டில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடித்த பின் 49 நாட்கள் ஆட்சிக்கு பின் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர் . இவ்வளவு நாட்கள் டில்லியில் முதல்வர் நாற்காலி காலியாகவே இருக்கிறது .
எனவே இன்று அந்த கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் டில்லியில் தேர்தல் புதிதாக நடத்தும் படி , ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர் . அவர்கள் ஜனாதிபதிக்கு கொடுத்த அறிக்கையில் , பாஜக அவர்களின் அமைச்சர்களை கடந்த 10 நாட்களாக வாங்க பார்க்கின்றனர் . அதற்காக பணமும் கொடுக்கின்றனர் . அதை வாங்க மறுத்தால் உயிருக்கு மிரட்டல் விடுப்பதாக பூகார் ஒன்றை அந்த அறிக்கையில் கொடுத்துள்ளனர் .
மேலும் இப்போது பெட்ரோல் , டீசல் விலையேற்றம் , மற்றும் ஊழலை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் , பாஜக வின் மவுசு மக்களிடம் குறைந்து இருக்கும் என கருதி தேர்தலை இப்போது நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கின்றனர் ஆம் ஆத்மி கட்சியினர் .