BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 29 October 2013

ஒரே மேடையில் சிரித்து பேசிக்கொண்ட மன்மோகன் சிங் - நரேந்திர மோடி

பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி  பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்,  இருவரும் சில நிமிடங்கள் சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

இன்று குஜராத்தின் அகதமாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு சொசைட்டி சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட அருங்காட்சியக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் தலைமை விருந்தினராக பிரதமர் மன்மோகன்சிங்கும், சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடியும் பங்கேற்ற போது தான் இது நடந்தது.

# தமிழ்நாட்டில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இது போன்று ஒரே மேடையில் சிரித்து பேசுவதெல்லாம் நடக்குமா?

குளத்தில் வளரும் தாமரைகளை மறைக்க வேண்டும்-காமெடி பண்ணும் காங்கிரஸ்....!!!!



கட்சிகள் தங்கள் சின்னங்களை பொது இடங்களிலோ, பொதுவான விஷயங்களிலோ பயன்படுத்தக்கூடாது என்பது தேர்தல் விதி.இதன்படி இப்பொழுது தேர்தல் நடக்கவிருக்கும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் அமர்சந்த் தேர்தல் ஆணையத்திற்க்கு ஒரு மனு எழுதியுள்ளார்.அதில், "தாமரை பி.ஜே.பி யின் சின்னமாதலால் அதை பார்க்கும்பொழுதெல்லாம் மக்களுக்கு பி.ஜே.பி யின் நினைவே வரும்.அதனால் மாநிலம் முழுவதும் அனைத்து குளங்களிலும் வளரும் தாமரைப்பூக்களை தேர்தல் ஆணையம் மறைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.தேர்தல் ஆணையம் இந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

இதற்கு பதிலளித்த பி.ஜே.பியினர்,"இது பைத்தியக்காரத்தனத்தின் உச்சம்,அப்படியானால் காங்கிரஸ்காரர்கள் தேர்தல் நேரத்தில் தங்கள் கைகளை ஒளித்து வைத்துக்கொள்ளுவார்களா??" என்று கேள்வி எழுப்பினர்.

# உங்க அறிவை கண்டு நாங்க வியக்கோம் காங்கிரஸ்கார்.................................   

கோட்டையில் தங்கம் இல்லை-தொல்லியல் துறை அறிவிப்பு.


சோபன் ஷங்கர் என்ற சாமியார் சில நாட்களுக்கு முன்பு உ.பி யில் உள்ள கோட்டை ஒன்றில் ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக தான் கனவு கண்டதாக கூறினார்.இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட அரசும் தொல்லியல் துறையை முடுக்கி விட்டு கோட்டையை தோண்டும் பணியை தொடங்கியது.கடந்த 18-ஆம் தேதி தொடங்கிய பணி நேற்று வரை நடந்து வந்தது.இந்நிலையில் இன்று "டைம்ஸ் நவ்" வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி அங்கே தங்கம் இல்லை என்றும்,அதனால் தொல்லியல் துறை தோண்டுவதை நிறுத்தி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

#இப்படி வாலண்டியரா நீங்களே வந்து வண்டில ஏறி அசிங்கப்பட்டுடீங்களே சாமி................ 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media