BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 12 September 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

செக்ஸ் உறவு கொள்ள சாதகமான நாள் எது? வியாழனா? வெள்ளியா? சனியா? ஆய்வு முடிவுகள்
http://www.satrumun.net/2014/09/which-is-good-day-to-have-love.html

சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் சட்ட விரோத கிரானைட், மணல் குவாரிகளை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
http://www.satrumun.net/2014/09/hc-ordered-saghyama-ias-should-review.html

பாஜகவில் சேர்ந்து அரசியலில் குதிக்கும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ?
http://www.satrumun.net/2014/09/yuvraj-singh-to-take-part-in-bjp-campaign.html

விபச்சாரத்தில் புது டெக்னிக் - கணவன் மனைவி போல வாடகைக்கு வீடு எடுத்து சென்னை புறநகரில் விபச்சாரம்
http://www.satrumun.net/2014/09/husband-wife-house-for-rental-in.html

ஃபேஸ்புக் நண்பரை பர்த்டே பார்ட்டிக்கு அழைத்து அடித்து உதைத்து கொள்ளயடித்த 5 பேர் கைது.
http://www.satrumun.net/2014/09/facebook-friends-snatch-watch-money-and.html

அது நான் இல்லீங்கோ… : ‘விபச்சார நடிகை’ விவகாரத்தில் ஸ்ரீதிவ்யா அலறல்!
http://goo.gl/4RgcFY

‘கத்தி’ படத்தை ஏன் எதிர்க்கிறாங்க தெரியுமா..? : சொல்கிறார் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா
http://goo.gl/FmdQvB

என்னிடத்தில் அரசாங்கமே இல்லையே, 6 பேருடன் ஆரம்பித்த மீட்பு பணி, காஷ்மீர் பேரழிவு குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா
http://www.satrumun.net/2014/09/jammu-and-kashmir-flood-i-had-no.html

கத்தி,புலிப்பார்வை படங்களை திரையிட விடமாட்டோம்
http://www.satrumun.net/2014/09/blog-post_16.html

திருக்குறள் கூறும் இல்லறம்
http://www.satrumun.net/2014/09/blog-post_74.html

சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு
http://www.satrumun.net/2014/09/blog-post_43.html

கேரளாவில் பார்களை மூட செப்.30 வரை அரசுக்கு உச்ச நீதிமன்றம் தடை
http://www.satrumun.net/2014/09/sc-ordered-untl-sep-30-kerala-bars-can.html

93-ஆவது நினைவு தினம்: மகாகவி பாரதி
http://www.satrumun.net/2014/09/93.html

அணு ஆயுதங்களை மேம்படுத்த ரஷியா முடிவு
http://www.satrumun.net/2014/09/blog-post_86.html

பர்வேஸ் முஷாரஃப் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு
http://www.satrumun.net/2014/09/blog-post_33.html

விமான நிலையத்தில் போலீஸார் விட்டுச் சென்ற வெடிபொருட்கள், ஒப்படைத்த பெண் பயணி
http://www.satrumun.net/2014/09/blog-post_62.html

பெண்களுக்கு செக்ஸ் மூட் வர 237 காரணங்கள் இருக்கின்றதாம், சில காரணங்கள் இங்கே
http://www.satrumun.net/2014/09/women-get-romance-mood-for-237-reasons.html

அரசியலில் குதிக்க உள்ளாரா கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ??



வருகிற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராக் சிங் பாஜக சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வருகிறது .

ஹரியானவின் சந்திகார் இடத்தில் இருந்து கிரிக்கெட்டில் பிரபலமானவர் யுவராஜ் சிங் . ஹரியானாவில் இன்னும் தனது ஆதிக்கத்தை பாஜக கட்சியால் நிலை நிறுத்த முடியவில்லை . எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எப்படியேனும் ஹரியானாவை தன் கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து வரிகிறது . இதில் ஒரு முயற்சியாக கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை தேர்தல் பிரச்சாரத்தில் இறக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது . இதற்காக தான் யுவராஜ் பாஜக தலைவர் அமித் ஷாவை இன்று சந்தித்ததாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகிறது .

ஹரியானா மற்றும் மஹாராஷ்ட்ரா மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது . ஹரியானாவில் 90 தொகுதிகள் உள்ளது .

கத்தி,புலிப்பார்வை படங்களை திரையிட விடமாட்டோம்


'கத்தி', 'புலிப்பார்வை' படங்களை திரையிட விடமாட்டோம் என 65 அமைப்புகள் இன்று சென்னையில் அறிவித்தது. தமிழர் வாழ்வுரிமைக்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 65 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் 'கத்தி' மற்றும் 'புலிப்பார்வை' படங்களை திரையிட விடமாட்டோம் என்ற அறிவித்தார்கள். இந்த இரு படங்களை ஏன் எதிர்க்கிறோம் என்று கூட்டாக அறிக்கை ஒன்றிணை வெளியிட்டார்கள். அந்த அறிக்கையில்... 'புலிப்பார்வை' படத்தில் பாலசந்திரன் போராளியாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறார். இது உண்மைக்கு மாறானது. மேலும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்த் திரையுலகில் ஐங்கரன் கருணாவை அனைவரும் அறிவர். ஆனால் அவருடன் மெல்ல மெல்ல லைக்கா என்ற நிறுவனம் இணைந்து கோடம்பாகத்தில் கால்பதித்தது. அத்துடன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'கத்தி' திரைப்படத்தை தயாரிக்கிறது லைக்கா நிறுவனம். 

இந்த தகவல்கள் வெளியானது முதலே லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சே குடும்பத்துக்குமான உறவுகள் என்ன என்பது குறித்து நீண்ட பட்டியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. லைக்கா நிறுவனமே இந்தியாவில் இல்லை என்று சொன்னபோது சென்னையிலே அதன் அலுவலகம் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. ராஜபக்சேவிற்கு மிகவும் நெருக்கம் கொண்டவர் தான் சுபாஸ்கரன் என்பது உலகத் தமிழினம் அறியும். முருகதாஸ், விஜய் என்ற தமிழர்கள் செய்யும் இனத்துரோகத்தை யாராலும் ஏற்க முடியாது. ராஜபக்சேவுடன் யார் கை குலுக்கினாலும் மன்னிக்க முடியாது. இப்படி புலிப் பார்வை, கத்தி போன்ற திரைப்படங்கள் தமிழினத்தின் உளவியல் சிந்தனை மீது நடத்தப்படுகிற போரின் வெளிப்பாடே! சிறீலங்காவை புறக்கணிப்போம், அதன் மீது பொருளாதார தடைவிதிப்போம்! என்ற முழக்கம் தமிழகத்திலும் உலகெங்கிலும் எழுந்து வரும் நிலையில் தமிழகத்துக்குள்ளேயே சிங்களம் தலை நுழைத்து தொழில், வணிகம் செய்கிற முயற்சியை தமிழர்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. சிங்களத்தின் உளவியல் போரை வெல்ல தமிழர்களாய் ஓரணியில் ஒன்று திரள்வோம்! " என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கணவன் மனைவி போல வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் - சென்னை புறநகரில் புதுடெக்னிக்


விடுதிகளில் விபச்சாரம் நடத்துவதால் அடிக்கடி போலிஸ் ரெய்டில் சிக்க வேண்டியுள்ளது என்பதால் விபச்சார கும்பல்கள் புது புது டெக்னிக்குகளை கையாளுகின்றது, சமீபத்தில் சென்னை புறநகர் பகுதிகளில் கணவன் மனைவி போல வந்து வீடு வாடகைக்கு என்று தொங்கும் வீட்டு உரிமையாளர்களை அணுகி அவர்கள் கேட்கும் வாடகையை தந்து வீடு எடுத்துவிடுகின்றார்கள், அதன் பின் அங்கே விபச்சாரம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள், குடியிருப்பு பகுதியில் கணவன் மனைவி போல தங்கியிருப்பதாலும் சென்னை போன்ற நகரங்களில் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை கண்டு கொள்ளாமல் இருப்பதும் இவர்களுக்கு சாதகமாகி விடுகின்றது.

சில நாட்களுக்கு முன் தாம்பரத்தில் கணவன் மனைவி போல வந்து வீடு வாடகைக்கு எடுத்து விபசார விடுதி நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த மும்பை அழகிகள் 2 பேர் மீட்கப்பட்டனர். மேற்குதாம்பரம் சி.டி.ஓ காலனி சாய்நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு அதிக ஆண்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, இதையடுத்து பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் உத்தரவின்பேரில் தனிப்படையினர் அங்கு சோதனை செய்தனர். அப்போது கணவன் மனைவி போல நடித்து வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதில் விபசார கும்பல் தலைவன் குணா என்பவர் தப்பி சென்றுவிட்டார்.அவரது கூட்டாளி செந்தில் (வயது 46) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருக்குறள் கூறும் இல்லறம்


உலகமே வியந்து பாராட்டும் தமிழ் மறையின் சிறப்பியல்புகளை இன்றைய சூழ்நிலைக்கு ஆராய முற்படுவது, முழு நிலா நாள் அன்று இரவு, முழு நிலாவின் வனப்பினை ஆய்தற்கு ஒப்பாகும்.
தமிழ்மறை
"கடுகைத் துளைத்து", "அணுவைத் துளைத்து" என்றெல்லாம் இரண்டே அடிகளில் வாழ்க்கை நெறிமுறைகளைத் தொகுத்துக் கொடுத்த திருக்குறளைக் கரும்பு சுவைப்பது போல் சுவைத்து மகிழ்ந்தனர் பழந்தமிழர். கொற்கைத் துறைமுகத்தில் முத்துகளை அள்ள அள்ள மகிழ்ச்சிக்குக் குறைவுண்டோ? 1330 குறட்பாக்களும், 1330 முத்துகளே. இவற்றை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என 4 சரங்களாகக் கோர்த்து சேர்த்து புடம் போட்ட சங்கிலியே எங்கள் குறள். இதை மனதில் கொண்டே "யாமறிந்த புலவரிலே, கம்பரைப் போல், வள்ளுவரைப் போல், இளங்கோவைப் போல், புவிதனிலே, யாங்கணுமே கண்டதில்லை" என்றும், "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்றும் கூறி வள்ளுவர் புகழ் வானோங்கி நிற்கிறது. குமரிமுனையில் 133 அடி உயரமாக உலகிற்கே சாதி சமய இனமொழி வேறுபாட்டைக் களைந்து நிற்கும் ஒரே தலைவராய் பறை சாற்றுகிறார் தெய்வப்புலவர்.
இன்றைய சூழல் வள்ளுவர் கண்ட சமுதாயத்தையும் இன்றைய சூழலையும், ஒப்பிடவே மனம் கூசும் அவல நிலையே இன்றைய நிலை.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் - - - (குறள். 13)

என்ற வள்ளுவர் வாய்மொழி எங்கோ ஒளிந்துகொண்டு விட்டது. பள்ளிச்சிறார்கள் முதல் அறிஞர்கள், அரசு அலுவலகர்கள் உயர் அதிகாரிகள் வரை தத்தம் பொது வாழ்விலும் தனிவாழ்விலும் ஒழுக்கத்தைத் தெரிந்தே புறக்கணிக்கின்றனர்.
புறந்தூய்மை நீரான்அமையும் அகத்தூய்மை
வாய்மையால் காணப் படும் - - - (குறள். 298)

என்கிறது வள்ளுவம். "வாய்மையே வெல்லும்" என்னும் பழமொழி, பழைய மொழியாகிவிட்டது. மனத்தூய்மையை அறவே குலைக்கும் திரைப்படங்கள், வன்முறை, கொலை, கொள்ளை, கற்பழிப்புக் காட்சிகளையே முறைப்படுத்தும் தொலைக்காட்சித் தொடர்கள் மக்களைத் துயர்க்குழியில் ஆழ்த்துகின்றன. ஆபாச வார இதழ்களும், செய்தித் தாள்களும் இவற்றிற்குத் துணைபுரிகின்றன. அரசியல் நாகரீகம் பற்றி எழுதவே கூறுகிறது. வள்ளுவர் கண்ட அரசு, மக்களுக்காக மக்களால், மக்களிடையே கண்ட அரசு. சுருங்கக்கூறின், நாடு தூய்மை பெற இனி எத்தனை காந்தியடிகள் பிறந்தாலும், சென்ற காலங்கள் இனி வருமோ?
வள்ளுவத்தில் இல்லறம்
அறம், பொருள், இன்பம் என்ற 3 தலைப்புகளில் வள்ளுவர் காட்டிய நெறிகளில், மொத்தம் 113 அதிகாரங்களிலும், 20 அதிகாரங்களில் கூறப்பட்ட இல்லற அறமே மிக மாண்புடையதாய்க் காணப்படுகிறது. அதை ஈண்டு நோக்குவோம். வள்ளுவரின் இல்வாழ்க்கைத் துணைவியார் வாசுகி அம்மையார் வள்ளுவரின் இல்வாழ்க்கையில் இருந்து இரு நிகழ்ச்சிகளை அறிஞர்கள் உதாரணம் காட்டுவர். ஒரு சமயம் வாசுகி அம்மையாரை வள்ளுவர் அழைத்துச் சிறு இரும்புக் கோளங்களைக் கொடுத்துச் சோறாகச் சமைத்து வரச் சொன்னாராம். அம்மையார் தன் கணவனே தன் கற்பை சோதிப்பது கண்டு வருந்தி இறைவனை வேண்டி, இரும்புக் கோளங்களை உலையில் இட, அவை சோறாய்க் கொதித்தன என்பர்.
மற்றொரு நிகழ்ச்சி, கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தார் அம்மையார். அதுபோது கணவர் அழைக்கவே, கயிற்றை நீர்க்குடத்துடன் விட்டு விரைந்து ஓடினார். திரும்பி வந்து பார்த்தபோது நீர்க்குடம், கீழே இறங்காமல், அம்மையார் விட்டுச் சென்ற இடத்திலேயே நின்றிருந்ததாம். என்னே கற்பின் உயர்வு!
இருபது அதிகாரங்களில், இருநூறு பாக்களில் இல்லற வாழ்க்கையின் உயர்வை வள்ளுவர் படம்பிடித்துச் சித்திரிக்கிறார். இல்வாழ்க்கை, வாழ்க்கைத் துணை நலம், மக்கட்பேறு, அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல் எனத் தொடங்கித் தீவினையச்சம், ஒப்புரவறிதல், ஈகை, புகழ் என ஒவ்வொன்றிலும் தனிமனிதன் இல்லற வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம், அடக்கம், பிறன்மனை நோக்காப் போராண்மை, விருந்தோம்பல் என வள்ளுவர் அடுக்கிய அதிகாரங்கள், குறட்பாக்களின் பெருமைகள் சொல்லில் அடங்கா.
தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து
முந்தி இருப்பச் செயல் - - - (குறள். 67)

என்ற குறளில் தந்தையின் கடமையையும், அடுத்தே
மகன்தந்தைக் காற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல் - - - (குறள். 70)

என்ற குறளில் தந்தை - மகன் கடமையையும் உலகில் எந்தமொழி, எந்த இலக்கியம் வழங்கியுள்ளன?
தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று - - - (குறள் 236)

எனச் சிறப்பாக முடிக்கிறார்.
தற்கால இல்லறம்
மேலை நாட்டு நாகரிகம் தமிழர் பண்பாட்டை வேகமாக மூடி வருவதைக் கண்கூடாகக் காண்கிறோம். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, நிறை, பேதமை, என ஆறு அணிகலன்களையே அணிந்த தமிழ்ப் பெண்கள் இன்று அழகிப் போட்டிகளின் அணிவகுப்பில் பங்கேற்பது தலைகுனிய வேண்டிய ஒன்று. மணம் முடிந்தபின்பே கணவனுடன் கூடி இல்லறம் நடத்துதல் என்பது கனவாகி விடுமோ? விவாகரத்து, மகளிர்க்கு இழைக்கப்படும் கொடுமைகள் விதவைத் திருமணங்கள் மலிந்து வருகின்றன. பெண் கற்பு இவ்வாறு இருக்க ஆண் கற்பும் இழி நிலைக்கே தள்ளப்பட்டுள்ளது. ஒருவனுக்கு ஒருத்தியே என்ற நெறி மாறி வருகிறது. இந்நிலை தொடருமே ஆகில், அமெரிக்காவிற்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன வேறுபாடு என்ற ஐயமே எழும்.
இறுதியாக
பாட்டுக்கொரு புலவன் பாரதி கண்ட புதுமைப் பெண் இன்றைய தமிழ்மகள் இல்லை. பாரதியோ, பாரதிதாசனோ, புதுமைக் கவிஞர்கள் தாம். இவர்கள் தமிழ்ப் பெண்டிரை அழகிப் போட்டிகளில் மேடை ஏறச் சொல்லவில்லையே. மேலை நாடுகளில் இருந்து விஞ்ஞான வளர்ச்சி, நாகரீகம் தொழில், பொருளாதார முன்னேற்றத்துடன் நாம் நிறுத்திக் கொள்ளலாம். தமிழர் பண்பாட்டின் முத்திரை மங்கவே விடக் கூடாது. தமிழ்நாட்டில் அருந்ததிகள், வாசுகி அம்மையார்கள், கண்ணகிகள் பெருகித் தமிழ்ப் பெண்டிர் சிறப்பு உலகம் எங்கும் தெரியட்டுமே.

செக்ஸ் உறவு கொள்ள சாதகமான நாள் எது? வியாழனா? வெள்ளியா? சனியா? ஆய்வு முடிவுகள்


இன்று கணவன் மனைவி இருவருமே வேலை பார்க்கின்றனர், இந்த சூழலில் வார நாட்களில் கடுமையான வேலைகளினால் பெரும்பாளும் தம்பதிகள் செக்ஸ் வைத்துக்கொள்வதில்லை, வேறு எப்போது செக்ஸ் வைத்துக்கொள்ள சாதகமாக அமைகிறது என்று கண்டறிய செக்ஸ் பொம்மை நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியது.

3 ஆயிரம் தம்பதிகளிடம் எடுக்கப்பட்ட இந்த சர்வேயில் செக்ஸ் வைத்துக்கொள்ள சாதகமான நாளாக இந்த தம்பதிகள் குறிப்பிட்டது சனிக்கிழமை இரவையே.  44 சதவீதம் பேர் செக்ஸ் வைத்து கொள்ள  சனிக்கிழமையே சாதகமானது என தெரிவித்து உள்ளனர். ஞாயிற்றுக்கிழமையை 24 சதவீதத்தினரும்  வெள்ளிக்கிழமையை 22 சதவீதத்தினரும் தேர்வு செய்து உள்ளனர்.

வேலை நாளாக இருந்தாலும் பிற வேலை நாட்களை விட வியாழன் இரவில் அதிக அளவில் தம்பதிகள் செக்ஸ் உறவில் ஈடுபடுகின்றனர், இது ஏன் என்றால் வார இறுதியை நெருங்குவதால் அந்த வாரத்திற்கான அலுவலக வேலைகளை முடித்து ஓரளவு ரிலாக்ஸ் ஆகிவிடுவதாலும் வார இறுதி நாட்களின் போது செக்ஸ் உறவு கொள்வோம் என்ற நினைப்புமே வியாழன் இரவே செக்ஸ் உறவு கொள்ள தூண்டிவிடுகிறது.

சகாயம் ஐ.ஏ.எஸ் தலைமையில் சட்ட விரோத கிரானைட், மணல் குவாரிகளை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு



23 ஆண்டுகளில் 23 டிரான்ஸ்பர், 48 மணி நேரத்தில் 2 முறை டிரான்ஸ்பர் என நேர்மையாக அதிகாரி சகாயம் பந்தாடப்படுவது சகஜமான ஒன்று, மதுரை கலெக்டராக இருந்த போது சகாயம் எடுத்த கடும் நடவடிக்கைகளினால் பல்லாயிரம் கோடி கிரானைட் மோசடிகள் வெளியாகின, சகாயம் மதுரையிலிருந்து தூக்கி கோ-ஆப்டெக்ஸ் தலைவராக மாற்றப்பட்டார், அங்கேயும் சிறப்பாக பணியாற்றி கடைசியில் தற்போது பெயர் அறியாத துறையின் தலைவராக உள்ளார்.

இந்நிலையில் டிராபிக் ராமசாமி அவர்கள் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு செய்திருந்தார், அதில் தங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியைத் தாண்டி தமிழ்நாடு முழுவதும் குவாரி உரிமையாளர்கள் பலர் சட்ட விரோதமான முறையில் கிரானைட், மணல் போன்ற கனிம வளங்களை தோண்டி எடுக்கின்றனர் மேலும் அரசு புறம்போக்கு நிலங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தனியார் பட்டா நிலங்கள் என பல இடங்களில் சட்ட விரோதமான முறையில் கனிம வளங்கள் வெட்டி எடுக்கின்றனர்.

தமிழ்நாட்டில் நடைபெறும் சட்ட விரோத கனிம குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பல ஆண்டுகளாக நான் கோரிக்கை விடுத்து வருகிறேன். எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தமிழ்நாடு முழுவதும் செயல்படும் சட்ட விரோத கனிம குவாரிகள் பற்றி ஆய்வு நடத்தி, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமனம் செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா ஆகியோர்  தமிழ்நாட்டில் உள்ள கனிம குவாரிகளின் செயல்பாடுகள் பற்றி ஆராய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயத்தை சட்ட ஆணையராக நியமனம் செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் ஏற்கெனவே ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளார். எனவே இந்த விவகாரம் குறித்து ஆராய அவரை சட்ட ஆணையராக நியமிப்பதே பொருத்தமானது என நாங்கள் கருதுகிறோம்.என்றும் குறிப்பிட்டனர், சகாயம் கனிம குவாரிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, குவாரிகளின் செயல்பாடுகள் தொடர்பான அறிக்கையை 2 மாத காலத்துக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவருக்குத் தேவையான உதவிகளை காவல் துறையினரும், அதிகாரிகளும் வழங்கிட வேண்டும்  என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

# லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்

ஃபேஸ்புக் நண்பரை பர்த்டே பார்ட்டிக்கு அழைத்து அடித்து உதைத்து கொள்ளயடித்த 5 பேர் கைது.


நாமக்கல் மாவட்டம், திருச்சங்கோடு அருகிலுள்ள பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் கணேஷ்.இவர் பேஸ்புக்கில் மிக ஆர்வமாக செயல்பட்டு நண்பர்கள் தொடர்புகளை ஏற்படுத்தி வந்தார், இப்படி பேஸ்புக்கில் அறிமுகமான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த ராஜா என்கிற இளையராஜா என்பவரிடம் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில், இளையராஜாவும் அவரது நண்பர்கள் ஐந்து பெரும் சேர்ந்து தங்களுடைய பிறந்த நாள் பார்ட்டிக்கு வருமாறு கணேசை சத்தியமங்கலத்துக்கு கூப்பிட்டுள்ளனர்.

இதனை நம்பிய கணேஷ் புதன்கிழமை சத்தியமங்கலம் சென்றுள்ளார். அங்குசென்ற கணேஷை, இளையராஜா, கார்த்தி, சவுந்தர், மாரிமுத்து, ஹரிஹரன் ஆகிய ஐந்து பேரும் சந்தித்துள்ளனர். இளையராஜாவுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார் கணேஷ்.

பின்னர் நண்பர்கள் 6 பேரும் மாரனூர், கீழ்பவானி வாய்க்கால் பாலம் அருகே உள்ள ஒரு இடத்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு சென்றதும் பேஸ்புக் நண்பர்கள் ஐவரும் சேர்ந்து கணேசை மிரட்டி, அவரிடமிருந்து பணம் ரூபாய் 1000, அரை பவுன்மோதிரம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறித்துக் கொண்டனர். மேலும், இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்றும் மிரட்டி அங்கிருந்து கை செலவுக்கு நூறு ரூபாய் பணத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து கணேஷ் சத்தியமங்கலம் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், சம்பவத்தில் தொடர்புடையை 5 பேரையும் காவல் துறையினர் கைது செய்து, சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

சென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் எம்.சி.ஏ., எம்.எஸ்சி.(ஐடி), நூலக பட்டயப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (செப்.12) வெளியிடப்பட உள்ளது.

தேர்வு முடிவுகளை www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். தேர்வு மதிப்பெண் மறுமதிப்பீடுக்கு நடப்பு ஆண்டு மாணவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீடு கட்டணமாக தாள் ஒன்றுக்கு ரூ. 750 கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு விண்ணபிப்பவர்கள் www.ideunom.ac.in இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு செப்டம்பர் 19 கடைசித் தேதியாகும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் பார்களை மூட செப்.30 வரை அரசுக்கு உச்ச நீதிமன்றம் தடை


கேரள மாநிலத்தில் ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு குறைவான  ஓட்டல்களில் இயங்கி வரும் பாருடன் கூடிய மது விற்பனை கடைகளை மூடும் கேரள அரசின் உத்தரவுக்கு இம்மாதம் 30-ஆம் தேதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்த வழக்கு புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கருத்து தெரிவித்த நீதிபதி அனில் ஆர்.தவே, "மதுபான விடுதிகளின் தடையின் பின்னணியில் எவ்விதமான அர்த்தமு இல்லை. எனக்கு மதுப்பழக்கம் கிடையாது, அப்படியிருந்தும் எனக்கும்கூட கேரள அரசின் இந்த முடிவில் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. பார்களை மூட காரணம் தரமில்லை என்கின்றனர். ஆனால் தரம் என்றும் தரமற்றது என்றும் எப்படி வேறுபடுத்துகிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பார் உரிமையாளர்களுக்கு ஆதரவாக வாதாடும் வழக்கறிஞர்கள் சரமாரியான குற்றச்சாட்டுகளை அரசின் மீது எழுப்பினர். இதன் மூலம் எதைச் சாதிக்க விரும்புகிறது அரசு? மதுபானத்திற்குத் தடையையா? இல்லை. 5 நட்சத்திர விடுதிகளில் கிடைக்கும், கள்ளுக்கடைகள் இயங்கும், ஆனால் சில பார்கள் மட்டும் இயங்க முடியாது என்பது ஏன் என்றும் கேட்டுள்ளார்கள்

பார்களை மூட 30ம் தேதி வரை தடைவித்த உச்சநீதிமன்றம் இது தொடர்பான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அனில் ஆர்.தவே மற்றும் நீதிபதி யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, கேரள மது விற்பனை ஓட்டல்கள் சங்கத்தின் சார்பில் அரசுக்கு எதிரான மனுவை கேரள உயர் நீதிமன்றம் விசாரிக்கும் என்று தெரிவித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 30-ல் கேரள உயர் நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தது.

93-ஆவது நினைவு தினம்: மகாகவி பாரதி

மனித நேயம் சிறக்கப் பாடிய மகாகவி பாரதி என்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கூறினார்.

மகாகவி பாரதியின் 93-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவர் ஆசிரியராகப் பணிபுரிந்த மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, பின்னர் நடந்த கூட்டத்தில் அவர் பேசியது: மாபெரும் கவிஞராக பாரதி விளங்கினார். அவர் தத்துவக் கவிஞர். அரசரையோ, இயற்கையையோ, அழகிய பெண்களையோ அவர் வர்ணித்துப் பாடவில்லை. நம் நாட்டு மண்ணை நேசித்து, மக்களை நேசித்து சமூகத்தை மேம்படுத்திட பாடல்கள் பாடினார். பதவி பெற்று அதன் சுகத்தை அனுபவிக்க அவர் நாட்டுக்கு உழைக்கக் கூறவில்லை. தேச விடுதலைக்கு உழைக்கும் தியாகிகளின் தியாகத்தை உணர்த்துவதையே நாட்டுக்கு உழைத்தல் என்றார்.
தமது செயல்மூலம் நாட்டை மேம்படுத்திட நினைத்தார். ஆகவே, பாரதி பணிபுரிந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெருமைக்குரியவர்கள். பாரதியின் பாடலைப் படிப்பதுடன் நின்றுவிடாமல், அதன் வழி நடப்பது வாழ்வை மேம்படுத்தும்.

நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்திய கவிஞர். சாதி, மதங்களை விடுத்து தர்மத்தின் வழிநடக்க வழிகாட்டியவர் பாரதி. கற்கள், புற்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைத்து ஜீவராசிகளும் மேம்பட பாடிய பாரதியின் வழியில் நடப்போம் என்றார். பாரதி இலக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, அதன் தலைவர் பிரான்சிஸ் பாஸ்டின் தலைமை வகித்தார். சேதுபதி மேல்நிலைப் பள்ளித் தாளாளர் எஸ்.பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். தியாகி ஐ.மாயாண்டிபாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பாரதியின் சிலைக்கு மாலை அணிவித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் பாலகுருநாதன், நெல்லை பாலு, கி.பாரதீயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

என்னிடத்தில் அரசாங்கமே இல்லையே, 6 பேருடன் ஆரம்பித்த மீட்பு பணி, காஷ்மீர் பேரழிவு குறித்து முதல்வர் ஒமர் அப்துல்லா


காஷ்மீரில் ஏற்பட்ட பெரும் மழை வெள்ளத்தையடுத்து 200 பேர் பலியானார்கள், 6 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், காஷ்மீர் மாநில அரசு உடனடியாக நிவாரண நடவடிக்கை எடுக்கவில்லை என்று பலரும் குற்றம் சொல்கின்றனர். இந்நிலையில் வட இந்திய ஆங்கில ஊடகத்துக்கு பேட்டி அளித்த காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா பாதிப்பு ஏற்பட்ட முதல் 24 மணி நேரத்திற்கு என்னிடம் அரசாங்கமே இல்லை என்று கூறினார்.

எங்கேயாவது ஒரே ஒரு இயற்கை பேரிடர் மொத்த தலைநகரையும் செயல்படவிடாமல் செய்ததை? பேரிடர் ஏற்பட்ட முதல் நாள் மொத்த தலைநகரும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. தலைமை செயலகம், போலிஸ் தலைமையகம், கன்ட்ரோல் ரூம், ஃபயர் சர்வீஸ் என அத்தனையும் மூழ்கிவிட்டன. செல்போன் இல்லை, தொலைத்தொடர்பு இல்லை இது போல எதுவுமே இல்லாமல் வெறும் 6 பேர் உடன் எனது அறையில் தான் மீட்பு பணி குறித்து செயல்பட ஆரம்பித்தோம், 24 மணி நேரத்திற்கு பின்பே வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட என் அமைச்சரவை சகாக்களை தொடர்பு கொள்ள முடிந்தது என்றார். நியாயம் தானே!

அணு ஆயுதங்களை மேம்படுத்த ரஷியா முடிவு

தனது அணு ஆயுதங்களையும் விமானப் படைத் திறனையும் மேம்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. உலகின் எந்தப் பகுதியிலும் தோழமை நாடுகளுக்கு ஆதரவாக உடனடித் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா அண்மையில் அறிவித்ததையடுத்து ரஷியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஷியாவின் முடிவை துணைப் பிரதமர் திமித்ரி ரோகோஸின் வெளியிட்டார். அந்நாட்டின் பாதுகாப்புத் துறையை இவர் மேற்பார்வையிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இது தொடர்பாக அவர் கூறியதாக ரஷிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள விவரம்:

உலகின் எந்தப் பகுதியிலும் தாக்குதல் நடத்த இயல்கின்ற அமெரிக்க நேச நாடுகளின் வியூகத்தை எதிர்கொள்ளும் நோக்குடன், ரஷியா தனது அணு ஆயுதத் திறனை மேம்படுத்த முடிவு செய்திருக்கிறது. ரஷியாவின் ஏவுகணைத் திறன், கடற்படை ஆகியவற்றையும் மேம்படுத்துவோம். மேலும், விமானப் படைத் திறன், விண்வெளிப் பாதுகாப்புத் திறன் ஆகியன மேம்படுத்தப்படும் என்றார். முன்னதாக, அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை தொடர்பான செலவுகள் குறித்த கூட்டம் தலைநகர் மாஸ்கோவில் புதன்கிழமை நடைபெற்றது. அதிபர் விளாதிமிர் புதின் இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். மீண்டும் நேட்டோவை சக்தி வாய்ந்த அமைப்பாக உருவாக்கும் நோக்கத்துடன் உக்ரைன் பிரச்னையை மேற்கத்திய நாடுகள் தூண்டிவிடுகின்றன என்று புதின் குற்றம்சாட்டினார்.

"கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் குவிக்கப்படுகின்றன. ஐரோப்பா, அலாஸ்கா பகுதிகளைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு அமெரிக்க ஏவுகணைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. உலகின் எப்பகுதியிலும் உடனடித் தாக்குதல் என்ற அடிப்படையில் புதிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
மேலும், இதனை விளக்குவதற்தாக ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி வருகிறார்கள். சர்வதேச அளவில் ஆயுதங்களை முடக்கும் விதத்திலான ஒரு தாக்குதல் என்கிற ரீதியிலான சித்தாந்தம் உருவாக்கப்படுகிறது என்று புதின் கூறினார். உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள இலக்கை ஒரே மணி நேரத்தில் அடையும் தாக்குதல் திட்டத்தை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் வகுத்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்காக அணு ஆயுதம் அல்லாத வழக்கமான ஆயுதங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அவற்றை எதிர்கொள்வதற்கான ஆயுதங்களை ரஷியா உருவாக்க வேண்டி வரும் என்று ரஷிய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் யூரி போரிúஸாவ் முன்னதாக கூறினார். புதிய ஆயுதங்களை எதிர்கொள்ள வேண்டி, ரஷியாவும் புதிய ரக ஆயுதங்களை உருவாக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படும். தற்காப்புதான் எங்கள் நாட்டின் கொள்கை. அதில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

போர்ப் பயிற்சிக்கு புதின் உத்தரவு
ரஷியாவின் கிழக்குப் பகுதியில் ராணுவம் போர்ப் பயிற்சி மேற்கொள்ள அதிபர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார். உள்நாட்டில் காலை 10 மணிக்கு இந்த உத்தரவை புதின் வெளியிட்டார் என ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு தொலைக்காட்சியில் தெரிவித்தார். அந்நாட்டு ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் நடத்தப்படும் இரண்டாவது போர் பயிற்சி இது என்பது குறிப்பிடத் தக்கது. உக்ரைனுக்கும் அந்நாட்டின் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் ரஷிய ராணுவம் போர் பயிற்சி மேற்கொண்டது. அந்தப் பயிற்சியில் 65,000 வீரர்கள் கலந்து கொண்டனர்.

அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ராணுவத்தினர் போருக்குத் தயாரான நிலையில் இருக்கும் விதமாக இப்போதைய பயிற்சி மேற்கொள்ளப்படும். ஒரு வார காலம் நடைபெறவுள்ள பயிற்சியின்போது, எதிரிகளின் கடற்படையை ரஷிய கடற்படையின் பசிபிக் படைப் பிரிவு முறியடிக்கும்.

பர்வேஸ் முஷாரஃப் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் கடந்த 2007-ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டது தொடர்பாக முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் மீது தொடுக்கப்பட்ட வழக்கில், அவர் தேசத்துரோகக் குற்றம் இழைத்திருப்பதாக அந்நாட்டின் மத்திய புலனாய்வு அமைப்பு (எஃப்.ஐ.ஏ) நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தெரிவித்தது.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஃபைஸல் அரப் தலைமையிலான அமர்விடம் எஃப்.ஐ.ஏ. அதிகாரி காலித் குரேஷி கூறுகையில், ""பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டத்தை தாற்காலிகமாக முடக்கி வைப்பதற்கான உத்தரவை, 2007-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி முஷாரஃப் வெளியிட்டுள்ளார்.

எனவே, அவர் மீதான தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது'' என்று கூறினார்.
பாகிஸ்தானில் ஏற்கெனவே பல வழக்குகளைச் சந்தித்து வரும் முஷாரஃபுக்கு இது பலத்த பின்னடைவு எனக் கூறப்படுகிறது.

விமான நிலையத்தில் போலீஸார் விட்டுச் சென்ற வெடிபொருட்கள், ஒப்படைத்த பெண் பயணி


விமான நிலையத்தில் போலீஸார் விட்டுச் சென்ற வெடிபொருளை பெண் பயணி ஒருவர் போலீஸாரிடம் ஒப்படைத்த வினோத சம்பவம் ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்துள்ளது.

அந்நாட்டின் சிட்னி விமான நிலையத்துக்கு வந்த பயணியின் சூட்கேஸ் சேதமடைந்ததால், அதற்குப் பதிலாக தங்களிடமிருந்த, உரிமை கோரப்படாத பெட்டி ஒன்றை விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் அளித்தனர். வீட்டுக்குச் சென்றதும் அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்த அந்தப் பயணி, அதில் பிளாஸ்டிக் வெடிபொருள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, அருகிலுள்ள காவல் நிலையத்தில் அந்தப் பெட்டியை ஒப்படைத்தார்.

பெட்டியில் வெடிபொருள் இருந்ததை அறிந்த போலீஸார், உடனடியாக காவல் நிலையக் கட்டடத்தலிருந்த அனைவரையும் வெளியேற்றினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில், அந்த வெடிபொருள் மத்திய காவல்துறைக்குச் சொந்தமானது எனவும், கடந்த மாதம் நடைபெற்ற மோப்ப நாய் பயிற்சியின்போது, பயிற்சியாளர் அதனை விட்டுச் சென்றதும் தெரிய வந்தது. இறுதியில், நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட மத்திய காவல்துறை, "வெடிபொருளை விட்டுச் சென்ற பயிற்சியாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடைபெறும்' என்று கூறியுள்ளது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media