BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 18 November 2014

வெண்டைக்காயை மருந்தாகப் பயன்படுத்துவது எப்படி

3 முதல் 5 வரை எண்ணிக்கையிலான பசுமையான ‘வெண்டைக்காய்களைத் தேர்ந்து எடுத்து அவற்றை நன்றாக நீரிட்டுக் கழுவி எடுத்துக் கொண்டு அதன் மெல்லிய முனைப் பகுதியில் சிறிதளவும், அதன் அடிப்பகுதியில் சிறிதளம்துண்டித்துவிட்டு வெண்டைக்காய் ஒவ்வொன்றையும் நீளவாக்கில் இரு துண்டாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இட்டு 500மி.லிட்டர் நீர் விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் கொதிக்கவிட்டு 3-ல் 2 பங்கு நீர் வற்றியதும் இறக்கி வைத்து ஒரு பாத்திரத்தில் மூடி இரவு முழுவதும் விட்டுவிடவும்.  காலையில் எழுந்ததும் அந்த காய்களைத் தின்று விட்டு நீரையும் குடித்து விடவும். இது ஒரு சிரமமான செயல்தான் என்றாலும் மூட்டு தேய்வு, மூட்டு வலி, வீக்கம் ஆகியவற்றினின்று விடுதலை கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் தினம் இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களை மேற்சொன்ன வகையில் சுத்திகரித்து குறுக்கே துண்டித்து ஒரு தம்ளர் நீரில் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.காலையில் எழுந்து வெறும் வயிற்றில் நீரை மட்டும் தெரிவிறுத்திக் குடித்து விடவும். இப்படி அன்றாடம் குடித்து வரும் போது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு நாளடைவில் குறைந்து விடும். இம்முறை புற்று நோய் உள்ளவர்ககளுக்குக் கூட ஒரு துணை மருந்தாக உதவும். இதய நோய் உள்ளவர்கள், மாரடைப்பு என்ற துன்பத்துக்கு ஆளானவர்கள் வெண்டைக் காயை மேற்சொன்ன வகையில் உண்டுவர ரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை (சீரம் கொலஸ்ட்ரால்) குறைத்து இதயத்தின் ஆரோக்கியத்துக்கு துணை நிற்கிறது. 

வெண்டைக்காயை பிஞ்சுகளாகத் தேர்ந்தெடுத்து 150 கிராம் அளவுக்கு எடுத்து 700 மி.லி. நீர்விட்டு பாதி அளவாக சர்க்கரை அல்லது தேன் சேர்த்து 50 முதல் 70 மி.லி. வரை எடுத்து 4 மணி நேரத்துக்கு ஒருமுறை உள்ளுக்குக் கொடுக்க வெள்ளைப் போக்கு (ஆண், பெண் இருபாலர்களும்), இருமல், நீர்க்கடுப்பு வயிற்றுப்போக்கு ஆகியவை குணமாகும். இரண்டு மூன்று வெண்டைக் காய்களைத் துண்டித்து 500 மி.லி. நீரில் இட்டு கொதிக்க வைத்து அதில் இருந்து வரும் ஆவியை சுவாசிக்க இருமல், தொண்டைப்புண், தொண்டைக் கம்மல், தொண்டைக்கட்டு, தொண்டை எரிச்சல் ஆகியன குணமாகும். தொடர்ந்து சில நாட்கள் செய்வது நல்லது. உடலில் எங்கேனும் புண்ணோ, வீக்கமும் வலியும் கொண்ட கட்டியோ இருந்தால் இளம் வெண்டைக் காய்களையாவது வெண்டைச் செடியின் இலையையாவது நன்றாக பசை போல அரைத்து புண்களின் மீதோ கட்டிகளின் மீதோ வைத்து கட்டி வர புண்கள் விரைவில் ஆறும். கட்டிகளும் சீக்கிரத்தில் பழுத்து உடைந்து உள்ளிருக்கும் முளை வெளிவந்து வேதனை தணியும். 

இரண்டு அல்லது மூன்று வெண்டைக்காய்களைத் துண்டு துண்டுகளாக நறுக்கி 200 மி.லி. நீரிலிட்டு நன்கு கொதிக்க விட்டு எடுத்து ஆறவிட்டு சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வர வயிற்றை வலிக்கச் செய்து வெளியாகும் நினைக் கழிச்சல் பெருங்கழிச்சல், குருதிக் கழிச்சல் (ரத்த சீதபேதி) ஆகிய நோய்கள் குணமாகும். இளம் கர்ப்பிணிப் பெண்கள் வெண்டைக்காயைத் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நரம்பு மண்டலக் கோளாறுகள் தவிர்க்கப்படும். வெயில் மிகுந்த போது வெயிலின் தாக்கத்தால் மயக்க நிலை வருமோ என அஞ்சுபவர்கள் அல்லது ஏற்கனவே அதை அனுபவத்தில் கண்டவர்கள் இரண்டு மூன்று வெண்டைக்காய்களை நறுக்கி நீரிலிட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி சர்க்கரை போதிய அளவு சேர்த்து குடித்து வருவதால் வெயிலின் தாக்கம் (சன்ஸ்ட்ரோக்) தணிக்கப்படும். வெண்டைக்காயை நசுக்கி தலைக்குத் தேய்த்து வைத்திருந்து அரை மணிநேரம் கழித்து தலைக்குக் குளிக்க பொடுகு (டேன்ட்ரப்) குணமாகும். இத்துணை மருத்துவ குணங்கள் கொண்ட வெண்டைக்காயை உணவில் சேர்ப்பதன் மூலம் மருத்துவ செலவையும் குறைத்து ஆரோக்கியத்தையும் பெருக்கலாம்

ரஷியாவுடன் போருக்குத் தயார் உக்ரைன்

ரஷியாவுடன் முழுமையான போருக்குத் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ கூறினார்.உக்ரைனில், கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து போரிடுவதற்காக ரஷியாவிலிருந்து அணி அணியாக படைவீரர்கள் அனுப்பப்படுவதாக உக்ரைன் கடந்த வாரம் புகார் கூறியிருந்தது.இந்நிலையில் உக்ரைன் அதிபர் பெட்ரோ பொரொஷென்கோ, ஜெர்மனியிலிருந்து வெளியாகும் "பில்ட்' நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:ரஷிய படையுடன் போரிடுவதற்கு நாங்கள் துளியும் அஞ்சவில்லை. அந்த நாட்டுடன் முழுமையான போரை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம்.

நாங்கள் அமைதியைத்தான் விரும்புகிறோம்: ஆனால், ரஷியா எந்த அமைதி ஒப்பந்தத்தையும் மதிப்பதாகத் தெரியவில்லை.கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு போதுமான வலிமை எங்களிடம் உள்ளது. ஐந்து மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது அதிக வலுவுடன் உள்ளோம். உலகம் முழுவதும் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது என்றார் பொரொஷென்கோ. ஐ.நா. புள்ளிவிவரப்படி, ரஷிய ஆதரவுப் பகுதியான கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் ஏழு மாதங்களாக நடைபெற்ற சண்டையில் 4,100 பேர் உயிரிழந்தனர். அங்கு தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளதால், பெரும்பாலான போர் முனைகளில் சண்டை ஓய்ந்துள்ளது. எனினும், முக்கியத்துவம் வாய்ந்த சண்டைப் பகுதிகளில் இருதரப்பினருக்கும் இடையே பரஸ்பர தொலைதூரக் குண்டுவீச்சுத் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

உலக அளவில் சிறந்த முடிவெடுப்போர் பட்டியல் : மோடிக்கு முதலிடம்



உலக அளவில் சிறந்த முடிவெடுப்போர் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்காவின் முன்னணி வெளிநாட்டுக் கொள்கை பத்திரிகை வெளியிட்டுள்ள "100 உலக சிந்தனையாளர்கள்' பட்டியலில், "சிறந்த முடிவெடுப்போர்' பிரிவில்,உலக அளவில் மோடி முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, 2-ஆவது இடத்தில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கலும். 3-ஆவது இடத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவும் உள்ளனர்.மோடி குறித்து அந்தப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது: "மோடி வசீகரமானவர், வர்த்தகத்துக்கு சாதகமான தலைவர். அவரது பேச்சைக் கேட்க பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரள்கின்றனர். அவரது பேச்சு, 3டி தொழில்நுட்பம் மூலம் லட்சக்கணக்கானோரை சென்றடைகிறது' எனத் ரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவர் அமித் ஷா குறித்து அந்த பத்திரிகையில், "உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரிய பிரசார இயந்திரத்தை கட்டமைத்தவர். தேர்தல்களில் பாஜகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றவர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, சிஜிநெட் ஸ்வாரா நிறுவனர் சுப்ரான்சு சௌதரி, செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ், இந்திய தேசிய போலியோ ப்ளஸ் கமிட்டி தலைவர் தீபக் கபூர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளரும், மருத்துவருமான சங்கீதா பாட்யா, விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன், பொருளாதார நிபுணர் பார்தா தாஸ்குப்தா ஆகியோரும் உலக சிந்தனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

காஷ்மீர் : முதல்வர் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு


ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் வீட்டுக்கு வெளியே திங்கள்கிழமை காவலுக்கு நின்று கொண்டிருந்த வீரர் "தவறுதலாக' துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: ஸ்ரீநகரில் குப்கர் சாலையில் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் வீட்டின் வெளியே காவல் பணியில் ஈடுபட்டிருந்த குணால் கோஷ் என்பவர் தவறுதலாக தனது துப்பாக்கியை வெடிக்கச் செய்துவிட்டார்.

இதுகுறித்து குணால் கோஷிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் பல்வேறு விஷயங்களில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம் நடைபெற்றபோது முதல்வர் ஒமர் அப்துல்லா, தேர்தல் பிரசாரத்துக்காக வெளியே சென்றிருந்தார். இதுகுறித்து ஒமர் தனது சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில், "எனக்குப் பாதுகாப்பு வழங்கும் அதிகாரிகள் மீது நான் முழுமையாக நம்பிக்கை வைத்துள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

2ஜி : சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் விசாரணை தொடங்கியது

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றதற்கு பிரதிபலனாக கலைஞர் டிவிக்கு, சில தனியார் நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக ரூ.200 கோடி அளவுக்குப் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியம் பதிவு செய்யும் நடைமுறை தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.இந்த வழக்கின் புகார்தாரரும், மத்திய அமலாக்கத் துறையின் இணை இயக்குநருமான ஹிமான்ஷு குமார் லால், சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் திங்கள்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதைத் தொடர்ந்து, அவரிடம் புதன்கிழமையும் (நவம்பர் 19) தொடர்ந்து சாட்சியம் பதிவு செய்ய சிறப்பு நீதிபதி சைனி உத்தரவிட்டார். அரசுத் தரப்பு சாட்சியம்: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் நீங்கலாக, மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்பட 9 பேரும், ஒன்பது நிறுவனங்களின் பிரதிநிதிகளும் புதன்கிழமை முதல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் திங்கள்கிழமை நடந்த விசாரணையின் முடிவில் சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் மத்திய அமலாக்கத் துறை சார்பில் அரசுத் தரப்பு சாட்சியங்களாக திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி உள்பட 30 பேரிடம் சாட்சியம் பதிவு செய்ய சிறப்பு நீதிபதி சைனி அனுமதி அளித்தார். இதன்படி, தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத் துறை இணை இயக்குநர் ஹிமான்ஷு குமார் லால் முதலாவது அரசுத் தரப்பு சாட்சியாக திங்கள்கிழமை ஆஜராகி சாட்சியத்தை பதிவு செய்தார்.அவரிடம் அமலாக்கத் துறை சிறப்பு வழக்குரைஞர் ஆனந்த் குரோவர், "2ஜி அலைக்கற்றை விவகாரத்தை எந்த அடிப்படையில் மத்திய அமலாக்கத் துறை அணுகியது? சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டப்படி குற்றம்சாட்டப்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய என்ன காரணம் இருந்தது? போன்ற கேள்விகளை எழுப்பினார். அவற்றுக்கு ஹிமான்ஷு குமார் லால் தெரிவித்த பதிலை சிறப்பு நீதிபதி சைனி பதிவு செய்து கொண்டார். அதன் விவரம்: சிபிஐ தொடுத்த வழக்கின்படி விசாரணை: "2012, டிசம்பர் 27ஆம் தேதி மத்திய அரசின் உத்தரவின்படி, மத்திய அமலாக்கத் துறையின் தலைமையகத்தில் இணை இயக்குநராகப் பொறுப்பேற்றேன். அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, துணை குற்றப்பத்திரிகை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் சில தனியார் நிறுவனங்களுக்கும் கலைஞர் டிவிக்கும் இடையே சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி விசாரணை தொடங்கினோம். மத்திய அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங், உதவி இயக்குநர்கள் கமல் சிங், சத்தியேந்திர சிங் ஆகிய மூன்று அதிகாரிகள் அடங்கிய குழுவினரின் உதவியுடன் விசாரணை நடத்தினோம். பண மோசடித் தடுப்புச் சட்டம், 2002-இன்படி இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், சாட்சிகளின் விவரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன' என்றார் ஹிமான்ஷு குமார் லால்.

கூடுதல் சாட்சியங்கள்: இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மத்திய அமலாக்கத் துறை துணை இயக்குநர் ராஜேஷ்வர் சிங் உள்பட 5 பேரை கூடுதல் சாட்சியங்களாக சேர்க்கக் கோரி சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) பிறப்பிப்பதாக நீதிபதி ஓ.பி.சைனி குறிப்பிட்டார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media