Sunday, 18 May 2014
பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவித்திருந்தால் காங்கிரஸ்தான் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கும்- தங்கபாலு
பிரபல செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவித்திருந்தால் மீண்டும் காங்கிரஸ்தான் ஆட்சி அமைத்திருக்கும் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி நாட்டுக்கு பல சேவைகள் செய்து வந்தது. குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமான நலத்திட்டங்களை செய்துள்ளது. அதை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கு காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.
ஆட்சி, அதிகார போதையில் அவர்கள் இருந்து விட்டார்கள் என்பதுதான் உண்மை. திட்டங்களை மக்களிடம் சொல்லத் தவறியது பெரிய தவறாகும்.
முக்கிய எதிர்க்கட்சியான பாஜக, பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்த நிலையில், காங்கிரஸில் ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முயற்சி நடந்தது. ஆனால் சிலர் தாங்கள் பிரதமராகலாம் என்ற கனவில் அதைத் தடுத்துவிட்டனர். அவர்களின் பெயர்களைக் கூற முடியாது. ராகுலை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்தால், வேறு விதமான கூட்டணி அமைந்து, மீண்டும் காங்கிரஸே ஆட்சிக்கு வந்திருக்கும். அதைச் செய்ய காங்கிரஸ் தவறி விட்டது.காங்கிரஸில் உள்கட்சி ஜன நாயகம் இல்லை. அதனால்தான் இந்த நிலை வந்துவிட்டது.
தமிழகத்தில் திமுக, தேமுதிக, காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்தால், அகில இந்திய அளவிலும் கூட்டணிகளை மாற்றியிருக்கும். பாஜகவில் 25-க்கும் மேற்பட்ட கட்சிகளை இணைத்து நாடு முழுவதும் வலுவான கூட்டணி அமைத்து, கடுமையாக உழைத்தனர். ஆனால் பாஜகவுக்கு இணையாக காங்கிரஸ் கூட்டணியும் அமைக்கவில்லை, உழைக்கவுமில்லை.
இவ்வாறு தங்கபாலு கூறினார்.
சென்னையில் சிறிய பஸ்களில் இதுவரை ரூ.7 கோடியே 62 லட்ச ரூபாய் வசூல்
சென்னையில் பெரிய பேருந்துகள் செல்ல முடியாத இடங்களுக்கு பொது மக்களின் வசதிக்காக சிறிய பேருந்துகளை முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 23.10.2013 அன்று அறிமுகப்படுத்தினார். முதல் கட்டமாக 50 சிறிய பஸ்கள் சென்னையில் விடப்பட்டன.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததை அறிந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 19.2.2014 அன்று மேலும் 50 சிறிய பஸ்களை கொடியசைத்து சென்னையில் தொடங்கிவைத்தார். இந்த பஸ்களையும் பயணிகள் முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். முதலில் விடப்பட்ட 50 சிறிய பஸ்களில் நேற்று வரை 79 லட்சத்து 78 ஆயிரத்து 14 பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். இவர்கள் மூலம் கிடைத்த டிக்கெட் வசூல் ரூ.5 கோடியே 47 லட்சத்து 96 ஆயிரத்து 545 ஆகும். இதேபோல் 19.2.14 முதல் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மேலும் 50 சிறிய பஸ்கள் மூலம் நேற்றுவரை 30 லட்சத்து 69 ஆயிரத்து 607 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பயணிகள் மூலம் கிடைத்த டிக்கெட் வசூல் ரூ.2 கோடியே 14 லட்சத்து 37 ஆயிரத்து 141 ஆகும்.
100 சிறிய பஸ்கள் மூலம் மொத்தம் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்து 47 ஆயிரத்து 621 ஆகும். மொத்த டிக்கெட் வசூல் ரூ.7 கோடியே 62 லட்சத்து 23 ஆயிரத்து 686 ஆகும். சிறிய பஸ்களுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த திட்டம் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததை அறிந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த 19.2.2014 அன்று மேலும் 50 சிறிய பஸ்களை கொடியசைத்து சென்னையில் தொடங்கிவைத்தார். இந்த பஸ்களையும் பயணிகள் முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர். முதலில் விடப்பட்ட 50 சிறிய பஸ்களில் நேற்று வரை 79 லட்சத்து 78 ஆயிரத்து 14 பயணிகள் பயணம் செய்திருக்கிறார்கள். இவர்கள் மூலம் கிடைத்த டிக்கெட் வசூல் ரூ.5 கோடியே 47 லட்சத்து 96 ஆயிரத்து 545 ஆகும். இதேபோல் 19.2.14 முதல் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மேலும் 50 சிறிய பஸ்கள் மூலம் நேற்றுவரை 30 லட்சத்து 69 ஆயிரத்து 607 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பயணிகள் மூலம் கிடைத்த டிக்கெட் வசூல் ரூ.2 கோடியே 14 லட்சத்து 37 ஆயிரத்து 141 ஆகும்.
100 சிறிய பஸ்கள் மூலம் மொத்தம் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை 1 கோடியே 10 லட்சத்து 47 ஆயிரத்து 621 ஆகும். மொத்த டிக்கெட் வசூல் ரூ.7 கோடியே 62 லட்சத்து 23 ஆயிரத்து 686 ஆகும். சிறிய பஸ்களுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த திட்டம் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படலாம் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.
தோற்பதால் நாங்கள் துவண்டுவிட மாட்டோம் என்கிற புதிய கோஷத்தோடு மீண்டும் பயணத்தை தொடருவோம்: தமிழக காங்கிரஸ்
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது குறித்து, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
"நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒரு தனித்துவமான தேர்தலாகும். 10 ஆண்டுகாலம் சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் நடைபெற்ற மன்மோகன் சிங் அரசில் ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள், சாதனைகள், ஸ்திரமான பொருளாதாரம், சமூகத்தில் நலிந்த பிரிவினருக்கு ஏராளமான திட்டங்கள், சிறுபான்மையினர் நலன்காக்க பிரதம மந்திரியின் 15 அம்ச திட்டம், நூறு நாள் வேலை வாய்ப்பு, ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்பு திட்டம், சுகாதாரத் துறையில் மாபெரும் புரட்சி, கிராமப்புற வளர்ச்சி, சாலைகள், மேம்பாலங்கள், புதிய ரயில்கள் என்று பட்டியல் தொடர்ந்தது.
இந்த ஆட்சி மாறுகிறபோது 1,81,000 கோடி ரூபாய் அன்னிய செலாவணி கையிருப்பில் வைத்துவிட்டுச் செல்கிறோம். பி.எல்.480 அமெரிக்க கோதுமையை குழந்தைகளுக்கு இலவசமாக வாங்கிய நாடு, தங்கத்தை அடகு வைத்து நமது பொருளாதாரத்தை சரிகட்ட கடன் வாங்கிய அரசு சந்திரசேகர் தலைமையிலான அரசாகும்.
தங்கத்தை மீட்டு, கடனை அடைத்து, பிற நாடுகளுக்கு கடனும், சில இயற்கை பேரழிவு நிகழ்வுகளின்போது பிற நாடுகளுக்கு பொருளாதார உதவியும் செய்கிற, செய்கின்ற வலிமையை உருவாக்கிக் கொடுத்தது காங்கிரஸ் அரசாகும். தனிமனித ஊழல்கள் சமூகத்தில் தவிர்க்க முடியாதது. ஆனால் அந்த ஊழல்கள் மீது கட்சி மாச்சர்யங்கள் இல்லாமல் சுதந்திரமாக நடவடிக்கை எடுத்திருக்கிறோமா என்றால், ஆம் என்கிற பதில் தான் உரத்து வரும். ஆனாலும் ஊழல் என்கிற அந்த முகமூடியை மிக கெட்டிக்காரத்தனமாக காங்கிரஸ் அரசு மீது பா.ஜ.க. சுமத்தியது.
வலிமையான பிரச்சார யுக்திகள், இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் அருளாசிகள், சமூகத்தை பிரித்து வைக்கிற மத வேற்றுமைகளை அதிகப்படுத்துகிற, வளர்க்கிற கூட்டத்தின் ஓலங்கள், சில ஊடகங்களின் ஆதிக்கம், இவையெல்லாம் ஒட்டுமொத்தமாய் காங்கிரஸ் கட்சி இந்தியாவில் தோல்வியை சந்தித்திக்க வைத்திருக்கிறது.
1984-ல் 404 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்ற காலமும், எதிர் வரிசையில் மாநில கட்சியான தெலுங்கு தேசம் வெறும் 30 இடங்களைப் பெற்று அமர்ந்ததும், பா.ஜ.க. அப்போது 2 இடங்களைப் பெற்றதும் வரலாற்று உண்மை. 2 இடங்களை மட்டுமே நாடாளுமன்றத்தில் பெற்ற எம்.ஜி.ஆர். 6 மாதத்திற்குப் பிறகு சட்டமன்றத்தை பிடித்த வரலாறும் தமிழகத்தில் நடந்தேறியிருக்கிறது.
ஆகவே, இந்த தோல்வி என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆனால் கவலைக்குரியதல்ல. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே மாதிரியாக மக்களின் மனோநிலை ஏன் வந்தது என்பதை யோசிக்க வேண்டும். ஆனால் அதற்காக கட்சியினர் துவண்டு போக வேண்டிய அவசியம் இல்லை. இந்த தேர்தலில் கடும் உழைப்பை தந்த சோனியா காந்திக்கும், இளந்தலைவர் ராகுல் காந்திக்கும் என் நன்றி உரித்தாகுக.
ஏற்கெனவே ஓர் அறிக்கையில் நான் குறிப்பிட்டதைப் போல, பல்வேறு பொருளாதார நெருக்கடியிலும் கண் துஞ்சாது, இந்த இயக்கத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் கட்சி தோழர்களை தாழ் பணிந்து வணங்குகிறேன். வாக்களித்த மக்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த முறை வாக்களிக்காத மக்கள் தங்களது நிலையை எதிர்காலத்தில் மறுபரிசீலனை செய்வார்கள் என நம்புகிறேன். தேர்தல் பணியாற்றிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அனைவருக்கும் எனது நன்றி. 40 தொகுதிகளிலும் சுற்றி வந்து தேர்தல் பணியாற்றிய ஜி.கே.வாசனுக்கு எங்களுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
'போற்றுவதால் என் உடல் புல்லரிக்காது - தூற்றுவதால் என் மனம் இறந்துவிடாது" என்று கவியரசு சொன்னதைப் போல, தோற்பதால் நாங்கள் துவண்டுவிட மாட்டோம் என்கிற புதிய கோஷத்தோடு மீண்டும் நம் பயணத்தை தொடருவோம்" என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.
மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே முழு ஒத்துழைப்பு நல்கப்படும்- நரேந்திர மோடி
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்னும் சில தினங்களில் பதவியேற்க உள்ளார். அவரது வெற்றிக்கு நாடு முழுவதும் உள்ள பல கட்சிகளின் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட நரேந்திர மோடி இன்று மதியம் தமிழக முதல்வருடன் தொலைப்பேசியில் நன்றி தெரிவித்தார். அப்போது, மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற அசாத்தியமான வெற்றிக்கு மோடி வாழ்த்துகளை தெரிவித்ததாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அப்போது, மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே முழு ஒத்துழைப்பு நல்கப்படும் என்றும் மோடி உறுதியளித்தார்.
நாட்டின் பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட நரேந்திர மோடி இன்று மதியம் தமிழக முதல்வருடன் தொலைப்பேசியில் நன்றி தெரிவித்தார். அப்போது, மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற அசாத்தியமான வெற்றிக்கு மோடி வாழ்த்துகளை தெரிவித்ததாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. அப்போது, மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே முழு ஒத்துழைப்பு நல்கப்படும் என்றும் மோடி உறுதியளித்தார்.
மு.க.ஸ்டாலின் கட்சி பதவிகளிலிருந்து செய்த ராஜினாமா 3மணி நேரத்தில் வாபஸ்
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. திமுக கட்சிக்கும் ஓர் இடம் கூட கிடைக்கவில்லை. இந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்தார்.
மு.க.ஸ்டாலினின் முடிவு குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி தீவிர ஆலோசனை நடத்தியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஸ்டாலின் ராஜினாமா தகவல் பரவியவுடன், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திமுகவினர் திரண்டனர். அவர் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்யக் கூடாது என்று திமுகவினர் கோஷமிட்டனர்.
அதேபோல், கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் திரண்ட தொண்டர்கள், ஸ்டாலினின் ராஜினாமாவை ஏற்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில், கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை ஏற்றுக்கொண்டு, மு.க.ஸ்டாலின் தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.
ஸ்டாலினை விமர்சித்து அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டி
பாராளுமன்ற தேர்தல் முடிவில் தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இது குறித்து கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியிடம் கேட்ட போது, கருணாநிதியின் கட்டுப்பாட்டில் தி.மு.க. செயல்பட்டிருந்தால் தேர்தல் தோல்வியை தவிர்த்திருக்கலாம் என்றார்.
இதற்கிடையில் தி.மு.க.வின் தோல்வியை மு.க.அழகிரி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி உள்ளனர். மேலும் சிலர் தி.மு.க. தலைமையை எதிர்த்து மீண்டும் போஸ்டர் ஒட்டியுள்ளனர். "மூத்தவன் சொல்லும், முத்துன நெல்லிக்காயும் புளிக்கத்தான் செய்யும், ஆனால் எதிர்காலத்திற்கு நல்லது." என்ற வாசகத்தின்கீழ் மூத்தவரே என அச்சிட்டு அதன் அருகில் கருணாநிதி மற்றும் மு.க.அழகிரி படம் அச்சிடப்பட்டு உள்ளது. மு.க.ஸ்டாலினை மறைமுகமாக குறைகூறும் வகையில் இந்த போஸ்டர் உள்ளது என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
மதுரை பாராளுமன்றத் தொகுதியில் முதல் முறையாக வென்ற அ.தி.மு.க.
2011ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதுரையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வென்ற அ.தி.மு.க., தற்போது மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளது. 1952ம் ஆண்டில் இருந்து மதுரை பாராளுமன்றத் தொகுதியானது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகளின் வசம் இருந்தது.
2009ல் நடந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அழகிரி வெற்றி பெற்றார். தற்போது, அழகிரி தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரக் களத்தில் இல்லை. காங்கிரசுடனான கூட்டணியும் முறிந்தது. இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் 1.99 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை தோற்கடித்தார். இதேபோல், சிவகங்கை தொகுதியில் 37 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி
தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவையொட்டி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று பிற்பகலில் இருந்து சோர்வாக காணப்பட்ட தயாளு அம்மாளை, நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தேர்தலில் படு தோல்வியடுத்து, குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் கிளைகள் கலைக்கப்பட்டது
பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததன் எதிரொலியாக குஜராத் தலைநகர் அகமதாபாத் மற்றும் ராஜ்கோட், வதோதரா, சூரத் ஆகிய நகரங்களுக்குட்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கிளைகள் கலைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைமை அறிவித்துள்ளது. மேற்கண்ட நகரங்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சுமார் 2 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான ஓட்டுக்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததன் எதிரொலியாக இந்த அதிரடி நடவடிக்கையில் கட்சி தலைமை இறங்கியுள்ளது.
இந்நகரங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற, வார்டு குழு அமைப்புகளும் கலைக்கப்பட்டுள்ளன. எனினும், மேற்கண்ட நகரங்களின் மாவட்ட தலைவர்கள் மட்டும் தங்களின் பதவிகளில் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு முதல் அமைச்சராக பதவியேற்கும் சந்திரபாபு நாயுடு
பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் கட்சி பல தொகுதிகளை கைப்பற்றியது. சீமாந்திரா பகுதிக்குட்பட்ட 175 சட்டமன்ற தொகுதிகளில் 106-ஐ கைப்பற்றியதையடுத்து, தெலுங்கு தேசம்- பா.ஜ.க. கூட்டணி சார்பில் சீமாந்திராவின் புதிய முதல் அமைச்சராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வரும் 2-ம் தேதி பதவியேற்றுக் கொள்கிறார். பதவியேற்றப் பின்னர் முக்கிய தேர்தல் வாக்குறுதியான 'விவசாயிகளின் கடன் தள்ளுபடி' தொடர்பான உத்தரவில் அவர் முதல் கையொப்பமிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில் கோதாவரி மற்றும் கடலோர மாவட்டங்களில் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைத்ததால் அப்பகுதி மக்கள் பதவியேற்பு விழாவில் கலந்துக்கொள்ள வசதியாக குண்டூரில் விழாவை நடத்துமாறு சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார். இதனையடுத்து, 2-ம் தேதி குண்டூரில் நடைபெறும் கோலாகல விழாவில் சீமாந்திராவின் புதிய முதல் அமைச்சராக அவர் பதவியேற்கிறார்.
Subscribe to:
Posts
(
Atom
)