BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 24 July 2014

காமன்வெல்த் போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை பெற்றது




இந்தியா வீராங்கனை குமுக்சம் சஞ்சித்தா சானு என்னும் பளுதூக்குதல் வீராங்கனை காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்தார். அதுவும் முதல் பதக்கமே இந்தியாவுக்கு தங்கப்பதக்கமாக கிடைத்து உள்ளது. பெண்கள் 48 கிலோ பளுதூக்குதல் போட்டியில் அவர் இந்த பதக்கத்தை பெற்றார். இதே பிரிவில் இந்தியாவின் மீரா பாய் சானு வெள்ளி பதக்கததை வென்றார்.




போட்டியின் முதல் நாளே இந்தியா தனது பதக்க வேட்டையை தொடங்கி விட்டது. இந்த முறை இந்தியா முதல் இடத்தை பெற முயற்சிக்க வேண்டும்.



இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special News


பெண்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை "செக்ஸ்" குறித்து சிந்திக்கிறார்கள் தெரியுமா?
http://www.satrumun.net/2014/07/how-many-times-think-about.html

காமன்வெல்த் போட்டியில் இந்தியா முதல் பதக்கத்தை பெற்றது

ஊக்க மருந்து பயன்படுத்திய இந்திய வீரர்,  பதக்கம் வெல்லும் வாய்ப்பிருந்தவர் காமன்வெல்த் போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டார்
http://www.satrumun.net/2014/07/blog-post_28.html

கூகிள் சர்ச்சில் ரஜினி ,அஜித்தை முந்திய விஜய் புதிய சாதனை படைத்தார்
http://www.satrumun.net/2014/07/blog-post_52.html

ரொனொல்டா மற்றும் மெஸ்ஸியை முந்திய கேப்டன் தோனி !!!
http://www.satrumun.net/2014/07/blog-post_99.html

விஜய், அஜித்தோட ஒப்பிடாதீங்க… : ரசிகர்களை அடக்கி வாசிக்கச் சொன்ன சூர்யா!
http://goo.gl/EEkG66

சீனாவின் ஆப்பிள் போன் என்று அழைக்கப்படும் "சியோமி" மொபைல் உண்மையான ஆப்பிள் மொபைலுடன் போட்டியிடப் போகிறது
http://www.satrumun.net/2014/07/blog-post_44.html

ஒரு சிறுவன் வாயில் இருந்து 232 பற்களை பிடுங்கி இந்திய மருத்துவர்கள் சாதனை
http://www.satrumun.net/2014/07/232.html

மருத்துவமனையில் ஊழியருக்கு கத்திக்குத்து, சிசிடிவியில் பதிவான பயங்கரம்
http://www.satrumun.net/2014/07/blog-post_95.html

என் வாழ்க்கை முடியும் வரை நான் இந்தியனாக தான் இருப்பேன் - பாக்கிஸ்தான் மருமகள் சானியா மிர்சா உருக்கம் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_30.html

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் நாம் ஸ்மார்ட்போன்களில் செலவழிக்கிறோம் தெரியுமா?
http://www.satrumun.net/2014/07/blog-post_29.html

காமென்வெல்த் போட்டியில் இந்திய கொடி தலைகீழாக காண்பிக்கப்பட்டது
http://www.satrumun.net/2014/07/blog-post_35.html

அல்ஜீரியாரில் விமானம் மாயம், விபத்துக்குள்ளானதா?
http://www.satrumun.net/2014/07/blog-post_96.html

மற்றொருவரின் புகைப்படத்தை பேஸ்புக்கில் திருடியதாக நடிகர் மீது குற்றச்சாட்டு
http://www.satrumun.net/2014/07/blog-post_51.html

காஸாவிற்கு ஆதரவான தீர்மானத்தில் வாக்களித்தது இந்தியா !!
http://www.satrumun.net/2014/07/blog-post_43.html

ஆளில்லா லெவல் கிராசிங்கில் தெலுங்கானாவில் ரயில் பள்ளி பேருந்து மோதலில் 20 மாணவர்கள் பலி
http://www.satrumun.net/2014/07/20_24.html


பெண்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ் குறித்து நினைக்கிறாங்களாம்?

செக்ஸ் குறித்த சிந்தனை எல்லோருக்கும் தினமும் வரும், இதற்கு வயது வித்தியாசமே கிடையாது என்று சொல்லலாம். பலருக்கும் செக்ஸ் குறித்த சிந்தனை மகிழ்ச்சியானதாகவும் புத்துணர்வு தருவதாகவும் இருக்கும்.

பெண்களை விட ஆண்களே செக்ஸ் குறித்து அதிகம் சிந்திக்கிறார்கள், அமெரிக்காவில் இது குறித்து ஒரு ஆய்வு நடத்தினர், அந்த ஆய்வில் சராசரியாக ஆண்கள் ஒரு நாளைக்கு 19 முறை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குகின்றனர், பெண்களோ ஒரு நாளைக்கு சராசரியாக 10 முறை செக்ஸ் குறித்து சிந்திக்கின்றனர் என்று தெரியவந்தது.

அந்த ஆய்வில் தூக்கம், உணவு, செக்ஸ் ஆகிய மூன்றில்  எது குறித்து அதிகம் தினமும் சிந்திக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு  பெரும்பாலான ஆண்களின் சிந்தனை செக்ஸ் குறித்தே இருந்துள்ளதாம். ஒரு நாளைக்கு குறைந்தது 1 முறை முதல் 388 முறை வரை  செக்ஸ் குறித்த சிந்தித்திக்கின்றார்கள். சராசரியாக ஒவ்வொரு ஆணும் குறைந்தது 19 முறையாவது செக்ஸ் குறித்து நினைக்கிறார்களாம்.

பெண்கள்  ஒரு நாளைக்கு 1 முறையிலிருந்து 140 தடவை செக்ஸ் குறித்து நினைக்கிறார்களாம். சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் 10 முறை செக்ஸ் குறித்த சிந்திக்கின்றார்கள்.

செக்ஸ் குறித்த சிந்தனையினால் தாங்கள் மிகவு மகிழ்வதாகவும் தங்களது மனம் உற்சாகமடைவதாகவும் இந்த சர்வேயில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் கூறினார்கள். மேலும், செக்ஸ் சிந்தனையுடன் மட்டுமில்லாமல், செக்ஸ் உறவில் ஈடுபடும் ஆசையும் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருந்ததாம். 

உண்மை வெளியானது !! இந்திய வீரர் தடை செய்யப்பட்ட மருந்தை உபயோகப்படுத்தியதற்காக காமன்வெல்த் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டார் ..


மாற்று திறனாளிகளுக்கான பளுதூக்குதலில் இந்தியா சார்பாக போட்டியிட இருந்தவர் சச்சின் சௌதரி . இவர் தன்னுடைய தந்தையில் உடல்நிலை சரியில்லாததால் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தனர் . ஆனால் இப்போது அவர் தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டதற்காக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற உண்மை கசிந்து உள்ளது . இதை எதற்காக தந்தையின் உடல் நிலை சரியில்லை என்று மறைக்க முயன்றனர் என்பது தெரியவில்லை .

அந்த  மாற்று திறனாளிகள் அணியில் இருந்த ஒருவர் கூறுகையில் , " ஆம் , அவர் தடை செய்யப்பட்ட பொருளை பயன்படுத்தியது உண்மை . இந்த சோதனை தேசிய போதை ஒழிப்பு மையத்தால் ஒரு மாதத்திற்கு முன் நடத்தப்பட்டது . அவர் வெளியேறியது ஒரு துயரமான சம்பவம் " என்றார் .

சச்சின் சௌதரி ஒரு அனுபவம் வாயந்த பளுதூக்குதல் வீரர் . இந்த முறை பதக்கம் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் இவரும் ஒருவர் .

ரஜினி ,அஜித்தை முந்தி இளைய தளபதி விஜய் புதிய சாதனை படைத்தார்





2013 ஆண்டு கூகுள் தேடுதளத்தில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர் பட்டியலில் இளைய தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார். இந்த போட்டியில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , தல அஜித் என அனைவரையும் முந்தி விட்டார். விஜய்க்கு அடுத்த இடத்தில் ரஜினி, மகேஷ் பாபு ,பவண் கல்யான், அஜித் ஆகியோர் உள்ளனர். விஜய்யின் இந்த அதிரடி முன்னேற்றத்திற்கு காரணம் தலைவா படத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை அதிக நபர்களால் தேடப்பட்டது. இதனை விஜய் ரசிகர்கள் பேஸ்புக், டிவிட்டர் முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.


பாலிவுட்டை பொருத்தவரை அதிகம் தேடப்பட்ட நடிகராக சல்மான் கானும், அதிகம் தேடப்பட்ட நடிகையாக கத்ரினா கைஃபும், அதிகம் தேடப்பட்ட படமாக சென்னை எக்ஸ்பிரஸும் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அதிகம் தேடப்பட்ட கவர்ச்சி நடிகையாக சன்னி லியோன் உள்ளார். 

மருத்துவமனையில் வேலை செய்பவரை அங்கேயே அட்மிட் செய்யும் அளவுக்கு கத்திக்குத்து


ஒசூரில் இன்று அதிகாலை பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்தது. ஒசூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்னும் நபர். இவருக்கு 30 வயது ஆகிறது. இவர் அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். அவர் இப்போதும் போல் பணியில் இருந்தார். அப்போது பிரகாஷை தேடி அதிகாலை 4.30 மணி போல் 25 வயது மிக்க வாலிபர் வந்து உள்ளார். அவர் பிரகாஷுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இறுதியில் கத்தியால் பிரகாஷை சரமாரியாக குத்தி உள்ளார். இதனால் பிரகாஷ் அலறி உள்ளார். இந்த சப்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் வருவதற்குள் அந்த நபர் தப்பி சென்று விட்டார்.


பிரகாஷை வெட்ட வந்த நபர் சசி என்று கூறப்படுகிறது.இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி விட்டது. சசி என்பவரின் உறவினர் பிரசவத்துக்காக சசி ஏற்கனவே இங்கு வந்து உள்ளார். அப்போது பில் தொகை அதிகமாக இருந்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தெலுங்கானாவில் ரயில் பள்ளி பேருந்து மோதலில் 20 மாணவர்கள் பலி





இன்று நடந்த ரயில் விபத்து பிஞ்சு குழந்தைகளின் உயிரை பறித்து விட்டது. இந்த விபத்துக்கும் வழக்கம் போல் ஆளில்லாத ரயில்வே கிராஸிங்கை கடக்க முயன்றதே ஆகும். ஒரு பள்ளி பேருந்து இன்று வழக்கம் போல் பள்ளி செல்லும் 40 மாணவர்களுடன் போய் கொண்டு இருந்தது. இது தெலுங்கானாவில் உள்ள காகடியா டெக்னோ பள்ளிக்கு சொந்தமான பேருந்து.



அந்த பேருந்து மசாய்பேட் கிராமம் அருகே உள்ள ரயில்வே கிராசிங்கை கடக்க முயன்ற போது நான்டெட் - செகந்தரபாத் ரயில் அந்த பேருந்தின் மீது மோதியது. இந்த சம்பவம் 9.10 மணி போல் நடைபெற்றது. அதில் அந்த பேருந்தில் இருந்த 20 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மீதி 19 மாணவர்கள் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இந்த விபத்திற்கு முக்கிய காரணம் பேருந்தின் ஓட்டுனர் தான் என்று தெரியவந்து உள்ளது.

இந்திய சிறுவனிடம் இருந்த 232 பற்களை வெற்றிகரமாக அகற்றி இந்திய மருத்துவர்கள் சாதனை !!



ஆஷிக் கவாய் , என்னும் 17 வயது பையன் தனது வலது அடி தாடையில் வீக்கத்தால் அவதிபட்டு வந்தார் . இதனால் மும்பையின் ஜெ.ஜெ மருத்துவமனையை நாடினார் . அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் புது வித நோயினால் அவதிப்பட்டு வருவதை கண்டறிந்தனர் .



இது குறித்து மருத்துவர் கூறுகையில் , " நாங்கள் இந்த அறுவை சிகிச்சையை ஏழு மணி நேரங்களாக செய்தோம் . நாங்கள் எளிதாக இதை முடித்து விடலாம் என்று நினைத்தோம் . ஆனால் பற்களை அகற்றிய போது முத்து போன்ற வடிவமைப்பில் பற்கள் வந்து கொண்டே இருந்தது . அந்த பற்களை எண்ணிக் கொண்டே வந்த போது மொத்தம் 232 பற்கள் இருந்தது " என்றார்  .



இந்த அறுவை சிகிச்சையை நடத்திய மருத்துவர்கள் இதனை ஒரு உலக சாதனை என்று கூறினர் .

காமென்வெல்த் போட்டியில் இந்திய கொடி தலைகீழாக காண்பிக்கப்பட்டது





காமென்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நேற்று கோலகலமாக தொடங்கியது. இன்று முதல் போட்டிகள் நடைபெறுகிறது. இன்று காமென்வெல்த் போட்டியின் அதிகாரபூர்வ பாடல் இசைக்கப்பட்டது. இந்த பாடலின் பெயர் லெட்ஸ் தி கேம் பிகின்ஸ் என்பதாகும். இது யுனிசெப் அமைப்பின் பாடலும் கூட .

இந்த பாடலின் சிறப்பு என்னவென்றால் இந்த பாடல் இசைக்கப்படும் போது போட்டியில் பங்கேற்கும் அனைத்து  நாடுகளின் தேசிய கொடியும் காண்பிக்கப்படும். ஆனால் நமது நேரம் இந்திய கொடி மட்டும் தலைகீழாக காண்பிக்கப்பட்டு உள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

அல்ஜீரியாரில் மற்றுமொரு விமான விபத்து ??



ஏர் அல்ஜீரியாவின் ஏ.எச்- 5017 என்னும் விமானம் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு விட்டதாக தகவல் வருகிறது .

இந்த விமானம் பர்கினா பசோ என்னும் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய ஒரு மணி நேரத்தில் அந்த விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது . தொடர்பு துண்டிக்கப்படும் முன் அந்த விமானத்தை மணற்புயல் ஏற்பட்டதால் திசை திருப்பும் படி கேட்டுக் கொண்டுள்ளனர் .


கடைசியாக வந்த தகவலின் படி அந்த விமானத்தை திசை திருப்பும் போது விபத்திக் சிக்கியதாக கூறியுள்ளனர் . அந்த விமானத்தில் 110 பயணிகள் உள்ளனர் .

என் வாழ்க்கை முடியும் வரை நான் இந்தியனாக தான் இருப்பேன் - சானியா மிர்சா உருக்கம் !!




புதிதாக பிரிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் தூதுவராக அந்த மாநிலத்தின் சானியா மிர்சா அறிவிக்கப்பட்டார் . இந்த அறிவிப்பை அடுத்து பாஜக வின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான லட்சுமணன் , சானியா மிர்சா பாகிஸ்தானின் மருமகள் , அவர் எப்படி தூதுவராக நியமிக்கப்படலாம் என்று கேட்டு சர்ச்சை ஏற்படுத்தினார் . மேலும் , சானியா மஹாராஷ்டிராவில் பிறந்து, ஹைதராபாத்தில்  வளர்ந்தார் . இப்போது பாகிஸ்தானியை திருமணம் செய்துள்ளார் . ஒரு வெளி ஆளுக்கு எப்படி மாநில தூதுவர் பதவி கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பினார் .

இது குறித்து விளக்கம் அளித்த சானியா கூறுகையில் , நான் தூதுவராக நியமிக்கப்பட்டதை ஊடகங்கள் பிரச்சினையாக மாற்றி நேரத்தை வீணடிப்பது எனக்கு வேதனை அளிக்கிறது . நான் பாகிஸ்தானியை திருமணம் செய்து இருந்தாலும் , நான் இந்தியன் தான் . என் வாழ்க்கை முடியும் வரை நான் இந்தியனாக தான் இருப்பேன் என்றார் .

மேலும் தனது தாத்தா , பெரிய தாத்தா பெயர்களை கூறி அவர்கள் செய்த பணிகளை கூறினார் . தனது குடும்பம் கடந்த 100 ஆண்டுகளாக ஹதராபாத்திற்காக உழைத்து வந்ததாகவும் , தன்னை வெளி ஆள் என்று கூறுபவர்களுக்கு கண்டனங்களை தெரிவிப்பதாகவும் கூறினார் .

நாம் ஸ்மார்ட்போன்களில் செலவழிக்கும் நேரம் எவ்வளவு ??




இப்போது எல்லாம் இளைஞர்கள் அனைவரின் கையிலும் இருக்கும் பொருளாக ஸ்மார்ட்போனகள் மாறிவிட்டன. நமது அம்மாக்கள் இப்போது எல்லாம் நம்மை எதற்காக திட்டுகிறார் என்று பார்த்தால், எப்போது பார்த்தாலும் போனும் கையுமாக இருக்கிறாயே என்று தான். நாம் அதற்கு அடிமையாகி விட்டோம் என்று சொன்னால் கூட அதில் தவறு இல்லை. இது குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது, அதில் நாம் சராசரியாக 3 மணி நேரம் 18 நிமிடங்களுக்கு ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகிறோம் என்று கூறுகிறது. இது அமெரிக்கர்களை விட அதிகம் ஆகும்.



நாம் சராசரியாக ஒரு நாளைக்கு 77 முறை நமது போன்களை சோதனை செய்கிறோம் ,சிலர் 100 முறை கூட செய்கிறார்கள். நாம் அதிகமாக அதில் உள்ள ஆப்களில் தான் இந்த நேரத்தை செலவிடுகிறோம். இப்போது அதில் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூட அதிகரித்து வருகிறது. 

நாம் அதனை பயன்படுத்துவதில் தவறு இல்லை ஆனால் அதற்கு அடிமையாகிவிட கூடாது என்று ஒரு அடிமை கூறுகிறேன். 

மற்றொருவரின் புகைப்படத்தை பேஸ்புக்கில் திருடியதாக நடிகர் மீது குற்றச்சாட்டு




வெளிநாடுகளில் வனவிலங்குகளின் வித்தியாசமான புகைப்படத்தை அனுப்ப அதில் சிறந்த ஒன்றுக்கு ஒரு விருது வழங்கப்படும்.100 நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். 51 வருடங்களாக இந்த போட்டி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் மார்ஷல் வான் ஒஸ்டன் என்பவரும் இருந்தார். இவர் குரங்கு ஒன்று சுற்றுலா பயணிகளிடம் இருந்து மொபைல் போனை வாங்கி கொண்டு தண்ணீரில் இறங்கி அதனை பார்ப்பது போல ஒரு போட்டோவ எடுத்து அனுப்பி இருந்தார்.


ஆனால் இவரின் இந்த படத்தை ஹாலிவுட் நடிகர் ஆஷ்டன் குச்சர் தனது பேஸ்புக் பக்கத்தில் பயன்படுத்தி கொண்டார். இது குறித்து அந்த நடிகர் மீது இவர் குற்றம்சாட்டி இருந்தார். அவர் குற்றம் சுமத்தியதையடுத்து ஆஷ்டன் தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து அந்த படத்தை நீக்கிவிட்டார். இந்த விருதுக்கான வெற்றியாளரின் பெயர் அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும்.

காஸாவிற்கு ஆதரவான தீர்மானத்தில் வாக்களித்தது இந்தியா !!


ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் இஸ்ரேல் காஸா மீது அத்துமீறி தாக்குதலை நடத்தியதை எதிர்த்து கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தது இந்தியா .



இந்தியா மற்றுமில்லாமல் மற்ற பிரிக்ஸ் நாடுகளும் ஆதரவாக வாக்களித்துள்ளது . 46 பேர் கொண்ட இந்த அமைப்பில் 29 நாடுகள் ஆதரவாக வாக்களித்து இருக்கின்றனர் . 17 நாடுகள் வாக்களிக்கவில்லை . அமெரிக்கா மட்டும் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்து உள்ளது . ஐரோப்பிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர் .

சீனாவின் ஆப்பிள் போன் என்று அழைக்கப்படும் "சியோமி" மொபைல் உண்மையான ஆப்பிள் மொபைலுடன் போட்டியிடப் போகிறது .


கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சியோமி மொபைல் நிறுவனத்தின் எம்.ஐ - 3 என்னும் மொபைல் . இந்த மொபைல் வந்த முதல் நாளிலே மக்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்தது . விற்பனைக்கு வந்த முதல் நாளிலேயே பிளிப்கார்ட் நிறுவனத்தை திக்குமுக்காக ஆட வைத்தது .

இந்த மொபைலினால் முன்னனி நிறுவனங்களான சம்சங் , சோனி ஆகிய நிறுவனங்களுக்கு பலத்த அடி விழும் என்று எதிர்பார்த்து கொண்டு இருந்த வேளையில் அவர்கள் சியோமி எம்.ஐ-4 என்னும் மொபைலை ரீலிஸ் செய்து ஆப்பிள் நிறுவனத்திற்கு சவால் விட்டுள்ளனர் .

சியோமி எம்.ஐ-4 என்னும் மொபைலை வெளியிடும் போது அந்த நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி லேய் ஜன் கூறுகையில் , " எங்கள் போன் ஐ- போனை விட சிறந்தது என்று வெளிப்படையாக கூறியுள்ளார் .

பல அட்டகாசமான வசதிகளுடன் இந்த மொபைலை , 19,206 ரூபாய் என்ற மதிப்பில் விற்பனை செய்ய உள்ளனர் . இதே வசதிகளைக் கொண்ட ஆப்பிள் ஐ போனின் விலை 39,012 ரூபாய் .

இந்த சவாலை சமாளிக்க ஆப்பிள் நிறுவனம் என்ன செய்ய இருக்கின்றனர் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம் .

எனது முகத்தில் சிகரெட் துகள்களை வீசினார் - பீரித்தி ஜிந்தா பூகார் !!


பிரீத்தி ஜிந்தா தன்னுடைய பழைய காதலன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் , தன்னை கொடுமை படுத்தியதாகவும் போலிஸில் பூகார் தெரிவித்து இருந்தார் . அந்த வழக்கில் புதிய திருப்பமாக , தன் மீது சிகரெட் துகள்களை வீசியும் , மேலும் தன்னை தனி அறையில் அடைத்து கொடுமை படுத்தியதாகவும் பூகார் கொடுத்துள்ளார் .

இது குறித்த கடிதத்தை காவல்துறை ஆணையாளரிடம் கொடுத்தார் . அந்த கடிதத்தில் தனது பாதுபாப்பிற்காக வெளிநாடு செல்ல அனுமதி வேண்டும் என்றும் கோரி இருந்தார் . மேலும் அந்த கடிதத்தில் ,  நெஸ் வாதியா என்னை கொன்று விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது , இது எனக்கு அச்சத்தை கொடுக்கிறது . என் மன நிம்மதிக்காகவும் , அவரிடம் இருந்து விலகி இருக்கவும் எனக்கு வெளிநாடு செல்ல அனுமதி கொடுங்கள் என்று எழுதி இருந்தார் .

இந்த கடிதம் குறித்து வாடியா தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை .


ரொனொல்டா மற்றும் மெஸ்ஸியை முந்திய கேப்டன் தோனி !!!



போபர்ஸ் என்னும் பிரபல பத்திரிக்கை உலகின் மிக விலையுயர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது . அந்த பட்டியலில் முன்னனி கால்பந்து வீரர்கள் ஆன ரொனொல்டா மற்றும் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளி ஐந்தாம் இடத்தைப் பிடித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி .

இந்த விலையுரந்த வீரர்களின் பட்டியலை , ஒரு வீரர் ஒரு வருடத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தின் மூலமும் தனக்காக ஒப்புதல் செய்யப்பட்ட் ஒப்பந்தங்கள் மூலமும் எவ்வளவு சம்பாதித்தார் என்பதை கணக்கிட்டு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர் .

இந்த பட்டியலின் "டாப் - 10 " வீரர்கள் கீழ் வருமாறு

1 ) ரோஜர் பெடரர் ( டென்னிஸ் )

2 ) டைகர் உட்ஸ்  ( கோல்ப் )

3 ) லெப்ரான்ட் ஜெம்ஸ் ( கூடைப்பந்து )

4 ) மரியா ஷரபோவா ( டென்னிஸ் )

5 ) மகேந்திர சிங் தோனி ( கிரிக்கெட் )

6 ) உசேன் போல்ட் ( தடகளம் )

7 ) கோப் பிரயண்ட் (  கூடைப்பந்து )

8 ) லி னா (  டென்னிஸ் )

9 ) கிரிஸ்டியானோ ரொனல்டொ  ( கால்பந்து )

10 ) லியோனல் மெஸ்ஸி  ( கால்பந்து )

ரம்ஜானுக்கு நோன்பு இருந்தவரை கட்டாயப்படுத்தி உண்ண வைத்த சிவ சேனா எம்.பி !!



சிவசேனா எம்.பி ஒருவர் அரசின் விருந்தினர் மாளிகையில் உணவு மேற்பார்வையாளராக பணி செய்யும் ஒருவரை கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைத்த விடீயோ வெளியாகி உள்ளது . அந்த பணி செய்பவர் ரம்ஜானிற்கு நோன்பு இருந்து கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது .

ராஜன் விசாரே என்ற அந்த எம்.பி கூறுகையில் , " நாங்கள் உணவு சரி இல்லை என்று போராட்டம் நடத்தினோம் , அந்த உணவை அவர் சாப்பிட்டு அதை பரிசோதனை செய்ய்வே அவரை கட்டாயப்படுத்தி உண்ண வைத்தோம் . அவர் முஸ்லிம் என்றும் , நோன்பு இருக்கிறார் என்றோ எனக்கு தெரியாது .

இந்த காரணங்களை ஏற்றுக் கொள்ளாத மற்ற கட்சியினர் , சிவசேனா பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர் .


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media