புதிதாக பொறுப்பேற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு இன்றோடு ஒரு மாதம் நிறைவடைகிறது . ஒரு மாதம் முடிந்ததையடுத்து , தனது இணையத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் .
அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ள முக்கிய விஷயங்களை கீழ்க் காணலாம் .
கடந்த 67 வருடங்களாக நடந்து வந்த ஆட்சியை எங்களின் ஒரு மாத ஆட்சியுடன் ஒப்பிட முடியாது . ஆனால் கடந்த ஒரு மாதத்தில் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரும் மக்களின் நலனை கருத்தில் கொண்டே ஒவ்வொரு நொடியும் செயல்பட்டனர் . நாங்கள் எடுத்த ஒவ்வொரு முடிவும் மக்கள் தேசத்தின் நலனுக்காகவே இருந்தது .
முந்தைய அரசு , ஆட்சிக்கு வந்தவுடன் ஹனிமூன் போன்று 100 நாட்கள் செலவளித்தனர் . ஆனால் எங்களுக்கு அது போன்ற ஹனிமூன் காலம் கிடைக்கவில்லை . அவர்களுக்கு 100 நாட்கள் ஹணிமூனில் இருந்தனர் , ஆனால் எங்களுக்கு 100 மணி நேரம் கூட கிடைக்கவில்லை . ஆனால் இது எங்களுக்கு பெரிதாக தெரியவில்லை . தேசத்தின் நலனுக்காக பாடுபடுவதே எனக்கு மனநிறைவு கிடைக்கிறது .
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார் .