சேரன் மகள் காதல் விவகாரம். அடுத்தடுத்த திருப்பங்கள், காதல் என்ற பெயரில் பணம் பறிக்க முயற்சி என சேரன் பேட்டி, பாமக ராமதாஸ் சேரனுக்கு ஆதரவு, சேரனின் மகளின் காதலர் சந்த்ரு கைது கைது செய்ய வாய்ப்பு.
சேரனின் மகள் தாமினியை டான்சர் சந்துரு திட்டமிட்டு காதலித்ததாகவும் இயக்குனர் சேரனின் படத்தில் சந்த்ருவை ஹீரோவாக நடிக்க வைக்க தன் மகள் மூலமாக சந்த்ரு வற்புறுத்தியதாகவும் இயக்குனர் சேரன் பேட்டி அளித்துள்ளார்.

சேரன் தன் மனைவியை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி பேசிய போது தான் சாதாரண குடும்பத்திலிருந்தே வந்ததாகவும் தன் மனைவியை காதல் திருமணம் செய்திருப்பதாகவும் தாங்கள் காதலுக்கு எதிரி அல்ல என்றும் தொடக்கத்தில் தன் மகள் சந்த்ருவை காதலிப்பதாக கூறிய போது மூன்றாண்டுகள் காத்திருங்கள், படித்து முடித்த பின் நாங்களே திருமணம் செய்து வைக்கிறோம் என்றோம் சந்த்ருவை பற்றி விசாரித்த போது சந்த்ருவுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு உள்ளது என்று தெரிந்தது. சில நாட்களுக்கு முன் மகளுக்கு ஹை பிளட் பிரஷர் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்திருந்தோம், அப்போது சந்த்ரு தன் மகளை மிரட்டுவதாக தெரிந்தது இது குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இயக்குனர் எழில் படத்தில் சந்த்ருவை ஹீரோவாக நடிக்க வைக்க தாமினி தன்னிடம் வற்புறுத்தியதாகவும் தாமினியை பயன்படுத்தி திரை உலகில் ஒரு இடத்தை பிடிக்கவும் சொத்துக்களை கைப்பற்றவும் திட்டமிட்டதாக சந்த்ரு மீது புகார் வாசித்தார். மேலும் தன் மகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த நேரத்தில் சந்த்ரு பல பெண்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும் மூன்று பெண்கள் சந்த்ரு மீது புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
என் மூத்த மகளிடமும் ‘‘ஐ லவ் யூ’’ என்று பேஸ்புக்கில் கூறியுள்ளான். 7, 8 பெண்களுடன் அவன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த ஆதாரங்களை கோர்ட்டில் சமர்ப்பிக்க தயார். நடத்தைகள் மோசம், பொருளாதாரத்திலும் திருப்தி இல்லை. பெண்களுடன் தகாத தொடர்பு. இதையெல்லாம் பார்த்த பிறகு ஒரு அப்பனால் எப்படி மகளை கட்டிக் கொடுக்க முடியும். அதுமட்டு மல்ல என் மகளிடம் உன் அப்பா படத்தில் நான் கதாநாயகனாக நடிக்க ஏற்பாடு செய் என்று கூறியுள்ளான்.
இது குறித்து கூறிய அவரது பெண்ணோ தன் தந்தை நிறைய வெள்ளை பேப்பர்களில் கையெழுத்து வாங்கியதாகவும் அதை வைத்து புகார் அளித்திருக்கலாம் என்றார்.
டாக்டர் ராமதாஸ் ஒரு தகப்பனாக சேரனின் உணர்வுகள் புரிகின்றது, சேரனை ஆதரிக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார், மேலும் இது அப்பட்டமான ஒரு நாடக காதல் என்றும் சேரனின் மகள் மேஜர் என்றாலும் அந்த பெண்ணை பெண்ணின் விருபத்துக்காக காதலனுடன் அனுப்பாமல் கவுன்சிலிங் கொடுத்து காப்பகத்துக்கு அனுப்பியிருக்கும் மாநகர காவல்துறை பொறுப்புடன் செயல்பட்டுள்ளதாகவும் இது போன்ற பொறுப்புடன் தர்மபுரியில் திவ்யாவிற்கும் செய்திருந்தால் திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டிருந்திருக்க மாட்டார் என்றும் கூறினார்.
21 வயதுக்கு முன் திருமணம் செய்பவர்கள் பெற்றோர் ஒப்புதல் வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும் என்று கோருகிறார் ராமதாஸ்.
இந்நிலையில் சேரனின் மகளை காதலிக்கும் சந்த்ரு மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டு கைது செய்யப்படும் நிலை காணப்பட்டது, கைது மேலும் பல சச்சரவுகளை உருவாக்கும் நிலையில் உள்ளதால் கைது தள்ளிப்போடப்பட்டுள்ளது, நாளை சமரசம் ஏற்படவில்லையென்றால் கைதாக வாய்ப்புள்ளது