BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 14 September 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

ஆமாம்! மார்பு இருக்கு காட்டுறேன், உனக்கென்ன? டைம்ஸ் ஆஃப் இந்தியாவை ரிவிட் அடித்த தீபிகா படுகோன்

பெண்கள் சாமி கும்பிடுவதால் பாதிக்கப்படும் ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை - அதிர்ச்சி தகவல்கள்

நடிகை என்பதால் தான் மைத்ரியுடன் பழகினேன் - ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா

பிரிட்டன் பினைக்கைதி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தால் கழுத்தறுக்கப்பட்டு கொலை

ஊர்ல நாலைஞ்சு இல்ல, இப்போ ஒருத்தர் கூட கெடையாதாம்… : திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்ட சந்தானம்!

எங்கிட்ட என்ன குறை கண்டீங்க…? : விரக்தியில் ப்ரியாமணி!

செல்போன் பயன்படுத்தியதை வார்டன் கண்டித்ததால் 2 பள்ளி மாணவிகள் தற்கொலை

தேசிய கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதால் ஒருபயனும் இல்லை - முதல்வர் ஜெயலலிதா

அமீர் மட்டும் பேருக்கேத்தமாதிரியா கதை எழுதுகிறார்? – கோபப்படும் புதுமுக இயக்குநர்!

தமிழ் அறிவும், உணர்வும்

காந்தி கொலையின் பின்னணி

தமிழ்நாட்டு கல்லூரிகளில் இந்தியை திணிக்காதே, மத்திய அரசின் முடிவுக்கு டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு

மார்பு இருக்கு காட்டுறேன், உனக்கென்ன? டைம்ஸ் ஆஃப் இந்தியாவை ரிவிட் அடித்த தீபிகா படுகோன்


சில மணி நேரங்களுக்கு முன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் டிவிட்டர் கணக்கில் இருந்து "தீபிகா படுக்கோனின் கிளிவேஷ் ஷோ" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஒரு கட்டுரைக்கு இணைப்பு கொடுத்திருந்தது, (தற்போது இந்த டிவிட் நீக்கப்பட்டுவிட்டது)

இந்த டிவிட்டை பார்த்த தீபிகா படுகோன் தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்,

"ஆமாம் நான் பெண், அதனால் மார்பகங்கள் இருக்கின்றன, அதனால் கிளிவேஜ் இருக்கிறது, இதனால் உங்களுக்கென்ன பிரச்சினை"  என்று டிவிட் செய்தார், அதைத்தொடர்ந்து

"பெண்ணுக்கு மரியாதை கொடுப்பது எப்படி என்பது தெரியாமல், பெண்ணுரிமை குறித்து  பேசாதீர்கள்" என்றும்  கூறினார்,

"இந்தியாவின் முன்னணி நியூஸ் பத்திரிக்கைக்கு இது தான் நியூஸ் ஆ?" என்றும் குறிப்பிட்டுள்ளார்,

டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற முன்னணி பத்திரிக்கையை கண்டு அச்சப்படாமல் வெளுத்து வாங்கிய தீபிகா படுக்கோனின் செயலை பலரும் பாராட்டியுள்ளார்கள்

பெண்கள் சாமி கும்பிடுவதால் பாதிக்கப்படும் இந்திய ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை - அதிர்ச்சி தகவல்கள்


திருமணம் ஆன புதியதில் கணவர்கள்  மனைவியிடம் எதிர்பார்ப்பது கோ ஆப்பரேட்டிவான செக்ஸ் உறவை, இந்திய தம்பதிகளில் ஆண்களின் செக்ஸ் உணர்வை பல விஷயங்கள் பாதிக்கின்றன, இந்திய பெண்களின் கூச்ச உணர்வு இதில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. பெரும்பாலான திருமணங்கள் அரேஞ்ச்ட் மேரேஜ் ஆக இருப்பதால் புதிய ஆணுடன் செக்ஸ் உறவு கொள்வதில் பெண்களுக்கு கூச்சம் இருப்பது இயல்பானதே, நாட்கள் ஆக ஆக இந்த கூச்சம் குறைந்துவிடுகிறது.

திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகியும் இந்திய ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படுவது பெண்களின் சாமி கும்பிடும் பழக்கத்தால் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? இந்திய பெண்கள் பெரும்பாலும் பக்தியாக சாமி கும்பிடுகிறார்கள், தினமும் காலையும் மாலையும் வீட்டில் சாமி விளக்கேற்றுவது என்பது இந்திய பெண்கள் கடைபிடிக்கும் பழக்கம்.

வீட்டில் சாமி விளக்கேற்றும் போதும், கோவிலுக்கு போகும் போதும் அதற்கு முன்பு செக்ஸ் உறவு கொண்டிருந்தால் பெண்கள் தலை குளித்துவிட்டு தான் விளக்கேற்ற வேண்டும், கோவிலுக்கு போக வேண்டும் என்பது ஐதீகம்.தினமும் செக்ஸ் உறவு கொண்டால் சாமி கும்பிட செல்வதென்றால் தலை குளிக்க வேண்டும், எனவே தினமும் தலைக்கு குளிப்பதை தவிர்க்கும் பொறுட்டு தன் கணவருடன் செக்ஸ் உறவு கொள்ள மறுக்கின்றார்கள், இதனால் கணவன் மனைவி அடிக்கடி செக்ஸ் உறவு கொள்வது என்ற நிலை மாறி எப்போது பெண் தலைக்கு குளிக்கலாம் என்று நினைக்கிறார்களோ அப்போது மட்டும் செக்ஸ் உறவுக்கு கணவனை அனுமதிக்கின்ற நிலையால் பல கணவன்கள் சரியான செக்ஸ் உறவு கிடைக்காமல் கோபம் கொள்கின்றனர். இது குடும்ப வாழ்க்கையிலும் எதிரொலிக்கிறது, சரியான செக்ஸ் உறவு அமையாததால் பலர் விவாகரத்து வரை செல்கின்றனர்.

கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த போது பெரியவர்கள் வீட்டில் கணவன் மனைவி எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கண்காணிப்பார்கள், செக்ஸ் உறவு தம்பதிகளிடம் சரியாக செல்கிறதா என்பதை குறிப்பால் அறிந்து கொண்டு தம்பதிகளுக்கு அறிவுரை சொல்வார்கள், ஆனால் தற்போது பலரும் தனிக்குடும்பமாக இருப்பதால் தம்பதிகளிடையேயான செக்ஸ் உறவு சீராக செல்கிறதா என்பது யாருக்கும் தெரியாது.

கட்டுப்பெட்டியாக வளர்க்கப்படும் இந்திய பெண்கள் பலர் செக்ஸ் உறவு கொள்வதை வெறும் குழந்தை பிறப்புக்கு மட்டும் தான் என்று நினைக்கின்றார்கள், மேலும் செக்ஸ் உறவு கொள்வது பாவம் என்றும் கருதுகிறார்கள், இதனால் ஆண்கள் திருப்தியான செக்ஸ் உறவு கிடைக்காமல் மன உளைச்சலுக்கு உள்ளாகின்றார்கள், சிலர் விவாகரத்து  நோக்கி சென்றால் சிலர் திருமணத்திற்கு வெளியிலான செக்ஸ் உறவுகளை தேர ஆரம்பிக்கின்றனர். சாமி பக்தியுடன் இருப்பது நல்லது தான் என்றாலும் செக்ஸையும் பக்தியையும், பாவமென்றும் குழப்பி கொண்டு தங்கள் செக்ஸ் உணர்வுகளையும் அடக்கி கணவரின் செக்ஸ் உறவையும் திருப்தி செய்யாமல் குடும்ப உறவை சீர்குலைக்கிறார்கள்.

செக்ஸ் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு இல்லையென்றால் ஆண்கள் கோபப்பட்டு விவாகரத்து, திருமணத்திற்கு வெளியில் செக்ஸ் உறவுகளை மேற்கொள்வது என இல்லாமல் மனைவியுடன் பொறுமையாக பேசி புரியவைக்கலாம், முடியவில்லை என்றால் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடமோ அல்லது மூத்த நண்பர்களிடமோ ஆலோசனை கேட்டு செயல்படலாம்.

தேசிய கட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலில் வாக்களிப்பதால் ஒருபயனும் இல்லை - முதல்வர் ஜெயலலிதா

தூத்துக்குடியில் உள்ளாட்சி இடைத்தேர்தல் பிரசாரத்தில் இன்று பேசிய முதல்வர் ஜெயலலிதா  மீனவர்கள் பிரச்னையில் தமிழகத்தி்ல் ஒரு நிலை, டெல்லியில் ஒரு நிலை என பாரதிய ஜனதா இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மீனவர்கள் பிரச்சனையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்ன? தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என்று, தமிழக பாரதிய ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனால் அதே கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஒருவர் தமிழக மீனவர்களுக்கு எதிராக நடந்து கொள்கிறார்.

தமிழக மீனவர்களின் படகுகளை திருப்பிக் கொடுக்க தான் தான் தடை போட்டதாக மார்தட்டிக் கொள்கிறார். இது குறித்து தமிழக பாரதிய ஜனதா கட்சி அவருக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. மத்திய அரசோ மவுனம் காக்கிறது. இப்படிப்பட்ட இரட்டை நிலைப்பாடு உடைய கட்சிக்கு வாக்களிப்பது என்பது, தமிழக மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்காது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதால் உங்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது என்று கூறினார்.

தமிழ் அறிவும், உணர்வும்



தமிழ் அறிவு எ‎ன்பதற்கும் தமிழ் உணர்வு எ‎ன்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. தமிழ் ‏இலக்கண இலக்கியங்களைப் படித்தும் சிறந்த தேர்ச்சியும் பெற்ற ஒருவர் தமிழ் அறிவு பெற்றவராக ஆக முடியும். ஆனால், அவர் தமிழ் உணர்வு பெற்றவராக ஆக முடியும் எ‎ன்பது நிச்சயமல்ல. தமிழைப் பற்றி ஒருவர் அறிந்து வைத்திருக்கி‎ன்ற செய்திகளை வைத்து தமிழ் அறிவு உண்டாகும். எந்தச் சூழலிலும் சொந்த மொழியையும் இனத்தையும் பண்பாட்டையும் பேணிக்காக்கும் மனவுறுதியே தமிழ் உணர்வு எ‎ன்பதாகும்.

எ‎ன் தாய்மொழியை நான் இழக்க முடியாது; என் தாய்மொழியை அழிக்க இன்னொரு மொழ¢க்கு இடந்தர முடியாது; எத்தனை மொழிகளைக் கற்றாலும் எ‎ன் தாய்மொழியைக் கல்லாமல் இருக்க முடியாது என்பவ தமிழ் உணர்வி‎ன் சில அடையாளங்கள்.

தமிழ் அறிவு ‏இருந்து தமிழ் உணர்வு இல்லாதவர்கள் தமிழுக்காகப் பெரிதாக எதுவும் செய்யமாட்டார்கள். தமிழ் உணர்வு ‏இருந்து தமிழ் அறிவு இல்லாதவர்கள் தமிழுக்குச் செய்வதாக எண்ணி இலக்கு தெரியாமல் எதையாவது செய்துவிடுவார்கள். தமிழ் அறிவோடு தமிழ் உணர்வும் பற்றவர்கள்தாம் தமிழுக்காகச் செய்யவேண்டிய உருப்படியான செயல்களைச் செவ்வனே செய்துமுடிப்பார்கள்.

தமிழால் கிடைக்கும் எல்லாவகையான ஏந்து(வசதி)களையும் வாய்ப்புகளையும் எப்பாடுபட்டாகிலும் பெற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக வாழ ஆளாய்ப்பறக்கும் நம்மவர்கள் சிலர், தமிழுக்காக ஒரு சிறு ந‎ன்மையும் செய்வது கிடையாது. இவர்களி‎ன் இப்போக்கு மாறவேண்டும்; இவர்கள் உள்ளத்தில் தமிழ் உணர்வை ஏற்கவேண்டும்.

காந்தி கொலையின் பின்னணி

 

ஆதாரம் MAY I PLEASE YOUR HONOUR


காந்தி கொலை செய்யப்பட்டதற்கு முழுக்க முழுக்க நானே பொறுப்பு. வீரசவர்க்கார் உள்பட வேறு எவருக்கும் தொடர்பு இல்லை" என்று கோட்சே கூறினார். டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் கோட்சே தொடர்ந்து வாக்குமூலம் அளித்தார். வாக்கு மூலத்தின் பின்பகுதி வருமாறு:-


ஜின்னாவின் இரும்புப்பிடிஎக்கு உள்ளத்தின் முன் காந்திஜியின் ஆத்ம சக்திஅகிம்சைக்கொள்கை அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டன. ஜின்னாவிடம் தம் கொள்கைஒருக்காலும் வெற்றி பெறாது என்று தெரிந்திருந்தும் அவர் கொள்கையை மாற்றிக்கொள்ளாமலேயே இருந்தார்.


தம் தோல்வியையும் அவர் ஒப்புக்கொள்ளவே இல்லை. மற்ற மேதைகள் ஜின்னாவுடன் பேசி அவரை முறியடிக்கவும் வழிவிடவில்லை. இமயமலைப் போன்ற பெரிய தவறுகளைச் செய்த வண்ணம் இருந்தார். நாட்டைப் பிளந்து துண்டு துண்டாக்கியவரைத் "தெய்வம்" என மற்றவர் மதித்தாலும் என் உள்ளம் ஏனோ அவ்வாறு ஏற்றுக்கொள்ள மறுக்கிறதுஅவர் மீது கோபம்தான் வருகிறது.


காந்தியைக் கொன்றால் என் உயிரும் போய்விடும் என்பதை அறிவேன். சிறிதும் சந்தேகம் இல்லாமல் என் எதிர்காலம் பாழாய்ப்போவது உறுதி. பாகிஸ்தானின்ஆக்கிரமிப்பிலிருந்தும் அட்டூழியத்திலிருந்தும் இந்தியா விடுதலையடையும் என்பது என்னவோ உறுதியாகும். மக்கள் என்னை "முட்டாள்" என்று அழைக்கலாம்.அறிவில்லாமல் அண்ணல் காந்தியடிகளைக் கொன்றதாகக் கூறலாம். நம் இந்தியா ஒருபலமுள்ள நாடாகவும்சுதந்திர நாடாகவும் இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.


நம் நாடு வல்லரசாகத் திகழவேண்டுமானால்காந்தியடிகளின் கொள்கையை நாம் கைவிடவேண்டும். அவர் உயிரோடிருந்தால் நாம் அவர் கொள்கைகளிலிருந்து மாறுபட்டுச் செயல்பட முடியாது. நான் இந்த விஷயத்தை நன்கு அலசி ஆராய்ந்த பிறகே அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். ஆனால் நான் அதுபற்றி யாரிடமும் பேசவில்லை. எந்த வகையான யோசனையையும் எவரும் சொல்லவில்லை.


பிர்லா மாளிகையில் பிரார்த்தனை மைதானத்தில் 30_1_1948_ல் காந்தியைச் சுட என் இரு கைகளுக்கும் வலிமையை நான் வரவழைத்துக்கொண்டேன். இனி நான் எதையும் சொல்வதற்கில்லை. நாட்டின் நலனிற்காகத் தியாகம் செய்வது பாவம் எனக் கருதினால் நான் பாவம் செய்தவனாவேன். அது கவுரவம் என்றால் அந்த கவுரவம் எனக்கு வரட்டும்.


நேதாஜி விடுதலைப்போரில்வன்முறையை ஆதரிப்பவர்களை மட்டும் காந்திஜி எதிர்த்தார் என்பதில்லை. அவருடைய அரசியல் கருத்துக்கு எதிரான கருத்துக்கள்உடையவர்களையும் வெறுத்தார். அவருடைய கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மீது அவருக்கு இருந்த வெறுப்புக்கு சுபாஷ் சந்திரபோஸ் ஓர் எடுத்துக்காட்டு. காங்கிரசில் இருந்து சுபாஷ் சந்திரபோஸ் தூக்கி எறியப்படும் வரைகாந்திஜியின் வன்மம் முற்றிலும் அகலவில்லை.


சுபாஷ் சந்திரபோஸ் ஆண்டுகள் நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத் தெரிந்தவரை காந்தி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும் விட நேதாஜியை மக்கள் விரும்பினர்.1945_ல் ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால்இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின் அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ் இந்தியாவுக்கு வெளியில் இறந்துவிட்டார்.


முஸ்லிம்கள் மீது காந்திஜி அதிகமான மோகத்தை வளர்த்துக்கொண்டார். பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம் பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது. அது முஸ்லிம் மனிதாபிமானம். காந்திஜிக்கும்எனக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எவ்வித பகையும் இருந்தது இல்லை. காந்திஜி மீது நான் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளக் காரணம்நம் நாட்டின் மீது நான் கொண்டிருந்த பக்திதானே தவிர வேறு ஒன்றும் இல்லை. பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது,பாகிஸ்தானில் வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால்என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால்விடியும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் படுகொலை செய்யப்பட்ட செய்தியைக் கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள் விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர். இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர். இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள் கூட்டம்நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது. இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்ததுஅவர்களுக்குவிமானத்தில் இருந்து ரொட்டித் துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான்."தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார். அது உண்மையானால் அவர் ஒருதந்தைக்குரிய கடமையிலிருந்து தவறிவிட்டார். பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம் தெரிவித்ததன் மூலம் இந்த தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.


பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல;பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம்இணங்கியிருக்காவிட்டால்நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும்சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான்சுதந்திர நாடானது எப்படிபஞ்சாப்வங்காளம்வடமேற்கு எல்லை மாகாணம்சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும்கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு,அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார்400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை.


சுட்ட பிறகு ஓடுவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. தப்பி ஓடும் எண்ணமும் எனக்கு இல்லை. என்னை சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளவும் முயலவில்லை. கொலை பற்றி நீதிமன்றத்தில் என் உணர்ச்சிகளைக் கொட்டித் தீர்க்கவே விரும்பினேன்.மரியாதைக்குரிய நீதிமன்றம் எனக்கு எந்த தண்டனையையும் விதிக்குமாறுகட்டளையிடலாம். என் மீது கருணை காட்டவேண்டும் என்றும் நான் கேட்கவில்லை.


பிறர் என் சார்பாக கருணை வேண்டுவதையும் நான் விரும்பவில்லை. `கொலைக்கு நானே பொறுப்புஎன்னோடு பலர் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறார்கள். கொலைக்கு சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நான் முன்பே கூறியபடி என் செயலுக்கு கூட்டாளிகள் யாரும் கிடையாது. என் செயலுக்கு நானே முழுப்பொறுப்பு. அவர்களை என்னோடு குற்றம் சாட்டி இருக்காவிட்டால் எனக்காக எந்த எதிர்வாதமும் செய்திருக்கமாட்டேன். வீரசவர்க்காரின் தூண்டுதலில் நான் செயல்பட்டேன் என்று கூறுவதை நான் ஆணித்தரமாக மறுக்கிறேன். அது என் அறிவுத்திறனுக்கு ஏற்படுத்தும் அவமதிப்பாகக் கருதுகிறேன்.

1948 ஜனவரி 17_ந்தேதி சவர்க்காரை பார்த்தோம் என்றும் அவர் "வெற்றியோடுதிரும்புங்கள்" என்றும் வாழ்த்தி வழியனுப்பினார் என்று கூறுவதையும் மறுக்கிறேன். இந்து மதத்தை அழிக்க முயலும் சக்தியை ஒழித்துவிட்டேன் என்ற மன நிறைவு எனக்கு ஏற்பட்டுள்ளது. மானிட வர்க்கத்தின் நலனுக்காகவே இந்தச் செயலை செய்தேன். இந்தச் செயல் முற்றிலும் இந்து தர்மத்தையும்பகவத் கீதையையும் அடிப்படையாகக் கொண்டதுதான். நம் நாடு "இந்துஸ்தான்" என்ற பெயரில் இனி அழைக்கப்படட்டும். இந்தியா மீண்டும் ஒரே நாடாக வேண்டும். இந்திய வரலாற்றை எவ்வித பாரபட்சமும் இன்றி நேர்மையாக எழுதக்கூடிய வரலாற்று ஆசிரியர்கள் எதிர்காலத்தில் உருவானால்,அவர்கள் என் செயலை மிகச்சரியாக ஆராய்ந்துஅதிலுள்ள உண்மையை உணர்ந்து,உலகறியச் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது." இவ்வாறு கோட்சே கூறினார்.

நடிகை என்பதால் தான் மைத்ரியுடன் பழகினேன் - ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா

ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா தன்னை ரகசியமாக  திருமணம் செய்து, ஏமாற்றி கற்பழித்துவிட்டார் என கன்னட நடிகை மைத்ரி பெங்களூர் ஆர்.டி.நகர் போலீஸாரிடம் கடந்த மாதம் புகார் அளித்தார்,  இதையடுத்து, கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து கவுடாவை விசாரணைக்கு அழைத்தனர், ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கார்த்திக் கவுடாவை கைது செய்ய போலீஸார் தேடிவந்த நிலையில், அவருக்கு கடந்த 8-ம் தேதி நீதிமன் றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், கார்த்திக் கவுடா வெள்ளிக்கிழமை காலை 6.15 மணிக்கு பெங்களூர் ஆர்.டி.நகர் காவல் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் பெங்களூர் மாநகர காவல் துறை துணை ஆணையர்  விசாரணை நடத்தினார், அதன் பின் கார்த்திக் கவுடாவை மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை நடத்தினார்கள்.

விசாரணையில் சுமார் 80 கேள்விகள் கேட்கப்பட்டன, இந்த 80 கேள்விக‌ளுக்கும் ஒரே பதிலை சொல்லியுள்ளார் கவுடா, அதில் அவர் குறிப்பிட்டதாவது நடிகை மைத்ரியை தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. தாலி கட்டவில்லை என்றும் அவரது புகார் அனைத்துமே பொய். இதில் அரசியல் சதி இருக்கிறது. எனது தந்தை சதானந்த கவுடாவின் புகழை கெடுக்கும் நோக்கத்தில் இந்த நாடகம் நடத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கார்திக் கவுடா மேலும் சொன்னது என்னவென்றால், நடிகை மைத்ரி கர்நாடகாவில் பிரபலமான திரைப்பட நடிகை, அவர் எனது நண்பர்கள் பலருக்கு அறிமுகமாகி இருந்தார். அந்த வகையில் எனக்கும் தோழி ஆனார். அதனால் அவரோடு சில மாதங்கள் நண்பராக பழகினேன். மற்றபடி, அவர் என்னுடைய‌ காதலி அல்ல. மைத்ரி சொன்னது எல்லாமே பொய். வீடியோ, ஆடியோ மற்றும் புகைப்படங்கள் பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளன" என்றார்.

கார்திக் கவுடாவுக்கு வேறொரு பின்னுடன் நிச்சயம் நடந்ததையடுத்து மைத்ரி புகார் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டு கல்லூரிகளில் இந்தியை திணிக்காதே, மத்திய அரசின் முடிவுக்கு டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு

கல்லூரிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் சுருக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவல் மொழித் துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
அதில்  அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்புகளில் இந்தியும், ஆங்கிலமும் முதன்மைப் பாடமாக கற்றுத்தர வேண்டும்; அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்புகளில் சட்டம், வணிகவியல் ஆகிய பாடங்களை இந்தி வழியில் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு மூலம் நிதி உதவி செய்கிறது என்ற ஒரே காரணத்திற்காக, அவற்றை இந்தித் திணிப்பு கருவிகளாக மத்திய அரசு பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபற்றி மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியதா? என்பதும் தெரியவில்லை. எது எப்படியாக இருந்தாலும் பல்கலைக்கழகங்களின் மூலமாக இந்தியை திணிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
\

பிரிட்டன் பினைக்கைதி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தால் கழுத்தறுக்கப்பட்டு கொலை


ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பிடித்து பினைக்கைதியாக வைத்திருந்த பிரிட்டனை சேர்ந்த  டேவிட் கேதோர்ன் ஹெய்ன்ஸ் (David Cawthorne Haines) என்பவரை முன்பே குறிப்பிட்டிருந்தது போல் கழுத்தை அறுத்து கொன்றார்கள், இது பிரிட்டன் அமெரிக்காவின் கூட்டாளியாக போரில் பங்கேற்பதை எதிர்த்து என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் கூறியுள்ளது, அடுத்தடுத்து தங்களிடம் உள்ள பினைக்கைதிகளை கொல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளது.

வீடியோவில் வெளியான பதிவுகளை காணும் போது இதே இடத்தில் தான் ஏற்கனவே இரண்டு அமெரிக்கர்களும் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டனர் என தெரிய வந்துள்ளது.

செல்போன் பயன்படுத்தியதை வார்டன் கண்டித்ததால் 2 பள்ளி மாணவிகள் தற்கொலை

2 பள்ளி மாணவிகள் பள்ளி வளாகத்தில் ரகசியமாக மொபைல் போனில் பேசியதை கண்ட ஹாஸ்டல் வார்டன் அதை  கண்டித்ததால் மனமுடைந்து 2 மாணவிகள் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

அகர்த்தலாவில் உள்ள தாக்கர்ஜலா உயர்நிலைப் பள்ளி மாணவிகள் தான் இப்படி செய்து கொண்டது.  அந்த பள்ளியில் செல்போன் பயன்படுத்துவது தடை செய்யபப்ட்டுள்ளது, ஆனால் சிமா தெபர்மா, பினா தெபர்மா என்ற இந்த மாணவிகள் ரகசியமாக செல்போனைப் பயன்படுத்தியுள்ளனர்.  இது குறித்து அறிந்த விடுதி வார்டனும் மாணவிகளின் பொறுப்பாளரும் கண்டித்துள்ளனர். இதனால் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இந்த மாணவிகளின் உடலில் எந்த காயமோ கற்பழிப்பு முயற்சிக்கான அடையாளங்களோ இல்லை என்று போலிசார் கூறினாலும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media