BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 19 August 2013

உளுந்தூர் பேட்டை டோல்கேட் தகராறு - பா.ம.கவினர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

உளுந்தூர் பேட்டை டோல்கேட் தகராறு - பா.ம.கவினர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கடந்த 8–ந் தேதி மாலை பா.ம.க. டாக்டர் அன்புமணி சேலத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் வாகன சீட்டு வழங்க தாமதமானதாகவும், அன்புமணி ராமதாஸ் இருந்த காரின் கண்ணாடியை இறக்க சொல்லி டோல்கேட்டில் இருந்த பணியாளர்கள் வற்புறுத்தியதாகவும் கூறி அவருடன் வந்திருந்தவர்கள் தகராறில் ஈடுபட்டனர், இது குறித்து டாக்டர் அன்புமணி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதில்  சக்திவேல், ஜீவானந்தம், ராஜா ஆகிய 3 பேரை கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மருதூரை சேர்ந்த ராஜாவின் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

# போற போக்கை பார்த்தாள் மம்மி குண்டர் தடுப்பு சட்டத்தை பாமக தடுப்பு சட்டம்னு பெயர் மாற்றிவிடுவாங்களோ?

வன்னியர்களை அவதூறாக பேசியதாக அமைச்சர் மற்றும் நடிகர் ஆனந்த்ராஜ் மீது போலிசில் பாமக புகார் அளித்துள்ளது.

வன்னியர்களை அவதூறாக பேசியதாக அமைச்சர் மற்றும் நடிகர் ஆனந்த்ராஜ் மீது போலிசில் பாமக புகார் அளித்துள்ளது.

சனிக்கிழமை அன்று  வந்தவாசியில் அதிமுக பொதுக் கூட்டம் நடந்தது. அதில் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம் மற்றூம் நடிகர் ஆனந்தராஜ் கலந்து கொண்டு பேசினார். நடிகர் ஆனந்த்ராஜ்க்கும் பாமகவுக்கும் எப்போதுமே ஏழாம் பொறுத்தம், பாண்டிச்சேரியில் பல ஒயின்ஷாப்களின் ஓனரான ஆனந்த்ராஜ் பேனர்கள், படங்களை கிழிப்பது பாமகவின் பொழுது போக்கு என்றால் பாமகவை வகைதொகையில்லாமல் பேசுவது ஆனந்த்ராஜ்ஜின் பொழுது போக்கு.

சனிக்கிழமை அதிமுக கூட்டத்தில் ஆனந்தராஜ் பேசுகையில்,டாக்டர் ராமதாஸை கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதனால் அங்கு கூடிய பாமகவினர் மேடை அருகே சென்று ஆனந்தராஜுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து எழுந்த அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம், வன்னியர் சமுதாயத்தினரைப் பற்றியும், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் குறித்து கடுமையாக பேசியதாக தெரியவந்துள்ளது.

இதையடுத்து இன்று பாமகவினர் வந்தவாசி காவல்நிலையத்தில் அளித்த புகாரில்  வன்னியர் சமுதாயத்தினரையும், பாமக தலைவர்களையும் அவதூறாகப் பேசியதாக அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியம், நடிகர் ஆனந்தராஜ் ஆகியோர் பேசியதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.

# அதே இடத்தில் அடுத்த வாரம் பாமக கூட்டம் நடத்தினால் அமைச்சரும், ஆனந்த்ராஜ்ம் காது கொடுத்து கேட்க முடியாது

Dial for Blood, தான் கொடுத்த ரத்தம் தன்னையே காப்பாற்றி இருக்கிறது...

தான் கொடுத்த ரத்தம் தன்னையே காப்பாற்றி இருக்கிறது...

இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும் சமூக ஆர்வலர் வினோத் மற்றும் பல விபரங்கள் பற்றிய சிவசங்கர் எஸ்.எஸ் எம்.எல்.ஏ அவர்கள் ஃபேஸ்புக் தகவல்

வினோத் வெளியூர் செல்லும் போது அணியும் டி-சர்ட் "Dial for Blood 94888 48222" என்ற வாசகங்களோடு இருக்கும். அன்று தர்மபுரியில் ரயில் நிலையத்தில் இந்த டி-சர்ட்டை பார்த்த ஒரு இளைஞர் "எல்லாம் காசு சம்பாரிக்கும் ஏமாற்று வேலை" என கமெண்ட் அடிக்க, வினோத் கோபப்படாமல் பத்து நிமிடம் அவருக்கு ரத்த தானத்தின் அவசியத்தையும், உயிர்காக்கும் விதத்தையும் விளக்கி விட்டு ரயிலேறி விட்டார்.

மதியம் சேலம் அரசு மருத்துவமனையிலிருந்து ஃபோன். "வினோத், ஒருத்தர் ரத்தம் கொடுக்க வந்தார். முதல்முறை என்றார். நீங்கள் சொன்னதை கேட்டு வந்ததாக சொன்னார். நன்றி." மறுநாள் காலை மற்றொரு ஃபோன்.

"சார், நேத்து தர்மபுரியில் ரயில்வே ஷ்டேசன்ல பார்த்தேனே, நீங்க சொன்னத கேட்டு மனம் மாறி ரத்ததானம் செய்தேன். மாலை உடையாம்பட்டி அருகே எனக்கு பைக் ஆக்சிடெண்ட். ஆப்ரேஷனுக்கு ரத்தம் தேவைப்பட்டிருக்கிறது "O-". எங்கும் கிடைக்காமல் நான் கொடுத்த ரத்தம் தான் என்னையே காப்பாற்றி இருக்கிறது. நினைச்சா பயமாயிருக்கு. நீங்க சொன்னத கேட்டதால் தான் உயிரோடிருக்கிறேன். மிக்க நன்றி"

ரத்த தானம் செய்வதை ஊக்கப்படுத்தி வந்த தர்மபுரியை சேர்ந்த சமூக ஆர்வலர் வினோத், Indian Pillars என்ற அமைப்பை துவக்கி ரத்த தானம் செய்வோரை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு அதற்காக 24x7 இயங்கும் கால் செண்டர் துவங்கியிருந்த நேரம்.

மத்தியப் பிரதேசம் மாநிலம், இந்தூர் நகரில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை. அவருக்கு ரத்தம் தேவை. அவரது ரத்தம் "O bombay" பிரிவு. 15000 பேரில் ஒருவருக்கே இந்த இந்தப் பிரிவு இருக்கும். அன்று விடுமுறை நாள் என்பதால் எங்கு தொடர்பு கொண்டும் கிடைக்காமல் தர்மபுரி Indian Pillars அமைப்பிற்கு தொடர்பு கொள்கிறார்கள்.

மாலை இந்த "O bombay" பிரிவு ரத்தம் கேட்டு அழைப்பு வந்த உடன் தங்களிடம் உள்ள மூன்றரை லட்சம் பேர் கொண்ட data base-ல் தேடி மேட்டூர் அருகே இருந்த ஒருவரை கண்டுபிடித்தனர். அவரை தொடர்பு கொண்டு சேலம் வர செய்து ரத்தம் சேகரித்த போது இரவாகிவிட்டது.

அதற்குள்ளாக அதனை இந்தூர் வரை பாதுகாப்பாக கொண்டு செல்ல கோயம்புத்தூரில் இருந்து icepack box-ஐ வரவழைத்தார்கள். சேலத்திலிருந்து பெங்களூருக்கு தனியார் பேருந்தில் ரூ 900 செலவு செய்து அனுப்பப்பட்டது. அங்கிருந்து இரவே விமானம் மூலம் ரத்தம் இந்தூரை சென்றடைந்தது. ( விமானத்தில் ரத்தம் அனுப்பினால் இலவசம்)

விடியற்காலை வினோத்தின் செல் ஒலிக்கிறது. தூக்கக் கலக்கத்தில் செல்லை எடுத்தால், புரியாத இந்தியில் பேசுகிறார்கள், கடைசியாக சொன்ன "தன்யவாத்" மட்டுமே தெரிந்த வார்த்தை, நன்றி. காலை அங்கிருந்து டாக்டர் தொடர்பு கொண்டு உரிய நேரத்தில் ரத்தம் வந்து சேர்ந்து, இரவே அறுவை சிகிச்சை செய்யப் பட்டதால் நோயாளி காப்பற்றப்பட்டதை சொல்லி, நன்றி சொல்லியிருக்கிறார்.

இந்த சேவை அனைத்தும் இலவசம். யாரிடமும் உதவி கேளாமல் நண்பர்கள் துணையோடே, இந்த உயிர் காக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துள்ளார் வினோத். "இந்த பாராட்டு, நன்றி போலவே திட்டும்,வசவும் சகஜம் சார். எதுவாக இருந்தாலும் உயிர் காக்கப்பட்டால் போதும் சார்." இது தான் வினோத்.

மற்றொரு நாள், அதே டி-சர்ட் பார்த்து விளக்கம் கேட்ட ஒரு சென்னை கல்லூரி மாணவி தன் விவரங்களை அளித்துள்ளார். அன்று இரவு சென்னையிலிருந்து ரத்தம் கேட்டு அழைப்பு. ரயில் பயணம். முக்கிய எண்களை கொண்ட மற்றொரு செல் சார்ஜ் போய் அணைந்து போய் விட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் பையிலிருந்த பேப்பர்களை துழாவுகிறார். அந்தக் கல்லூரி மாணவியின் விபரத்தை பார்த்தால் அதே ரத்த வகை.

செல்லில் தொடர்பு கொண்ட வினோத் விபரத்தை சொல்ல அந்த பெண் உடனே கிளம்ப தயாராகிறார். இரவு மணி 11. துணைக்கு யாராவதை அழைத்து செல்ல சொல்ல, "அம்மா தூங்குகிறார், நான் தனியா போய் கொடுத்துடறேன்" என்கிறார். மனம் கேளாத வினோத் லேண்ட்லைன் நம்பருக்கு தொடர்பு கொள்கிறார். போனை எடுத்த தாயாரிடம் விளக்கினால்,"நீயெல்லாம் அக்கா,தங்கச்சியோடு பிறக்கலையா, இந்த நேரத்தில் எப்படி போவது?"

திட்டிவிட்டு போனை வைத்து விடுகிறார். உயிரை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் மீண்டும் போன் செய்கிறார். பத்து நிமிடம் திட்டி தீர்த்து, வினோத் பேசியதை கேட்டு மனம் மாறி அவரே மகளை அழைத்து சென்று ரத்த தானம் செய்கிறார். இப்போது அவர்கள் ரெகுலராக ரத்த தானம் செய்கிறார்கள் மனம் உவந்து.

ரத்த தானத்திற்கான கால்செண்டர் துவங்கப்பட்டது கடந்த ஆண்டு ஜூன் 14 , காரணம் அன்று உலக ரத்ததான தினம். எதேச்சையாக அதுதான் வினோத்தின் பிறந்ததினமும். ரத்ததானத்திற்காகவே பிறந்திருப்பார் போலும்... சொந்த வேலையை பார்க்காமல், சம்பாரிப்பதையும் செலவு செய்து இப்படி பொதுப் பணியாக இருக்கிறாரே என்ற பெற்றோர் கோபத்திலும் பணியை தொடர்கிறார்.

கல்லூரி விடுமுறை என்றால் ரத்ததானம் குறைவாக இருக்குமாம். ஜூன் மாதம் Indian Pillarsஐ தொடர்பு கொண்டு 100 முகாம் நடத்தி ரத்தம் திரட்டி கொடுக்க கேட்கிறார்கள். டீம் களத்தில் இறங்கியது. இந்தியா முழுதும் தொடர்பு கொள்கிறார்கள். போன் மூலம் பேசியே முகாம் நடத்த இடம் ஏற்பாடாகிறது. முகநூல் மூலம் ரத்ததான முகாம் செய்தி பகிரப்படுகிறது. பேப்பர் விளம்பரமோ, பிட் நோட்டீஸோ கிடையாது. ஜூலை 5 அன்று இந்தியா முழுதும் 400 முகாம் நடத்தப்பட்டு 11,500 யூனிட் ரத்தம் திரட்டப் பட்டிருக்கிறது. மிகப் பெரிய சாதனை.

உடன் படித்த நண்பர் பாலாஜி, உறுதுணையாக இருக்கும் நண்பர் தாஜுதீன், பணிகளை பார்த்து தானாக உதவிட முன்வந்த அரசு பணியிலிருக்கும் பொறியாளர் சிவக்குமார், அவரது துணைவியார் வங்கி மேலாளர் பாமா என கோர் டீம். தர்மபுரி எம்.எல்.ஏ பாஸ்கர் இவர்கள் பணிக்கு ஆதரவு. பிரதிபலன் பாராமல் உதவிடும் வாலண்டியர்களாக, படித்த, பணியிலிருக்கும் இளைஞர்கள் என ஒரு படையின் உழைப்பாக இந்த உயிர்காக்கும் சாதனை.

இந்தியாவின் எந்த மூலையில் ரத்தம் வேண்டும் என்றாலும் தொடர்பு கொள்க Indian Pillars Call Centre : 94888 48222.

இன்று இவர்களின் தர்மபுரி அலுவலகம் சென்று வந்தேன். இவர்களின் ஒரே கோரிக்கை அரசு ஒரு டோல் ஃபிரீ எண் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்தால், இன்னும் பல மடங்கு பணி விரிவடையும்.

# உயிர்காக்கும் பணியில் நம் பங்கும் ஒரு துளி இருக்கட்டும். Indian Pillars பக்கத்தை like and share செய்யுங்கள் !

விஹெபி யாத்திரை தடை, இலங்கை நட்பு நாடல்ல, பீகார் ரயில்விபத்து மேலும் பல‌

இலங்கை நட்பு நாடல்ல - கருணாநிதி எச்சரிக்கை

# ஏன் தலைவரே ? ஆட்சி கைய விட்டுப் போனதும் அன்ஃபிரண்டு பண்ணிட்டீங்களா?

@சிவ சிவா
---
விஸ்வ இந்து பரிஷத்தின் அய்யோத்தி யாத்திரைக்கு உ.பி. அரசு தடை

இவ்வார இறுதியில், உத்திரபிரதேசத்தில் பிரச்சினைக்குறிய ராமர்கோவில் பாபர் மசூதி இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று கூறி அய்யோத்தியை நோக்கி 300 கிலோ மீட்டர் யாத்திரை நடத்த விஸ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்தது, அதற்கு தடைவிதித்துள்ளது உத்திர பிரதேச அரசு.

# ஒரு தடவை யாத்திரை நடத்தி ரத்தம் குடித்தது போதாதா?
--------
பீகாரில் ரயில் மோதி பலியாணவர்கள் எண்ணிக்கை 37 ஆக  உயர்வு.

பீகாரில் காஹாரியா மாவட்டத்தில் பாட்னா நோக்கி சென்ற ராஜ் ராணி எக்ஸ்பிரஸ் ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்தோர் மீது 80கிமீ வேகத்தில் மோதியதில் பலர் உயிரிழந்தனர், இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் மோதிய ரயிலின் சில பெட்டிகளுக்கு தீ வைத்தனர், மேலும் ரயில்வே ஊழியர்களை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.

பலியானோரில் பெரும்பாலானோர் அங்கிருக்கும் சிவன் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆவார்கள், அடுத்த ரயிலுக்கு காத்திருந்த நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.
---------
இந்தியாவின் பொறுமையை பாகிஸ்தான் பலவீனமாக கருதக் கூடாது,
ராஜ்யசபவில் பேசிய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி எச்சரிக்கை

#ஆடிமாசத்துல நான்-வெஜ் எடுக்க மாட்டேன்னு தெரிஞ்சிக்கிட்டு ஆட்டம் காட்டுறியா படவா பாக்கிஸ்தான் ராஸ்கல்

சினிமா படம் பார்த்து அரசியல் பாடம் படிக்காதே! - சுப.உதயகுமார்

சினிமா படம் பார்த்து அரசியல் பாடம் படிக்காதே! - சுப.உதயகுமார்

சினிமா படம் பார்த்து அரசியல் பாடம் படிக்காதே! என்ற தலைப்பில் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடும் மக்களின் போராட்ட குழு தலைவர் இன்று தனது ஃபேஸ்புக்கில் கீழ் கண்டவாறு எழுதியுள்ளார்

"சினிமாவையும் அரசியலையும் துண்டிக்காமல் நமக்கு மீட்சியில்லை" என்று நறுக்கென சுருக்கமாக சொல்லியிருக்கிறார் மனுஷ்யபுத்திரன் (நக்கீரன், ஆக 17, 2013).

"படம் நல்லா இருந்தா, பாராட்டுங்க; இல்லைன்னா திட்டுங்க. சினிமாக்காரங்களுக்கு இந்தச் சமூகத்தில் அந்த அளவுக்கு மட்டும் இடம் கொடுங்க...அது போதும்" என்கிறார் அந்தத் துறையைச் சார்ந்த பி.சி. ஸ்ரீராம் (ஆனந்த விகடன், ஆக, 21, 2013).

என்ன செய்யப் போகிறோம் தமிழர்களே? சினிமாத் திரையில் தலைவனைத் தேடி, அரசியலில் ஹீரோவைத் தேடி சீரழிந்தது போதும்! நடிகர்-தலைவர்களையும், தலைவர்-நடிகர்களையும் வீட்டுக்கு அனுப்பி வைப்போம். அப்போதுதான் தமிழினம் வாழும்! இல்லையேல் இன்னும் ஆழமான படுபாதாளத்துக்குள் வீழும்!

# அடுத்த முதல்வர் விஜயகாந்தோ, விஜய்யோ இருந்தாலும் ஆச்சரிப்பட ஒன்றுமில்லை உதயகுமார் சார்

ஜி எஸ் எல் வி கவுண்ட் டவுன் நிறுத்தம்.

இந்தியாவிலிருந்து இன்று 4.50 மணிக்கு செலுத்தப்பட இருந்த ஜி.எஸ்.எல்.வி டி5 ராக்கெட்டின் கவுன் டவுன் நேற்று காலை 11.50 மணிக்கு தொடங்கியது.

இதுவரை கிரியோஜெனிக் தொழில்நுட்ப இஞ்சின் உதவியால் விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட்டுகள் அனைத்தும் எதோ ஒரு வகையில் ரஷ்ய உதிரிபாகங்களை உள்ளடங்கி இருக்கும், ஆனா இந்த ட்5 ராக்கெட் முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கபட்டது ஆகும்.

இதற்கு முன் செலுத்தபட்ட ஏழு கிரியோஜெனிக் இஞ்சின் தொழில்நுட்ப ராக்கெட்களில் இரண்டில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது, தொலைதொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக அனுப்ப இருந்த இந்த ராக்கெட்டின் கவுண்டவுன் திடிரென நிறுத்தப்பட்டது.

விண்ணில் செலுத்த ஒரு மணி பதினாறு நிமிடங்கள் இருந்த நிலையில், கடைசி கட்ட சோதனையின் போது இஞ்சினில் இருந்து புகை வெளிவருவதை கண்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை மணி அடித்ததின் பெயரில் கவுண்ட்டவுன் நிறுத்தபட்டதாக தெரிகிறது. இதன் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யபட்டு விரைவில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தரப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் காமென் வெல்த் மாநாடு

இலங்கையில் காமென் வெல்த் மாநாடு

2013 ஆம் ஆண்டுக்கான காமென்வெல்த் மாநாடு இலங்கையில் ராஜபக்‌ஷே தலைமையில் நடக்கிறது, அங்கே நடந்த முடிந்த அடுத்த இரண்டு வருடத்திற்கு காமென்வெல்த் மாநாடு ராஜபக்‌ஷே தலையிலேயே நடக்கும்.

ஈழ தமிழர்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கியது, இந்தியா பங்களாதேஷ், சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் போரில் ஈடுபட்டபோது இலங்கை எதிரி நாடுகளுக்கு ஆதரவாக இருந்தது, இலங்கை இந்தியாவுக்கு என்றும் நட்பு நாடு இல்லை, ஆகவே பிரதமர் இலங்கையில்நடக்கும் காமென்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி கருத்து தெரிவித்தார்.

மதிமுக தலைவர் வைகோவும் இலங்கையில் நடக்கும் காமென்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்பதோடு மட்டுமல்லாது, இலங்கையில் காமென்வெல்த் மாநாடே நடக்கக்கூடாது அதற்கு இலங்கை தகுதியான நாடில்லை என்று ஐ.நா சபைக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் பீரிஸ் இன்று இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து காமென்வெல்த் மாநாட்டிற்கான அழைப்பிதளை வழங்கினார், இந்திய தன்னார்வ தொண்டுகள் சார்ப்பில் பேசியவர்கள் இலங்கையில் போர் விதிகளை மீறியது குறீத்து பொதுவில் மன்னிப்பு கேட்க முடியுமா என கேள்வி வைத்தனர்.

நாடாளுமன்ன்ற உறிப்பினர் நாராயணசாமி கருத்து தெரிவிக்கையில், இதுகுறித்து பிரதமர் நல்லதொரு முடிவு எடுப்பார் என கூறினார்.

மூழ்கும் இந்திய பொருளாதாரம்

வரலாறு காணாத ரூபாயின் சரிவு

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு ரூ.62.40 க்கு மேல் சரிந்தது. இந்திய ஏற்றுமதி, இறக்கமதி கொள்கையால் தொடர்ந்து அன்னிய செலாவனி கையிருப்பு குறைந்து வருவதால் தொடர்ந்து சரிந்து வருகிறது இந்திய ரூபாயின் மதிப்பு, இது குறித்து ரிசர்வ் வங்கி எடுத்து வரும் எந்த நடவடிக்கையும் பயனலிக்கவில்லை என்று கூறப்படுகிறது, இதை தொடர்ந்து இந்திய பங்கு சந்தையும் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

சேசாசலம் என்ற பெரியார்தாசன் என்ற சித்தார்த் என்ற அப்துல்லா மரணடைந்தார்...

பச்சையப்பன் கல்லூரியில் தத்துவயியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அப்துல்லா(பெரியார்தாசன்) அவர்களின் இயற்பெயர் சேசாசலம், சிறி வயதில் பெரியாரின் கருத்துக்களால் கவரப்பட்டு நாத்திகனாக தமது பெயரை பெரியார்தாசன் என்று மாற்றிக்கொண்டர்.

சிறந்த மேடைப்பேச்சாளரான இவர். கருத்தம்மா, காதலர் தினம் போன்ற வெற்றி படங்களில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர், இவர் தீடிரென தொலைகாட்சியில் எண் கணித ஜோதிடம், ராசிகல் விளம்பரங்களில் வந்தது பலருக்கு அதிச்சியாக இருந்தது, பிற்பாடு தாம் புத்த மதத்தை தழுவி விட்டதாகவும், தமது பெயரை சித்தார்த் என்று மாற்றி கொண்டதாகவும் கூறினார்.

அது அவரது தனிபட்ட விருப்பம் என்பதால் பலர் அதை பற்றி அலட்டிக்கொள்ளவில்லை, பலருக்கு தெரியவும் தெரியாது. 12.03.2010 அன்று ரியாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தாம் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாகவும், குரான் குறித்து தாம் 10 வருடமாக ஆராய்ச்சி செய்வதாகவும், அதன் மேல் நம்பிக்கை கொண்டே இஸ்லாமுக்கு மாறுவதாகவும் கூறினார்.

இது குறித்து பரவலான கருத்துக்கள் மக்களிடயே பேசப்பட்டது. இந்நிலையில் உடல்நிலை குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்துல்லா(பெரியார்தாசன்) நேற்று இரவு மரணமடைந்தார்.


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media