BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 11 September 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

செக்ஸை உறவை வெறுக்கும் சில பெண்கள், காரணம் என்ன? ஆய்வு முடிவுகள்
http://www.satrumun.net/2014/09/why-some-women-do-not-want-to-have-fun.html

50 இலட்சம் ஜிமெயில் அக்கவுண்ட்டுகள் ஹேக் செய்யப்பட்டன, உங்களுடைய ஜிமெயில் திருடப்பட்டதா என்று சரி பாருங்கள்!
http://www.satrumun.net/2014/09/5-million-gmail-passwords-leaked-check.html

"மாந்திரீக வசியம்" செய்கிறாரா நயன்தாரா..? : பீதியில் உறைந்த இளம் ஹீரோக்களின் மனைவிகள்!
http://goo.gl/qcxxSM

டெபிட் அட்டை இல்லாமல் ATM - மில் பணம் எடுக்கும் புதிய முறை : ஐசிஐசிஐ வங்கி
http://www.satrumun.net/2014/09/atm.html

பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடம் - ஜெயலலிதா அரசின் சாயம் வெளுக்கிறது : டாக்டர் ராமதாஸ்
http://www.satrumun.net/2014/09/drramadoss-says-about-tamilnadu-last.html

நாசாவுடன் கூட்டாக செவ்வாய் கிரக(mars) ஆராய்ச்சி
http://www.satrumun.net/2014/09/mars.html

கேரள அரசின் பாரை மூடும் மதுவிலக்கு கொள்கையில் அர்த்தமில்லை - உச்ச நீதிமன்றம் கருத்து
http://www.satrumun.net/2014/09/no-logic-in-kerala-bar-closing.html

செப்டம்பர் 11, அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நினைவு நாள், தமிழீழத்துக்கு ஏற்பட்ட இழப்பு
http://www.satrumun.net/2014/09/9-11-attacks-changed-world-view-on-ltte.html

40 லட்சம் ரூபாய் விவகாரம் : காஜல் அகர்வாலை கோர்ட்டுக்கு இழுக்கும் உதயநிதி!
http://goo.gl/UQySoj

அனைவரும் அறிய வேண்டிய முக்கியமான மருத்துவக் குறிப்புகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_39.html

மாரடைப்பை தடுக்கும் எளிய உணவுகள்
http://www.satrumun.net/2014/09/blog-post_63.html

குழந்தை அறிவு வளர பகுதி - 3
http://www.satrumun.net/2014/09/3.html

பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடம் - ஜெயலலிதா அரசின் சாயம் வெளுக்கிறது : டாக்டர் ராமதாஸ்


2012-13 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 3.39% பொருளாதார வளர்ச்சி மட்டுமே பெற்று இந்தியாவின் கடைசி மாநிலமாக வந்துள்ளது என மத்திய புள்ளியியல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்ட அறிக்கையின் சில பகுதிகள்

பின்தங்கிய மாநிலமாக கருதப்படும் பிகார் 10.73% வளர்ச்சியுடன் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு வெறும் 3.39% பொருளாதார வளர்ச்சியுடன் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

வறுமைக்கும் பின்தங்கிய தன்மைக்கும் உதாரணமாக காட்டப்படும் பிகார் பொருளாதார வளர்ச்சியில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே பிகார் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிவருகிறது. மற்ற பின்தங்கிய மாநிலங்களான மத்தியப்பிரதேசம் 9.89% வளர்ச்சியுடன் இரண்டாவது இடத்தையும், ஒதிஷா 8.09% வளர்ச்சியுடன் ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஜார்க்கண்ட் 7ஆவது இடத்தையும், மேற்குவங்கம் 8 ஆவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன. அண்டை மாநிலமான கேரளம் 8.24% வளர்ச்சியுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

ஆனால், இந்தியாவின் முன்னணி மாநிலம் என்று தமிழக ஆட்சியாளர்களால் பெருமை பேசப்படும் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. தேசிய சராசரி பொருளாதார வளர்ச்சி 4.5% ஆக உள்ள நிலையில் அதைக்கூட எட்ட முடியாமல் 3.39% வளர்ச்சியுடன் தமிழகம் முடங்கி விட்டது.

ஆனால், தமிழக முதலமைச்சரும், அமைச்சர்களும் இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா திரையரங்கம் வரிசையில், வேறு எந்த வெற்றுத் திட்டத்தைத் தொடங்கலாம் என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரப்போவதாகக் கூறித் தான் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஆனால், நல்ல நிலையில் இருந்த தமிழகப் பொருளாதாரத்தை கடைசி நிலைக்கு கொண்டு சென்ற முதலமைச்சர் ஜெயலலிதா எப்படிப்பட்ட தலைவர்? என்பதை இனிவரும் காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள் என்பது உறுதி."

செக்ஸை உறவை வெறுக்கும் சில பெண்கள், காரணம் என்ன? ஆய்வு முடிவுகள்


செக்ஸை உறவை விரும்பாதவர்களே இல்லை, ஆனால் சில பெண்களோ செக்ஸ் என்றாலே வெறுத்து விலக்குவார்கள், அந்த அளவுக்கு செக்ஸ் மீது அவர்களு க்கு ஒருவித வெறுப்புணர்வு இரு க்கும். செக்ஸ் உறவை விரும்பாத பெண்கள் அதற்குப் பல்வேறு காரணங்களைக் காட்டி அதிலிருந்து தப்பிக்கப் முனைவார்கள். இந்த நிலை இன்று அதிகரித்தும் வருகிறது.

செக்ஸை வெறுத்து ஒதுக்கும் பெண்கள் சொல்லும் முக்கியமான காரணம் தலையை வலிக்கிறது, இன்று வேண்டாம் ப்ளீஸ் என்பார்க‌ள். வேறு சிலரோ, இன்று ரொம்ப டயர்டாக இருக்கிறது, நாளைக்குப் செய்யலாம் என்று ஒதுங்கி விடுவார்கள். இப்படி பல்வேறு காரணங்களைக் காட்டி செக்ஸ் உறவை தவிர்க்கும் பெண்களால் அவர்களது கணவர்களுக்குதான் சிரமம்.

உண்மையில் செக்ஸ் உறவை சில பெண்கள் வெறுக்க என்ன காரணம் என்பதை ஆய்ந்து கண்டுபிடித்துள்ளார்கள் ஆய்வாளர்கள்.

செக்ஸை வெறுக்கும் பெண்களின் மூளையில் செக்ஸ் ஆர்வம் மிகவும் குறைவாக தூண்டப்படுவதே இதற்கு முக்கியக் காரணமாம். பெண்களின் உணர்வுகளைத் தூண்டி அவர்களுக்கு செக்ஸ் வேட்கையை அதிகரிக்கும் அளவுக்கு அவர்களது மூளையின் செக்ஸ் உணவுர்வுகளைத் தூண்டும் பகுதி இருப்பதில்லை. இதன் காரணமாகவே அவர்கள் செக்ஸை கண்டு விலகி ஓடுகிறார்கள்.

இப்படிப்பட்ட பெண்களுக்கு செக்ஸ் உணர்வுகளை செயற்கையாகத் தூண்டி அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துவதும் கடிணமான ஒன்றாம். எடுத்துக்காட்டாக  செக்ஸ் உணர்வு மூளையில் குறைவாக உள்ள பெண்களுக்கு என்னதான் ப்ளூ பிலிம்களை பார்க்க வைத்தாலும், செக்ஸியான ரொமான்ஸ் காட்சிக ளைப் பார்க்க வைத்தாலும் அவர்களுக்கு செக்ஸ் உணர்வு தூண்டப்படாதாம்.

சில பேருக்கு செக்ஸை வெறுப்பது மன ரீதியான பிரச்சினையாகவும் இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மன ரீதியான பிரச்சினையாக இருந்தால் மட்டுமே செக்ஸ் ஆர்வத்தைத்தூண் டும் செயற்கையான முறைகளை  கையாண்டு அவர்களுக்கும் செக்ஸ் வேட்கையை ஏற்படுத்த முடியும் என்கிறார்கள் இந்தஆய்வாளர் கள். இல்லையென்றால் உடல் பரிசோதனை மேற்கொண்டு முறையான மருத்துவரின் ஆலோசனையுடன் மருந்துகளை உண்டு செக்ஸ் உணர்வை தூண்டப்பெறலாம்.

உங்க பார்ட்னரும் அடிக்கடி தலைவலிக்கிறது இன்று வேண்டாம் என்கிறார்களா? பேசிப்பாருங்கள் அவர்களிடம்!

நாசாவுடன் கூட்டாக செவ்வாய் கிரக(mars) ஆராய்ச்சி


பிரதமர் நரேந்திர மோடி வரும் 29 மற்றும் 30 தேதிகளில் அமெரிகாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க உள்ளதாகவும் இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் பொருளாதார வளர்ச்சி, மற்றும் உலகலாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும், கூட்டாக செவ்வாய் கிரக(mars) ஆராய்ச்சியை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து நாசாவின் கோள்கள் அறிவியல் ஆராய்ச்சி பிரிவின் தலைவர்  ஜேம்ஸ் கிரீன் கூறுகையில், செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்வதில் இந்தியாவின் கூட்டாக செவ்வாய் கிரக(mars) ஆராய்ச்சி விண்வெளி ஆராய்ச்சியுடன் இணைந்து செயல்படுவது குறித்து நாசா ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். மேலும் இருதரப்பிலும் செவ்வாய் கிரகம் தொடர்பான (மார்ஸ்) அறிவியல் ஆராய்ச்சி தகவல்களை (Mars Orbiter Mission) பகிர்ந்து கொள்வது குறித்தும் பரிசீலிக்கப்படுவதாக தெரிவித்தார்.

டெபிட் அட்டை இல்லாமல் ATM - மில் பணம் எடுக்கும் புதிய முறை : ஐசிஐசிஐ வங்கி


டெபிட் அட்டை (Debit card) இல்லாமலே  ATM - களில் பணம் எடுக்கும் புதிய முறையை ICICI வங்கி மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறையின் மூலம் வங்கிக் கணக்கு மற்றும் டெபிட் அட்டை
இல்லாமல் ATM மூலம் பணம் எடுத்துக்கொள்ளலாம். ஜூலை மாதமே வங்கி இந்த சேவையை அறிமுகப்படுத்தியிருந்தாலும் இந்த சேவை தற்போது தான் மக்களிடம் பிரபலம் அடைந்து வருகின்றது.

பணம் எடுக்கும் முறை 

ஐசிஐசிஐ  வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் மற்றொருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் பணம் அனுப்பப்பட வேண்டியவரின் பெயர், முகவரி, அலைபேசி எண்ணை வங்கிக்கு அளிக்க வேண்டும், பின்னர் பணம் அனுப்பியவருக்கு 4- ரகசிய எண் கிடைக்கப்பெறும், பணம் அனுப்பப்பட்டவருக்கு 6- ரகசிய எண் கிடைக்கப்பெறும், பணம் எடுக்க விரும்புபவர் ATM -மிற்குச் சென்று தனது அலைபேசி எண் , அனுப்பியவருக்கு கிடைத்த 4- ரகசிய எண் மற்றும் தனக்கு கிடைத்த 6- ரகசிய எண் குறிப்பிட்டு ATM- வாயிலாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த நவீன முறை 10,000 ATM - நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ  வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது .

அனைவரும் அறிய வேண்டிய மருத்துவக் குறிப்பு



1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.


2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

3. பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. மாதக் கணக்கில் வலி நிவராணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

4. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

5. எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்ல வேண்டும். வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

6. எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

7. வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக் கூடாது. நல்ல வெளிச்சத்தோடு இருக்க வேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். எனவே, அவர்கள் எதையாவது பிடித்தபடி நடப்பதற்கு வழி செய்ய வேண்டும்.

8. கால் தடுமாறி பிசகிவிட்டால்… உடனே ‘கையால் நீவிவிடு’ என்பார்கள். அது தவறு. ஒருவேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

9. குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள்… நாற்காலியும் செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா… நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா… என்பதையெல்லாம் கவனியுங்கள். அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்வதையும் வழக்கமாக்குங்கள். இவ்வளவுக்குப் பிறகும் தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம்.
பெண்களுக்காக…

10. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.

11. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வரமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.

12. மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.

13.மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.

மாரடைப்பை தடுக்கும் உணவுகள்


அன்றாட வாழ்வில் வாழைப்பழங்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றினை உள்ளெடுப்பதால் பெண்களில் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. American Heart Association இனால் இது கண்டறியப்பட்டுள்ளது. பொட்டாசியத்தின் அளவு குறைவாக உள்ளெடுப்பவர்களை விடவும் அதனை போதிய அளவு உள்ளெடுப்பவர்களுக்கு இந்நோய் மற்றும் திடீர் மரணம் என்பவற்றிலிருந்து விடுபடும் வாய்ப்பு 12 சதவீதத்தால் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவின்படி பொட்டாசியத்தின் அதிகமான நுகர்வினால் தாழ் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

50 இலட்சம் ஜிமெயில் அக்கவுண்ட்டுகள் ஹேக் செய்யப்பட்டன, உங்களுடைய ஜிமெயில் திருடப்பட்டதா என்று சரி பாருங்கள்!

50 இலட்சம் ஜிமெயில் அக்கவுண்ட்களின் பாஸ்வேர்ட்கள் ரஷ்யாவின் ஆன்லைன் ஃபோரம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.  

கூகிள் தனது சர்வர்களில் யாரும் நுழைந்து எதையும் திருடவில்லை என்றும் தெரிவித்துள்ளது. ஹேக்கர்கள் வெளியிட்ட 50 இலட்சம் பாஸ்வேர்களில் 60% பாஸ்வேர்ட்கள் இன்னும் வேலை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

ஹேக்கர்கள் ஹேக் செய்த பாஸ்வேர்ட்களில் உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டும் உண்டா என்று இந்த லிங்க்கில் சென்று பார்க்கலாம், இந்த லிங்கில் சென்று உங்கள் ஜிமெயில் ஐடியை டைப் அடித்தால் உங்கள் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதா என்று தெரியும், முழு ஜிமெயில் ஐடி தர விருப்பம் இல்லாதவர்கள் உங்கள் மெயில் ஐடியில் மூன்று எழுத்துகளுக்கு பதில் *** அடித்தால் போதும்

https://isleaked.com/en

குழந்தை அறிவு வளர பகுதி - 3



இரண்டு வயதிற்குட்ப்பட்ட மழலையரை தொலைக்காட்சி பார்க்க செய்வதால் அவர்களின் அறிவு வளர்வதில்லை என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அப்படியானால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை தூண்டவிரும்பும் பெற்றோர் என்ன தான் செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி மகிழ வேண்டும். அவர்களோடு பேசி உரையாடி, கற்றுக்கொடுக்க வேண்டும். சைகைகளால் பரிமாறி அவர்களை பண்படுத்த வேண்டும். நல்லவை செய்யும்போது பாராட்டி, தீயவை செய்யும்போது அறியாமல் செய்வதால் கனிவோடு திருத்தி சொல்லிக்கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட சாதராண நடைமுறைகள் தான் குழந்தைகளை பண்படுத்தி அவர்களின் மொழி, சொல் வளம், இதர சிறப்பு திறன்களை உயர்த்த உதவுகின்றன.


இன்று தந்தையும் தாயும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தால், தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் முடங்கிபோகின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட தனக்கு தரவில்லையே என்று ஏங்கும் குழந்தைகள் வீட்டிலுள்ள தொலைக்காட்சி பெட்டியாக இருக்க விரும்புகிறேன் என்று கூறுமளவுக்கு இன்றைய சூழ்நிலை உருவாகியுள்ளது. தொலைக்காட்சி பெட்டியின் முன் செலவிடும் நேரத்தை குழந்தைகளோடு செலவிட்டால், குழந்தைகளின் வளர்ச்சி நமக்கே புலப்படும்.

கேரள அரசின் பாரை மூடும் மதுவிலக்கு கொள்கையில் அர்த்தமில்லை - உச்ச நீதிமன்றம் கருத்து

கேரளாவில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்த அந்த மாநில அரசு முதல்கட்டமாக  "பார்"களை மூட உத்தரவிட்டது. ஐந்து நட்சத்திர அந்தஸ்து உள்ள விடுதிகளில் மட்டும் ‘பார்’ நடத்த அனுமதிக்கப்படும் எனக் கூறியது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. கேரள அரசின் இந்த உத்தரவை எதிர்த்து 'பார்' உரிமையாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கருத்து தெரிவித்த நீதிபதி அனில் ஆர்.தவே, "மதுபான விடுதிகளின் தடையின் பின்னணியில் எவ்விதமான அர்த்தமு இல்லை. எனக்கு மதுப்பழக்கம் கிடையாது, அப்படியிருந்தும் எனக்கும்கூட கேரள அரசின் இந்த முடிவில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. பார்களை மூட காரணம் தரமில்லை என்கின்றனர். ஆனால் தரம் என்றும் தரமற்றது என்றும் எப்படி வேறுபடுத்துகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பார் உரிமையாளர்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர்கள் சரமாரியான குற்றச்சாட்டுகளை அரசின் மீது எழுப்பினர். இதன் மூலம் எதைச் சாதிக்க விரும்புகிறது அரசு? மதுபானத்திற்குத் தடையையா? இல்லை. 5 நட்சத்திர விடுதிகளில் கிடைக்கும், கள்ளுக்கடைகள் இயங்கும், ஆனால் சில பார்கள் மட்டும் இயங்க முடியாது என்பது ஏன் என்றும் கேட்டுள்ளார்கள்

செப்டம்பர் 11, அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட நினைவு நாள், தமிழீழத்துக்கு ஏற்பட்ட இழப்பு


9/11 என்று சொல்லப்படும் செப்டம் 11ம் நாளை யாராலும் மறக்க இயலாது, ஆம் அல்கொய்தா தீவிரவாத குழுவினால் அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் ஆன இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்டு 5000 பேருக்கு மேல் பலியானார்கள். இதையடுத்து இதில் தொடர்புடைய அல்கொய்தா இயக்கத்தை அழிக்க அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மேல் போர் தொடுத்தது, அல்கொய்தா தலைவர் பின்லேடனுக்கு ஆதரவளித்த தாலிபான் இயக்கத்தை ஒழித்து கட்டி தன் கைப்பாவை அரசை நிறுவியது, இதையடுத்து ஈராக்கிலும் சதாம் உசேன் இரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாக  கூறி போர் தொடுத்து ஈராக்கிலும் பொம்மை அரசை நிறுவி சதாமை தூக்கிலிட்டார்கள்.

அல்கொய்தாவின் இரட்டை கோபுர தீவிரவாத தாக்குதலுக்கு பின் உலக நாடுகள் விடுதலை இயக்கங்களை தீவிரவாதிகளாக பார்க்க ஆரம்பித்தது, இதில் அதிகம் பாதிக்கப்பட்டது விடுதலைப்புலிகள் இயக்கம், செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பின் விடுதலைப்புலிகளை அமெரிக்கா, ஐரோப்பா, கனடா நாடுகள் தடை செய்தன, இதுவே 2009ம் ஆண்டில் ஈழத்தில் நடைபெற்ற தமிழ் இனஅழிப்புக்கும் புலிகளின் தோல்விக்கும் முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் சுதந்திர தமிழீழத்திற்கான வாய்புகள் அழிந்து போயிருக்காது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media