BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 23 August 2014

தமிழர்களுக்கு நீதி கிடைக்க இலங்கை அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் - மோடி பேச்சு !!



இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் அடங்கிய 6 நபர் குழு இன்று மோடியை சந்தித்து பேசினர் . அப்போது மோடி அவர்களிடம் , இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு நீதி , வாழ்வுரிமை , சுயமரியாதை ஆகியவை கிடைக்க இலங்கை அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று கூறினார் .


மோடியை சந்தித்த இலங்கை தமிழர்களின் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் , இலங்கை தமிழர்களின் நிலையை விளக்கி கூறினர் .மேலும் இலங்கை அரசு 13வது சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார் . இந்த 13 வது சட்ட திருத்தம் என்பது தமிழர்களுக்கு சம உரிமை அளிக்கும் சட்டமாகும் .


ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்ய மறுத்த நடிகை !! ஏன் மறுத்தார் ??



பிரபல ஹாலிவுட் நட்சத்திரமான பாமீலா அண்டர்சன் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்யப் போவதில்லை என்று பொதுவில் அறிவித்துள்ளார் . ஏ.எல்.எஸ் நிறுவனம் தனது ஆராய்சிகளில் , மிருகங்களை பயன்படுத்துவதால் ஏ.எல்.எஸ்  நிறுவனத்தின் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளார் .

இந்த பிரபலமான சேலஞ்சை இதுவரை பில்கேட்ஸ் , புஷ் என பல பிரபலமானவர்கள் எடுத்துள்ளனர் . ஆனால் பிரபலமான பமீலா அண்டர்சன் இதை எதிர்த்துள்ளதால் அனைவரையும் இதைப் பற்றி யோசிக்க வைத்து உள்ளார் .

இது குறித்து அவர் தெரிவிக்கையில் , " என்னால் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்ய முடியாது . எனக்கு அந்த சவால் பிடித்து இருக்கிறது . சவால்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நானும் விரும்புகிறேன்   அதனால் அந்த மகிழ்ச்சியை உங்களிடம் பறிக்க நான் விரும்பவில்லை . எனினும் யோசித்துப் பார்த்தால் , நம்முடைய செயல்களில் ஒன்று இடிக்கிறது . எனவே நான் ஏ.எல்.எஸ் நிறுவனத்தை விலங்குகளின் மீது பரிசோதனை செய்வதை நிறுத்த சேலஞ்ச் செய்கிறேன் " என்றார் .

பேஸ்புக்கில் உள்ள பேக் ஐடிகளை கண்டுபிடிக்க சில வழிகள்




பேஸ்புக்கில் உள்ள பேக் ஐடிகளில் இருக்கும் சில ஒற்றுமைகள்.

* அவர்களின் சுயவிவர படங்களின் ஒரு போட்டோ மற்றுமே வைத்து இருப்பவர்கள் .

* அந்த நபரின் நண்பர்கள் லிஸ்டை பாருங்கள் , அதில் எதிர் பாலினத்தின் நண்பர்கள் அதிகமாக இருந்தால்.

* பல மாதங்களாக எந்த ஸ்டேடசும் போடாமல், எந்த கமென்டும் செய்யாதவர்கள்.

* தற்போதைய ஆக்டிவிட்டிகளை பாருங்கள், அதில் அதிகம் நண்பர்களை சேர்க்கும் வேலையை மட்டும் செய்தால் .

* தனது பள்ளி மற்றும் கல்லூரிகள் பற்றிய தெளிவான தகவல்கள் இருக்காது.

* அவர்களின் பிறந்த தேதி ஏதாவது பேன்சி எண்ணாக இருக்கும். ஏனென்றால் அது தான் டைப் செய்ய சுலபமாக இருக்கும்.

* ஒரு பெண்ணின் பொரைபைலில் , மொபைல் நம்பர் பொதுவாக ஷேர் செய்யப்பட்டு இருந்தால்

* தனது உறவினர் என்னும் இடத்தில் யாரும் இல்லாமல், தன்னை பற்றிய தெளிவான தகவல்கள் இல்லாமல் இருந்தால்.

* போட்டோக்களில் அதிகப்படியாக கவர்ச்சி போட்டோக்கள் இருந்தால்.

டெல்லியில் கேங் ரேப் செய்யப்பட்ட நிர்பயா பெயரில் ஸ்கூட்டர் வருகிறது





டெல்லி கேங் ரேப் சம்பவம் நாடு  முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ரேப் செய்யப்பட்ட நிர்பயா என்னும் பெண் இதனால் தனது உயிரை இழந்தார். இந்நிலையில் அந்த பெண்ணின் பெயரில் பெண் பாதுகாப்பை உறுதி செய்யும் ஸ்கூட்டர் வர உள்ளது. இதனை ஜப்பானை சேர்ந்த யமாசக்கி என்னும் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த வண்டி விரைவில் மார்கெட்டுக்கு வர உள்ளது. இதன் விலை 35 ஆயிரம் ரூபாய் ஆகும். இது பெண்களுக்கு 10 சதவீத தள்ளுபடியில் வழங்கப்படுகிறது.

இந்த வண்டியில் ஜிபிஆர்எஸ் கனெக்ஷன் வசதியுள்ளது. இதன் மூலம் ஏதேனும் ஆபத்து வந்தால் ஒரு பட்டனை அழுத்தினால், நம் பெற்றோர்களுக்கு மெசஜ் சென்று விடும் . இது வண்டி இருக்கும் இடத்தை சொல்லி விடும். இந்த வண்டியை ஒட்டுவதற்கு லைசன்ஸ் தேவையில்லை. இது 25 கிமீ வேகத்தில் செல்லும்.

மக்களை ஏமாற்றுவதற்காக ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும்




தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு ஏற்பட தொடங்கி விட்டது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 மணி நேரம் வரை மின்வெட்டு இருக்கிறது. கடந்த மே 27 ஆம் தேதி அன்று முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ஜூன் 1 முதல் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்று கூறி இருந்தார். ஆனால் அந்த ஜூன் 1 எப்போது வருமோ என இன்று வரை தமிழர்கள் காத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இது மக்களை ஏமாற்றும் செயல் , எனவே இந்த செயலுக்காக ஜெயலலிதா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து கேட்டால் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல், தமிழகத்தில் மின்வெட்டே இல்லை என மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறுவதாக ராமதாஸ் புகார் கூறியுள்ளார்.

காதலித்து கழட்டி விட்ட பெண்ணை காதலனுடன் திருமணம் செய்து வைத்த நீதிபதி !!



காதலித்து கற்பமாக்கிய பின் , பெண்ணை கழட்டிவிட்ட காதலனை , கண்டித்து மீண்டும் அதே பெண்ணுடன் திருமணம் செய்து வைத்தார் நீதிபதி . இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்துள்ளது .

விழுப்புரம் வடக்கன்தலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் (21) . இவர் அந்த ஊரைச் சேர்ந்த சத்யா (19) என்பவரை காதலித்தார் . இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர் . பாஸ்கர் , சத்யாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசைக் காட்டி அவரிடம் உறவு வைத்து உள்ளார் . இதனால் சத்யா கற்பம் அடைந்ததாக கூறப்படுகிறது .

ஆனால் பாஸ்கர் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார் . எனவே சத்யா பாஸ்கர் மீது மகளிர் காவல் நிலையத்தில் பூகார் செய்துள்ளார் . பாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர் .

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணமூர்த்தி இருவரிடமும் பேசி சமாதானப்படுத்தி , இருவரையும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ள வைத்தார் . எனவே இருவரின் பெற்றோர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடந்தது .


இந்த வாரம் பேஸ்புக்கில் வந்த பொய்யான 3 பிரபலமான பதிவுகள்




கடந்த வாரம் பேஸ்புக்கில் பலரின் கவனத்தை பெற்ற மூன்று பதிவுகள் பொய்யானவை என்று தெரிய வந்துள்ளது. அவை,

* போதைபொருள்களை குறைப்பதற்காக நாம் பேஸ்புக்கில் செய்யும் பதிவுகள், பிறருடன் செய்யும் மெசஜ்கள் ஆகியவற்றை தீவிரமாக கண்காணிக்க போவதாக தகவல்கள் வந்துள்ளது. ஆனால் அது பொய்யான தகவல் என தெரிய வந்துள்ளது.

* இன்று பேஸ்புக் டிரண்டிங்கில் முன்னனியில் இருக்கும் ஐஸ் பக்கெட் சாலஞ்சை செய்யும் போது ஒருவர் உயிரிழந்து விட்டதாக வந்த தகவலும் பொய் ஆகும்.

* மறைந்த ஹாலிவுட் நடிகர் ராபின் வில்லியம்ஸ் இறப்பதற்கு முன் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் என வந்துள்ள வீடியோ பொய்யான வீடியோ என தெரியவந்துள்ளது.

ஐஸ் பக்கெட் சேலஞ்சிற்கு இந்திய கிரிக்கெட் அணியை நாமினேட் செய்த இந்திய ஹாக்கி அணி !!



இப்போது பிரபலமாகி வரும் ஐஸ் பக்கெட் சேலஞ்சை அனைவரும் செய்து வருகின்றனர் . இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியை இந்திய ஹாக்கி அணி நாமினேட் செய்துள்ளனர் .


இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் , சர்தார் சிங் இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்சை செய்து முடித்தார் . முடித்த கையுடன் கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரை நாமினேட் செய்தார் . அவருடன் பாலிவுட் நட்சத்திரம் ஜான் ஆபிரகாமையும் நாமினேட் செய்தார் .

இந்த சேலஞ்சை அவர்கள் செய்யவில்லை என்றால் அந்த நிறுவனத்திற்கு அவர்கள் டோனேஷன் கொடுக்க வேண்டும் .

சர்தார் சிங் மட்டும் இல்லாமல் மொத்த இந்திய ஹாக்கி அணியும் இந்த சேலஞ்சை மேற்கொண்டது . அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியையும் , இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியையும் , ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்ய நாமினேட் செய்துள்ளனர் .


இந்தியாவின் முதல் பயர்பாக்ஸ் ஓஎஸ் மொபைல் , வெறும் 2,299 ரூபாயில் !!


ஸ்பைஸ் தனது முதல் பயர்பாக்ஸ் ஓஎஸ் கொண்ட மொபைலுக்கு விலை 2,299 ரூபாய் நிர்ணயம் செய்துள்ளது . இந்த மொபைலின் பெயர் எம்ஐ - எப்எஸ்1 ( Mi - FX1 ) . இந்த மொபைல் ஆகஸ்டு 29 முதல் விற்பனைக்கு வர உள்ளது .

முதல் கட்டமாக ஸ்னாப்டீல் தளத்தில் விற்பனைக்கு வரும் இந்த மொபைல் , பின்னர் இரண்டாவது கட்டமாக ஸ்பைஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் விற்பனை செய்யப்படும் .

இரண்டு சிம் களை பயன்படுத்தும் வசதி கொண்ட இந்த மொபைலில் , 2எம்பி பின் கேமராவும் , முன்னே 1.3 எம்பி கேமராவும் இருக்கிறது . 3ஜி வசதி இல்லை . ஆனால் புளூடுத் மற்றும் வைபி வசதி இருக்கிறது . இந்திய மொழிகளைப் பயன்படுத்தும் வசதியும் இருக்கிறது .

மேலும் இன்னொரு இந்திய நிறுவனமான இண்டெஸ் நிறுவனம் ஆகஸ்டு - 25 ஆம் தேதி பயர்பாக்ஸ் ஓஎஸ் கொண்ட மொபைலை வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

கிரிக்கெட் ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய வார்த்தை



கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சில் நாம் அனைவருக்கும் தெரிந்த வார்த்தை தூஸ்ராவும், கேரம் பாலும். இது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்க்கும் தெரிந்த வார்த்தைகள். இந்நிலையில் ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லையன் புதிய பந்துவீச்சு முறையை அறிமுகம் செய்ய உள்ளார். இதற்காக அவர் இலங்கை வீரர் முத்தையா முரளிதரனிடம் பயிற்சி பெற்று வருகிறார். இது ஜெஃப் என்னும் ஒரு ஸ்டலை போல் இருக்கும் . இதற்கு  லையானே பெயர் வைக்க உள்ளார்.

போட்டி விஜய்க்கும் - அஜித்துக்கும் இல்லை, அஜித்துக்கும் - ரஜினிக்கும் தான்




இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக தான் இருக்கும். எந்திரன் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் 50 கோடி ஆகும். அவர் தான் ஒட்டுமொத்த இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டார். இவரது படங்களை பார்ப்பதற்கு உலகமே காத்து கொண்டு இருக்கிறது. சூப்பர் ஸ்டாருக்கு அடுத்த இடத்தில் தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் யார் என்றால் அது தல அஜித்தும், இளைய தளபதி விஜய்யும் தான். இவர்கள் இருவர் இடையே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்கிற போட்டி நடைபெற்று வருகிறது.

ஆனால் போட்டி இப்போது அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டது. தலயா தளபதியா என்னும் நிலை மாறி தலயா சூப்பர் ஸ்டாரா என்னும் நிலைக்கு வந்து கொண்டு இருக்கிறது. கடைசியாக அஜித்துக்கு வெளிவந்த ஆரம்பம் மற்றும் வீரம் படங்கள் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தன. தற்போது அவர் நடித்து வரும் படத்தில் அவருடைய சம்பளம் 40 கோடி , அதில் 12 கோடியை வரியாக செலுத்தி விட்டார். அவரது அடுத்த படத்துக்கு ஏ.எம். ரத்னம் 50 கோடி கொடுப்பதாக கூறி உள்ளார்.

அது நடந்தால் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக அஜித் மாறுவார். சூப்பர் ஸ்டார் என்னும் இடத்துக்கு அவர் செல்லும் காலம் இன்னும் வெகு விரைவில் உள்ளது என்பதை இது காட்டுகிறது.


விரைவில் வருகிறது விண்டோஸ் - 9 !!



மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் - 9 வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிடப்படலாம் என்று செய்திகள் வருகிறது .

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து வந்த செய்திகளின் படி அந்த நிறுவனம் பெரிய செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை செப்டம்பர் கடைசி வாரத்தில் நடத்த இருப்பதாகவும் , அந்த சந்திப்பில் விண்டோஸ் - 9 ஓ.எஸ் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

விண்டோஸ் - 9 ஓ.எஸ் தொகுப்பில் மொபைலில் மட்டுமே இருந்து வந்த மொபைல் அசிஸ்டண்ட் ஆன கோர்டனா , இந்த புதிய ஓ.எஸ் இல் இடன் பெற இருக்கிறது . மைக்ரோசாப்ட் நிறுவனம் டெஸ்க்டாப் பயனாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

ஹனிமூன் செல்வதற்கு இந்தியாவின் சிறந்த 10 இடங்கள்



* ஷிம்லா (ஹிமாச்சல் பிரதேஷ்)




* கூர்கு (கர்நாடகா)




* ஸ்ரீநகர் (ஜம்மு காஷ்மீர்)




* டார்ஜிலிங் (மேற்கு வங்கம்)




* பேக்வாட்டர்ஸ் (கேரளா)




* ஊட்டி (தமிழ்நாடு)




*நைனிடால் (உத்தரகண்ட்)




* ஜைசல்மர் (ராஜஸ்தான்)




* கோவா 




* லக்க்ஷதீப்



மாணவர்களை கத்தியால் குத்த ஓட ஓட விரட்டிய சம்பவம் ; சென்னையில் பரபரப்பு !!



சென்னையில் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் , நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் சண்டை ஏற்பட்டு , சண்டை பெரிதாகி மாணவர்கள் கத்தியால் குத்த ஓட ஓட விரட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது . இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணி அளவில் மாநிலக் கல்லூரி மாணவர்களுக்கும் , நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் , அண்ணாசாலை கேசினோ தியேட்டர் அருகில் பிளாக்கர்ஸ் ரோடு சந்திப்பில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது .வாக்கு வாதம் பெரிதாகி , இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது .

இதனையறிந்த போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர் . ஆனால் சண்டை பெரிதாகி , நந்தனம் கலைக் கல்லூரியைச் சேர்ந்த 7 மாணவர்கள் கையில் கத்தியுடன் மாநிலக் கல்லூரி மாணவர்களை துரத்தினர் . இந்த சம்பவம் அண்ணாசாலை ரோட்டில் நடந்ததால் பொது மக்கள்  பீதி அடைந்தனர் .

ஆனால் துணிந்து செயல்பட்ட காவல் துறையினர் , மாணவர்கள் மேலும் அசாம்பாவிதத்தில் ஈடுபடாமல் இருக்க அவர்களை துரத்திச் சென்றனர் . இதனால் மாணவர்கள் கலைந்து தப்பி ஓடினர் . ஆனால் காவல்துறையினர் ஒரு மாணவரை பிடித்துச் சென்றனர் . பார்த்தசாரதி என்ற அவரிடம் இருந்து 2 அடி நீள கத்தியை பறிமுதல் செய்தனர் .

அவரின் மற்ற 6 நண்பர்களை தேடும் பணியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர் .

சோதனை ஓட்டத்தின் போது வெடித்து சிதறிய ஸ்பெஸ்-எஃஸ் ராக்கெட் !!



வாஷிங்டன் நகரில் மெக் கிரஹர் என்னும் இடத்தில் ஸ்பெஸ்-எஃஸ் நிறுவனம் தனது ஸ்பெஸ்-எஃஸ் ராக்கெட்டை சோதனை செய்யும் போது நடு வானில் வெடித்து சிதறியது . ஆனால் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை .

அந்த நிறுவனம் தன்னுடைய மூன்று இஞ்சின்களை கொண்ட F9R என்னும் வாகனத்தை சோதனை செய்யும் போது இது நடந்தது . இந்த ராக்கெட் தன்னுடைய நிறுவனத்தின் கிராஸ்ஹொப்பர் என்னும் ராக்கெட்டின் முந்தைய வெர்ஷன் .

இது குறித்து அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் , " சோதனையின் போது ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டது . நாங்கள் அடுத்த சோதனை செய்யும் முன்னர் அனைத்து பிரச்சனைகள் சரி செய்து விடுவோம் " என்றார் .

 விண்வெளி வீரர்களை விண்ணிற்கு அழைத்துச் செல்லும் முதல் தனியார் நிறுவனம் ஆவதற்கு  ஸ்பெஸ்-எஃஸ் நிறுவனம் போயிங் , சிர்ரா நெவடா , ப்ளூ ஒரிஜின் ஆகிய நிறுவனங்களுடன் போட்டியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .




பெரிய பிரச்சனை ஆகிறது கோலி - அனுஷ்கா ஷர்மா காதல் விவகாரம்





சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து உடனான தொடரில் இந்திய அணி 3-1 என படுதோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது விராத் கோலியின் பேட்டிங் சொதப்பல் தான் என கூறப்படுகிறது. விளையாடிய 5 டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் கூட விராத் சரியாக ஆடவில்லை. இந்த தொடரில் அவர் அடித்த ரன்களை விட உபரி மூலம் வந்த ரன்கள் அதிகமாக இருந்தது. கோலியின் இந்த பேட்டிங் சொதப்பலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அனுஷ்கா ஷர்மா என்று ஒரு கூட்டம் சொல்லி வருகிறது.

இங்கிலாந்து உடனான முதல் 3 டெஸ்ட் வரை அனுஷ்கா சர்மா கோலியுடன் இருந்துள்ளார். இதற்காக அவர் பிசிசிஐ யிடம் அனுமதி வாங்கியுள்ளார். இது குறித்து இந்திய அணியின் நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்ற நாட்டு வீரர்கள் கூட வெளிநாட்டு போட்டிகளுக்கு செல்லும் போது தங்கள் காதலியை தங்களுடன் அழைத்து செல்கிறார்கள். ஆனால் நம் கலாச்சாரம் என்பது வேறு. எனவே பிசிசிஐ இதனை அனுமதிக்க கூடாது என கூறியுள்ளார்.

செல்பி எடுப்பதற்கு என புதிய மொபைல் வந்துள்ளது




இன்றைய உலகில் எல்லாரும் செல்பி போட்டோக்களுக்கு அடிமையாகி வருகிறார்கள். இப்போது எல்லாம் தங்களை போட்டோ எடுப்பதற்கு யார் உதவியையும் நாடுவதில்லை. அவர்கள் மொபைலில் முதன்மை கேமரா இருந்தால் போதும். அதன் மூலம் அவர்களே எடுத்துக் கொள்வார்கள். எனவே இப்போது வரும் மொபைல்கள் எல்லாம் முன் உள்ள கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இந்நிலையில் கார்பன் நிறுவனம் செல்பி எடுப்பதற்கு என்றே புதிய மொபைலை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் கார்பன் டைட்டானியம் எஸ் 19 .இதன் விலை ரூ. 8,999 ஆகும். இதன் பின் கேமரா 13 மெகா பிக்சளும், முன் கேமரா 5 மெகா பிக்சளும் கொண்டவையாகும். 5 இன்ச் ஸ்கிரின் கொண்ட இந்த மொபைலில் செல்பி போட்டோக்கள் அருமையாக வருகின்றன.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media