BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 2 October 2013

காந்தி ஜெயந்தி ரூ.1க்கு டீ வழங்கிய காந்தியவாதி!!

நெல்லையை சேர்ந்தவர் கணபதி (வயது 83) காந்தியவாதி. இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வந்துள்ளார். அங்கு ஒரு டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்துள்ளார். நாட்டின் சுதந்திரத்துக்கு பாடுபட விரும்பிய அவர் குடும்பம் அதற்கு இடையூறாக இருக்கும் என்று கருதி திருமணம் செய்துகொள்ளவில்லை.

தண்டனை பெற்ற எம்பி எம்.எல்.ஏக்களை பதவியிழப்பதை தடுக்க வகைசெய்யும் சட்டம், ராகுல், மன்மோகன், அகிலேஷ்

ராகுல்காந்தியை சந்திக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்...

தண்டனை பெற்ற எம்.பி. எம்.எல்.ஏக்களை பதவியிழக்காமல் இருக்க வகை செய்யும் சட்டம் குறித்து சில நாட்கள் முன் சொந்த அரசுக்கு எதிராக ராகுல் பேசினார், இதைத்தொடர்ந்து இன்று பிரதமர் மன்மோகன் ராகுல் காந்தியுடன் இது குறித்து ஆலோசிக்க உள்ளார்.

# யார் இங்கே ஒரிஜினல் பிரதமர்?

இன்று காந்தி ஜெயந்தி

மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று, எல்லா நாடுகளும் ஆயுத போராட்டங்களால் சுதந்திரம் பெற்ற போது இந்திய சுதந்திர போராட்டத்தை அகிம்சையின் வழி நடத்தி வென்று கொடுத்தவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மகாத்மா காந்தி, அகிம்சை, மதுவிலக்கு போன்றவற்றின் குறியீடு காந்தி.

நாம் செய்வது என்னவென்றால் காந்தி ஜெயந்தி அன்று மதுக்கடை ஷட்டரை மூடிவிட்டு பீருக்கு 10 ரூபாயும், குவார்ட்டருக்கு 20 ரூபாயும் கூடுதலாக வைத்து விற்கிறோம்.

மோடியுடன் இணைவாரா சந்திரபாபு நாயுடு?



தமிழகத்தில் வைகோ, கர்நாடகத்தில் எடியுரப்பாவை தொடர்ந்து ஆந்திராவில் இருந்து சந்திர பாபு நாயுடுவும் பாஜக கூட்டணிக்கு பச்சைக் கொடி காட்டி உள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியுடன் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார். அத்துடன் மோடியை பாராட்டி பேசினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு சந்திரபாபுவுக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது. 

விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் பிறந்த தினம் நேற்று(அக்டோபர் -1)

சென்ற ஆண்டு சேனல்-4 நியூஸ் காண்பித்த காட்சிகள் தமிழகத்தில் அனைவரையும் கண் கலங்க வைத்தன, விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரனின் அந்த பார்வையும் அதன் பின் கொல்லப்பட்ட அவரின் படங்களும் வெளியாகி தமிழக மாணவர்களிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தி மாணவர்களை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக போராட வைத்தன.

அந்த பாலச்சந்திரனின் பிறந்த தினம் அக்டோபர் 1. 

ஆணுக்கு பெண் சமம் என்று பேச்சளவில் இல்லாமல் விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரன் அவர்கள் மகனுக்கு பிரபாகரன் தன் மனைவி பெயரான மதிவதனி என்பதையும் இணைத்து இனிஷியலாக பி.ம.பாலச்சந்திரன் என்று எழுதியுள்ளது புலித்தலைவர் பிரபாகரன் பெண்களை எத்தனை தூரம் மதித்தார் என்பதற்கு ஆதாரமாக உள்ளது. ஆனால் இவர் நடத்திய இயக்கத்திலே தான் அதுவும் பெண் போராளிகளை புலிகள் பாலியல் தேவைக்காக பயன்படுத்தினார்கள் என்று ஆதாரமற்ற படு பாதகமான எதிரியே சொல்ல துணியாக பழியை கூறினார் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகாமி.

# தன் உயிரை இழந்து தமிழர்களின் பிரச்சினையை உலகறிய செய்த போராளி பாலச்சந்திரன்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - FIR விமர்சனம்

விஜய் சேதுபதியின் தொடர்ந்த வெற்றிபடங்கள், காமெடி ட்ரெண்ட்டில் வரிசையாக வென்ற படங்கள் புது இயக்குனர்கள் என எதிர்பார்ப்பை எகிற வைத்த படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.

ரஷ்ய அதிபர் புடின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.



ரஷ்ய அதிபர் புடினை 2014ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக ரஷ்யன் அட்வகேசி குரூப் பரிந்துரைத்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

செசன்யா மீதான தாக்குதல், ஜியார்ஜியா மீதான தாக்குதலுக்கு உத்தரவிட்டது  உட்பட பல கடும் ராணுவ நடவடிக்கைகளை பரிந்துரைத்த புடின்னுக்கு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளது நகைப்பானது, ஆனால் 2009ல் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது , ஒபாமாவை விட பல மடங்கு அந்த விருதுக்கு தகுதியானவர் என பரிந்துரைத்த அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

# பேசாம ராஜபக்சேவை பரிந்துரை செய்துடுங்களேன்
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media