BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 21 January 2014

தூக்கிலிருந்து தப்பினார்கள் வீரப்பன் கூட்டாளிகள் என மரணதண்டனை விதிக்கப்பட்ட நால்வர்

தூக்கிலிருந்து தப்பினார்கள் வீரப்பன் கூட்டாளிகள் என மரணதண்டனை விதிக்கப்பட்ட நால்வர்

டில்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் 30 மணி நேர தர்ணா வாபஸ்

டில்லியின் ஹை செக்யூரிட்டி ஏரியாவில் ரயில் பவன் முன்னால் போராட்டம் நடத்திய அர்விந்த் கெஜ்ரிவாலின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

12 வயது சிறுமியை கொன்று, அவரது பிணத்துடன் உறவு

மும்பையை சேர்ந்த ராகுல் என்பவர், ஆறாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை கொலை செய்து, அவரது பிணத்துடன் உறவு கொண்டிருக்கிறார். கடந்த 17ம் தேதி, அச்சிறுமியை தன் வண்டியில் லிப்ட் தருவதாக சொல்லி ஏற்றி கொண்டு சென்று, தனிமையான இடத்திற்கு அவரை இழுத்து சென்று இருக்கிறார். பின்னர், கற்பழிக்க முயன்ற போது, சிறுமி மறுத்ததால், அவரை கொன்று இருக்கிறார்.  பின்னர், இறந்து கிடந்த சிறுமியின் உடலோடு, உறவு கொண்டிருக்கிறார் ராகுல்.

போலீசார் விசாரணையில், மோப்ப நாய்களை பயன் படுத்தினர். நாய்களின் உதவியால், சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அருகில் இருந்த கிராம மக்களிடம் விசாரணை மேற் கொண்ட போது, ராகுலை பற்றிய விவரமறிந்து, அவனை கைது செய்து உள்ளனர்.

கேஜ்ரிவாலின் தர்ணா வாபஸ் பெறப்படுமா?

கேஜ்ரிவால் தலைமையில் நடந்து வரும் தர்ணாவால், டெல்லி மக்களுக்கு பல இடைஞ்சல்கள் ஏற்பட்டு, அவர்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். விதிக்கப்பட்ட தடையையும் மீறி, நேற்றிலிருந்து நடைப்பெற்று வரும் இந்த போராட்டத்திற்கு, கண்டனங்கள் பல தரப்புகளில் இருந்து அதிகரித்து வருகிறது.

இதைப் பற்றி கிரண் பேடி பேசுகையில், "கேஜ்ரிவாலும் அவரது கட்சியினரும் அராஜகத்தையும் சட்ட ஒழுங்கு சீர்குலைவையுமே அதிகரிக்க செய்து வருகின்றனர். இது அழிவுக்குரியது. நிறுவனங்களின் மரியாதைகளை அவமதிக்கிறார்கள். கேஜ்ரிவால் தம்மை அராஜகவாதியாக அழைத்துக் கொள்வது கவலைக்குரியது.", என்று கூறினார்.

 இந்நிலையில், இன்று  மாலை தனது அமைச்சர்களுடன் தனது மாருதி வேகன் ஆர் காருக்குள் அமர்ந்து முதல்வர் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை நடத்தினார். இதனால் போராட்டம் வாபஸ் பெறப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



சீனாவில் பெண்களை பாலியல் அடிமையாக நடத்தி கொலை செய்தவருக்கு மரண தண்டனை



சீனாவில் லீ ஹவோ என்ற 36 வயது நபர், தனக்கு சொந்தமான கட்டிடத்தின் அடித்தளத்தில் 6 பெண்களை அடிமைகளாக அடைத்து வைத்து பாலியல் உறவு கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்களின் வயது 16 முதல் 23 வரையாகும். ஆறு பெண்களையும் 2 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரை அடைத்து வைத்து தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார்.

ஆறு பெண்களில் மூவரை வைத்து மற்ற மூன்று பெண்களில் இருவரை லீ ஹவோ கொல்ல வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அடைத்து வைத்த பெண்களில் ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அக்கட்டிடத்தில் இருந்து தப்பி வந்து காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து லீ ஹவோ கைது செய்யபட்டார். பின்னர் வழக்கு விசாரணை முடிந்து அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று அவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

எக்ஸ்ரேவில் தங்க ஊசிகள் இருந்தது, மருத்துவர்கள் அதிர்ச்சி



65 வயதான தென் கொரியாவை சேர்ந்த பெண் ஒருவர்,  கடுமையான மூட்டு வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். மாத்திரைகள் மருந்துகள் பயனளிக்காததால், அக்குபஞ்சர் மருத்துவத்தை நாடியிருக்கிறார்.

அக்குபஞ்சர் முறையில் சிறு ஊசிகளை கொண்டு குத்தி, குணமடைய வைப்பது வழக்கம். அது போல்,  பாதிக்கப் பட்ட பெண்ணின் கால் முட்டிகளில், ஊசிகளை கொண்டு குத்தப்பட்டது அல்லாமல், அவர்களது திசுக்களிலேயே ஊசிகள் விடப்பட்டிருக்கிறது. இதையடுத்து அந்த பெண், மூட்டு வலி அதிகரித்த காரணத்தினால், எக்ஸ்ரே எடுக்கும் போது, அவர் கால் மூட்டு பகுதிகளில் குவிந்திருந்த தங்க ஊசிகள் தென்பட்டது.

போராட்டத்தில் இருந்து கொண்டே கோப்புகள் பார்க்கும் கேஜ்ரிவால், கிண்டலடிக்கும் பா.ஜ.க‌

பத்து நாட்கள் போராட்டத்தை அறிவித்த கேஜ்ரிவால், தான் இருக்கும் இடத்தில் இருந்தே தன் முதல் அமைச்சர் பணிகளை தொடர்வேன் என்று கூறியுள்ளார். அவர் இருக்கும் இடத்திற்கே, ஏராளமான கோப்புகள் வந்து இறங்கி இருக்கின்றன. கேஜ்ரிவாலும், அவரது ஆறு அமைச்சர்களும் போராட்டத்தில் இருந்து கொண்டே அந்த கோப்புகளை பார்த்து வருகிறார்கள். இந்தப் போராட்டத்தால் தனது பணிகள் பாதிக்கப்படவில்லை என்றும் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

இதை பற்றி பேசுகையில், பா.ஜ.க. மூத்த தலைவர் அருண் ஜெட்லி, " ஆம் ஆத்மியினருக்கு தலைமைச் செயலகத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதை விட தெருவில் இருப்பதே ரொம்பப் பிடித்துள்ளதாக தெரிகிறது." என்று கிண்டலாக கூறியுள்ளார்.

"கெஜ்ரிவால் அறிவித்துள்ள தர்ணா போராட்டம் தேவையற்றது. கும்பல்கள் கூடி முடிவுகளை எடுக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. திறமையான அரசு நடத்துவோருக்கு முறையான நிர்வாகமே தேவை. மக்கள் சேவகர்களாக இருப்பது எப்படி முக்கியமோ, அதேபோல மக்களுக்கான அரசை திறம்பட நடத்துவதும் முக்கியம்" என்று கூறியுள்ளார் ஜேட்லி.

புலிகள் இல்லாததால், தமிழர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்- ராஜபக்சே

இலங்கையின் தமிழர்கள் இருக்கும் பகுதியான‌ வ‌டக்கு மாகாணத்தில், ராணுவத்தினரின் எண்ணிக்கை,70 ஆயிரத்தில் இருந்து  12 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான சண்டை முடிவுக்கு வந்தது. இருப்பினும், தமிழர்கள் வசிக்கும் பகுதியில், ராணுவத்தினர் நிரந்தரமாக தங்கியுள்ளனர். இதற்காக எதிர்ப்புகள் தெரிவித்த வண்ணம் அங்குள்ள மக்கள் இருந்ததால், அப்பகுதியில் ராணுவம் குறைக்கப் பட்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகள் வீழ்த்தப்பட்ட பின், வடக்கு பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். இலங்கையில், குண்டு வெடிப்பு சம்பவங்கள் இல்லாததால், தற்போது, மக்களால் நாட்டின் எந்த ஒரு இடத்துக்கும், பயம் இல்லாமல் செல்ல முடிகிறது என்றும் ராஜபக்சே கூறினார்.

நாடகத்தை நிறுத்தி விட்டு, நிர்வாகத்தை பாருங்கள் கேஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால், நாடகம் நடத்துவதை நிறுத்திவிட்டு, நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் நிருபம் வலியுறுத்தியிருக்கிறார்.

நேற்று மும்பையில், நிருபர்களுக்கு பேட்டியளித்த சஞ்சய் நிருபம், " கெஜ்ரிவால் முதலில் நாடகம் ஆடுவதை நிறுத்திவிட்டு, நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். அவர் (கெஜ்ரிவால்) ஒரு முதலமைச்சர் என்பதால் இதுபோன்ற பிரச்சினைகளை மத்திய அரசுடன் எளிதில் கலந்து பேசி விரைவில் முடிவுக்கு கொண்டு வரலாம்." என்று கூறினார்.

டெல்லியில் நேற்று, விதிக்கப்பட்ட தடையை மீறி, கேஜ்ரிவாலும், ஆம் ஆத்மி கட்சியினரும், உள்துறை அமைச்சர் அலுவலகம் முன்பு  போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் டெல்லி மக்களுக்கு பல இடைஞ்சல்கள் ஏற்பட்டது.

"நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டிய ஆம் ஆத்மி கட்சியினர்,  போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு நிர்வாகதிறனில் போதிய அனுபவமும், புரிந்து கொள்ளும் திறனும் இல்லை என்பது தெரியவருகிறது." என்று சஞ்சய் நிருபம் கருத்து தெரிவித்தார்.










சனியனை தூக்கி பனியனில் போட்ட "கெட்டப்பையன்" அனிருத் மீது வழக்கு

சனியனை தூக்கி பனியனில் போட்ட "கெட்டப்பையன்" அனிருத் மீது வழக்கு

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media