BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 16 July 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

பப் கல்ச்சரும் சென்னை பெண்களும் ..... அறியாத பல தகவல்கள் Factu! Factu!! Factu!!!
http://www.satrumun.net/2014/07/pub-culture-and-chennai-girls.html

சரவண பவன் உணவில் புழு இருந்தது, அதிர்ச்சி தரும் தகவல்
http://www.satrumun.net/2014/07/blog-post_2275.html

வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்கள் செய்யும் டாப் 10 "நாட்டி" காரியங்கள்
http://www.satrumun.net/2014/07/weird-things-women-do-when-they-are.html

உதயநிதி நயன்தாரா விவகாரம் - கிருத்திகா உதயநிதியை துரத்திய போன் கால்கள்
http://goo.gl/YNWXTT

தோனியை தூக்கி விட்டு புதிய கேப்டனாக விராட் கோலி? இது என்ன கூத்து?
http://www.satrumun.net/2014/07/blog-post_16.html

மொபைல் போனும் நான் வெஜ்ஜூம் தான்  கற்பழிப்புக்கு காரணம் அமைச்சர் பேட்டி
http://www.satrumun.net/2014/07/blog-post_5472.html

சந்திரமுகிக்கு பிறகு மீண்டும் இணையும் ரஜினியும் பிரபுவும்
http://www.satrumun.net/2014/07/blog-post_5609.html

கோஆப்டெக்ஸ்க்கு கடையில்லை ரிலையன்ஸ்க்கு கடை ஒதுக்கீடு - கள்ளக்குறிச்சி நகராட்சியில் நடந்த அநியாயம்
http://www.satrumun.net/2014/07/no-shop-for-co-optex-in-kallakurichi.html

ஹிட்லர் தடை விதித்த சிகரெட்கள் - கான்சரின் கதை
http://www.satrumun.net/2014/07/story-of-cancer.html

பப் கல்ச்சரும் சென்னை பெண்களும் ..... Fact Fact Fact



இன்னும் ஒரு 15 ஆண்டுகள் ஆனாலும் கருப்பு நிற குட்டை ஸ்கர்ட் என்பதை ராணுவ உடையைப் போல பப் மற்றும் டிஸ்க்களுக்கு  அணிந்து வரும் பெண்களைக் கொண்ட நாடாகத் தான் நமது நாடு இருந்திடும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை . ஸ்கர்ட்டை விட ஹேன்ட் பேக் பெரியதாக இருக்கும் , (உள்ளே துழாவினால் மொத்தமும் சில்லரையுமாக 300 ரூபாய் கிடைத்தாலே பெரிய விஷயம் என்பது வேற டிபார்ட்மெண்ட் .)

பெரும்பாலும் டிஸ்க் களுக்கு புதன் கிழமைகள் அல்லது வெள்ளிக் கிழமைகள் பெண்களுக்கு என்று சிறப்பு சலுகைகள் கொண்ட அனுமதியிருக்கும் என்றாலும் , 3 பெக் அடித்தாலே தலை கிர்ரென்று சுத்தும் என்பதனாலோ அல்லது உண்மையிலேயே இங்கிதம் தெரிந்திருப்பதனாலோ , காய்ந்த மாடு கம்பில் விழுந்த கதையாக இவர்கள் குடிப்பதில்லை என்பதை ஆண்கள் தலை குனிந்து ஏற்கத் தான் வேண்டும் .

ஆனால் , குட்டை ஸ்கர்ட் அணிந்துக் கொண்டு லிப்ஸ்டிக்கிற்கு நடுவில் வாயை வைத்திருப்பதனாலேயே இவர்கள் கிளியோபாட்ராக்கள் கிடையாது என்பது இவர்களுக்கு புரியும் நாள் , பாரதியின் புதுமைப் பெண்கள் பிறந்த நாள் என்று எடுத்துக் கொள்ளலாம் .

மெதுவாக குடிப்பது நல்ல விஷயம் தான் அதற்காக , காக்டேயிலில் கலக்கப் பட்டிருக்கும் கலப்படங்கள் எல்லாம் கிளாசில் கீழே தேங்கும் வரை அதை வைத்துருப்பானே ? இதில் இன்னொரு கூத்தும் அரங்கேறும் , பாதிக்கு மேல் வருவது எல்லாமே ஓசி குடிக்கு தான் என்பதனால் , பார் கவுண்டரில் ஒரு லார்ஜ் என்றால் ஒரு ஸ்மால் மற்றும் கலப்படங்கள் என்பது எழுதப் படாத விதி .

மூணு பிச்சர் பீர் அடிச்சிருப்பவனே அடக்கிட்டு உக்காந்திருப்பான் , இவங்க ரெண்டு கிளாஸ் வைனை இரண்டரை மணி நேரம் குடிப்பதுமில்லாமல் , 12 முறை பாத்ரூமுக்கு போயிட்டு வருவது ஏன் என்பது இது வரை புரியாத புதிர் தான் .

அப்பறம் , அது எப்படி சொல்லி வைத்தார் போல எல்லாரும் அதே ஏம்வே ஷாம்பூவை உபயோகிக்கறீங்க ? அதையும் யாராவது ஓசியில் தராங்களா ? மேலும் , 2 நிமிஷத்துக்கு ஒரு முறை தலையை கோதி விட்டாத் தான் உங்களை அழகிகள் பட்டியலில் சேர்ப்பார்கள் என்று உங்க கிட்ட யார் சொன்னது ? பல பப்களில் சிகரெட்டுக்கு அனுமதியில்லை என்றாலும் , சிகரெட் பிடிக்கும் வசதி கொண்ட பப்களில் சில பெண்கள் செய்யும் அலப்பரை தனி ரகம் தான் . smoking is about living the moment , its not about making a statement என்பது இவர்களில் பலருக்கு புரியாது போல , சிகரெட் பிடித்து தங்களை மாடர்ன் கர்ல்ஸ் என்று காட்டிக் கொள்ள உள்ளே இழுக்கத் தெரியாமல் இழுத்து , பக்கத்தில் இருப்பவர்களையும் புகை மண்டலத்தில் ஆழ்த்தி விடுவது இவர்களது வழக்கம் .

இன்னொன்னு முக்கியமா சொல்லியாகனும் , நீங்க உங்க கூட துணைக்கு ஒரு பழுத்த வழுக்கை மண்டையை கூட்டி வருவது உங்கள் விருப்பம் , அது ஏன் எதற்கு என்கிற ஆராய்ச்சியில் எல்லாம் நாங்கள் இறங்கப் போவதில்லை , ஆனால் அதுக்காக பசங்க உங்களை பார்த்தாலோ , அல்லது நீங்க பசங்களை பார்த்தாலோ , அந்த வழுக்கை மண்டையை இறுக்க அணைத்துக் கொள்ள வேண்டும் என்று அவசியமே இல்லை , உங்க காதல் எங்களுக்கு புரியுது .

உங்களிடம் சில்மிஷம் செய்யுற பசங்களை கூட சகிச்சிக்கறீங்க ,ஆனால் உங்களை விட குட்டையா ஸ்கர்ட் போட்டு வரும் பெண்களை எல்லாம் எதற்கு பிட்ச் ( bitch ) என்று திட்டறீங்க ? உங்களுக்குள்ள போட்டியிருக்கலாம் பொறாமை இருக்கக் கூடாது .

இறுதியாக எனது வேண்டுகோள் , ஒரு மாற்றத்திற்கு ஒரு பொண்ணாவது புடவை கட்டிக் கொண்டு பப் / டிஸ்கிற்கு வரலாமே .

கிஷோர் கே ஸ்வாமி ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது

கோஆப்டெக்ஸ்க்கு கடையில்லை ரிலையன்ஸ்க்கு கடை ஒதுக்கீடு - கள்ளக்குறிச்சி நகராட்சியில் நடந்த அநியாயம்



கள்ளக்குறிச்சியில் ஜூலை 9 அன்று புதிய நகராட்சி கட்டிடத்திற்கான கடைகள் ஒதுக்கும் நிகழ்ச்சியின் போது அங்கு ஏற்கனவே இருந்த கோஆப்டெக்ஸ் நிறுவனத்தின் கடைக்கு பதிலாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கடை ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தட்டி கேட்ட கோ ஆப்டெக்ஸ் மேனேஜர் தாக்கப்பட்டுள்ளார். ஆளும் கட்சியின் பிரமுகர் தயவில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் அங்கு இடத்தை பிடித்துள்ளதாக தெரிகிறது என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கோஆப்டெக்ஸ் நிறுவனத்தை நம்பி தொழில் செய்யும் ஏழை கைத்தறி நெசவாளர்களுக்கு நகராட்சியும், தமிழக அரசும் செய்யும் துரோகச்செயல் இது என்றும் ஆம் ஆத்மி கட்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஹிட்லர் தடை விதித்த சிகரெட்கள் - கான்சரின் கதை


புகையிலை ஒரு அமெரிக்கத் தாவரம். கொலம்பஸ் அமெரிக்காவை அடைந்த பின்னர் அங்கே படையெடுத்த ஐரோப்பியர்கள் அங்கே இருந்த பூர்வகுடி இந்தியர்கள் புகையிலை பிடிப்பதைக் கண்டு அதைத் தாமும் பிடிக்கத் தொடங்கினர். அதன்பின் புகையிலை உலகெங்கும் பயிரிடப்பட்டு, பயன்பட்டு வந்தாலும் அதன் தீமைகளை அன்று யாரும் அறியவில்லை. முதல், முதலாக சிகரெட்டின் தீமைகளை அறிந்த நாடு, நாஜி ஜெர்மனிதான்.

1939இல் முதல் முதலாக நாஜி ஜெர்மன் விஞ்ஞானி ப்ரான்ஸ் முல்லர் (Franz H. Müller) சிகரெட்டுக்கும் கான்சருக்கும் இருக்கும் தொடர்பைக் கண்டுபிடித்துப் பதிப்பித்தார். அத்துடன் நில்லாமல் வியப்பூட்டும் வகையில் அஸ்பெஸ்டாஸால் புற்றுநோய் வரும், செகண்ட்ஹாண்ட் ஸ்மோக்கிங்காலும் புற்றுநோய் வரும் என்பதை எல்லாம் நாஜி விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். இதை எல்லாம் மற்ற நாடுகள் ஏற்க, பல பத்தாண்டுகள் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.

"மாஸ்டர் ரேஸ் (master race)" எனப்படும் "உயர் ஆரிய வகுப்பை" உருவாக்கும் கனவில் இருந்த ஹிட்லருக்குச் சிகரெட் ஒரு பெரும் தீமையாகத் தோன்றியது. அதே சமயம் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானிகள் இதெல்லாம் நாஜி பிரச்சாரம் எனச் சொல்லி இதைப் புறக்கணித்தார்கள். ஆனால் ஹிட்லர் சும்மா இருக்காமல் "புகையிலை எதிர்ப்பு மையம்" ஒன்றை தொடங்கினான். நிகோடினின் தீமைகள் அங்கே விரிவாக ஆராயப்பட்டு மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டன.

1940களிலேயே ஜெர்மனியில் பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. பெண்களுக்குச் சிகரெட் விற்கத் தடை விதிக்கப்பட்டது. ராணுவ வீரர்களும், போலிசாரும் யுனிபாரம் அணிந்து இருக்கையில் புகைக்கத் தடை விதிக்கப்பட்டது. புகையிலை விளம்பரம் தடுக்கப்பட்டது. உலகில் இன்னமும் கூட பல நாடுகளில் இத்தகைய கடுமையான தடைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை செய்த ஹிட்லர், சிகரெட்டை ஒரேயடியாகத் தடை செய்யாத காரணம் சிகரெட் விற்பனையில் கிடைத்த வரி வருமானம் தான். உலகப் போரை நடத்த, சிகரெட் வரி அவசியமாக இருந்ததால், ஹிட்லர் அதைத் தடை செய்யாமல் விட்டுவிட்டான். போரில் நாஜி ஜெர்மனி தோற்றபின் அவர்களது ஆய்வுகளை மேற்கத்திய நாடுகள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தன. அதனால் சிகரெட்டின் தீமைகள் ஆராயப்படவில்லை. அது கெடுதலானது எனும் விஷயமே பலருக்கும் தெரியவில்லை. 1940, 1950களில் சிகரெட் விற்பனை கொடி கட்டிப் பறந்தது.

அதே சமயம் நுரையீரல் புற்றுநோய் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் அமெரிக்க விஞ்ஞானிகள் சிகரெட்டுக்கும் இதற்கும் தொடர்பு இருக்குமோ எனச் சந்தேகிக்கத் தொடங்கினார்கள். அமெரிக்கப் புகையிலை உற்பத்தியாளர் சங்கம், இதைக் கடுமையாக மறுத்தது. 1950கள் முழுக்கச் சிகரெட்டுக்கும் புற்றுநோய்க்கும் இருக்கும் தொடர்பை ஆராய்ந்து வரும் அறிவியல் ஆய்வுகளை இச்சங்கம் மறுத்தும் நிராகரித்தும் வந்தது.

அக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த ஆய்வுகளில் எலிகளைக் கூண்டில் விட்டு, சிகரெட் புகையைக் கூண்டில் செலுத்துவார்கள். சில மாதம் கழித்து எலிகளுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும். ஆனால் "எலிகளை வைத்து நடத்தும் ஆய்வு மனிதர்களுக்குப் பொருந்தாது" எனச் சிகரெட் கம்பனிகள் சாதித்து வந்தன. மனிதர்களைக் கூண்டில் கட்டி வைத்து, சிகரெட் புகையை விட்டு ஆய்வு செய்ய முடியாது என்பதால் அவர்கள் கேட்டதுபோல், மனிதர்களை வைத்து ஆய்வுகள் செய்ய முடியவில்லை.

அறிவியலின் பக்கம் நின்றிருக்க வேண்டிய அமெரிக்க மருத்துவர்கள் சங்கம், சிகரெட் கம்பனிகள் பக்கம் நின்றது. மருத்துவர்கள் பலர், சிகரெட் விளம்பரங்களில் தோன்றி "சிகரெட்டில் கெடுதல் இல்லை" என விளம்பரம் செய்தார்கள்.

ஆனால் நுரையீரல் புற்றுநோய் விகிதங்கள் பெருகவும், சிகரெட் கம்பனிகளின் சுதி மாறத் தொடங்கியது. மக்களிடம் வாதாடுவதை விட்டுவிட்டு, அரசியல்வாதிகளை லாபி செய்யத் தொடங்கினார்கள். 1960இல் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கென்னடியிடம் "சிகரெட்டால் புற்றுநோய் வருமா?" எனக் கேட்கப்பட்டது. புகையிலை விவசாயிகளின் ஓட்டு பாதிக்கப்படக் கூடாது என்பதால் மழுப்பலான பதிலைச் சொல்லித் தப்பினார் கென்னடி.

ஆனால் உலகின் மற்ற நாடுகளில் அமெரிக்கர்களுக்காகக் காத்திராமல் ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமாகப் புகையிலையால் புற்றுநோய் வரும் என அறிவித்ததும் வேறு வழியின்றி 1964இல் அமெரிக்க சர்ஜன் ஜெனெரல் "புகையிலையால் புற்றுநோய் வரும்" என அறிவித்தார். அதன்பின் வேறு வழியின்றி அமெரிக்க மருத்துவர் சங்கம் அதை ஏற்றுக்கொண்டது.

அதன்பின் புகையிலை பிடிக்கும் வழக்கம், கணிசமாகக் குறைந்தது. நாஜி ஜெர்மனியில் நிகழ்ந்தது போல் விமானங்களிலும் பொது இடங்களிலும் புகை பிடிக்கத் தடை விதிக்கப்பட்டது. சிகரெட் கம்பனிகள் சும்மா இராமல் "பில்டர் சிகரெட்டால் கெடுதல் இல்லை" எனச் சொல்லிக்கொண்டு பில்டர் சிகரெட்டுகளை வெளியிட்டன. பில்டர் சிகரெட்டால் எப்பயனும் இல்லை என்பதை நிரூபிக்க மேலும் சில ஆண்டுகள் கழிய வேண்டி இருந்தது.

அதன்பின் மேற்கத்திய நாடுகளில் பிசினஸ் படுத்தவுடன், சிகரெட் கம்பனிகள் ஆசியச் சந்தையைக் குறிவைத்துக் களம் இறங்கின. இப்போது அங்கும் வரிகள், சட்டங்கள் மூலம் சிகரெட் விற்பனை கட்டுப்படுத்தப்படுகிறது. பல நாடுகளில் சிகரெட் கம்பனிகள் மேல் வழக்கு தொடரப்பட்டது. பல பில்லியன் டாலர்களை இழப்பீடாகக் கொடுத்த பின்னரே சிகரெட் தொழில் நசிவடையத் தொடங்கியது. ஆனால் 1940இல் நாஜி ஜெர்மனியில் தொடங்கிய சிகரெட்டுக்கு எதிரான போர், 1990களில் அமெரிக்காவில் ஒரு தெளிவான முடிவுக்கு வருவதற்குள் உலகில் பல மில்லியன் மக்கள் சிகரெட்டால் தம் உயிரை இழந்துவிட்டார்கள். உடல்நலம் பாதிக்கபட்டார்கள். குடும்பங்கள் சிதைந்தன. அரசும், மருத்துவ அமைப்புகளும் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் மக்களின் உயிரில் எத்தனை அலட்சியமாக இருப்பார்கள் என்பதற்குப் புற்றுநோய்க்கு எதிரான இந்த யுத்தமே சான்று.

எழுதியவர் Neander Selvan

சரவண பவன் உணவில் புழு இருந்தது, அதிர்ச்சி தரும் தகவல்




நம் சென்னைவாசிகள் அனைவரிடமும் சைவத்திற்கு சிறந்த உணவகம் எது என்றால் ,அவர்கள் எல்லாரும் ஒன்றாக கூறும் பதில் ஹோட்டல் சரவண பவனாக தான் இருக்கும் .இந்த நிறுவனம் 1981 இல் தொடங்கப்பட்டது. இவர்களுக்கு என சென்னையில் 20 கடைகளூம், இந்தியாவில் 33 கடைகளும், உலகளவில் 47 கடைகளும் உள்ளன.



ஆனால் இப்போது அவர்களுக்கு ஒரு கெட்ட பெயர் வந்து உள்ளது. அவர்கள் உணவில் புழு இருந்தது போல் ஒரு போட்டோ வந்து உள்ளது. இது இப்போது பேஸ்புக்கில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா அல்லது தவறான் செய்தியா என்று இன்னும் தெரியவில்லை. இது குறித்து அந்த நிறுவனம் இன்னும் எந்த தகவலும் கூறவில்லை.


அவர்களின் மார்கெட்டை இழக்க கூடாது என்றால் அந்த நிறுவனம் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்திரமுகிக்கு பிறகு மீண்டும் இணைய உள்ளார்கள் ரஜினியும் பிரபுவும்




ரஜினியும், பிரபுவும் இணைந்து நடித்த குரு சிஷ்யன் , தர்மத்தின் தலைவன், சந்திரமுகி என எல்லா படங்களுமே ஹிட் தான். இவர்கள் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த சந்திரமுகி படம் மெகா ஹிட் ஆனது. இப்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்கள். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் இவர்கள் இணைய உள்ள படம் லிங்கா ஆகும். இதில் அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க உள்ளார்கள்.

இதில் காமெடி வேடத்தில் சந்தானமும், கருணாசும் நடிக்கிறார்கள். இப்போது இந்த படத்தில் ஒரு முக்கிய மான வேடத்தில் பிரபு நடிக்க உள்ளது பற்றி அதிகாரபூர்வ தகவல் வந்து உள்ளது. மீண்டும் சந்திரமுகியை போன்று ஒரு வெற்றி படம் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுள்ளது.

தமிழகத்திற்கு சுனாமி வந்த போது கருணாநிதி எங்கே சென்றார்




தமிழக சட்டசபையில் நேற்று பெண்களுக்கு நடைபெற்ற திட்டங்கள் பற்றிய  விவாதம் நடைபெற்று கொண்டு இருந்தது. அப்போது சுனாமி பற்றிய பேச்சு வந்தது. கருணாநிதி சுனாமி தாக்கிய போது அப்போலோ மருத்துவமனையில் இருந்தார் என்று கூறினார் அமைச்சர் வளர்மதி. இதன் பிறகு பேசிய முதல்வர் ஜெயலலிதா , கருணாநிதி சுனாமியின் தனது தொகுதிகளை மக்களை கூட சென்று சந்திக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் கூற திமுக எம்.எல்.ஏ.க்கள் அனுமதி கேட்டனர் , ஆனால் அவர்களூக்கு அனுமதி தரப்படவில்லை . அதனால் அவர்கள் அவையை விட்டு வெளியேறினார். வெளியே வந்து பதில் கூறிய துரைமுருகன் சுனாமியின் போது கருணாநிதி மருத்துவமனையில் இருந்தார்.அதன் பிறகு தொகுதி மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பிரிக்ஸ் வங்கி உருவானது , மகிழ்ச்சியில் மோடி





பிரிக்ஸ் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியை 10000 கோடி டாலர் முதலிட்டில் தொடங்க உள்ளார்கள். இந்த வங்கி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்தியா தான். நாம் தான் இதற்காக முதலில் இருந்து குரல் கொடுத்து வந்தோம். இந்தியாவின் உத்தரவில் பேரில் , பிரிக்ஸில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் இதில் 2000 கோடி டாலர்களை முதலீடு செய்ய வேண்டும். இந்த வங்கி உருவானதில் இந்தியா பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. இது இவர்களுக்கு மட்டும் உதவாமல் சிறிய நாடுகளுக்கு உதவும் வகையில் உள்ளது.


இந்த வங்கியின் தலைமையகம் ஷாங்காய் நகரில் அமையவுள்ளது. இதன் முதல் தலைவர் பதவி இந்தியாவுக்கு தரப்பட்டு உள்ளது. வங்கி இயக்குனர்கள் தலைவர் பதவி ரஷியாவுக்கு தரப்பட்டு உள்ளது. இந்த வங்கி உருவானதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெரும் மகிழ்ச்சியில் உள்ளார்.

தோனியை தூக்கி விட்டு புதிய கேப்டனாக விராட் கோலி





இன்றைய தேதியில் இந்தியாவின் சிறந்த கேப்டன்கள் யார் என்றால் அது முன்னாள் கேப்டன்கள் கபில் தேவ், சவுரவ் கங்குலி மற்றும் இப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனியை தான் கூறுவார்கள். இதில் தோனி இந்தியாவுக்கு என 50 ஒவர் உலக கோப்பை, 20 ஒவர் உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் என பல சிறப்புகளை பெற்று தந்தார். இந்திய அணி இப்போது வெளிநாடுகளில் தடுமாறி வரும் நிலையில் அவரை கேப்டன் பதவியில் இருந்து தூக்கி விட்டு புதிய கேப்டனாக விராத் கோலியை போடுமாறு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஐயன் சேப்பல் கூறியுள்ளார்.


வெளிநாடுகளில் இந்தியா கடைசியாக டெஸ்ட் போட்டிகளில் வென்றது 2011 இல் தான். இந்தியா தொடர்ந்து தோல்விகளை தான் சந்தித்து வருகிறது. அதற்காக தோனியை கேப்டன் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்பது மிகவும் தவறு ஆகும். இந்தியா பிரச்சனை இப்போது ஒரு சிறந்த அணியை உருவாக்குவதில். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிகளின் தூண்களாக இருந்த சச்சின், டிராவிட், லஷ்மனன் ஆகியோர் ஒரே நேரத்தில் ஒய்வு பெற்று விட்டனர். இதில் இருந்து இந்தியா மீண்டு வருவதற்கு காலம் எடுக்கலாம். அது வரை நாம் அவர்களுக்கு பக்க துணையுடன் இருக்க வேண்டும்.
அதை விட்டு விட்டு கோலியை கேப்டனாக்க வேண்டும் என்பது முட்டாள் தனமான பேச்சாகும். அவர் வளர்ந்து வரும் வீரர் அவரிடம் இந்த சுமையை தர கூடாது.


கிரேக் சேப்பலால் கங்குலி என்னும் சிறந்த கேப்டனை இழந்தோம், இப்போது ஐயன் சேப்பலால் தோனி என்னும் சிறந்த கேப்டனை இழந்து விட கூடாது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media