Saturday, 4 October 2014
விளையாட்டில் இந்தியாவை விட சீனா சிறந்து விளங்குவதற்கு என்ன காரணம்
இந்தியாவின் மக்கள் தொகைக்கும் சீனாவின் மக்கள் தொகைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை . ஆனால் விளையாட்டு என்று வரும் போது பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒலிம்பிக்கில் முதல் இடம் பிடிப்பதற்கு சீனா முயற்சி செய்து வருகிறது. ஆனால் இந்தியாவோ ஒரு தங்கப்பதக்கம் வெல்வதற்கு முயற்சி செய்து வருகிறது. ஏன் 125 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் சிறந்த விளையாட்டு வீரர்கள் இல்லையா, நாம் ஏன் தடுமாறுகிறோம். நம்மை விட சீனா சிறந்து விளங்குவதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம்.
* அவர்கள் நாட்டில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்கு சிறு வயதில் இருந்தே விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கிறார்கள்.
* அங்கு உள்ள மைதானங்கள் அதிகளவிலும் சிறந்த முறையிலும் உள்ளன. இதனால் அவை பயிற்சி செய்வதற்கு நன்றாக உதவுகிறது.
* அங்கு உள்ள அரசு விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இங்கு உள்ள அரசு அப்படி இல்லை. எல்லா இடத்திலும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது.
* ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனி தனி பயிற்சியாளரை வைத்து உள்ளார்கள். தேவைக்கு ஏற்றவாறு வெளிநாட்டு பயிற்சியாளர்களையும் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
* விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு பண உதவியும் வழங்குகிறார்கள். பதக்கம் வென்ற பிறகு பணம் தருவதுக்கு பதில் பதக்கம் வெல்வதற்கு முன் அவர்களுக்கு பணம் தந்து சிறப்பாக செயல்பட வைக்கிறார்கள்.
* அந்த நாட்டில் உள்ள மக்களும் இதற்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கள் நாடு பதக்கம் வெல்வதை கவுரமாக நினைக்கிறார்கள்.
* விளையாட்டு அமைப்பிற்கும் வீரர்களுக்கும் நல்ல ஒத்துமை இருக்கிறது . எந்த பிரச்சனையும் வருவதில்லை.
* அவர்கள் அதிகளவில் வீரர்களை அனுப்புகிறார்கள், அதுவும் அதிக பதக்கங்களை வெல்வதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
* அங்கு ஒரு விளையாட்டுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. நம் நாட்டில் கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதை போல.
ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற போகிறார்களா - ஏன் ??
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் பெங்களூரில் உள்ள அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு பயங்கர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தினமும் அவரை பார்ப்பதற்கு என வந்து கொண்டே இருக்கிறார்கள். அமைச்சர்கள், தமிழக முதல்வர், அரசு அதிகாரிகள் என பலர் வருகிறார்கள். ஆனால் யாரையும் பார்ப்பதற்கு அனுமதி தரப்படுவதில்லை.
அதோடு அதிமுக தொண்டர்கள் பெருமளவில் குவிந்து வருகிறார்கள், மாநில அரசால் இவர்களை கட்டுபடுத்த முடியவில்லை. காவிரி பிரச்சனையில் கர்நாடகத்துக்கு எதிராக ஜெயலலிதா செயல்பட்டதால் இப்போது கர்நாடக அரசு ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கள் வருகின்றன. இதனை கர்நாடக அரசு விரும்பவில்லை. ஏதும் அசம்பாவிதங்கள் நடந்து விடுமோ என பயப்படுகிறது. அதனால் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கும் முடிவில் இருப்பதாக செய்திகள் வருகிறது.

ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை தனியார் பேருந்துகள் ஒடாது
நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிறையில் அடைத்ததை கண்டித்து தமிழகத்தில் உள்ள தனியார் பேருந்துகள் எதுவும் நாளை ஒடாது. இந்த அறிவிப்பை தனியார் பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அவர்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க உள்ளார்கள். இதனால் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 6 ஆயிரம் பேருந்துகள் ஒடாது, இதில் 2 ஆயிரம் தனியார் பேருந்துகள் ஒட்டுநர்களும் கலந்து கொள்கிறார்கள். ஜெயலலிதாவின் கைதை எதிர்த்து ஒவ்வொரு அமைப்பினர் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள். இன்று தமிழகம் கேபிள் டிவி இல்லாமல் இருந்தது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் அணி அறிவிப்பு, அஷ்வினுக்கு இடம் இல்லை - காரணம் என்ன ??
இந்திய அணி அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் அஷ்வினுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் லீக்கில் சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணி விவரம்,
தோனி (கேப்டன்), ஷிகர் தவான், அஜிங்க்யா ரகானே, விராத் கோஹ்லி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, மோஹித் சர்மா, உமேஷ் யாதவ், முரளி விஜய், குல்தீப் யாதவ்.

7 ஆண்டுகள் கழித்து விஜய் டிவியில் நடந்த பொய் சண்டை பற்றிய உண்மை வெளிவந்துள்ளது, டிஆர்பிக்காக என்ன வேண்டும்னாலும் செய்வாங்களா ??
2006 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த நிகழ்ச்சி ஜோடி நம்பர் 1 ஆகும். அது இப்போது பல சீசன்களை கடந்து விட்டது. அது முதன் முதலில் தொடங்கியது 2006 ஆம் ஆண்டு தான். அந்த சீசனில் பிரேம் பூஜா ஜோடி வெற்றி பெற்றது.
அதற்கு அடுத்த சீசன் 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. அதில் நடுவர்களாக சிம்பு, சங்கீதா, சுந்தரம் மாஸ்டர் ஆகியோர் இருந்தனர். அந்த சீசனில் அந்த நிகழ்ச்சியின் டிஆர்பி பயங்கரமாக உயர்ந்தது. அதற்கு முக்கிய காரணம் அதில் ஒரு எப்பிசோடில் சிம்புவுக்கும் அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பிருத்திவிராஜூக்கும் கடுமையான சண்டை. அந்த சண்டையை அப்படியே டிவியில் காண்பித்தார்கள் விஜய் டிவியினர். இதனால் அந்த நிகழ்ச்சிக்கான மவுசு அதிகரித்தது.
அந்த சண்டைக்கு என்ன காரணம் என்று பார்ப்போம். அன்றைய எப்பிசோடில் பிருத்விராஜூம் அவரது ஜோடியான உமா ரியாஸ் கானும் நடனம் ஆடினார்கள். அதில் பிருத்திவிராஜின் நடனம் நடுவர்களுக்கு பிடிக்கவில்லை. நடிகர் சிம்பு இதனை வெளிப்படையாக கூறி விட்டார். இதனால் பிருத்திவிராஜ் கோபமாகி விட்டார். அது எப்படி நான் ஒழுங்காக ஆடவில்லை என்று நீங்கள் கூறலாம். உடனே சிம்பு நன்றாக ஆடியதாக கூறிய போது ஏற்று கொண்டவர்கள் ஏன் இப்போது ஏற்று கொள்ள மாட்டேங்கிறீர்கள்.
பிருத்திவிராஜ் நிறுத்தாமல் பேசி கொண்டே இருந்ததால், சிம்பு கடுப்பாகி விட்டார். எனக்கு நடிக்க தெரியாதுங்க , ஆக் ஷன்னு சொன்னாதாங்க எங்கப்பா நடிக்க சொல்லி கொடுத்து இருக்கிறார் என்று சிம்பு கூறினார். இதனை வைத்து சிம்புவை இன்று வரை கலாய்த்து வருகிறார்கள். சிம்பு கோபித்து கொண்டு வெளியே சென்று விட்டார். அவரை சமாதான படுத்தி கொண்டு வர ஒரு பட்டாளேமே வெளியே சென்றது. திவ்யதர்ஷினி ஆகியோரின் கடும் முயற்சிக்கு பிறகு சிம்புவை உள்ளே அழைத்து வந்தார்கள்.
சிம்பு உள்ளே வந்ததும் பிருத்திவிராஜ் கோபித்து கொண்டு போட்டியை விட்டே வெளியேறி விட்டார். இதனால் உமா ரியாஸ் கானும் வெளியேறி விட்டார். இந்த சண்டை தான் ஒரு வாரத்துக்கு தமிழநாடு முழுவதும் பேசப்பட்டது. எல்லாரும் இந்த சண்டை உண்மை என அனைவரும் நம்பினார்கள். இப்போது அது பற்றிய உண்மை வெளி வர தொடங்கி உள்ளது. இது தொடர்பாக பிருத்திவிராஜ் ஒரு தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து உள்ளார்.
அன்று நடந்தவை எல்லாம் நடிப்பு தான், அவை அனைத்தும் டிஆர்பிக்காக நடத்தப்பட்டது என்னும் உண்மையை கூறியுள்ளார். அன்று மட்டும் விஜய் டிவியின் டிஆர்பி பயங்கரமாக உயர்ந்தது. இதற்கு முன் எந்த தமிழ் நிகழ்ச்சிக்கும் அந்த அளவு டிஆர்பி உயர்ந்தது இல்லை. இது போன்று சண்டை நடக்கும் போது யாரும் சண்டையை நிறுத்துங்கன்னு சொல்ல மாட்டாங்க, ‘சார் லைட் இருக்கு. அங்க நின்னு சண்டை போடுங்க.. மைக் சரியா வைச்சு சண்டை போடுங்க'ன்னுதான் சொல்வாங்க. மக்களை ஈர்க்க சண்டை இதுல எங்க நிஜம் இருக்கும்..? நடிக்கன்னு வந்துட்டோம்.. மக்களை ஈர்க்க ஏதாவது பண்ணித்தானே ஆகணும்..?"
அந்த சம்பவம் முடிந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு அது பற்றிய உண்மை இப்போது வெளிவந்துள்ளது. இது விஜய் டிவியில் மட்டுமில்லை, ஜீ டிவியில் நடக்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியிலும் இது போன்று தான் நடக்கிறது என்னும் உண்மையை போட்டு உடைத்தார்.

அரசியலுக்கு வர போகிறார் ரஜினி ? ரசிகர் மன்றங்களில் கணக்கெடுப்பு தொடங்கி விட்டது
கடந்த வாரம் நடந்த ஒரு நிகழ்வு இந்திய அரசியலில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அது வேறு எதுவும் இல்லை, ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது . அதில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனை கிடைத்து உள்ளது. அது மட்டுமில்லாமல் அடுத்த 10 வருடங்களுக்கு அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டம் சொல்கிறது. இப்போது அவரது கட்சி லோக் சபாவில் இந்திய அளவில் 3 வது பெரிய கட்சி என்னும் அந்தஸ்தை பெற்று உள்ளது. அவர் அசுர வேகத்தில் உயர்ந்து வந்தார்.
இப்போது அதற்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அடுத்து திமுக வுக்கு ஆப்பு வைக்கும் விதமாக 2 ஜி ஸ்பெக்ரம் வழக்கு வர உள்ளது. அதில் கருணாநிதியின் மகளுக்கும் மனைவிக்கும் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 2 மிக பெரிய அரசியல் கட்சிகளுக்கு கெட்ட பெயர். அதனை பயன்படுத்தி கொள்ள தேமுதிக நினைத்தது. ஆனால் பாஜகவோ வேகமாக செயல்பட்டு வருகிறது. மோடி ரஜினியை தனது ஆயுதமாக எடுத்துள்ளார்.
அடுத்து வரும் தேர்தலை ரஜினியின் தலைமையில் சந்திக்க பாஜக நினைக்கிறது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத நேரம் தான் அரசியலுக்கு வருவதற்கு சரியான நேரம் என ரஜினி நினைக்கிறார். இப்போது அதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு விட்டன. ரஜினி ரசிகர் மன்றங்கள் அதில் உள்ள ரசிகர்கள் கணக்கை எடுக்க தொடங்கி விட்டார்கள். இதனை வைத்து விரைவில் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பு ரஜினியிடம் இருந்து வரலாம் என எதிர்பார்க்கலாம்.

கவனமாக இருங்கள் !! இணையத்தில் மிகவும் ஆபத்தான பெயர் செரில் கோல் - ஏன் தெரியுமா ??
பிரிட்டிஷ் இணைய பாதுகாப்பு வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான மெக்அபி நிறுவனம் இணையத்தில் மிகவும் ஆபத்தான நட்சத்திரமாக செரில் கோல் இருக்கிறார் என்று கூறியுள்ளது .
அந்த நிறுவனத்தில் அறிவிப்பு படி அந்த பிரபல நட்சத்திரத்தின் 15 சதவீத தேடல்கள் வைரஸ் , ஸ்பேம் மற்றும் மால்வேர் நிறைந்த லிங்குகளாகவே இருக்கிறது . அதிலும் அவரின் படம் மற்றும் வீடியோவை தேடினால் ஆபத்துகள் இன்னும் அதிகமாம் . இவரின் பெயரைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் மற்றவர்களின் தகவல்களை தேட முயற்சிக்கின்றனர் .
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் ஹேரிபாட்டர் கதாநாயகன் டேனியல் ரேட்கிலிப் . மூன்றாவது இடத்தில் இருப்ப்வர் ஜெஸ்ஸி - ஜெ .
எனவே அடுத்த முறை உங்கள் தேடல்களை கவனமாக மேற்கொள்ளுங்கள் ..
மோடி பயணம் செய்ய தயாரக இருந்த கூடுதல் விமானத்தில் இருந்து செயலிழந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு !!
பிரதமர் மோடி அவர்களின் அமெரிக்க பயணத்தின் போது அவர் பயணம் செய்வதற்காக இருந்த கூடுதல் விமானத்தில் இருந்து செயலிழந்த வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
மோடியின் பயணத்திற்கு கூடுதல் விமானமாக இருந்த போயிங் -746 விமானத்தில் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . அதாவது பிரதமர் தனது பயணத்திற்கு பயன்படுத்தும் ஜம்போ விமானத்தில் ஏதெனும் கோளாறு ஏற்பட்டால் இந்த போயிங் விமானத்தை தான் பயன்படுத்துவார் . மோடி இந்தியாவிற்கு வந்த பின் அந்த விமானம் வணிக பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது .
இந்த விமானம் டில்லி - மும்பை -ஹைதராபாத் வழிகளில் இயக்கப்பட்டு வந்தது . ஜெட்டாவில் இன்று காலை வரும் போது செயலிழந்த குண்டு ஒன்று இருப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர் . பிரதமர் பயணம் செய்ய இருந்த கூடுதல் விமானத்தில் வெடி குண்டு கண்டுபிடித்ததால் அனைவரும் பலத்த அதிர்ச்சியில் உள்ளனர் .
இது குறித்து விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
வாட்ஸ்அப் பிற்கு போட்டியாக கூகுள் தயாரித்து வரும் புதிய அப்ளிகேஷன் !!
இப்போது வாட்ஸ்அப் என்பது அனைத்து இளைஞர்களும் கண்டிப்பாக வைத்து இருக்கும் அப்ளிகேஷன்களில் ஒன்றாக மாறிவிட்டது , இந்த அப்ளிகேஷனின் உரிமத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது . இந்த வாட்ஸ்அப் பிற்கு போட்டியாக கூகுள் நிறுவனம் ஒரு இலவச மெசெஞ்சரை தயாரித்து வருகிறது . இந்த இலவச மெசெஞ்சர் 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் ட்ரையல் பார்த்த பின் வெளியிடப்படும் என தெரிகிறது .
இந்த அப்ளிகேஷன் முற்றிலும் இலவசமாக இருக்கும் . மேலும் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்த கூகுளின் இ-மெயில் என எதுவும் கேட்கப்பட மாட்டாது .
சென்ற வருடம் கூகுள் நிறுவனம் 6 பில்லியன் டாலருக்கு வாட்ஸ் அப்பை வாங்க முயற்சித்தது . ஆனால் அவர்களால் வாங்க முடியவில்லை . எனவே கூகுள் இந்த முயற்சியில் இறங்கி உள்ளதாக தெரிகிறது .

உத்தரப் பிரதேசத்தில் இஞ்சின் இல்லாமல் பின்புறமாக சென்ற இரயில் - பயணிகள் அதிர்ச்சி !!
உத்தர பிரதேசத்தில் விந்தியாசல் இரயில் நிலையத்தில் விந்தியாச்சல் இண்டர்சிட்டி எஸ்பிரஸ் மதியம் 2.25 மணிக்கு இரயில் நிலையம் வந்தது . அந்த இரயில் அந்த நிலையத்தில் இருக்கும் போது இரயில்வே அதிகாரிகள் இஞ்சினை கழற்றி பின்னே அடுத்த பக்கத்தில் மாட்டுவதற்கு இஞ்சினை கழற்றினார்கள் .
ஆனால் இரயில் பாதை கொஞ்சம் சரிவாக இருந்ததால் இஞ்சின் இல்லாத அந்த 20 கோச்சுகள் பின்நோக்கி செல்ல தொடங்கியது . இஞ்சின் மாட்டுவதற்குள் இரயில் தானாக பின் நோக்கி சென்றதால் இரயில்வே அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்தனர் .
இதனை எதிர்பார்க்காத பயணிகள் பயத்தில் இரயிலின் உள்ளே இருந்து வெளியே குதித்தனர் . பலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . இரயில் ஒரு கிலோமீட்டர் சென்ற பின்னர் தானாக நின்றது . இது தொடர்பாக நடந்த முதல் கட்ட விசாரணையில் அதிகாரிகள் அழுத்த பிரேக்கை போட மறந்ததால் இரயில் நகர்ந்ததாக தெரிவித்தனர் . இந்த நிகழ்வு தொடர்பாக சரியான விசாரணை நடத்தப்பட்டு , அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர் .
பயணி ஒருவர் தெரிவிக்கையில் , " பிளாட்பாரத்தில் இருந்த சிலர் இரயில் நகருவதைக் கண்ட அதை பிடிப்பதற்காக ஓடினர் " என்றார் .
பிரிட்டிஷ் பிணைக்கைதி தலையை துண்டித்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு வெறிச் செயல் !! இன்னும் தொடரும் என்று மிரட்டல் !!
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரிட்டிஷ் பிணைக்கைதி ஆலன் ஹென்னிங் என்பவரின் தலையை துண்டித்து அதை வீடியோவாக வெளியிட்டுள்ளனர் . இது போன்று அவர்கள் வீடியோவிடுவது 4 வது முறை . மேலும் அமெரிக்கா தங்கள் மீது நடத்தும் வான்வெளி நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் , தங்கள் வசம் இருக்கும் அமெரிக்க பிணைக்கைதி ஒருவரின் தலை துண்டிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளனர் .
இதுக்கு முந்தைய வீடியோக்களைப் போன்று இதிலும் மூகமுடி அணிந்த மனிதன் ஒருவன் இருந்தான் . அவன் அந்த வீடியோவில் , " ஓபாமா , நீ எங்கள் சிரியா நாட்டின் மீது வான்வெளி தாக்குதலை நடத்தி மக்களை கொல்ல தொடங்கி விட்டாய் , எனவே உங்கள் மக்களின் கழுத்தை அறுப்பது தான் சரியானது " என்று கூறி உள்ளான் .
இந்த மூகமுடி அணிந்தவன் இதற்கு முந்தைய வீடியோக்களில் வந்தவன் போல் தோற்றமளித்தான் .
புல்லிலிருந்து பெட்ரோல்
தலைப்பை பார்த்ததும் புல் பெட்ரோலா? இது என்ன புதுக்கதையாக இருக்கிறது என்று நினைக்கத் தோன்றும். இது கதை அல்ல. அறிவியல் நிஜம். காடுகளிலும், தோட்டங்களிலும் வளரும் புற்களில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். பூமிக்கு அடியில் இருந்து இயற்கையாக கிடைக்கும் கச்சா எண்ணையில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் பிரித்து எடுக்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் அதிக அளவில் கிடைக்கும் இந்த பெட்ரோலிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பொருட்களால் சுற்றுப்புற சூழல், காற்று போன்றவை மாசுபடும் நிலையும் உள்ளது. மேலும் அவற்றின் உற்பத்தியும் நாளுக்கு நாள் குறைந்து வருவதால் மாற்று எரிபொருள் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
மூலிகையில் இருந்து பெட்ரோல் போன்ற எரிபொருள் தயாரிக்கலாம் என்று நம்ம ஊர் ராமர் பிள்ளை சொன்னார். காட்டாமணுக்கு விதையில் இருந்து இயற்கை டீசல் தயாரிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த இயற்கை டீசலை பயன்படுத்தி வாகனங்களை ஓட்டும் முயற்சியும் ஆங்காங்கே நடந்து வருகிறது.மேலை நாடுகளில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு மாற்றாக ஹைட்ரஜன் மற்றும் பேட்டரியில் இயங்க கூடிய வாகனங்களை உருவாக்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் புற்களில் இருந்து இயற்கை எரிபொருள் மற்றும் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் நிரூபித்து இருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள மினசோட்டா பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானியாக இருப்பவர் டேவிட் டில்மன். இவரும் இவரது குழுவினரும் சேர்ந்து இயற்கை எரிபொருள் உருவாக்கும் முயற்சியில் ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
புல் தோட்டம் :

ஏற்கனவே சோயா மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றில் இருந்து இயற்கை எரிபொருள் தயாரிக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அது போல் வேறு தாவரங்களில் இருந்து எரிபொருளை இயற்கையாக தயாரிக்க முடியுமா? என்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது தரிசு நிலங்களிலும், காட்டுப்பகுதிகளிலும் விளையும் புற்களில் இருந்து மின்சாரமும், இயற்கை எரிபொருளும் தயாரிக்க முடியும் என்பதை கண்டுபிடித்தனர்.
இந்த இயற்கை எரிபொருள் தயாரிப்புக்காக இவர்கள் பயன்படுத்தும் அறிவியல் தொழில்நுட்பத்துக்கு கார்பன் நெகடிவ் என்பது பெயராகும். அதாவது சுற்றுப்புறத்தில் இருந்து உள்இழுக்கப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவை விட, வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவு குறைவாக இருக்கும். இந்த ஆய்வுக்காக 16 வகையான புல் இனங்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் இந்திய ரக புல்களும் உண்டு. இந்த புற்கள் தங்களது இலை, தண்டு மற்றும் வேர் பகுதியில் அதிக அளவிலான கார்பன் டை ஆக்சைடை சேமித்து வைக்கும் திறன் கொண்டது. இதனால் சுற்றுப்புற சூழுலில் இருந்து உறிஞ்சப்படும் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாக இருக்கும்.
அதே நேரத்தில் இந்த புற்களில் இருந்து மின்சாரம் மற்றும் இயற்கை எரிபொருள் தயாரிக்கப்படும் போது வெளிப்படும் கார்பன் டை ஆக்சைடின் அளவு குறைவாகவே இருக்கும். அதாவது எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு உறிஞ்சப்பட்டதோ அதை விட குறைவான அளவே வெளியாகும். தற்போது சோதனை சாலை அளவில் நடைபெற்ற இந்த ஆய்வுகள் வெற்றியைத்தந்துள்ளன. இவை முழு அளவில் பயன்படுத்தப்படும் போது பெட்ரோல் மற்றும் டீசலின் பயன்பாடு கணிசமாக குறையும், சுற்றுப்புற சூழல் மாசுபடுவதும் பாதுகாக்கப்படும்.
ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக ஆண் ஓரின ஆபாச படங்களை பார்க்கின்றனர் - ஆய்வில் தகவல் !!
உலகின் மிகப் பெரிய ஆபாச இணையதளங்களின் ஒன்றான பார்ன்ஹப் இணையதளத்திற்கு தினமும் 44 மில்லியன் மக்கள் வந்து போகின்றனர் . அந்த இணையதளம் தனது தளத்திற்கு வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் எந்த வகையான ஆபாச படங்களை பார்க்கின்றனர் என்பதைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது .
பெண் வாடிக்கையாளர்கள் அதிகம் பார்க்கும் ஆபாச படங்களில் பெண் ஓரின சேர்க்கை படங்கள் தான் முதலிடத்தில் இருந்தது . இரண்டாம் இடத்தில் ஆண் ஓரின சேர்க்கைப் படங்கள் இருந்தது . ஆனால் ஆண்கள் பார்ப்பதில் இந்த ஆண் ஓரின சேர்க்கைப் படம் ஏழாவது இடமே பிடித்து இருந்தது .
பிளிப்கார்ட்டில் வந்துவிட்டது மோட்டோரோலா 360 வாட்ச் !! விலை - 17,999 ரூபாய் !!
பிளிப்கார்ட் நிறுவனம் தனது இணையதளத்தில் நேற்று ( வெள்ளிக்கிழமை ) முதல் மோட்டோரோலாவின் மோட்டோ 360 வாட்சை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது . இப்போது நாம் ஸ்மார்ட் போனில் செய்யும் பல வேலைகளை இதிலும் மேற்கொள்ளலாம் . இந்த வாட்சிலும் ஆண்ட்ராய்ட் இருக்கிறது .
இந்த கைக்கடிகாரம் நமது குரலின் மூலம் இயக்கலாம் . இதனை இயங்க வைக்க முதலில் " ஒ.கே கூகுள் " என்று சொல்ல வேண்டும் . இப்படி சொல்வதன் மூலம் கைக்கடிகாரம் செயல்பட தொடங்கும் . இதன் பின் நாம் நமக்கு ரிமைண்டர் வைப்பது , வழி கேட்பது , வானிலை அறிவது போன்ற பலவற்றை மேற்கொள்ளலாம் .
இந்த கைக்கடிகாரம் 1.5 இன்ச் திரை கொண்டது . கொரிலா கிலாசினால் பாதுகாக்கப்படுகிறது . 512 எம்.பி ராம் உதவினால் இயங்குகிறது . இண்டர்நெல் ஸ்டோரெஜ் - 4 ஜிபி .
இந்த கடிகாரம் மூலம் நமது உடல் நலத்தையும் பாதுகாக்கலாம் . இந்த கடிகாரம் நாம் நாள் ஒன்றுக்கு எவ்வளவு தூரம் நடந்துள்ளோம் என்பதையும் காட்டும் . மேலும் நமது இதய துடிப்பு பற்றியும் கூறுகிறது .
சிரியா பள்ளியில் வெடித்த குண்டு: 41 குழந்தைகள் பலி
சிரியாவில் அரசுப் பள்ளி ஒன்றில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில் 41 குழந்தைகள் உயிரிழந்ததாக மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிரியாவின் கோம்ஸ் நகரில் நேற்று அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பயங்கரவாதிகள் இரண்டு வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். இதில் அப்பள்ளியில் பயின்று கொண்டிருந்த 41 குழந்தைகள் பலியாகியுள்ளனர். காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பல மாணவர்களைக் காணவில்லை என்று புகார் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்தக் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
ஜப்பான் எரிமலைச் சீற்றம்: 47 உடல்கள் மீட்பு
ஜப்பானின் அன்டாகே எரிமலையில் கடந்த சனிக்கிழமை திடீரென ஏற்பட்ட சீற்றத்தால் உயிரிழந்த 47 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சீற்றத்தில் மேலும் 16 பேரின் நிலை குறித்து தெரியவில்லை என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
அந்த எரிமலையிலிருந்து தொடர்ந்து விஷத்தன்மை வாய்ந்த தீப்பிழம்பு வெளியேறி வருகிறது. இதனால் சீற்றம் உருவான பகுதியை மீட்புக் குழுவினர் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை பெய்த கன மழை காரணமாக, மீட்புப் பணி தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனிடையே, சீற்றம் ஏற்பட்ட பகுதியில் அரை மீட்டர் உயரத்துக்கு எரிமலைக் குழம்பு பரவி வருவதால், பல உடல்கள் மீட்க முடியாத அளவுக்கு புதைந்துவிடும் அபாயமிருப்பதாக மீட்புக் குழுவினர் அச்சம் தெரிவித்தனர்.
Subscribe to:
Posts
(
Atom
)