BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 21 July 2014

மலேசிய விமானம் போன்று இதற்கு முன்னால் சுட்டு வீழ்த்தப்பட்ட மற்ற விமானங்கள் !!


மலேசிய ஏர்லைன்ஸ் எம்.எச்-17 ஏவுகணை ஒன்றால் சுட்டு வீழ்த்தப்பட்டது . விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர் . வரலாற்றில் இதற்கு முன் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதா ?? ஆம் நடந்துள்ளது , ஒரு முறையல்ல ஏழு முறை நடந்துள்ளது . எங்கே , எப்போது என்பதை கீழ்க் காண்போம் .


1 ) லிப்யன் ஏர்லைன்ஸ் விமானம் 114 - பிப்ரவரி 21 , 1973

இந்த விமானம் இஸ்ரேலின் விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது . பாதை தவறி இஸ்ரேலின் வான் பகுதியில் நுழைந்த விமானம் , இஸ்ரேலின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பறந்ததால் இஸ்ரேல் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது . பயணம் செய்த 113 பேரில் 106 பயணிகள் இறந்தனர் .

2 ) ஏரோலின் இடாவியா விமானம் 870 - ஜூன் 27 , 1980

இந்த விமானம் பொலொகனாவில் இருந்து பாலெர்மோ நோக்கி சென்று கொண்டு இருக்கையில் ராடரில் இருந்து மறைந்தது . பின்னர் வந்த செய்திகளின் படி அந்த விமானம் நேபல்ஸ் அருகே உடைந்து கிடந்தது . ஆனால் இந்த விமானம் யாரால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை . பயணம் செய்த 77 பயணிகளும் 4 விமானத்தில் பணி செய்பவர்களும் இறந்தனர் .

3 ) கொரியன் ஏர்லைன்ஸ் விமானம் 007 - செப்டம்பர் 1,1983

இந்த விமானம் 269 பயணிகளுடன் நியு யார்க்கில் இருந்து சியோல் நோக்கிச் சென்று கொண்டு இருக்கையில் , விமானியின் தவறால் சோவியட் யுனியன் பகுதிக்குள் சென்றது . இதனால் சோவியட் படைகள் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தினர் . பயணிகள் அனைவரும் இறந்தனர் .

4 ) சுடான் ஏர்வேஸ் - ஆகஸ்ட் , 1986

மக்களை ஏற்றிக்கொண்டு சுடானில் இருந்து கிளம்பிய இந்த விமானம் , சுடானின் மக்கள் விடுதலை ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது . பயணம் செய்த 65 மக்களும் இறந்தனர் .

5 ) இரான் ஏர் பிளைட் 655 - ஜூலை 3, 1988

இந்த விமானம் துபாய் நோக்கிச் சென்று கொண்டு இருக்கையில் , ஈரானின் கடல் எல்லைகளில் இருந்த அமெரிக்க கப்பற்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது . அமெரிக்க கப்பற்படை இந்த பயணிகள் விமானத்தை போர் விமானம் என நினைத்து சுட்டதாக கூறினர் .

6 ) ட்ரன்சேயர் ஜார்ஜியா ஏர்லைன்ஸ் - செப்டம்பர் 21-23 1993 .

தொடர்ந்து மூன்று நாட்களில் மூன்று பயணிகள் விமானம் கிளர்சியாளர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது . மொத்தம் 136 பயணிகள் இறந்தனர் .

7 ) செர்பியன் ஏர்லைன்ஸ் விமானம் 1812 - அக்டோபர் 4,2001

இஸ்ரேலில் இருந்து ரஷ்யா நோக்கிச் சென்று கொண்டு இருக்கையில் சுட்டு வீழ்த்தப்பட்டது . உக்ரேன் பாதுகாப்பு ஆயத்தப் பயிற்சி செய்து கொண்டு இருக்கையில் ஏவுகணை தவறுதலாக அந்த விமானத்தில் பட்டதாக தெரிவித்தனர் . முதலில் உக்ரேன் அரசு இதை மறுத்து வந்தாலும் , பின்னர் மன்னிப்பு கேட்டது .

இந்திய கிரிக்கெட் அணிக்கு மோடி பாராட்டு !!


இன்று நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது .  இந்த வெற்றி வரலாற்று சிறப்பு வாய்ந்த வெற்றி . 28 வருடங்களுக்குப் பின் இந்தியா இப்போது தான் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் . அந்த வாழ்த்துச் செய்தி பின்வருமாறு ,

நன்றாக விளையாடுனீர்கள் !! லார்ட்ஸ்  மைதானத்தில் பெற்ற இந்த வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் !! நாங்கள் உங்களுடைய அபார ஆட்டத்தினால் மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைந்துள்ளோம் .

என்று வாழ்த்தியுள்ளார் .

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special News

உங்கள் காதலி, மனைவி உங்களை கழற்றி விடப்போகிறாரா என்று கண்டுபிடிப்பது எப்படி?
http://www.satrumun.net/2014/07/how-to-find-girl-leaving-you.html

மலேசியன் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் புதிய திருப்பம்
http://www.satrumun.net/2014/07/blog-post_21.html

த‌மிழ்மாநில முஸ்லிம் லீக் தலைவர் வெட்டிகொலை, சென்னை திருவல்லிக்கேணியில் பதற்றம்
http://www.satrumun.net/2014/07/muslim-league-leader-murderged.html

பேய்களுடன் வாழ்ந்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் : அதிர்ச்சி தரும் தகவல்கள்
http://www.satrumun.net/2014/07/blog-post_8063.html

28 ஆண்டுகளுக்கு பின்  இந்தியா வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்டில் இந்தியா
http://www.satrumun.net/2014/07/2_21.html

புகை பழக்கத்தால் இறந்த கணவர் ! மனைவிக்கு சிகரெட் நிறுவனம் இழப்பீடு தர கோர்ட் உத்தரவு ...
http://www.satrumun.net/2014/07/blog-post_7042.html

நீ என்ன மடத்தனமா பேசிக்கிட்டிருக்க? நடிகை பூஜாவிடம் டோஸ் வாங்கிய இளம் ஹீரோ
http://goo.gl/TLNWpJ

'அஞ்சான்' ஆடியோ பங்ஷன் கேன்சல் : பின்னணியில் என்னதான் நடந்தது..?
http://goo.gl/WFaE7l

சிரியா ஐஎஸ்ஐஎஸ் படையில் சேர்ந்த தமிழக முஸ்லீம் இளைஞர்
http://www.satrumun.net/2014/07/tamil-nadu-youth-joins-isis.html

தமிழ்நாடு பேட்மிட்டன் சங்க தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு
http://www.satrumun.net/2014/07/dranbumani-ramadoss-elected-as-head-of.html

ஊழல் நீதிபதிக்கு மத்திய அரசை நிர்ப்பந்தித்து பதவி உயர்வு வாங்கி கொடுத்ததாக திமுக மீது முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு!
http://www.satrumun.net/2014/07/dmk-threaten-pm-for-high-court-judge.html

உங்கள் காதலி, மனைவி உங்களை கழற்றி விடப்போகிறாரா என்று கண்டுபிடிக்க எளிய வழிகள்


காதலிக்க ஆரம்பிக்கும் போது இருக்கும் சுவாரசியம் போக போக குறைந்து விடும், பல காதல்கள் திருமணம் வரை கூட போவதில்லை, பல நேரங்களில் இந்த காதல் முறிவுகளுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் அல்ல, ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் இதில் பங்கு உண்டு, இது தான் இப்படி என்றால் திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழ்பவர்களிடம் கூட ஆரம்பத்தில் இருக்கும் அன்பும் கவர்ச்சியும் போய் எந்நேரமும் சண்டை போட்டு கடைசியில் விவாகரத்தில் முடிந்துவிடும்.

உங்கள் காதலியோ அல்லது மனைவியோ உங்களுடனான உறவை தொடர விரும்பவில்லை என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

உங்களுக்கு இடையில் பேச்சு குறைகிறதா?

காதலியுடனோ மனைவியுடனோ வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்த நாட்கள் போய் பேசுவதற்கு முன் பேசலாமா என்று யோசிக்கின்றீர்களா? உங்களுடன் பேசுவதை காதலியோ மனைவியோ தவிர்க்கிறார்களா? உங்கள் உறவு டேஞ்சரில் இருக்கின்றது என்று அர்த்தம்.


உடலுறவை தவிர்க்கிறாரா?

எப்போதாவது உடல்நிலை சரியில்லை, அசதி என்று காரணம் சொல்லி மனைவி உடலுறவை தவிர்க்கலாம், ஆனால் அடிக்கடி ஏதேனும் காரணம் சொல்லி உடலுறவை தவிர்க்கிறாரா? அப்படியெனில் நிச்சயம் உங்கள் உறவு டேஞ்சராக உள்ளது என்று பொருள், காதலியுடன் அவ்வப்போது நடைபெறும் உரசல்கள், முத்தங்களை தவிர்க்கிறாரா? கொஞ்சம் கவனமாக இருங்கள்

காரணமே இல்லாமல் சண்டையா?

காரணமே இல்லாமல் சண்டை போட்டாலும் உங்களை விமர்சித்தாலும் உங்களுடனான உறவை காதலியோ மனைவியோ விரும்பவில்லை என்று அர்த்தம். நீங்கள் என்ன செய்தாலும் அதனை குறை சொல்கிறாரா? சிறு வாக்குவாதம் உறவை வலுப்படுத்தினாலும், காரணமே இல்லாத வாக்குவாதங்கள் மற்றும் அதிகப்படியான விமர்சனங்கள், உங்கள் இருவருக்கும் உள்ள உறவை பாதிக்கும்.

உங்களுக்கு வேண்டியவரை உங்கள் காதலி/மனைவி சந்திக்க விரும்புவதில்லையா?

நீங்கள் மிகவும் மதிப்பவரை, நீங்கள் மிகவும் விரும்புபவரை உங்கள் காதலி திடீரென தவிர்த்தால் ஏதோ பிரச்சனை என்று அர்த்தமாகும். உங்கள் ஒட்டு மொத்த நண்பர்கள் கூட்டத்தையும், அவளுக்கு திடீரென பிடிக்காமல் போனாலோ அல்லது நீங்கள் கெட்ட சகவாசத்துடன் இருக்கிறீர்கள் என்பதை போல் கூறினாலோ, உங்கள் உறவில் விரிசல் விழுகிறது என்று அர்த்தமாகும்.

ரொமான்ஸ்சை விரும்புவதில்லையா?

சாதாரணமாக இறுக்கி அணைப்பது, முத்தங்கள் கொடுப்பது போன்றவைகளை விலக்கி ஒதுங்கினால், இந்த உறவு உங்கள் காதலிக்கு கசக்கிறது என்று அர்த்தமாகும். இதற்கு முன் உடல்ரீதியாக இருந்த கெமிஸ்ட்ரி, இப்போது குறைந்துவிட்டால் அது பிரச்சனை முற்றியுள்ளதின் அறிகுறியாகும்.

இருவரின் வருங்காலத்தை பற்றிய எந்த பேச்சும் இருப்பதில்லையா?

வீக் எண்டை எப்படி செலவு செய்வது, எப்படி வீடு கட்டுவது, வருங்காலத்தில் என்ன செய்யவேண்டும் என்று எதுவுமே பேசவில்லையா, காதலியாக இருந்தால் கல்யாணம், குழந்தைகள் பெற்றுகொள்வது பற்றி பேசவில்லையா உஷாரைய்யா உஷாரு.

தன்னை அழகாக காட்டிக் கொள்வதில் அக்கறை எடுத்துக் கொள்வதில்லையா?

உங்களுடன் வெளியில் வரும்போது ஒரு கோவிலுக்கு செல்ல வேண்டுமானாலும் கூட, அழகான ஆடைகள் அணிந்து அழகாக காட்சி அளிக்கும் பெண் திடீரென இதிலெல்லாம் நாட்டம் இல்லாமல், உங்களுடன் வெளியே வரும் போது சிரத்தையின்றி அழகு படுத்திக்கொண்டில்லாமல் ஒரு வித அலட்சியத்துடன் நோயாளியை போல் வந்தால், உங்களுக்கே புரிந்துவிடும் அவர் உங்களை விரும்பவில்லை என்று.

2 வது டெஸ்டில் இந்தியா வெற்றி




இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் இந்திய அணி தொடர் தோல்விகளை பெற்று வருகிறது .கடைசியாக விளையாடிய 12 டெஸ்ட் போட்டிகளில் 10 இல் தோல்வியையும் 2 இல் டிராவும் செய்து இருந்தது. எனவே தோனியை கேப்டனில் இருந்து தூக்க வேண்டும் என விமர்சனங்கள் வந்தது. இந்நிலையில் முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது. 2 வது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று உள்ளது.


சுமார் 28 ஆண்டுகள் கழித்து இந்தியா லார்ட்ஸ் வெற்றி பெற்று உள்ளது. சச்சின், திராவிட், லட்சுமனன், கும்பளே இல்லாமல் இந்திய அணி பெறும் வெற்றி இது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 295 ரன்களும், இங்கிலாந்து அணி 319 ரன்களும் அடித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 342 எடுத்தது. 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்னும் இலக்கு இங்கிலாந்துக்கு நிர்ணயக்கப்பட்டது. இஷாந்த் ஷர்மாவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது . இதனால் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.



பேய்களுடன் வாழ்ந்து வரும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் : அதிர்ச்சி தரும் தகவல்கள்




இங்கிலாந்து வீரர்கள் இப்போது தங்கி இருக்கும் 5 நட்சத்திர ஹோட்டலில் பேய்கள் இருப்பதாக அந்த நாட்டு வீரர்கள் அச்சம் தெரிவித்து உள்ளார்கள். பேய்கள் இருப்பதை இங்கிலாந்து வீரர்களால் உணர முடிவதாக தகவல்கள் வருகின்றன. இது குறித்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் தனது வெளிபடையான கருத்தை தெரிவித்து உள்ளார். இலங்கை தொடரின் போது ஹோட்டல் அறையில் மிகவும் பயந்து வாழ்ந்ததாக கூறியுள்ளார்.



குளியலைறயில் உள்ள பைப்புகள் தானாகவே திறந்து கொள்கின்றன. பின் விளக்கை போட்டவுடன் அவை அனைந்து விடுவதாக கூறியுள்ளார். ஒரு நாள் இரவு 1.30 மணிக்கு தனக்கு விளிப்பு வந்ததாகவும் , அப்போது தனது அறையில் வேறு யாரோ ஒருவர் இருப்பதை அவர் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் அவரது தோழியும் பயந்து விட்டதாக கூறுகிறார். இது போல அந்த அணி வீரர் பென் ஸ்டோக்ஸுக்கும் நடந்ததாக கூறினார். இப்போது அவர்கள் பயந்து தங்கள் அறைகளை காலி செய்து வருகிறார்கள்.

மலேசியன் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் புதிய திருப்பம்





கடந்த வியாழக்கிழமை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சுட்டு தாக்கப்பட்டது. இதில் பயணம் செய்து கொண்டு இருந்த 298 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி கட்டைகளாக இருந்தனர். இந்த தாக்குதல் உக்ரைன் பகுதியில் நடந்தது. இதற்கு காரணமானவர்கள் யார் என்று தெரியவில்லை. இதனை செய்ததாக உக்ரைன் அரசும் ரஷிய அரசும் மாற்றி மற்றி குற்றம்சாட்டி வருகிறார்கள்.


உக்ரைனில் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகனையை பயன்படுத்தும் அளவுக்கு பயிற்சி கிடையாது. எனவே இதனை செய்தது ரஷிய அரசு தான் என்கிறது உக்ரைன் அரசு. ஆனால் உக்ரைன் அரசு எல்லாத்தையும் செய்து விட்டு தேவையில்லாமல் தங்கள் மீது அபண்டமாக பழி போடுவதாக ரஷிய அரசு உக்ரைன் மீது குற்றம்சாட்டி உள்ளது. இப்படி ஒருவரை ஒருவர் மாற்றி மற்றி குற்றம்சாட்டி வருவதால் செய்தவர் யார் என்று தெரியவில்லை.


இந்நிலையில் பல நாட்டு தலைவர்களின் கோரிக்கையின் பேரில் இது குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. மலேசியா , நெதர்லாந்து, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் சேர்ந்து இந்த குழுவை அமைத்து உள்ளார்கள். ஆனால் விபத்து பகுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுபாட்டில் உள்ளதால், விசாரணை குழு அங்கு சென்றால் அவர்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட மாட்டாது என உக்ரைன் அரசு தெரிவித்து உள்ளது. இதில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என உக்ரைன் அரசிடம் மலேசிய அரசு கேட்டு உள்ளது.

ஊழல் நீதிபதிக்கு மத்திய அரசை நிர்ப்பந்தித்து பதவி உயர்வு வாங்கி கொடுத்ததாக திமுக மீது முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு!


இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருந்து வரும் மார்கண்டேய கட்ஜூ, சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர் ஆவார்.  நேர்மையான நீதிபதியாக அறியப்பட்ட இவர் திமுக மீது ஒரு கடும் குற்றச்சாட்டை கூறினார்.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அர சை கட்டாயப்படுத்தி பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மாவட்ட நீதிபதி ஒருவரை, சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பணி நியமனம் செய்ய வைத்ததாக திமுக மீது இவர் தனது வலைப்பதிவில்(Blog) குற்றம் சாட்டியதை அடுத்து மாநிலங்களவையில் இன்று அமளி ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக மற்றும், பகுஜன் சமாஜ்வாடி கட்சி ஆகியன வலியுறுத்தின. அவரது இந்த கருத்திற்கு, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

காங்கிஸ் தலைவர்களில் ஒருவரான ராஷித் ஆல்வி, மார்கண்டேய கட்ஜூவின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதரமற்றது என்று தெரிவித்தார். தொடர்ந்து அவையில் இந்த விவகாரம் தொடர்பாக  கூச்சல் நீடித்ததால் அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

தனது வலைப்பதிவில் நேரடியாக திமுகவின் பெயரையும் அந்த ஊழல் நீதிபதியின் பெயரையும் கட்ஜூ சொல்லவில்லை என்றாலும் அது திமுகவை குறிக்கிறது என்றே அரசியல் தரப்பில் கூறுகின்றனர்.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த நீதிபதிக்கு 2 ஆண்டு கால பதவியை அடுத்து நீக்கப்படுவார் என்றே தான் கருதியதாகவும் ஆனால் அவருக்கு மேலும் ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு கிடைத்தது ஆச்சரியப்படுத்தியது, ஆனால்  அதன் பின்னர்தான் இது எப்படி நிகழ்ந்தது என்ற விவரம் எனக்கு தெரியவந்தது. அதாவது உயர் நீதிமன்ற நீதிபதிகள் விவகாரங்களை கையாளும் அப்போதைய உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியத்தில் இடம்பெற்ற மூன்று மூத்த நீதிபதிகள், ஐபி அறிக்கையை சுட்டிக்காட்டி குறிப்பிட்ட அந்த ஊழல் நீதிபதியின் 2 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்துவிட்டதால், மேற்கொண்டு பணி நீட்டிப்பு செய்ய வேண்டாம் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்தனர்.

அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு. அக்கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக திகழ்ந்தபோதிலும், மக்களவையில் அதற்கு போதிய பெரும்பான்மை இல்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவை அது நம்பி இருந்தது. அந்த கூட்டணி கட்சிகளில் தமிழகத்தை சேர்ந்த ஒரு கட்சிதான் அந்த ஊழல் நீதிபதிக்கு ஆதரவாக இருந்தது. அதே சமயம் அந்த ஊழல் நீதிபதிக்கு எதிரான பரிந்துரையை அறிந்து அந்த கட்சி அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தது.

அந்த சமயத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் புறப்பட்டுக்கொண்டிருந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவர் நின்றுகொண்டிருந்தபோது, அந்த ஊழல் நீதிபதிக்கு ஆதவரான தமிழக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், மன்மோகனிடம், 'அவர் தொடர்ந்து கூடுதல் நீதிபதியாக பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை என்றால், நீங்கள் நியூயார்க்கிலிருந்து திரும்பும்போது நாங்கள் உங்கள் அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவோம்..அரசு கவிழ்ந்துவிடும்' என்று கூறியுள்ளனர்.

அவர்கள் இவ்வாறு கூறியதை கேட்ட மன்மோகன் பீதியடைந்தார். ஆனால் அவரது அமைச்சரவையில் இடம்பெற்ற காங்கிரஸ் மூத்த அமைச்சர் ஒருவர் மன்மோகனிடம், 'கவலைப்பட வேண்டாம்; நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்' எனக் கூறியுள்ளார். பின்னர் அவர் நீதிபதி லோஹித்திடம் சென்று, குறிப்பிட்ட அந்த நீதிபதியை மேலும் ஒரு ஆண்டுக்கு கூடுதல் நீதிபதியாக பணியாற்ற அனுமதிக்காவிட்டால் அரசியல் நெருக்கடி ஏற்படும் எனக் கூறியுள்ளார். அதனைக் கேட்ட லோஹித், அந்த நீதிபதியை மேலும் ஒரு ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்து கடிதம் அனுப்பி உள்ளார்.  அதனைத் தொடர்ந்து மேற்கூறிய சூழ்நிலைகளுக்கு இடையே அந்த நீதிபதி மேலும் ஒரு ஆண்டு கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நீதித்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை காட்டுவதற்காகவே நான் இதனை இங்கு குறிப்பிடுகிறேன். ஒரு நீதிபதிக்கு எதிராக ஐபி புலனாய்வு அறிக்கை வந்தால், அந்த நீதிபதி கூடுதல் நீதிபதியாக பதவியில் நீடிக்கக்கூட அனுமதிக்கக்கூடாது. ஆனால் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது" என கட்ஜூ மேலும் எழுதியுள்ளார்.

சிரியா ஐஎஸ்ஐஎஸ் படையில் சேர்ந்த தமிழக முஸ்லீம் இளைஞர்


கடலூர் அருகே உள்ள பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் உஸ்மான் அலி, இவரது மகன் ஹாஜா ஃபக்ரூதின்(37). ஹாஜா ஃபக்ரூதின் ஒரு நாள் அவரது தந்தை உஸ்மான் அலியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது கனவு நனவாகியுள்ளதாகவும் தான் தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் சிரியாவில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார், மேலும் தான் ஐஎஸ்ஐஎஸ் படையில் சேர்ந்து பஷீர் அல் ஆசாத் அரசுக்கு எதிராக சண்டை போடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்,

மேலும் இந்தியாவிலிருந்து 80க்கும் மேற்பட்ட முஸ்லீம் இளைஞர்கள் இதில் இணைந்துள்ளதாகவும் ஹாஜா ஃபக்ரூதின் குறிப்பிட்டதாக தெரிவித்துள்ளார். தானும் தன் மனைவி மற்றும் மருமகன் ஆகியோர் ஹாஜா ஃபக்ரூதின் சிரியா செல்வதை தடுக்க முயன்றதாகவும் ஆனால் அவர் ஏற்கனவே மனதளவில் அதற்கு தயாராகிவிட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் ஹாஜா ஃபக்ரூதின் சம்பளத்தில் பெரும் பகுதியை ஐஎஸ்ஐஎஸ் படைக்கு செலவிட்டதாகவும் குறிப்பிட்டார். மகனின் சம்பளத்தை நம்பி குடும்பத்தை நடத்திய தான் தற்போது வறுமையில் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் தாங்கள் பலமுறை இப்படி செய்யக்கூடாது என்று குறிப்பிட்டும் தனது மகன் இப்படி போய் ஐஎஸ்ஐஎஸ் படையில் சேர்ந்தது வீட்டிற்கு அடங்காத செயல் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு பேட்மிட்டன் சங்க தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்வு

தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கத்தின்(Tamilnadu badminton association - TNBA) தலைவராக டாக்டர் அன்புமணி ராமதாஸ்அவர்கள் தேர்வுபெற்றுள்ளார்.

இன்று நடைபெற்ற (21.07.2014) தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கத்தின் கூட்டத்தில் சங்க் தலைவராக டாக்டர் ராமதாஸ் இராமதாஸ் தேர்வுபெற்றுள்ளார், டாக்டர் அன்புமணி ராமதாஸ் கல்லூரி காலங்களில் சிறந்த பேட்மிட்டன் வீரராகவும் திகழ்ந்துள்ளார்.

த‌மிழ்மாநில முஸ்லிம் லீக் தலைவர் வெட்டிகொலை, சென்னை திருவல்லிக்கேணியில் பதற்றம்

சென்னை ராயப்பேட்டை உசேன்நகரை சேர்ந்தவர் நாசர், இவரது மகன் அக்பர் (வயது 32). தமிழ்மாநில முஸ்லிம்லீக் மத்திய சென்னை மாவட்ட தலைவராக இருந்து வருகிறார், புனித ரமலான் மாதம் என்பதால் என்பதால் அக்பர் நோன்பு இருந்து வந்தார்.

இன்று காலை 4 மணியளவில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக ஐஸ் அவுஸ் டாக்டர் பெசன்ட் தெருவில் உள்ள பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த 5 பேர் கொண்ட கும்பல் அக்பரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது.  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே இறந்தார்.

இதையடுத்து இந்த கொலை இந்து முன்னணியினர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்குமோ என்று போலிசார் விசாரணை மேற்கொண்டனர், ஆனால் அரசியல் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழ்மாநில முஸ்லிம்லீக் கட்சியில் இருந்து ஒரு பிரிவினர் சில காலங்களுக்கு முன் விலகியுள்ளனர், பிரிந்து சென்ற கோஷ்டிக்கும் அக்பருக்கும் இடையே ஏற்கனவே சிறு சிறு மோதல்கள் இருந்து வந்துள்ளது. இந்த மோதல் குறித்து அக்பர் ஐஸ் அவுஸ் போலீசில் புகார் கொடுத்து இருந்தார். இந்த கும்பலே காத்திருந்து அக்பரை கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது என போலிசார் தெரிவித்துள்ளனர். அக்பரின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் கொலையாளிகளை கைது செய்ய போராட்டத்தில் ஈடுபட்டனர், போலிசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் 28ந்தேதி பாராட்டு விழா, அமைச்சர் தகவல்


மதுரை, தேனி, திண்டுக்கல் சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் முக்கியமான நீர் ஆதாரமாக முல்லை பெரியாறு அணை திகழ்ந்து வருகிறது.  இந்த அணையில் தற்போது 136 அடி நீர் தேக்கப்படுகிறது. ஆனால் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக இம்மாவட்ட மக்களும் விவசாயிகளும் கோரி வருகிறார்கள். இந்நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதா முல்லை பெரியாறில் 142 அடி நீரை தேக்க உத்தரவிடக்கோரி உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக அரசிற்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து முல்லை பெரியாறு அணையில் மூவர் குழு முன்னிலையில் 142 அடி நீரை தேக்கும் வகையில் அதன் மதகுகள் இறக்கப்பட்டன.

இந்த நீதிமன்ற வெற்றி முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சட்டப்பூர்வமான அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியாகும். இதனை கொண்டாடும் வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 5 மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் பாராட்டு விழா மதுரையில் வருகிற 28–ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மதுரை ரிங்ரோடு பாண்டிக்கோவில் அருகே உள்ள மஸ்தான் பட்டியில் பிரம்மாண்ட விழா எடுக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக கலந்தாலோசனை கூட்டத்திற்கு அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்திலஜூ முதல்வருக்கு பாராட்டுவிழா நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media