Wednesday, 13 November 2013
முள்ளிவாய்க்கால் முற்றம் அரசால் இடிப்பு
மாலை சட்டமன்றத்தில் தீர்மாணம், இரவு முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு
2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த இனஅழிப்பை நினைவு படுத்தும் வகையில் தஞ்சையில் விளார் பகுதியில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற நினைவிடம் தமிழ் ஆர்வலர்களால் கட்டப்பட்டது, அதன் திறப்பு விழா நவம்பர் 8ம் தேதி குறிக்கப்பட்டது, ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கிடைத்த தீர்ப்பினால் உடனடியாக நவம்பர் 6ம் தேதியே திறக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சுற்றுச்சுவர்களை தமிழக போலிசார் மேற்பார்வையில் இடிக்க ஆரம்பித்தனர், இது குறித்து நீதிமன்ற உத்தரவு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது, முள்ளிவாய்க்கால் முற்றம் முழுவதையும் இடித்துவிடுவது என்று முடிவு செய்து இடிப்பதாக தெரிய வந்துள்ளது.
இன்று காலை வரை இடிப்பதை நிறுத்தி வைக்க கோரியும் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுவிடுவார்கள் என்ற காரணத்தால் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை சட்டமன்றத்தை கூட்டி ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேச்சும், தீர்மாணமும் இயற்றப்பட்டது, ஆனால் இரவே முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது ஆளும் அதிமுக ஜெயலலிதா அரசின் இரட்டை வேடத்தை காண்பிக்கின்றது.
தொடக்கவிழா நிகழ்ச்சிகளில் சசிகலா நடராஜன் முன்னிலை படுத்தப்பட்டதுவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது, இன அழிப்பின் போது தான் யாரும் தடுக்கவில்லை, நினைவு கூர்ந்து ஒப்பாரி வைக்க கூட தமிழகத்தில் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது தமிழனின் இழிவடைந்திருக்கும் நிலையை குறிக்குறது.

Subscribe to:
Posts
(
Atom
)