BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 5 July 2014

இனி ரயில் டிக்கெட் வேகமாக புக் பண்ணலாம் : புதிய இணையதளம் வந்தது




முன்பெல்லாம் ரயில் டிக்கெட் புக் பண்ணுவதற்கு கால் வலிக்க வரிசையில் நின்று தான் வாங்க முடியும். இன்றோ காலம் எல்லாம் மாறிவிட்டது . வீட்டில் இருந்த படியே ரயில் டிக்கெட் புக் பண்ண முடிந்தது. அனைவரும் இணையதளத்தை பயன் படுத்தி வருவதால் இதன் மூலம் அதிக டிக்கெட் புக் செய்யப்பட்டு வந்தது. ஆனால் அதிலும் பிரச்சனை வந்தது .அனைவரும் ஒரே நேரத்தில் இந்த இணையதளத்தை பயன் படுத்தி வந்ததால் இதன் வேகம் குறைந்தது. இதில் நாள் ஒன்றுக்கு 5 இலட்சம் டிக்கெட் புக் செய்யப்பட்டது.
இதன் முகவரி www.irctc.co.in.

இந்த பிரச்சனையை போக்குவதற்கு புதிய தலைமுறை இணையதளம் ஒன்றை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்து உள்ளது. இதில் ஒரே நாளில் 7 இலட்சம் டிக்கெட்டுகள் வரை புக் செய்யலாம். அந்த இணையதளத்தின் முகவரி www.nget.irctc.co.in.


இணையதளத்தை வேகமாக செயல்படுத்துவது போல் ரயிலையும் கொஞ்சம் வேகமாக போக சொல்லுங்கப்பா. 

நெஞ்சு வலி ஏற்பட்ட போதும் பயணிகளை காப்பாற்றிய பஸ் டிரைவர்

கோவில்பட்டி டு மதுரை வழியில் போகும் பஸ்ஸின் ஒட்டுநராக இருப்பவர் சவுந்தராஜன் . இவருக்கு வயது 51 ஆகிறது. வழக்கம் போல் இன்று கோவில்பட்டியில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு சென்றது பஸ். பஸ் கள்ளிக்குடி அருகே வந்த போது டிரைவருக்கு தீடீர் என்று நெஞ்சு வழி ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்து கொண்ட பஸ் டிரைவர், பஸ்ஸை ஒரமாக நிறுத்தினார். அங்கு இருந்த பயணிகளை வேறு பேருந்தில் ஏற்றி விட்டார் . அதற்கு பின்பு அவர் கள்ளிக்குடி ஆரம்ப சுகாதார நிலயத்திற்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டார்.

டிரைவரின் இந்த செயலை அனைத்து பயணிகளும் பாராட்டினர். அவரின் இந்த விவேகமான் செயலால் பெரும் விபத்து தடுக்கப்பட்டது.


பல பேரின் உயிரை காப்பாற்றி சரித்திரத்தில் இடம்பிடித்த இவர் சவுந்திரராஜன் மட்டுமல்ல சரித்திரராஜனும் கூட. அவருக்கு நம் சார்பில் ஒரு சல்யூட்.


மோடியின் கனவு திட்டம் - ஸ்மார்ட் சிட்டி !! ஸ்மார்ட் சிட்டி என்றால் என்ன ??


மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று , நாடு முழுவதும் ஸ்மார்ட் நகரங்களை அமைப்பது . தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களிலும் இதைப் பற்றி அடிக்கடி பேசியுள்ளார் . இப்போது ஸ்மார்ட் சிட்டிகளை கட்டி தர சிங்கப்பூர் முன் வந்துள்ளது .

திடமான மற்றும் பலமான இந்தியா அமைந்தால் ஆசியாவில் அமைதி நிலைத்து இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதி அவர்கள் ஸ்மார்ட் சிட்டி அமைக்க முன் வந்துள்ளனர் .

மோடியின் கனவு திட்டமாக நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டிகள் அமைப்பதில் முதல் கட்டமாக டில்லி மற்றும் மும்பை இடையில் 7 ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்க உள்ளனர் . 2019 ஆம் ஆண்டு முடிவில் டோலேரா , ஷென்ட்ரா-பிகின் , குளோபல் சிட்டி என மூன்று ஸ்மார்ட் சிட்டிகள் உருவாகி இருக்கும் .


ஸ்மார்ட் சிட்டி என்றால் என்ன ??

இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் மின்சார கிரிட்களில் இருந்து சாக்கடை செல்லும் பைப்புகள் வரை அனைத்தும் ஒரு நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு இருக்கும் . கேமராக்கள் , வயர்லெஸ் கருவிகள் , தகவல் மையங்கள் என ஆங்காங்கே அமைக்கப்பட்டு இருக்கும் .  இதன் மூலம் நீங்கள் ஒரு விளக்கை அணைக்க மறந்துவிட்டாலும் உங்களின் கட்டிடம் உங்களுக்கு அந்த வேலையை செய்து முடிக்கும் . உங்கள் கார்கள் உங்களுக்கு டிராபிக் இல்லாத இடமாக பார்த்து பார்க் செய்திட உதவும் .

இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் பல முன்னனி நிறுவனங்கள் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க பல சாப்ட்வேர்களை உருவாக்கி கொண்டே இருப்பர் .

இப்போது முன்னனி நிறுவனமான ஐ.பி.எம். பல இடங்களில் ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்க உதவ முன்வந்துள்ளது . இந்த ஐ.பி.எம் நிறுவனம் சிங்கப்பூர் கலிபோர்னியா ஆகிய இடங்களில் உள்ள வண்டிகளின் எண்ணிக்கையை குறித்து வைத்து எந்த இடத்தில் டிராபிக் ஜாம் ஆக போகிறது என முன் கூட்டியே கணித்து விடும் . அதற்கேற்ப அனைத்து பணிகளும் மாற்றி டிராபிக் ஜாம் இல்லாமல் செய்து விடுவர் .

மேலும் தண்ணீர் எல்லாம் ஸ்மார்ட் மீட்டர் மூலம் கணக்கிடப்படும் . இதன்மூலம் பயனாளர்கள் தங்களின் தண்ணீர் பயனீட்டு அளவை அவர்களே பார்த்துக் கொள்வர் . மேலும் அதை மற்ற மக்களின் பயன்பாட்டு அளவுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம் .

மேலும் இந்த நகரங்களில் மக்கள் உதவியின் மூலம் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்க்க பல தொழில்நுட்பங்களை அமைப்பர் .

மேலும் கழிவுகள் அனைத்தும் ஓரே குழாய் வழியாக இணைக்கப்பட்டு மொத்தமாக சுத்திகரிக்கப்படும் .

ஸ்மார்ட் சிட்டி  எங்கே உள்ளது ?? அதன் பயன் என்ன ??

சீனாவில் டியான்ஜின் எகோ சிட்டி , சுஃஷோ , குயங்க்ஷோ , ஸ்செகுசான் ஆகிய 4 இடங்களில் ஸ்மார்ட் சிட்டி உள்ளது .



இந்தியாவில் அஹெமதாபாத் விமான நிலையம்  அருகில் உள்ள கிப்ட்(GIFT) என்பது தான் இந்தியாவின் முதல் ஸ்மார்ட் சிட்டி ஆக இருக்கும் . 70,000 ஆயிரம் மதிப்புள்ள இந்த திட்டத்தில் 886 ஏக்கரில் செயல்படுத்த உள்ளனர் . இதற்கான கட்டுமாண  பணிகள் 2011 ஆம் தொடங்கியது . இந்த பணிகள் முடிய பத்து வருடங்கள் ஆகும் .



இந்த ஸ்மார்ட் சிட்டிகளினால் 5 லட்சம் மக்களுக்கு நேரடி வேலைகளும் , மேலும் லட்சக்கணக்கான மக்களுக்கு மறைமுகமான வேலைகளும் கண்டிப்பாக கிடைக்கும் .



படுக்கையறையில் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியாதா ? : ஆலியா பட் கேள்வி


ஸ்டுடண்ட் ஆப் தி யேர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் ஆலியா பட். அதற்கு பிறகு ஹைவே , 2 ஸ்டேட்ஸ் படங்களின் மூலம் பிரபலமானவர்.இப்போது அவர் நடித்து வரும் படம் கும்தி சர்மா கி துல்கனியா. இந்த படம் இந்த மாதம் 11 ஆம் தேதி வெளிவர உள்ளது. இவர் கடைசியாக நடித்த 2 ஸ்டேட்ஸ் படம் செம ஹிட் ஆனது. இதில் இவரது நடிப்பும் பாராட்டப்பட்டது. இதில் உதட்டோடு உதடாக முத்தம் கொடுக்கும் லிப் லாக் காட்சியில் தயங்காமால் நடித்தார் . இப்போது இவர் நடித்து வெளிவர இருக்கும் படத்தில் ஒரு படுக்கையறை காட்சியில் நன்றாக நடித்து கொடுத்து விட்டார்.



இது குறித்து பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேட்ட போது ,படத்தில் பல காட்சிகள் உள்ளன அதை மட்டும் ஏன் கேட்கிறீர்கள் என்றார். படுக்கையறையில் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியாதா , தெரிந்த ஒன்றை தானே திரையில் காட்டுகிறோம் இதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறி பத்திரிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தார்.


நீங்க எல்லாம் நல்லா வருவீங்க!!!!

ஒரு கார்டு இருந்தால் போதும் , இந்தியா முழுவதும் சுற்றலாம்




நாம் வேறு ஊருக்கு செல்கிறோம் என்றால் நமக்கு பிடிக்காதது டோல் பிளாசாவில் காத்திருப்பது , அவர்களுடன் சில்லறைக்கு சண்டை போடுவது என பல பிரச்சனைகள் உள்ளது. இனி நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை . வாகன ஒட்டிகளின் நலனுக்காக புதிய முறை வர உள்ளது . அரசு தரும் ஒரு ஸ்மார்ட் கார்டு வாங்கி கொண்டால் போதும். இனி எல்லா டோல் பிளாசக்களையும் கடந்து செல்லலாம். ஸ்மார்ட் கார்டு தயாரிக்கும் பணி ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியிடம் தர பட்டு உள்ளது.


இனி ஸ்மார்ட் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு என தனி பாதை உருவாக்கப்பட்டு உள்ளது. அது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு கட்டணத்தில் 3 இல் 2 பங்கு  தள்ளுபடியாக  வழங்கப்படுகிறது. இந்த திட்டம் டோல் பிளாசாக்களில் தேங்கி நிற்கும் கூட்டத்தை கட்டுபடுத்த உதவும்.


ஸ்மார்ட் கார்டு வாங்குங்க டிராவல்ல ஸ்டார்ட் பண்ணுங்க 

ஒரே கணவருடன் ஒரே படுக்கையில் முதலிரவு கொண்டாடிய இரட்டை சகோதரிகள்




ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள ஒரு இரட்டை சகோதரிகள் எப்போதும் இணை பிரியாமல் ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள். இவர்கள் பெயர் அண்ணா மற்றும் லூசி டெசினிக். இவர்களுக்கு வயது 28 ஆகிறது. இவர்கள் வாழ்க்கையில் பிரியும் காலம் வந்தால் அது திருமணத்தின் போது தான் வரும். அதனால் அவர்கள் இருவரும் ஒருவரையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தார்கள் . அதனால் பென் பைமி என்னும் 31 வயது வாலிபரை திருமணம் செய்து கொண்டார்கள் .அது மட்டுடில்லாமல் ஒரே படுக்கையறையில் ஒன்றாக முதலிரவை நடத்தி உள்ளார்கள்.


இது தொடர்பாக ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளுக்கு பேட்டியும் அளித்தார்கள். எந்த போட்டியும் பொறாமையும் இல்லாமல் தங்கள் வாழ்க்கையை இனிமையாக வாழ உள்ளதாக கூறினார்கள்.


என்னா வாழ்க்கை டா இது !!!!

சொகுசாக வாழ்ந்த ஷீலா தீட்சித் வீட்டில் 31 ஏசி , 25 ஹீட்டர்கள் !!!



தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்ததில் , டில்லியின் முன்னாள் முதல்வர் ஷிலா தீட்சித் முதல்வராக இருந்த போது வசித்த வீட்டில் 31 ஏசிகள் , 25 ஹீட்டர்கள் , 15 கூலர்கள் , 16 காற்றை சுத்தப்படுத்தும் கருவிகள் இருந்தது தெரிய வந்துள்ளது , இப்போது இந்த வீட்டில் நமது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தங்கி வருகிறார் .

 ஷீலா தீட்சித் இந்த வீட்டில் குடியேறும் போது எலக்ட்ரிகல் வேலை மட்டும் 16 லட்சம் செலவில் செய்யப்பட்டது . இப்போது இந்த பொருட்கள் எல்லாம் தேவைக்கேற்ப மற்ற அதிகாரிகளின் அலுவலகங்களில் பொறுத்தப்படும் என தெரிவித்துள்ளனர் . இப்போது ஷீலா தீட்சித் கேரள மாநிலத்தின் ஆளுநராக உள்ளார் .

இப்போது மன்மோகன் சிங் குடியேறும் முன் 35 லட்சம் செலவில் வேலை நடந்துள்ளதாக கூறுகின்றனர் .

7 இலட்சம் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டது பேஸ்புக்




பேஸ்புக் வாடிக்கையாளர்களிடம் அனுமதி இல்லாமல் உளவியல் சோதனை நடத்தியதற்காக பேஸ்புக் அவர்களிடம் மன்னிப்பு கேட்டது. இதற்காக பேஸ்புக் 7 இலட்சம் வாடிக்கையாளர்களை தேர்ந்து எடுத்து கொண்டது. அவர்களின் நியூஸ் ஃபிடில் அவர்களுக்கு தெரியாமல் சில மாற்றங்களை செய்தது. அவர்களின் வரும் செய்திகள் ஒன்று நல்ல செய்திகளாக இருக்கும் அல்லது கெட்ட செய்தியாக இருக்கும், அதை பொருத்து அவர்கள் எவ்வாறு பதிவுகளை வெளியிடுகிறார்கள் என்று கண்டுபிடிப்பதற்காக ஒரு ஆய்வை நடத்தியது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஒருவர் நல்ல செய்தியை படித்தால் அவர்களின் பதிவு நல்லதாக இருந்தது, தீய செய்தியை படித்தால் தீயைவையாக இருந்தது.

செய்திகள் பயனாளிகள் மனநிலயில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிய வந்தது. ஆனால் கணிப்பை அவர்களின் அனுமதி இல்லாமல் ரகசியமாக நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது கடும் எதிர்பை கிளப்பி உள்ளது. இதற்காக பேஸ்புக் அவர்களிடம் மன்னிப்பு கேட்டது. இது அவர்களின் சேவையை உயர்த்த வேண்டும் என்னும் நோக்கத்துடன் தான் நடத்தப்பட்டது.

10 வயது குழந்தைகளும் வேலைக்கு போகலாம் : பொலிவியா அரசு !!


பொலிவியாவில் சட்டமன்றத்தில் பொலிவியா காங்கிரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது . அந்த சட்டத்தின் படி 10 வயது ஆன குழந்தைகளும் வேலைக்கு போகலாம் . ஆனால் அவர்கள் வேலைக்குப் போவது அவர்களின் கல்வியை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது . இவர்களை வேலை செய்ய அனுமதிப்பது அவர்களின் குடும்பத் தேவையை சரி செய்வதற்கே என்று தெரிவித்தனர் .

இதன் மூலம் 10 வயது குழந்தைகளை வேலை செய்ய அனுமதிக்கும் முதல் நாடு பொலிவியா ஆகும் . இந்த சட்டம் கவலை அளிப்பதாக யு.என் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .

குழந்தை தொழிலாளர்களை ஒழிக்க போராடி வரும் இந்த நேரத்தில் இது மாதிரியான சட்டம் தேவைதானா ?? வேலை செய்து கொண்டே அவர்களால் கல்வி கற்க முடியுமா ?? அல்லது அவர்களுக்கு வேலை தருபவர்கள் அவர்களை கல்வி கற்க அனுமதிப்பார்களா ??

மும்பையில் குண்டு வெடிப்பு நடத்தியதில் பெருமை படுகிறேன் : தீவிரவாதி வாக்குமூலம் !!



மும்பையில் 2011 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பில் 21 அப்பாவி குடிமக்கள் இறந்தனர் . 141 பேர் காயமடைந்தனர் .

இந்நிலையில் இந்திய முஜாகீதின் இயக்கத்தின் நிறுவனரான யாசின் பத்கல் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டான் . நாடு முழுவதும் நடந்த பல்வேறு குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இந்த தீவிரவாதியை விசாரித்ததில் மும்பை குண்டு வெடிப்பிலும் சம்பந்தப் பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது .

அவன் போலிசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் , " நான் மும்பையில் குண்டு வெடிப்பு நடத்தியதில் வருத்தம் கொள்ளவில்லை , மாறாக குண்டு வெடிப்பை வெற்றிகரமாக நடத்தியதில் பெருமை கொள்கிறேன் . மேலும் தான் நடத்திய இந்த குண்டு வெடிப்பை குற்றமாக கருதவில்லை " என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான் .

வருகிறாரா வேலு பிராபாகரன் ??? மீண்டும் தொடங்கபடுகிறதா விடுதலை புலிகள் ??


இப்போது இந்தியா இலங்கை கையில் இருக்கிறது , ஆனால் அன்று இலங்கை அடங்கி கிடந்தது . அதற்கு முக்கிய காரணம் விடுதலை புலிகள் ,இலங்கையை அடக்கி தங்கள் கட்டுபாட்டில் வைத்து இருந்தார்கள். வீரம் என்பதின் மறுபெயராக திகழ்ந்தவர் வேலு பிராபாகரன். 30 ஆண்டு கால போரை பிராபாகரனை கொன்று விட்டதாக கூறியும் பல இலட்சம் தமிழர்களையும் கொன்று முடிவுக்கு கொண்டு வந்தான் இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே .



இப்போது அவர்கள் மீண்டும் உருவாக இருப்பதாக தகவல்கள் வந்து உள்ளன. அந்த இயக்கத்தை மீண்டும் தொடங்க முயன்றதாக மலேசியாவில் 4 தலைவர்கள் கைது செய்யபட்டு உள்ளார்கள். இதனை தொடங்க ஐரோப்பியா நாடுகள் வழியாக நிதி திரட்டி வருகிறார்கள். கைது செய்யபட்ட 4 பேர்களில் ஒருவர் ஐக்கிய நாடுகள் சபை அகதிகள் அடையாள அட்டை வைத்து இருந்தார்.


இலங்கையை அடங்குவதற்கும் ,மீதம் இருக்கும் ஈழ தமிழர்கள் நல்வாழ்விற்கும் விடுதலை புலிகள் மீண்டும் வருவதே சிறந்த வழி. விடுதலை புலிகள் இருந்து இருந்தால் சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு நடந்தே இருக்காது என்று கூறப்படுகிறது.

திருப்பதியில் இனி புது லட்டு



திருப்பதி என்றாலே நம் எல்லாருக்கும் தோனுவது லட்டு தான் .அதன் சுவை நம்ம பெரிய பெரிய ஸ்வீட் ககைகளில் கூட கிடைக்காது. திருப்பதி ஏழுமலையானை பார்க்க இருக்கும் கூட்டம் அங்கு லட்டு வாங்குவதற்கும் இருக்கும். இப்போது அந்த லட்டு பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப சில மாற்றங்களுடன் வருகிறது. முன்பு இருந்ததை விட இப்போது லட்டின் எடையையும் ,தரத்தையும் உயர்த்த இருக்கிறாற்கள். இந்த செய்தி பக்தர்களுக்கு இனிப்பாக அமைந்து உள்ளது.

இதனை தேவஸ்தான நிர்வாக அதிகாரி எ.எம்.கோபால் கூறினார். இதனை ஒவ்வொரு மாதமும் பக்தர்களின் குறைகளை கேட்டறியும் 'டயல் யுவர் இ.ஒ" நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

பிரேசில் அணியின் நெய்மர் காயத்தால் அரையிறுதியில் விளையாட மாட்டார் !!



பிரேசில் அணி நேற்று காலிறுதியில் கொலம்பியா அணியுடன் மோதி 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது . இதன் மூலம் பிரேசில் அணி அரையிறுதியில் ஜெர்மணியை சந்திக்க இருக்கிறது .

பிரேசிலிலின் நட்சத்திர வீரரான நெய்மர் , நேற்றைய போட்டியின் 88 வது நிமிடத்தில் காயம் அடைந்தார் . இவரை பரிசிசோதித்த மருத்துவர்கள் காயம் பெரிய அளவில் இல்லை என்றாலும் காயம் முழுமையாக குணமாக சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்தனர் . இதனால் ஜெர்மணிக்கு எதிரான போட்டியில் நெய்மர் விளையாட மாட்டார் .

இது பிரேசில் ரசிகர்களிடேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஜெர்மணி அணிக்கு எதிரான போட்டியில் கடும் சவால் நிறைந்ததாக இருக்கும் என்பதால் , நெய்மர் இல்லாமல் விளையாடுவது பிரேசில் அணிக்கு கடும் இழப்பாக இருக்கும் .

இந்த உலக கோப்பையில் பிரேசில் அணியின் முதுகெலும்பாக இருந்த நெய்மர் இதுவரை 4 கோல்கள் அடித்துள்ளார் .


ஈராக்கில் உள்ள 46 நர்சுகள் இந்தியா வருகை !!



ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த 46 இந்திய நர்சுகளை விடுதலை செய்துள்ளனர் . இவரகள் சிறப்பு விமானத்தில் இந்தியா வர உள்ளனர் . இவர்களுடன் பிடிபட்டு இருந்த 137 இந்தியர்களும் இன்று இந்தியா வருகின்றனர் .

9.30 மணி அளவில் விமானம் மும்பை விமான நிலையத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது . விமானம் ஈராக் நாட்டின் எர்பில் நகரில் இருந்து அதிகாலை 4:30 மணி அளவில் கிளம்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .

சச்சினை ஷரபோவா தெரியாது என்று சொன்னதற்கு பொங்கும் நண்பர்களே , உங்களில் எத்தனை பேருக்கு சீதா சாகு தெரியும் ??


கடந்த சில நாட்களாக சச்சின் - ஷரபோவா இருவருக்காக ரசிகர்கள் மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டு இருக்கின்றனர் . சிலர் சச்சினுக்கு ஆதரவாகவும் சிலர் ஷரபோவாவுக்கு ஆதரவாகவும் இருக்கின்றனர் . கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு அமைச்சர் பெண்களை இழிவாக பேசினார் , அப்போது எதிர்ப்பு காட்டாத அனைவரும் இப்போது பொங்கி கொண்டு வருவது , வியப்பி ஆழ்த்துகிறது . நாம் சண்டை போட்டுக் கொண்டு இருக்க அவர்கள் இருவரும் தங்கள் ஆட்டத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர் .

சரி ,அது போகட்டும் !!! . அவர் தெரியாது என்று சொன்னாரே , உங்களில் எத்தனை பேருக்கு சீதா சாகு தெரியும் . பாதி மக்களின் பதில் தெரியாது என்பதாகவே இருக்கும் . இப்போது இந்த சீதா சாகுவிற்கு ஆதரவாக பேச எத்தனை மக்கள் வருவார்கள் என்று கேட்டால் , பதில்கள் மிக குறைவாகவே இருக்கும் .

யார் இந்த சீதா சாகு !!!

ஏதென்ஸில் 2011 ஆம் ஆண்டு நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டியில் இரண்டு வெண்கள பதக்கம் வென்ற வீராங்கணை . 200 மீட்டர் மற்றும் 1600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் வென்றார் .

இப்போது இவர் என்ன செய்கிறார் தெரியுமா ??

ரோட்டோரோங்களில் பானிப் பூரி கடை நடத்தி வருகிறார் . வெண்கள விருதுகள் வாங்கிய கைகள் , இன்று பானி பூரி உடைத்து வருகிறது . அம்மாநில முதல்வர் உதவுகிறேன்  என்று சொன்னவர் தான் இன்று வரை எந்த ஒரு நிதியும் தரவில்லை .

இவர் மட்டுமில்லை இன்னும் எத்தனையோ திறமைகள் பாத்திரங்கள் கழுவிக் கொண்டும் , செருப்பு தைத்துக் கொண்டும் தங்களுக்கான வாய்ப்புகளுக்காக காத்து இருக்கின்றனர் . இவர்களுக்கான களத்தை உருவாக்குவதே நமது கடைமையாக இருக்க வேண்டும் .

கடைசியாக ஒரு டவுட்டு , தெரியாத ஒன்றை தெரியாது என்று தானே கூற முடியும் !!!
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media