BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 9 July 2014

சுவிஸ் வங்கி கருப்பு பணம் பட்டியலில் இந்தியர்கள் பெயர் இல்லை !!



தற்போதைய மத்திய அரசு கருப்பு பணத்தை மீட்டுத் தர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்து இருந்தது . இதற்காக ஸ்விஸ் வங்கியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது .

ஆனால் இப்போது அந்த கருப்பு பணத்தை மீட்பதில் புதிய பிரச்சனை வந்துள்ளது . புதிய திருப்பமாக கருப்பு பணம் வைத்துள்ளவர்களின் பட்டியலில் இந்தியர்கள் தங்கள் பெயரில் டெபாசிட் செய்தது பற்றி எந்த விவரமும் இல்லை என சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது .

இந்தியர்கள் கருப்பு பணம் நிறைய வைத்துள்ளதாக ஊடகங்கள் மற்றும் அனைவரும் கூறிய பின் , இந்தியா கருப்பு பணத்தை மீட்க , கருப்பு பணம் வைத்து இருப்பவர்களின் பட்டியலை , அனுப்பும்படி சுவிஸ் வங்கிக்கு கடிதம் எழுதியது . அந்த கடிதத்திற்கு பதில் எழுதிய சுவிஸ் வங்கி , கருப்பு பண பட்டியலில் இந்தியர்கள் யாரும் தங்கள் பெயரிலோ தங்களின் பினாமி பெயரிலோ வங்கி கணக்கை தொடரவில்லை என பதில் கூறினர் .

தமிழக முன்னால் முதல்வர் காமராஜரை அவதுறாக பேஸ்புக்கில் எழுதியவர் கைது !!


தமிழக முன்னால் முதல்வர் மற்றும் மக்களால் பெருந்தலைவர் என்று அன்புடன் அழைக்கப்படும் காமராஜரை பேஸ்புக்கில் கடுமையாக தாக்கி எழுதியதால் 52 வயது ஜெய சந்திரதாஸ் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .


இவர் பெருந்தலைவர் காமராஜரின் புகைபடத்திற்கு கீழ் அவதூறாக எழுதி இருந்ததால் இவரை வணிகர் சங்கத்தினர் காவல் துறையிடம் பூகார் கொடுத்தனர் . இதனால் காவல் துறையினர் அவரை கைது செய்து 15 நாள் சிறை வைத்துள்ளனர் .

பாஜகவின் அடுத்த தலைவர் அமித் ஷா !!



பிரதமரின் மோடியின் நெருங்கிய நண்பரும் , மோடிக்கு வலது கையாகவும் இருக்கும் அமித் ஷா பாஜகவின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . முந்தைய தலைவர் ராஜ்நாத் சிங் மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்டதால் , பாஜக வின் அடுத்த தலைவர் பொறுப்பை நியமிக்கப்பட்டார் .

அமித் ஷா பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் , இந்த வருடம் பாஜக கட்சியை உத்தர பிரதேசத்தில் ஆழமாக கால் ஊன்ற வைத்தது அமித் ஷா என்று சொன்னால் யாரும் மறுக்க மாட்டார்கள் . இவர் மோடி நினைப்பதை அடுத்த நிமிடமே செய்து முடிப்பவர் .

இன்று நடந்த கூட்டத்தில் இவரை பாஜக தலைவராக நியமித்த பின் , ராஜ்நாத் சிங் கூறுகையில் , " அமித் ஷா இதுவரை யாரும் செய்யாத உத்தர பிரதேசத்தில் இமாலய வெற்றியை பெற்று தந்தார் , இதனால் இவருக்கு தேசிய பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது " என்றார் .

இவரின் தேர்வை தொண்டர்கள் இனிப்பு பறிமாறியும் , மேளம் அடித்தும் கொண்டாடினர் .

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news


வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்கள் செய்யும் டாப் 10 "நாட்டி" காரியங்கள்
http://www.satrumun.net/2014/07/weird-things-women-do-when-they-are.html

விஜயகாந்த்துக்கு ஹார்ட் அட்டாக்கா?
மருத்துவமனையில் திடீர் அனுமதி, வைகோவும் மருத்துவமனையில் அனுமதி
http://www.satrumun.net/2014/07/vijayakanth-vaiko-hospitalised.html

மனோபாலாவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
http://www.satrumun.net/2014/07/blog-post_9.html

பல்டி அடித்த இயக்குனர் ராம், மேடையில் விமர்சித்த விஜய் டிவியை புகழ்ந்து தள்ளுகிறார்
http://goo.gl/E4V3hA

ரயில்வே பட்ஜெட் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை !!
http://www.satrumun.net/2014/07/blog-post_1455.html

காங்கிரசின் மற்றுமொரு ஊழல் , 99 இரயில்வே திட்டங்களில் இதுவரை ஒரே ஒரு திட்டம் தான் நிறைவேற்றப்பட்டுள்ளதாம்!
http://www.satrumun.net/2014/07/99.html

நிஜ ஜோடியான சீரியல் ஜோடிகள் சரவணன் - மீனாட்சி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்
http://www.satrumun.net/2014/07/blog-post_3201.html

கால்பந்து உலக கோப்பையை வெல்ல போவது யாரு ?? பிறந்த நாளில் கங்குலியின் மனம் திறந்த பேட்டி
http://www.satrumun.net/2014/07/blog-post_2374.html

பிரிட்டன் பாராளுமன்றத்தில் காந்தி சிலை !!! அஹிம்சைக்கு கிடைத்த வெற்றி !!
http://www.satrumun.net/2014/07/blog-post_6242.html

கங்கை நதியை சுத்தப்படுத்த ரூபாய் 80,000 கோடி செல்வாகும் !!



பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் போது கங்கை நதியை சுத்தப்படுத்துவதை தனது திட்டமாக அறிவித்து இருந்தார் . இந்த திட்டத்தை செயல்படுத்த ரூபாய் 80,000 கோடி வரை செலவாகும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார் .

அவர் கூறுகையில் , " தண்ணீர் மாசுபடுவது தான் கங்கையின் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது . சுத்தமான நதியை உருவாக்க நாம் இதை நிறுத்த வேண்டும் . அதனால் இந்த திட்டத்திற்கு வரை செலவாகும் . இந்த முழு பணத்தையும் எங்களால் கொடுக்க இயலாது . எனவே 30 சதவீத பணத்தை மத்திய அரசு கொடுக்கும் , மீதி 70 சதவீதத்தை பிபிபி முறையில் கொடுக்கப்படும் " என்றார்
 . மேலும் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்தும் திட்டத்தை பின்பற்ற வலியுறுத்தினார் . 

வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்கள் செய்யும் டாப் 10 "நாட்டி" காரியங்கள்

வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்கள் செய்யும் டாப் 10 காரியங்கள் என்ன தெரியுமா?

யாருமின்றி தனிமையில் வீட்டில் இருக்கும் பெண்கள் செய்யும் சேட்டைகள் வினோதமானது, யாரும் தங்களை கவனிக்க இல்லை என்பதும் சுதந்திரமான உணர்வும் இந்த வினோத செயல்பாடுகளுக்கு காரணம்

1) சம்மர் சால்ட் குட்டிக்கரணம் அடித்து பாத்ரூம் செல்வார்கள்

2) பேண்ட்/பாவாடை எதுவும் போடாமல் இடுப்பு கீழ் ஒன்றுமில்லாமல் வீட்டினுள் கேர் ஃப்ரீயாக‌ உலவுவார்கள்

3) 90% நேரங்களில் சீன உணவு வகைகளான நூடுல்ஸ் போன்றவைகளை சாப்பிடுவார்கள் (இந்த சர்வே மேற்கு நாடுகளில்  எடுக்கப்பட்டது), நம் ஊரில் உருளை கிழங்கு சிப்ஸ் சாப்பிடுவார்களோ?

4) டிவியில் காட்டப்படும் மெகா சீரியல்களை அலுப்பின்றி பார்ப்பார்கள்

5) காதல் பாடல்கள், சரச பாடல்களை சத்தமாக பாடுவார்கள்

6) மேனியாக் போல திரும்ப திரும்ப சுத்தம் செய்வார்கள், வீட்டு அழகு பொருட்களை திரும்ப திரும்ப அடுக்கி வைத்தும் திருப்தி அடைய மாட்டார்கள்

7) எல்லா ஆடைகளையும் அணிந்து பார்ப்பார்கள், 3 மணி நேரம் தனிமையில் இருக்கும் பெண் ஒருவர் பழைய ஆடைகளிலிருந்து நாளை போடலாம் என வைத்திருக்கும் ஆடைகள் வரை அனைத்தையும் அணிந்து பார்த்துவிடுவாராம்

8) உடம்பில் அழகு கிரீம் தடவுவது, முகத்தில் ஃபேஷியல் மாஸ்க் போட்டு அழகு படுத்துவது, தலை முடிக்கு ட்ரீட்மெண்ட் செய்வது என முயன்று பார்ப்பார்களாம்

9) கிசு கிசு பத்திரிக்கைகள் படிப்பதை கண்டிப்பாக செய்வார்களாம்

10) கண்ணாடி முன் நின்று பல விதமான புன்னகைகளை செய்து பார்ப்பார்கள்

11) தனிமையில் நம்ம ஊர் பெண்கள் முக்கியமாக செய்யும் ஒன்று டான்ஸ் ஆடுவது (மேற்கு நாடுகளில் தனிமையில் டான்ஸ் ஆடுவது டாப் 10ல் வரவில்லை)

சந்தேகமாக இருந்தால் உங்கள் கேர்ள் ஃப்ரெண்டிடமோ, தோழிகளிடமோ, மனைவியடமோ கேட்டு பாருங்கள், இந்த 11ல் குறைந்தது 8 ஆவது ஆமாம் நாங்கள் செய்கிறோம் என்று ஒத்துக்கொள்வார்கள்.

விஜயகாந்த்துக்கு ஹார்ட் அட்டாக்கா? மருத்துவமனையில் திடீர் அனுமதி, வைகோவும் மருத்துவமனையில் அனுமதி


திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக வைகோவும், விஜயகாந்த்தும்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விஜயகாந்த்க்கு ஹார்ட் அட்டாக் என்றும் அதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகின, ஆனால் விசாரித்ததில் இது புரளி என்றும் விஜயகாந்துக்கு இன்று காலை ஏற்பட்டது நெஞ்சு எரிச்சல் என்றும்  தெரியவந்தது.

தே.மு.தி.க தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார், இது வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை முடிந்து மாலை வீடு திரும்புவார் என்றும் தேமுதிக மற்றும் மருத்துவமனை குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வைகோவுக்கு நேற்றிரவு வயிறு வலி ஏற்பட்டதாகவும் அது தொடர்பான சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வைகோ மருத்துவமனையில் இருந்து திரும்பி சென்னையில் உள்ள வீட்டில் தங்கி பணிகளை மேற்கொள்ளவதாக மதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மனோபாலாவை பாராட்டிய சூப்பர் ஸ்டார்

மனோபாலாவை இப்போது உள்ளவர்களுக்கு ஒரு நடிகனாக மட்டும் தான் தெரியும் . ஆனால் அவர் உண்மையில் ஒரு இயக்குனர் ஆவார். ரஜினி நடித்த ஊர்காவலன் படத்தை கூட இவர் தான் இயக்கினார். இவரது நடிப்பு திறமையை பார்த்து கே.எஸ். ரவிக்குமார் தான் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். காமெடியான வேடங்களில் நடிப்பது இவரது சிறப்பாகும். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார்.



இயக்குனர், நடிகர் என்று இருந்தவர் இப்போது தயாரிப்பாளாராக உருவெடுக்க உள்ளார். ஹெச்.வினோத் என்பவர் நடிக்கும் சதுரங்க வேட்டை என்னும் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார். இந்த படம் 25 ஆம் தேதி அன்று வெளிவர உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை பார்த்தார் ரஜினி .அது அவருக்கு பிடித்து விட்டது. பிறகு மனோபாலாவை அழைத்து பாராட்டினார். இந்த தகவலை மனோபாலா தனது டிவிட்டர் இணையதளத்தில் தெரிவித்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media