BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 18 August 2013

மெட்ராஸ் கஃபே படத்திற்கு எதிர்ப்பு, தமிழகத்துக்கு எதிராக முழங்க போகும் வட இந்திய ஊடகங்கள்

மெட்ராஸ் கஃபே படத்திற்கு எதிர்ப்பு, தமிழகத்துக்கு எதிராக முழங்க போகும் வட இந்திய, ஆங்கில ஊடகங்கள்

பாக்கிஸ்தான் எல்லையில் அத்துமீறினாலோ, பாக்கிஸ்தானில் உள்ள‌ தீவிரவாத அமைப்புகள் ஏதேனும் இந்திய நகரங்களில் தாக்குதல் நடத்தினாலோ, கார்கிலில் பாக்கிஸ்தான் நுழைந்து ஆக்கிரமித்தாலோ உடனடியாக பாக்கிஸ்தானுடன் விளையாடும் கிரிக்கெட் விளையாட்டை தடை செய்வதில் ஆரம்பித்து அனைத்து பேச்சுவார்த்தைகள், போக்குவரத்து மற்றும் அரசு உறவுகள் என அத்தனையும் தடைபோட கோருவதும் அதுவே தேசபக்தி என்று பிரச்சாரம் செய்யும் வட இந்திய, ஆங்கில ஊடகங்கள் சிங்கள அரசாங்கத்துக்கும், இந்திய அரசாங்கத்தின் தமிழர் விரோத செயல்பாடுகளை ஆதரித்தும் வருகின்றன.

இனவெறி பிடித்த இலங்கை அரசின் கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் சென்னையில் 20-20 ஐபிஎல் விளையாட தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட உடன் வட இந்திய ஊடகங்கள் தமிழகத்தையும் முதல்வரையும் கடும் விமர்சனம் செய்தன பாக்கிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட கூடாது என்று சொன்ன ஊடகங்கள் எல்லாம் விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என்று அறிவுரை கூறினர்.

தற்போது மெட்ராஸ் கஃபே என்ற பெயரில் முழுக்க ஒரு பக்க சார்பாக ஈழத்தமிழர் போராளிகளை, அதன் தலைவரை கொச்சை படுத்தியும் காசி ஆனந்தன் மற்றும் வைகோ போன்றவர்களை நேரடியாக கொச்சை படுத்தியும் படம் எடுத்து அதை துணிச்சலாக தமிழகத்திலே போட்டும் காட்டியுள்ளது மட்டுமின்றி படத்தை தமிழகத்தில் வெளியிடுவோம் என்று கூறியுள்ளனர்.

படம் தமிழகத்தில் எவ்வளவு எதிர்ப்பையும், வெறுப்பையும் சம்பாதிக்கிறதோ, அரசு படத்தை வெளியிடாமல் தடை போடுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு தமிழகம் தவிர்த்த இந்தியாவில் படம் ஹிட் ஆகும், பல்வேறு பிரச்சினைகளில் தமிழர்களின் மனநிலையும் தமிழகம் தவிர்த்த பிற இந்தியாவின் மனநிலையிலும் பெருத்த வேறுபாடு உள்ளது.

படத்திற்கு தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்புக்கு நாளையிலிருந்து வட இந்திய ஊடகங்கள் ஒப்பாரி வைக்க ஆரம்பிக்கும், தமிழர்களை மொழி வெறிபிடித்தவர்கள் என்றும், கருத்து சுதந்திரம் இல்லை என்றும் கிண்டல் செய்தும் அனைத்திற்கும் மேலாக நாளையிலிருந்து ஈழத்தமிழர் விடுதலைக்காக போராடிய பிரபாகரனையும் புலிகள் அமைப்பையும் தீவிரவாதிகளாக சித்தரித்தும் விவாதங்களை நடத்தும், ஓயாமல் செய்தி வாசிக்கும்.

இம்முறை பதவியேற்றதிலிருந்து ஜெயலலிதா அரசு கூடங்குளம் உட்பட பல பிரச்சினைகளிலும் தமிழர்களின் உணர்வை மதிப்பது போல போக்கு காண்பித்துவிட்டு உணர்வுகளை மழுங்கடித்து போராட்டங்களை நசுக்க பார்க்கும், அதை போலவே இம்முறையும் சிம்பிளாக தமிழர்கள் உணர்வை மதிப்பது போல காண்பித்துக்கொண்டு டேம் 999 க்கு தடைவிதித்தது போல படத்துக்கு தடைவிதித்து விட்டு போய்விட வாய்ப்புள்ளது.

தமிழகம் தவிர்த்து இந்தியாவில் தான் இப்படி என்றால் தமிழகத்திலேயே ஞானி, அ.மார்க்ஸ் போன்ற புலியெதிர்ப்பு அறிவுஜீவிகள் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் என்னென்ன கூத்து கட்டப்போகிறார்களோ.

எப்படியோ மெட்ராஸ் கஃபே படம் தமிழகத்தில் தடையே செய்யப்பட்டாலும் தமிழர்களின் மீதான காழ்ப்புணர்வினால் தமிழகம் தவிர்த்த இந்தியாவில் ஹிட் ஆகி வசூலை வாரி குவிக்க போகிறது.

# இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஜான் ஆபிரஹாம்

மெட்ராஸ்கஃபே ஈழத்தமிழர்களையும், போராளிகளையும் பச்சையாக கொச்சைப்படுத்தும் திரைப்படம்

மெட்ராஸ்கஃபே ஈழத்தமிழர்களையும், போராளிகளையும் பச்சையாக கொச்சைப்படுத்தும் திரைப்படம். ராஜீவ்காந்தி ஹீரோவாம், பிரபாகரன் வில்லனாம்.

ஜான் ஆபிரகாம் நடித்த மெட்ராஸ்கஃபே திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று தமிழ் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க திரையிட்டு காட்டப்பட்டது, படத்தை பார்த்த அத்தனை பேருக்கும் ரத்தம் கொதித்துள்ளது. அப்பட்டமாக ஈழத்தமிழர்களை கொச்சை படுத்தியும் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்தும் உள்ள படத்தில் வைகோ, காசி ஆனந்தன் போன்றவர்கள் நேரடியாக கொச்சை படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் படம் திரையிடபட்டால் யாருக்கும் நல்லதல்ல.. ஜான் ஆபிரகாமுக்கும் நல்லதல்ல என்று சீமான் கூறியுள்ளார், தமிழ்நாடு திரையரங்க சங்க தலைவர் அபிராமி ராமநாதன் திரையிட முடியாது என்று கூறி உள்ளார்


இன்று படம் பார்த்த சிலரின் விமர்சனங்கள்

இரா. இளமுருகன்
மெட்ராஸ் கபே படத்தில் ஈழ தமிழ் போராளிகளை தீவிரவாதிகளாக சித்தாரிக்க பட்டு இருக்கிறார்கள். ஒரு காட்சியில் வைகோ அய்யா அவர்கள் மீது ஆவதூறுயை வாரி இறைத்து இருக்கிறார்கல்

இந்த படத்தை எல்லாம் தமிழக அரசு தடை பண்ணாது ஆனால் தமிழன் நடித்த தமிழ் படத்தை மட்டும் வெறி கொண்டு தடை பண்ணும்


Agazhvaan GGanesh

சற்று முன்பு Madras cafe படம் பார்த்து முடித்தோம், நிறை எழுத இருக்கிறது

1.ராஜீவ் காந்தி கதாநாயகன், பிரபாகரன் வில்லன்
2.காங்கிரசின் தேர்தல் பிரச்சாரம்
3.காசி ஆனந்தனும் வைகோவும் நேரடியாக கொச்சைபடுத்தபட்டிருக்கிரார்கள்

மெட்ராஸ் கஃபே படத்தில் நாயகனின் அப்பாவி மனைவியை புலிகள் வீடு புகுந்து சுட்டு கொல்வது போல உள்ளது

# எந்த அளவிற்கு நுணுக்கமான உளவியல் மாற்றத்தை செய்ய நினைக்கிறார்கள் என பாருங்கள். புலிகள் இதுவரை குழந்தைகள் மீதோ பெண்கள் மீதோ ஆயுதத்தை பயன்படுத்தியது கிடையாது. அதுவும் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது கிடையாது

Joe Britto

இரத்தம் கொதிக்கிறது...,
MADRAS CAFE படத்தைப் பார்த்தேன்!

நம் தலைவர் பிரபாகரனின்
தவறான முடிவுகளால்
சிங்கள மக்களும்,தமிழர்களும் செத்தனர்...

கடைசி வரை அமைதிக்காக தவம்
கிடந்த ராஜீவ் காந்தியை பிரபாகரன்
கொன்றார்...

படம் முழுக்க
தமிழ் இனத் துரோகம்!!!

# ஆகத்து 23 ஆம் தேதி
எங்கெல்லாம் முடியுமோ..
அங்கெல்லாம் படத்தை வெளியிடு!

நாங்களும் வெளியிடுறோம்,
தெருவுக்கு தெரு...
மேடை போடுறோம்!
ராஜிவ் காந்தி கொலைக்கு
பின்னாடி உள்ள ..
காங்கிரஸ் தலைவர்கள் யார்?யார்?
சாமியார்கள் யார்?யார்?
அதிகாரிகள் யார்?யார்?
மாநில ஆளுநர்கள் யார்?யார்?
உலக நாடுகள் யார்?யார்?

மானமுள்ள மாணவத் தலைமுறைத் தமிழனே வீதிக்கு வா!
தமிழன் என்றால் யார் என்று காட்டுவோம்...

தலைவாவின் தடை நீங்கியது...

தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தலைவா படம் வெளியிட தயாராகிவிட்டது.

ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கபட்ட தலைவா படம், தியேட்டர்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் வெளியிடப்படாமல் தடைபட்டது, மேலும் படத்திற்கு கேளிக்கை வரி சலுகை ரத்து செய்யபட்டதாலும் தியேட்டர் உரிமையாளர்கள் வெளியிட தயங்கினர்.

இதுகுறித்து பேச நடிகர் விஜய் தரப்பு தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கோரியபோது அனுமதி வழங்கப்படவில்லை. தொலைகாட்சி பேட்டியில் அம்மா அவர்களின் நல்லாட்சியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, எனது படம் விரைவில் வெளிவரும் என அறீவித்தபோதும் ரிலீஸ் குறித்து எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது, இறுதியில் விஜய் தரப்பு சட்டரீதியாக அணுகலாம் என முடிவெடுத்தது.

தயாரிப்பாளர் தரப்பு தமிழக மக்களின் கவனத்தை கவரும் வகையில் உண்ணாவிரதம் இருக்க காவல்துறையிடம் அனுமதி கோரியது, உங்களுக்கும் திரைரங்கு உரிமையாளர்களுக்கும் உள்ள பிரச்சனை அதற்கு காவல்துறை தலையிட முடியாது என காவல்துறை அனுமதி மறுத்தது. அதை தொடர்ந்து தயாரிப்பாளருக்கு உயர் அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

பரவலான அரசியல் பார்வை தலைவா படத்தின் மேல் குவிந்ததும் முன்னால் முதல்வர் கருணாநிதி மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தடையை நீக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர். தி.மு.க எம்.எல்.ஏ வும், சினிமா ஜெ.அன்பழகன் தமிழகம் முழுக்க தலைவா படத்தை வெளியிட நான் தயார் என அறிவித்தார், இப்படத்தில் உரிமம் வேங்கிருந்த வேந்தர் மூவிஸுக்கு இது மேலும் தைரியத்தை வரவழைத்தது.

இதை தொடர்ந்து தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்கள் மற்றும் தலைவா படம் தயாரிப்பு தரப்பு ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து பேசியது, பேச்சுவார்த்தையின் முடிவில் தலைவா படம் சென்னையில் வரும் 20 ஆம் தேதியும், மற்ற மாவட்டங்களில் 21 ஆம் தேதியும் வெளியிடப்படும் என முடிவு செய்யபட்டது.

இன்று மதியத்தில் இருந்து இப்படத்திற்கு ரிசர்வேஷன் தொடங்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

விவசாயிகள் நலனே முக்கியம் - முதல்வர் ஜெயலலிதா

தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் காவிரி படுகையில் 691 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் மீதேன் வாயு எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு மத்திய அரசு உற்பத்தி பகிர்வு அடிப்படையில் ஒப்பந்தம் ஏற்ப்படுத்தி கொண்டது.

இதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு அப்பொழுது தமிழிகத்தை ஆண்டு கொண்டிருந்த திமுக அரசு அதே பகுதியில் பெட்ரோலியம் குறித்து ஆய்வு செய்ய அனுமதி வழங்கியது.

பொதுநல அமைப்புகள் எடுத்த கருத்து கணிப்பின் படி இத்திட்டம் நிலத்தடி நீரை மாசுபடுத்தும் என்றும் சூற்றுசூழல் பாதிப்புகளால் விவசாயம் பெருமளவு நசியும் எனவும் தெரிவிக்கபட்டது. இது குறித்து மத்திய அரசு எந்த வித வெள்ளை அறிக்கையும் வெளியிட்டதாக தெரியவில்லை.

இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தாலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நிச்சயம் மாநில அரசியின் ஒப்புதல் வேண்டும், விவசாயிகளின் நலனுக்கு கேடு விளைவிக்கும் எந்த திட்டத்திற்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என ஜெயலலிதா தலைமையிலான தமிழஅரசு தெரிவித்துள்ளது

# கூடங்குளத்துக்கும் தான் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொடுக்கல.

திருச்சியில் மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை?



திருச்சியில் ரயில் தண்டவாளத்தில் 13 வயதான எட்டாம் வகுப்பு மாணவியான தௌபிஃக் சுல்தானா சிதறி பிணமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரை பாலியல் பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் உடலைப் போட்டிருக்கலாம் என்று பரபரப்புக் குற்றச்சாட்டுகளை அவர்களை சேர்ந்தவர்கள் கூறுவதால் பரபரப்பு நிலவுகிறது இது குறித்து சற்றுமுன் செய்திகள் வாசகர் Mohamed Abbas நமக்கு எழுதிய கடிதம் அப்படியே இங்கு தரப்படுகிறது

தமிழக அரசே தமிழக அரசே குற்றவாளிகளை உடனே கைது செய்

திருச்சி மாநகரின் மத்திய பகுதியில் மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள ஒரு பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டு கொலையும் செய்யப்பட்டு உள்ளார் எட்டாம் வகுப்பு மாணவியான தௌபிஃக் சுல்தானா என்கிற மாணவி…

கற்பழிக்கப்பட்ட மாணவியில் உடலை சிதைத்த (இடுப்புக்கு கீழ் பகுதியை அறுத்து எறிந்து உள்ளனர்..) அந்த காமுகர்களின் கூட்டம் அந்த பெண்ணின் உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசி சென்றுள்ளனர்.. உள்ளூர் காவல் துறையும் ரயில்வே போலிஸூம் சேர்ந்துக் கொண்டு இந்த கொலையை தற்கொலையாக மாற்ற முயற்ச்சித்து வருகின்றனர்… உடல் அனைத்தும் துண்டு துண்டாக ஆன போதும் அவரின் ஆடையில் ரத்த கறை இல்லாமல் இருக்கின்றது… இது திட்டமிட்ட படுகொலை என்பதற்கு இதெல்லாம் ஆதாரம்… ஊடகங்களும், அரசியல் தலைவர்களும் மௌனம் காத்து வருகின்றனர்… உண்மையை வெளிக்கொணர வேண்டிய காவல்துறை தற்கொலையாக சித்தரிக்க முயற்சிக்கின்றன…

இந்த அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறையினை சேர்ந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இது போன்ற நடவடிக்கையை தான் இவர்கள் எடுப்பார்களா? என்பது சந்தேகமாக உள்ளது… கயவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.. அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.. இது போன்ற செயல்கள் டெல்லி மாணவி, விந்தியா, புதுச்சேரி கல்லூரி மாணவி என தொடர்கதையாக நடந்த்து வருகின்றன… இதற்கு முடிவு கட்ட வேண்டியது கட்டாய கடமை…

டெல்லியில் ஓரு மாணவி கற்பழிக்கப்பட்டதற்க்கு ஒட்டு மொத்த இந்தியாவும் ஒருமித்த ஒரே குரலில் அதர்மத்திற்கு எதிராக ஓரு அணி திரண்டு குற்றவாளிகளுக்கு தண்டன குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே பிடிக்கவும் போராட்டம் நாடு முழவதும் நடந்தது குற்றவாளிகள் உடனே பிடிக்க பட்டனர் எங்கோ ஓரு மாநிலத்தில் நடத்த ஓரு குற்ற செயலுக்கு ஒன்று கூடிய நாம் தமிழ் நாட்டு மக்கள் சொந்த மாநிலத்தில் ஓரு இளம் பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாள் . இதை ஓரு ஊடகமோ ஓரு தொலைக்காட்சியோ மறந்தது ஏனோ ..இந்த அதர்மத்திற்க்கு ஏனோ சமுக ஆர்வலர்களும் குரல் கொடுக்காமல் மௌனமாய்வுள்ளர்கள் ?

தமிழக மக்களே ஒன்று கூடுவோம் அதர்மத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் குற்றத்தில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை உடனே கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க போரடுவோம் இந்த கொடூரமான கொலையை கண்டிக்க மறந்த பத்திரிகை மற்றும் தொலைகாட்ச்சிகளை கண்டிப்போம்

டெல்லி பெண்ணுக்கு ஓரு நியாயம் தமிழ்நாட்டு பெண்ணுக்கு ஓரு நியாயமா ? தவ்பிக் சுல்தானா இவளும் பெண்தானே வாருங்கள் தமிழ் மக்களே அதர்மத்தை ஓரு அணி நின்று எதிர்ப்போம்

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால்ரயில் மறியல் - கருணாநிதி

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால்ரயில் மறியல் போராட்டம் நடத்துவோம் - மத்திய அரசுக்கு கருணாநிதி கடும் கண்டனம்

தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வு களை மத்திய அரசு மதித்திட வேண்டும் அதை அலட்சியப்படுத்தக்கூடாது எனவும் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் தமிழர்கள் இல்லங்கள்தோறும், வணிக நிலையங்கள்தோறும் கறுப்புக் கொடி ஏற்றப்படும் என்றும், ரயில் மறியல் நடை பெறும் என்றும் மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கை விடுதலை அடைவதற்கு முன்பும், விடுதலை அடைந்த பின்னரும்; பண்டித நேரு, அன்னை இந்திரா அம்மையார், இளந்தலைவர் ராஜீவ் ஆகியோர் காலத்திலும்; ஈழத் தமிழர் களுக்காக ஏற்படுத்தப்பட்ட எந்த ஒப்பந்தத்தை யும் நிறைவேற்றாமல் அவற்றை மீறி, சர்வ தேசக் கண்ணோட்டத்தில் நம்பகத்தன்மையை முழுவது மாய் இழந்து நிற்கிறது இலங்கை. இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் எதிராகவே இலங்கை தொடர்ந்து நடவடிக் கையை மேற்கொண்டு வருகிறது.
ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் படி உருவான இலங்கை அரசமைப்பின் 13வது சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய் வதற் கான அனைத்து வகை முயற்சிகளையும் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இன்றைக்கு வந்துள்ள செய்தியில் கூட, கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட 49 மீனவர்களில் 8 பேர் மட்டுமே விடுதலை செய்யப் பட்டிருக்கிறார்கள். எஞ்சிய 41 பேருக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மீனவர்களைக் கைது செய்வதும், அவர்களை இலங்கைக்குக் கொண்டு சென்று நீதி மன்றத்தில் நிறுத்துவதும், அண்மைக் காலமாக தொடர்ந்து இலங்கை கடற்படையினர் கடைப்பிடித்து வரும் நடைமுறையாகும். தமிழக மீனவர்களின் கதி பற்றி நமது வேண்டுகோளின்படி இந்திய அரசு இலங்கைக்குப் பல முறை கடிதங்களை எழுதியும், தூதுவரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியும் அதைப் பற்றி இலங்கை அரசு இம்மியளவுகூட காதில் போட்டுக் கொள்வதாகத் தெரிய வில்லை.

இந்தச் சூழ்நிலையிலேதான் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும், ஏன் அனைத்துத் தமிழ்மக்களும், உலகத் தமிழர்களும் ஒருமனதாக இந்திய அரசு நவம்பர் திங்களில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் காமன்வெல்த் நாடுகளின் தலைவர் கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு நேரில் அழைப்பு விடுப்பதற்காக 18-8-2013 அன்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் டெல்லிக்கு வருவதாக செய்திவந்துள்ளது. இந்த நேரத்தில் இந்தியப் பிரதமர்; தமிழர்களின் கோரிக் கையை அலட்சியப்படுத்தாமல்; மனதிலே கொண்டு, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்று திட்டவட்டமாகவும், வெளிப்படையாகவும் தெரி விக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வேண்டுகோளையும் இந்திய அரசு புறக் கணிக்குமானால், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்கின்ற நிகழ்வைக் கண்டித்து, தமிழ்மக்களின் உணர்வையும், கண்டனத்தையும் வெளிப்படுத்த; அந்நாளில் தமிழர் இல்லங்கள்தோறும், வணிக நிலையங்கள் தோறும் கறுப்புக் கொடி ஏற்றுதல், ரெயில் நிறுத்தப் போராட்டம் போன்றவைகளில் ஈடுபட நேரிடும் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

# கலைஞர் ஜி என்ன அங்க சத்தம்? சும்மா பேசிக்கிட்டிருந்தோம் மேடம்
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media