BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 26 October 2013

தான் பிரதமர் ஆனது எல்லையை மாற்றியமைக்க அல்ல - மன்மோகன்சிங் நவாஷ் ஷெரிப்புக்கு கொடுத்த பதிலடி

சென்ற மாதம் நியூயார்க்கில் ஐக்கியநாடுகள் சபை கூட்டங்களுக்கு பின் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும் பாக்கிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேசினர்,

குஜராத்தில் ஒரே மேடையில் பேசப்போகும் மோடி - மன்மோகன் சிங்.

அமெரிக்காவில் ஒரே மேடையில் இரண்டு அதிபர் வேட்பாளர்களும் வாதங்களும் பிரச்சாரங்களும் செய்து கொள்வார்கள்,

காங்கிரஸ்க்கு ஆதரவாக சச்சின் டென்டுல்கர் பிரச்சாரம்

காங்கிரஸ்க்கு ஆதரவாக சச்சின் டென்டுல்கர் பிரச்சாரம் - மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல்

எல்லைப்பகுதியில் நுழைய முயன்ற பாகிஸ்தான் கடத்தல்காரர்கள்..! 3 பேரையும் சுட்டு வீழ்த்தியது இந்திய எல்லை பதுகாப்புப் படை.!!



இந்திய பகிஸ்தான் எல்லைப்பகுதியான முல்லன்கோட்டில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான 3 பேரின் நடமாட்டம் தென்பட்டதில், இந்திய எல்லைப்பாதுகாப்புப் படையினர் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனர். திடீரென இந்திய படையின்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு பதிலடி கொடுத்த இந்திய துருப்புகள் பாகிஸ்தானை சேர்ந்த 3 கடத்தல்காரர்களை சுட்டுவீழ்த்தியதோடு, அவர்களிடமிருந்து 24கிலோ ஹெராயினயும் கைப்பற்றினர்.
இதன் மதிப்பு 120கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது..!

# ஆப்பரேஷன் பதிலடி ஸ்டார்ட்ஸ்..!

சுட்டகதை - விமர்சனம்

காட்டுவாசி கிராமத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட இரண்டு மொக்கை போலிஸ்  அந்த கொலையை செய்தவர் யார் என துப்பறியும் கதை.

போஸ்டர்ல டிவிஸ்ட் மேல டிவிஸ்ட்னு போட்டால் மட்டும் போதுமா?  டிவிஸ்ட்டுன்னு சொன்னால் கூட தெரிய மாட்டேங்கிறது. கதையோ மொக்கை, காட்சியமைப்போ சூர மொக்கை, ஒளிப்பதிவோ கொடுமை, இசையோ இம்சை, காமெடி என்று சில குதறல்கள் என அனைத்து மோசமான அம்சங்களும் ஒன்றாக அமைந்த படம் சுட்டகதை.

புரொட்யூசர் ரவீந்தர் ஸ்விட்சர்லாந்திலிருந்து கிளம்பி கோடம்பாக்கம் வந்து 6 படங்களுக்கு பூஜை போட்டு இந்த சூர மொக்கை படத்தை ரிலீஸ் செய்த நேரத்திற்கு பதில் சரக்கடிக்கும் பழக்கம் இருந்தால் இரண்டு எக்ஸ்ட்ரா லார்ஜ் அடித்துவிட்டு ஸ்விஸ்சிலேயே குப்பற படுத்து தூங்கியிருக்கலாம்.

படம் பார்க்க செல்பவர்கள் தியேட்டர்காரனிடம் தியேட்டர் வாசல் கதவை எக்காரணம் கொண்டும் பூட்ட கூடாது என்று சொல்லிவிட்டு செல்லவும், தியேட்டருக்கு எதிரில் மெடிக்கல் ஷாப் இருந்தால் தலைவலி மாத்திரைகளை ஆர்டர் செய்துவிட்டு போகவும்

மதிப்பெண்கள் 1.5 / 5

# படம் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கமெண்ட் என்ன?

நரேந்திரமோடி பேரணி பேனர்கள், போஸ்டர்கள் கிழிப்பு - பாட்னாவில் சாலைமறியல்



வரும் ஞாயிறு அன்று பாட்னாவில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் பேரணி நடைபெற உள்ளது,

ஜப்பானை தாக்கிய பூகம்பம்-ரிக்டர் அளவு 7.3


நில அதிர்வுகளுக்கு பெயர் பொன ஜப்பானை வெள்ளியன்று மீண்டும் ஒரு நில நடுக்கம் தாக்கியது.இந்திய நேரப்படி வெள்ளி இரவு 10.40 மணிக்கு நிகழ்ந்த இந்த பூகம்பத்தின் அளவு 7.3 ரிக்டர் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இதனை தொடர்ந்து ஜப்பானின் கடலோர பகுதிகளுக்கு சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.ஆயினும் இதுவரை சேதம் எதுவும் ஆனதாக தகவல்கள் இல்லை.

ஏற்கனவே 2011-ல் ஏற்பட்ட 9.1 ரிக்டர் அளவு பூகம்பத்தில் ஜப்பான் நிர்மூலமானது குறிப்பிடத்தக்கது. 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media