BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 21 February 2014

கொலையாளியை காட்டி கொடுத்தார் கொலை செய்யப்பட்டவர்


பிரதீப் சாவன் என்ற 23 வயது வாலிபர், ராகேஷ் என்பவரின் மனைவியோடு, உறவு கொண்டிருந்த காரணத்தால், அதற்கு இடையூறாக இருந்த ராகேஷை கொலை செய்து இருக்கிறார்.

ராகேஷை, பிரதீப் கொலை செய்த விதமும், அவர் போலீஸிடம் பிடிப்பட்டதும் சுவாரஸ்யமான வகையில் உள்ளது.

ராகேஷ் ஒரு மோசமான குடிகாரர், இதை பயன்படுத்தி கொண்ட பிரதீப், அவருக்கு அதிகமாக மது வாங்கி கொடுத்து, ஆள் நடமாட்டம் இல்லாத நடு காட்டில், தான் நிறைய பணம் பதுக்கி வைத்து இருப்பதாக கூறி, அவரை அங்கு கூட்டி சென்று இருக்கிறார். அங்குள்ள ஒரு பெரிய கல்லை போட்டு, ராகேஷை கொலை செய்து இருக்கிறார். இந்த கொலை சம்பவம் ஜனவரி 9 அன்று நடந்து இருக்கிறது.

ஜனவரி 24 அன்று, வனத்துறை அதிகாரிகள், அடையாளமே தெரியாது இருந்த‌ ராகேஷின் சடலத்தை பார்த்து இருக்கின்றனர். அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில், ஒரு மஞ்சள் நிற காகிதத்தில், 'பிரதீப்' என்ற பெயரும், மற்றுமொரு தொலைபேசி எண்ணும் எழுதப்பட்டு கிடந்தது. இதை பயன்படுத்தியே, போலீஸ் அதிகாரிகள் பிரதீப்பை நான்கு நாட்களாக தீவிரமாக தேடி, பிறகு கைது செய்தனர்.

தேசத்தை திரும்பி பார்க்க வைத்த திருமுருகன், அர்னாப் கோஸ்வாமியிடம் கேட்ட கேள்விகள்


மே 17 இயக்கத்தின் தலைவரான திருமுருகன் காந்தி, நேற்று நடந்த டைம்ஸ் நவ் நிகழ்ச்சியில், விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் கேட்ட கேள்விகள், அர்னாப் கோஸ்வாமியை திண‌ற வைத்தது.

திருமுருகன் காந்தி அர்னாபிடம் கேட்ட சில கேள்விகளும், அதற்கு அர்னாப் பதில் சொல்ல முடியாமல் தினறி, மைக்கை அனணத்ததும்..

திருமுருகன் காந்தி: மிஸ்டர் அர்னாப், காங்கிரஸ் எம்பி ராஜீவ் கொலை வழக்கில் எதற்காக மொத்த தேசத்தையும் திசை திருப்ப முயற்சிக்கிறீர்கள்... இந்தக் கொலையில் நேரடித் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டு, ஆனால் இப்போது சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் சுப்பிரமணியன் சாமி, சந்திரா சாமியை ஏன் எந்த கேள்வியும் கேட்கவில்லை? ஜெயின் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட இந்த இரு குற்றவாளிகளையும் ஏன் காப்பாற்றப் பாடுபடுகிறீர்கள்? வர்மா கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பாதுகாப்புக் குறைபாடுகள் பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள்?

அர்னாப்: இதற்கெல்லாம் நான் உங்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. நான் சொல்வதை மட்டும் கேளுங்கள்..

திருமுருகன் காந்தி: ஆனால் நீங்கள் இந்த தேசத்துக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளீர்கள்

அர்னாப்: ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள்... அல்லது உங்கள் மைக் பிடுங்கப்படும்.

திருமுருகன் காந்தி: என் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள் யார்? இப்போது சிறையில் உள்ள ஏழு பேரும் அல்ல... இது விசாரணையில் தெரிந்துவிட்டது. ஆனால் உண்மையான குற்றவாளிகள் சந்திராசாமியும் சுப்பிரமணியசாமியும் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்னாப்: கீப் கொயட்... பேசாதீர்கள். இல்லாவிட்டால் உங்கள் மைக்கை செயலிழக்கச் செய்வேன்.

திருமுருகன் காந்தி: ஜெயின் கமிஷன் அறிக்கை பற்றி நீங்கள் பேச மறுப்பதேன்? வர்மா கமிஷன் அறிக்கையைப் பற்றி வாயே திறக்கமாட்டேன் என பிடிவாதம் பிடிப்பது ஏன்?

அர்னாப்: மிஸ்டர் காந்தி, மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள். இப்போது பேச வேண்டாம். திருமுருகன் காந்தி: ஏன் நான் பேசாமலிருக்க வேண்டும்... என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். அர்னாப்: உங்களோடு நான் விவாதிக்க விரும்பவில்லை. அவரிடமிருந்து மைக்கைப் பிடுங்குங்கள். இனி இந்த விவாதத்தில் உங்களோடு தொடர விரும்பவில்லை.

அர்னாப்பிடம் அதிரடியாக கேள்விகளை கேட்டு, ஒரே நாளில், தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த தமிழன் திருமுருகன் உங்களை கவர்ந்து இருந்தால், இச்செய்திக்கு லைக் போடுங்கள், மற்றவருடன் பகிருங்கள்.

நமோ டீ உடலுக்கு நல்லது அல்ல, ராகா பால் குடியுங்கள், காங்கிரஸாரின் பிரச்சாரம்


பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் தேநீர் பிரச்சாரத்திற்கு பதிலடி விடும்படியாக, ‘ராகா' பால் விநியோகத்தைத் உத்தர பிரதேசத்தில் துவக்கியுள்ளது காங்கிரஸ். ராகா' என்பது காங்கிரஸின் பிரதம வேட்பாளரான ராகுல் காந்தி பெயரின் முதல் இரண்டு எழுத்துக்கள் போல் தெரிகிறது. உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கோராக்பூர் பகுதியில் ராகுல் காந்தி படம் போட்ட பேப்பர் கப் மூலம் பால் வினியோகத்தை அக்கட்சியினர் மேற்கொண்டுள்ளனர்.

இது பற்றி பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர், ‘மோடியின் ஒவ்வொரு திட்டத்திற்கும் பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். தற்போது கோல்கர் பகுதியில் துவக்கப்பட்டுள்ள இந்த பிரச்சாரம், விரைவில் 50 லிட்டர் பால் வினியோகம் செய்து இந்த பிரச்சாரம் விரிவுபடுத்தப்படும். மேலும், டீ உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதேபோல் மோடி நாட்டு நலனுக்கு நல்லவர் அல்ல என்று வாக்காளர்களிடம் நாங்கள் அறிவுறுத்துகிறோம்' என்று கூறினார்.

ராஜிவ் வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுவிக்கக் கூடாது என நினைக்கும்முட்டாள்கள் தான் மத்தியில் இருக்கின்றனர்: ஜெத்மலானி

ராஜிவ்காந்தி வழக்கில் மூன்று தமிழர் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க சென்னை உயர்நீதிமன்றத்திலும் டெல்லி உச்சநீதிமன்றத்திலும் வாதாடியவர் ஜெத்மலானி.

இன்று சென்னை வந்த ஜெத்மலானி, செய்தியாளர்களிடம் பேசியதாவது:

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றோர் விடுவிக்கப்படக் கூடாது என்று நினைக்கிற முட்டாள்கள்தான் மத்தியில் இருக்கின்றனர். ராஜிவ் காந்தி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் போதுமான தண்டனைக் காலத்தை அனுபவித்துவிட்டனர். இந்த வழக்கில் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த முடிவும் மேற்கொண்ட அணுகுமுறையும் சரியானதே. உச்சநீதிமன்றம் 7 தமிழர் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்திருக்கிறது. இதனால் அவர்கள் விடுதலையில் தாமதமாகலாமே தவிர அவர்கள் விடுதலையாவதில் எந்த ஒரு சிக்கலுமே இல்லை என்றார்.

பருப்பு கடைசலுடன் இரண்டு சப்பாத்தி, ரூ.3-க்கு வழங்கும் திட்டம், மற்றும் ஏராளமான திட்டங்களை ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழக அரசின் பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.

அம்மா உணவகங்களில், இரவு நேரங்களிலும் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் வகையில் 2 சப்பாத்தி, பருப்பு கடைசல் ஆகியவற்றை ரூ.3-க்கு வழங்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா முடிவு செய்துள்ளார். அதற்கான திட்டத்தை இன்று பிற்பகல் 12.45 மணிக்கு தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். எந்த ஏழையும் இரவில் பசியோடு படுக்கைக்குச் செல்ல வேண்டாம் என்ற நிலையை இதன் மூலம் அவர் உருவாக்கியுள்ளார்.

இன்று ஜெயலலிதா தொடங்கவிருக்கும் மற்ற திட்டங்கள்:

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.546.93 கோடி செலவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டம்

இன்றைய பசுமை மரம், நாளைய பசுமையான எதிர்காலம் என்ற கருத்துடன், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்தநாளை முன்னிட்டு 66 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்.

அமைதி, வளர்ச்சி, வளமை ஆகியவற்றை முன்னிறுத்தி, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023-பகுதி 2; தமிழ்நாடு தொழில் கொள்கை 2014; தமிழ்நாடு ஆட்டோமொபைல் மற்றும் உதிரி பாகங்கள் கொள்கை 2014; தமிழ்நாடு உயிரி தொழில்நுட்பக் கொள்கை 2014 ஆகியவற்றை வெளியிட்டு, தமிழ்நாடு உட்கட்டமைப்பு வாரியத்தின் இணையதளத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.

மேலும், ரூ.5 ஆயிரத்து 81 கோடி மதிப்பிலான 16 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்-அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன. இந்த நிகழ்ச்சிகள், சென்னை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.

நீலாங்கரை இன்ஸ்பெக்டர் என்னை சுடப்போவதாக கூறியே சுட்டார்: தமீம் அன்சாரி


கடந்த ஜனவரி மாதம் 7ஆம் தேதி சென்னை நீலாங்கரை ஜெ-8 காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜின் துப்பாக்கி வெடித்ததில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற தமீம் அன்சாரி என்ற 16 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்தது. இதையடுத்து, நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் புஷ்பராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசினார், தமீம் அன்சாரி.  அப்பொழுது, ''நீலாங்கரை காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் என்னை சுடப்போவதாக கூறித்தான் சுட்டார். ஆனால், கவனக்குறைவாக சுட்டார் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்று குற்றம் சாட்டினார்.

இதையடுத்து பேசிய மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த மார்க்ஸ், ''காவல் ஆய்வாளர் புஷ்பராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். காயமடைந்த சிறுவன் தமீம் அன்சாரிக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்'' என்றார்.

ஜிலேபி எடுத்துக் கொடுக்க தாமதித்த விற்பனையாளர் சுட்டுக் கொலை



டெல்லியில் ரயில்நிலையம் அருகில் உள்ள கோல் மார்கெட்டில் கடந்த செவ்வாய்கிழமை மாலை, ஜிலேபி கடையில் பணியாற்றி வரும் சத்யேந்தர் சிங்கிடம் (29) சாப்பிடு வதற்கு ஜிலேபி வேண்டும் எனக் கேட்டிருக்கிறார் 30 வயது நீரஜ் குமார்.   கூட்டம் அதிகமாக இருந்ததால், ஜிலேபியை எடுத்து தருவதில் தாமதமாகி உள்ளது. இதனால் கோபமடைந்த நீரஜ், தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியைக் காட்டி, "ஏன் ஜிலேபி தர தாமதமாகிறது? சீக்கிரம் தரவில்லை எனில் சுட்டு விடுவேன்" என மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

நீரஜின் கோபத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத சத்யேந்தர், ஜிலேபியை உடனடியாக எடுத்துக் கொடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த நீரஜ், தன்னிடம் இருந்த 9 எம்.எம். கைத்துப் பாக்கியை எடுத்து சத்யேந்தரின் நெற்றியில் சுட்டுள்ளார். இதனால், அவர் மரணம் அடைந்தார்.

இதற்கிடையே, நீரஜ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றிருக்கிறார். அவரை அங்கிருந்த பொது மக்கள் சுற்றி வளைத்துப் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர்.

கடந்த செப்டம்பர் 23-ல் டெல்லியை அடுத்துள்ள உத்தரப் பிரதேசத்தின் ஏட்டாவின் தாபாவில் ஆம்லெட்டில் வெங்காயம் போடாததால் ஆத்திரமடைந்த கிரிமினல்கள் அதன் உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் அவர் சிகிச்சைக்கு பின் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 'நடமாடும் நமோ மீன் கடை' திறப்பு, வஞ்சர மீன் கிலோ 750 ரூபாய்க்கு இங்கு கிடைக்கும்

                            


தமிழக பாஜக மீனவரணி சார்பில் சென்னையில் நடமாடும் ‘நமோ’ மீன் கடைகள் திறக்கப்படுகின்றன. முதல் கடையை 25-ம் தேதி கலங்கரை விளக்கம் பகுதியில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து தமிழக பாஜக மீனவரணித் தலைவர் சதீஷ்குமார் கூறியதாவது:

 எந்த நேரத்தில் காங்கிரஸ்காரர்கள் நரேந்திர மோடியை டீக்கடைக் காரர் என்று கிண்டல் செய்தார்களோ தெரியவில்லை. அது நல்ல முகூர்த்த நேர மாகி, நாடு முழுவதும் இப்போது ‘நமோ’ டீ கடைகள் பிரபலமாகி வருகின்றன. இதற்கு மக்களிடத்தில் நல்ல வரவேற்பும் உள்ளது.

சென்னையில் மீன் விலை யைக் கேட்டால் தலை தெறிக்கிறது. ஸ்லைஸ் செய்யப்பட்ட வஞ்சிரம் மீன், அரசு மீன் அங்காடிகளில் கிலோ 950 ரூபாய்க்கு விற்கிறார்கள். நாங்கள் அதை 750 ரூபாய்க்கு கொடுக்கத் தீர்மானித்திருக்கிறோம். இதிலேயே எங்களுக்கு கிலோவுக்கு 25 ரூபாய் லாபம் கிடைக்கும். இந்த மலிவுவிலை மீன் கடைக்கு ‘நடமாடும் நமோ மீன் கடை’ என பெயர் வைத்துள்ளோம். 

இந்தக் கடைகளின் போர்டுகளில் நரேந்திர மோடி படம் இருக்கும். அடுத்தகட் டமா, மீன்களை டோர் டெலிவரி செய் யும் திட்டத்தையும் வைத்திருக்கி றோம். எங்கள் நிர்வாகிகள் தலைக்கு ஆயிரம் ரூபாய் போட்டுத் தான் இந்தக் கடையை தொடங்குகிறோம்.

வெளியிலிருந்து பார்த்தால் இது மீன் வியாபாரம் போல் தெரி யும். ஆனால், ’நமோ மீன் கடைகள்’ மூலம் மோடியின் பெயரையும் புகழையும் தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க இந்தக் கடை களை நாங்கள் ஒரு பிரச்சார மேடையாகப் பயன்படுத்தப் போகிறோம்.


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media