Monday, 27 January 2014
ஆம் ஆத்மிக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெறும் முடிவு தற்போது இல்லை- காங்கிரஸ்
ஆம் ஆத்மி கட்சியின் நடவடிக்கைகள் ஏமாற்றத்தை தந்தாலும், அக்கட்சிக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறும் முடிவில் தற்போது இல்லை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
"நாங்கள் பல விஷயங்களை கருத்தில் கொண்டு தான் ஆம் ஆத்மிக்கு ஆதரவளித்தோம். அதனால் பொறுமையுடன் தான் செயல் படுவோம். இன்னொரு முறை தேர்தல் நடத்த பட்டு, டெல்லி மக்களுக்கு சிரமத்தை கொடுக்க வேண்டாம் என தான், அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டினோம். ஆனால், ஆம் ஆத்மி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகம் இல்லை .", என காங்கிரஸ் சார்பில் பேசிய முகுல் வாஸ்னிக் கூறினார்.

அழகிரி பிறந்தநாள் விழா அன்று ஸ்டாலினுக்கும் சென்னையில் விழா
மு.க.அழகிரியின் பிறந்தநாள் வரும் 30ம் தேதி அன்று, அவரது ஆதரவாளர்களால் மதுரையில் சிறப்பாக கொண்ட பட இருக்கிறது. அதே தினத்தில், சென்னையில் ஸ்டாலின் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பொதுக்கூட்டம் மயிலாப்பூரில் நடை பெற இருக்கிறது. இதைப் பற்றி டிவிட்டர் வலை தளத்தில் பதிவு செய்திருந்த தென் சென்னை மாவட்ட திமுக செயலர் ஜெ. அன்பழகன், நடக்கவிருக்கும் பொது கூட்டத்தை 'தளபதி திருவிழா' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அழகிரி பிறந்தநாள் விழாவை விட பிரம்மாண்டமாக நடைப் பெற இருக்கும் தளபதி திருவிழாவில், ஆயிரங்கணக்கான ஸ்டாலின் ஆதரவாளர்கள் சென்னையில் குவிவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.
# சபாஷ், சரியான போட்டி!
அழகிரி பிறந்தநாள் விழாவை விட பிரம்மாண்டமாக நடைப் பெற இருக்கும் தளபதி திருவிழாவில், ஆயிரங்கணக்கான ஸ்டாலின் ஆதரவாளர்கள் சென்னையில் குவிவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.
# சபாஷ், சரியான போட்டி!
குவிந்த அழகிரி ஆதரவாளர்கள், அதிர்ந்த திமுக தலைமை
கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக, தி.மு.க வில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அழகிரி நேற்று விமானத்தில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அவரை மதுரை விமான நிலையத்தில் வரவேற்க, ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு வந்து காத்து கொண்டிருந்தனர். சென்னை விமான நிலையத்திலும், அவரது ஆதரவாளர்கள் மேள தாளத்துடன் பிரம்மாண்டமான முறையில் வழியனுப்பு நடத்தினர்.
மதுரையில், தனக்காக உற்சாகமாக காத்து கொண்டிருந்த ஆதரவாளர்களை பார்த்து, புன்னகை நிறைந்த முகத்துடன் கைகளை அசைத்தார் அழகிரி. அப்பொழுது, அழகிரி ஆதரவாளர்கள் வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர்.
கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அழகிரிக்கு, பிரம்மாண்டமான வழியனுப்பு மற்றும் வரவேற்பு நடத்த ஆயிரங்கணக்கான ஆதரவாளர்கள் குவிந்தது, திமுக தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மேலும், அழகிரி தன் பிறந்தநாளான ஜனவரி 30 அன்று விரிவாக பேச போவதாக கூறியிருப்பது திமுக வட்டாரத்தில், படபடப்பை ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் துரைமுருகன் அழகிரியை சென்னையில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, கருணாநிதிக்கு மிக நெருக்கமானவரான துரைமுருகன் அழகிரியை சந்தித்திருப்பது கருணாநிதி அனுப்பிய சமாதான தூது என்றே தெரிகிறது

வைகோவை பற்றி பேசி வாங்கி கட்டி கொண்ட சுப்பிரமணியம் சாமி
மதிமுகவை பாஜக கூட்டணியில் சேர்த்தது தவறு என்றும், இதனால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் அதிமுகதான் ஜெயிக்கப் போகிறது என்று சுப்பிரமணியம் சாமி கருத்து கூறியுள்ளார். சாமியின் இக்கருத்து, மதிமுகவினரையும் மட்டுமல்லாது, பாஜகவினரையும் கடும் அதிருப்தி படுத்தியுள்ளது.
இதைப் பற்றி, பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி எம்.வி.எம். அழகப்பன் கூறுகையில், "சாமியின் கருத்து நான்சென்ஸ். முட்டாள்தனமாக அவர் பேசுகிறார். கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் தான் கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது. தமிழக பாஜக விவகாரங்களில் சாமி தலையிடக் கூடாது." என்று பேசியுள்ளார்.
"கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டதே மதிமுக - பாஜக கூட்டணி. அதுகுறித்து சாமிக்கு கருத்துக் கூற உரிமையே கிடையாது. ", என்று பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.

பிற மொழி படங்கள் டப் செய்யப்பட்டு கன்னடத்தில் வெளியாவதற்கு தடை விதிக்க கோரிக்கை
கன்னட படங்கள் குவிக்கும் வசூலை விட, தமிழில் இருந்து கன்னடத்திற்கு டப் செய்யப்பட்டு வெளியாகும் படங்கள் அதிக வசூலை குவிப்பதினால், அதை முடக்குவதற்கு, கன்னட திரையுலகினர் பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர். நேற்று பெங்களூரில் நடந்த கன்னட திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்திய அவசர கூட்டத்தில், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு செய்தனர்.
எனினும், கன்னட திரையுலகில் உள்ள சில சங்கங்கள் மட்டும் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
எனினும், கன்னட திரையுலகில் உள்ள சில சங்கங்கள் மட்டும் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
தி.மு.க பற்றி அக்கறை இல்லை, அக்கட்சி அழிவிற்கு ஒரு காரணம் வீரமணி
தி.மு.க வில் இருந்து கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக, நீக்கப்பட்ட அழகிரி பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரும் தேர்தலில், தி.மு.க வெல்வது பற்றியோ, அவர்கள் யாருடன் கூட்டணி வைக்கிறார்கள் பற்றியோ எந்த அக்கறையும் தனக்கு கிடையாது என்று கூறினார். ஆனால், நிச்சயமாக, தே.மு.தி.க வுடன் இணைந்தால், எந்த பலனும் தி.மு.க விற்கு கிடைக்காது என கூறினார்.
வீரமணியை பற்றி பேசும் போது, "ஆட்சி மாறும் போதெல்லாம் கருத்து சொல்லும் கறுப்பு மனிதர் அவர். கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்றார். பின்னர் அ.தி.மு.க. ஆட்சியின்போது, ஜெயலலிதாவை சமூக நீதிகாத்த வீராங்கனை என்று சொன்னார். தற்போது, தி.மு.க.வின் அழிவிற்கு அவரும் ஒரு காரணம் ஆகி வருகிறார்." என்று அவரை கடுமையாக விமர்சித்தார்.
மேலும், தி.மு.க வில் சந்தர்ப்பவாதிகள் இருக்கிறார்கள், அவர்கள் கட்சியின் சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார்கள், அதன் காரணமாகவே தான் நீக்கப்பட்டிருப்பதாகவும் அழகிரி கூறினார்.

மதுரைக்கு கிளம்பிய அழகிரியை சந்தித்த துரைமுருகன்
திமுக விலிருந்து நீக்கப்பட்ட பின்னர், முதல் முறையாக நேற்று மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார் அழகிரி. சென்னை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க அவரது ஆதரவாளர்கள் தடல் புடலான வழியனுப்பு நடத்தி வைத்தனர். இம்மாதம் 30ம் தேதி, அவர் பிறந்த நாளை, மதுரையில் சிறப்பாக கொண்டாட, அவரது ஆதரவாளர்கள் பெரிய திட்டங்களுடன் இருக்கின்றனர். அழகிரியும் அவர் பிறந்தநாள் அன்று, பத்திரிக்கையாளர்களை சந்தித்து, விரிவாக பேச போவதாக அறிவித்து இருந்தார்.
அழகிரி கிளம்புவதற்கு முன்பு, விமான நிலையத்திற்கு திடீரென திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் வந்திருந்தார். அவர் அழகிரியை சந்தித்து தனியாக பத்து நிமிடங்கள் பேசினார். திமுக தலைமை தரப்பில் துரைமுருகன் மூலம் ஏதாவது சமரசத்திற்கு முயல்கிறார்களா என்ற கேள்வியையும், எதிர்பார்ப்பையும் இந்த சந்திப்பு எழுப்பியுள்ளது.
அவர்கள் எதை பற்றி பேசினார்கள் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து எம்.எல்.ஏ நீக்கம்
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து, எம்.எல்.ஏ விநோத் குமார் பின்னி, கட்சி ஒழுங்கு நடவடிக்கையாக நீக்கப் பட்டார். இவர், ஆம் ஆத்மி கட்சியையும், கேஜ்ரிவாலையும் கடுமையாக விமர்சித்து வந்தார். அக்கட்சி, டெல்லி தேர்தலுக்கு முன்பு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், கேஜ்ரிவால் சர்வாதிகாரம் செலுத்துபவர் என்று குற்றம் சாட்டி இருந்தார். ஆம் ஆத்மி அரசை கண்டித்து இன்று உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறியிருந்தார்.
இதை பற்றி விநோத் குமார் பின்னி பேசுகையில், "டெல்லி மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசிய என்னை, கட்சியை விட்டே நீக்கி இருப்பது துரதிஷ்ட வசமானது. ஆம் ஆத்மி ஒரு சர்வாதிகாரம் நிறைந்த கட்சி, அதனால், என்னை நீக்கியிருக்கும் அவர்களது முடிவில் எனக்கு ஆச்சரியம் இல்லை. " என்று தெரிவித்தார்.

அந்தமானில் படகு கவிழ்ந்ததில் 31 பேர் பலி
காஞ்சிபுரத்திலிருந்து அந்தமானுக்கு முப்பதிற்கும் மேற்பட்டோர் சுற்றுலா சென்றிருந்த படகு நடுக் கடலில் கவிழ்ந்தது. இதில் 31 பேர் உயிர் இழந்தனர். இது வரை 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் போர்ட்பிளேரில் உள்ள ஒரு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கியவர்கள், பெரும்பாலானாவர்கள் காஞ்சிபுரத்திலிருந்து சுற்றுலா வந்திருந்தவர்கள். மும்பையைச் சேர்ந்த சிலரும் படகில் இருந்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய அக்வா மெரைன் என்ற அந்தப் படகில் அதிகபட்சம் 25 பேர் வரை மட்டுமே ஏற்றலாம். ஆனால், அளவுக்கு அதிகமான ஆட்கள் ஏற்ற பட்டதால், படகு கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க அந்தமான் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to:
Posts
(
Atom
)