதோ விபரிதமாக செய்வதை பார்த்தேன் . அந்த பையன் பெண்ணைத் தூக்கி பால்கனியில் வைத்தான் . பின் முன்னாடியும் பின்னாடியும் அசைந்தான் . கடைசியாக நான் பார்த்தது அவர்கள் கீழே விழுவதை தான்"  என்றார் .


நாம் இருப்பது மக்களாட்சியிலா ? மன்னராட்சியிலா ?





மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கொல்கத்தாவில் அண்மையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள் .அது என்னவென்றால் கொல்கத்தாவில் உள்ள கட்டட உரிமையாளர்கள் தங்கள் கட்டிடங்களை நீலம் மற்றும் வெள்ளை நிறத்திற்கு மாற்றும் பட்சத்தில் வரிசலுகை ,வரிவிலக்கு அளிக்கப்படுமாம் . ஏனென்றால் அவை இரண்டும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிடித்த நிறங்களாம் . இந்த தீர்மானத்தை பார்க்கும் போது நமக்கே சந்தேகம் வருகிறது நாம் இருப்பது மக்களாட்சியிலா ? மன்னராட்சியிலா ? என்று .


இந்த தீர்மானம் தமிழக முதல்வர் காதுகளுக்கு சென்றால் பிறகு தமிழகத்தை பச்சை நிறத்தில் மாற்றி "அம்மா பசுமை திட்டம் " என்று விடுவார்கள் .

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத்தின் முதல் பேச்சு !!



நேற்று பாராளுமன்றத்தில் நடந்த ஜனாதிபதியின் கூட்டு அமைச்சரவை உரைக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் நரேந்திர மோடி அவர்கள் பிரதமராக நாடாளுமன்றத்தில் தனது முதல் உரை ஆற்றினார் .


அந்த உரையின் முக்கிய அம்சங்களைக் கீழ்க் காண்போம் !!!


நமது நாடு இப்போது ஊழல் இந்தியா என்று அழைக்கப்படுகிறது . ஊழல் இந்தியாவை திறமை வாய்ந்த இந்தியாவாக மாற்றுவோம் . இந்த உலகில் மனித ஆற்றல் தேவைப்படுகிறது . நமது அண்டை நாடான சீனா முதுமை அடைந்து கொண்டு இருக்கிறது , நாம் இளமை அடைந்து கொண்டு இருக்கிறோம் . எனவே நமது முக்கிய கடைமை நம் இளைஞர்களின் திறமை வளர்பபதே ஆகும்  .

நான் இந்த வீட்டிற்கு புதிதாக வந்துள்ளவன் . என் தவறுகளை மன்னிக்கவும் .

ஜனாதிபதி சொன்ன அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிப்போம் .

மேலும் பாலியல் வன்முறைகள் குறித்து ஆராய்ச்சி செய்வதை நிறுத்த அனைத்து தலைவர்களுக்கும் கோரிக்கை வைக்கிறேன் . எப்போதும் அறிக்கை விட்டுக் கொண்டு இருப்பது சரி இல்லை . பெண்கள் பாதுகாப்பை நாம் தான் உறுதி செய்ய வேண்டும் .

வெற்றிகள் நாங்கள் படிப்பதற்கு பாடங்கள் கொடுத்து இருக்கிறது . எங்களுக்கு பொறுமையை கற்று கொடுக்கிறது . முன்னோர்களின் ஆசியினால் நாங்கள் கடுமையாக இருப்பதில் இருந்து காப்பாற்றப் படுவோம் .

நாங்கள் வறுமையில் இருப்பவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்களை வறுமைக்கு எதிராக போராட வைப்போம் .

எதிர் கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு முன்னேற்றம் நோக்கி பயணிப்போம் .

நாங்கள் பண வீக்கத்தை குறைக்க உறுதி அளித்துள்ளோம் . எங்களின் லட்சியமும் அது தான் . பண வீக்கத்தை எங்கள் தேர்தல் வாக்குறுதியில் இருப்பதினால் மட்டும் அதை நாங்கள் செய்யப் போவதில்லை . ஏழைகள் அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே செய்கிறோம் .

மாநிலங்களிடையே நடக்கும் போட்டியை வரவேற்கிறோம் . குஜராத்தை பின்னுக்கு தள்ளி விட்டோம் என்று மற்ற மாநிலங்கள் சொல்வதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன் .

மஹாத்மா காந்தி சுத்தமாக இருப்பதில் மிகுந்த அக்கறைக் காட்டினார் . வாருங்கள் நாமும் துய்மையான இந்தியாவை உருவாக்க உறுதி எடுப்போம் . நமது தேசத்தின் தந்தையின் 2019இல் 150 ஆம் ஆண்டு விழாவில் அவருக்கு துய்மையான இந்தியாவை பரிசளிப்போம் .

விவாசய துறையில் புதுமைகள் புகுத்த வேண்டும் . எவ்வளவு வேகமாக நாம் புதிய நுட்பங்களைக் கொண்டு வருகிறோமோ அவ்வளவு லாபம் நமக்கு கிடைக்கும் . மண் வளத்தை அதிகரிக்க வேண்டும் . இதற்காக ஆராய்ச்சிகளை அதிகரிக்க வேண்டும் .

காந்தி அவர்கள் சுதந்திர போராட்டத்தை ஒரு பெரிய போராட்டமாக மாற்றினார் . ஒரு சாதாரண தொழில் செய்பவர் கூட தான் இந்தியாவிற்காகப் போராடுவதாக எண்ண வைத்தார் . அதை போல இப்போது நாம் முன்னேற்றதிற்காக போராடுவதும் ஒரு பெரிய போராட்டமாக மாற வேண்டும் .

கத்தி படத்தில் "காதல் குத்து " பாட்டு : விஜய் பாடுகிறார் !!

கடந்த 2005 முதல் 7 ஆண்டுகள் எந்த பாடலுமே பாடாமல் இருந்து வந்தார் இளைய  தளபதி  விஜய் .பிறகு துப்பாக்கி படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு 'கூகுள் கூகுள் ' என்னும் பாடலை பாடினார் . அந்த பாடல் மிக பெரிய ஹிட் ஆனது . அதனை தொடர்ந்து வந்த தலைவா,ஜில்லா படங்களிளும்  பாடலை பாடினார் ,அதுவும் ஹிட் ஆனது . இதனை தொடர்ந்து இப்போது அவர் நடித்து கொண்டு இருக்கும் கத்தி படத்திலும் அவர் பாடுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர் . அதனை போலவே விஜய் ஒரு பாடலை பாடுகிறார் .இந்த பாடலின் இசையமைப்பாளர் அனிருத் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது . இந்த பாடல் காதலும் குத்தும் கலந்து இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர் .


வருகிற 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை கொண்டாட இருக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்த செய்தி இனிப்பாகவே அமையும் ..




பெண்களை ஊக்குவிக்கும் விருது : மேனகா காந்தி அறிவிப்பு !!





சமூகத்தின் அடிமட்டத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடுபவர்களை அங்கிகரிக்கும் விதமாக அவர்களுக்கு விருது ஒன்றை அறிவித்து உள்ளது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை . இதனை அந்த துறையின் அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார் .நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிளும் உலக மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி ரூ.25000 மற்றும் சான்றிதழுடன் இந்த விருது வழங்கப்படும் .



இந்த துறையினருடன் பொது மக்கள் கலந்துரையாடுவதற்கு 2 ஈமெயில்களும் 1 பேஸ்புக் கணக்கும் தொடங்கப்பட்டு உள்ளது . அவற்றின் முகவரி இதுவே, min-wcd@nic.in, help-wcd@nic.in, www.facebook.com/ministryWCD.


விருது கிடைச்சு விட்டது 33 சதவீத ஒதுக்கீடு எப்போது வருமோ என்று ஏங்கி கொண்டு இருக்கிறார்கள் நம் நாட்டின் கண்கள் .

இந்தியாவும் கால்பந்து உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது !!!

1950 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடருக்கு பர்மா . இந்தோனேஷியா , பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் பின் வாங்கியதால் இந்தியா  உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்றது .

ஆனால் இந்தியா கால்பந்து அமைப்பு பயணச் செலவு , பயிற்சி செய்ய நேரம் இல்லாமை , அணியை தேர்வு செய்வதில் ஏற்பட்டக் குழப்பம் ஆகியவற்றால் இந்தியா அணி பங்கேற்கவில்லை . பிபா கால்பந்து அமைப்பு பயணச் செலவின் பெரும் பகுதியைக் கொடுத்துவிடும் என்ற போதிலும் மற்ற பிரச்சினைகளால் இந்திய அணி பங்கேற்கவில்லை .

முதலில் வெறும் காலில் ஆடக்கூடாது என பிபா போட்ட விதிமுறைகளினால் தான் போகவில்லை என்று சொல்லப்பட்டாலும் , பிற்காலத்தில் இந்திய அணி கேப்டன் ஷய்லின் மண்ணா " இது  உண்மையை மறைக்கக் கூறப்பட்டக் கட்டுக்கதை " என்றார் .

மேலும் இந்தியா ஒரு உலக கோப்பை தொடரை நடத்தினால் இந்தியா தானாக தகுதி பெறும் !!!
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media