BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 11 August 2014

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news


காந்தியை விட சிறந்தவர் கொலைகாரன் ராஜபக்க்ஷே  என கூறும் விஜய் ரசிகர்கள் - அதிர்ச்சி தரும் பேஸ்புக் பதிவுகள்

இந்த மாதத்தில் வெளியான 15 ஆயிரத்துக்குள் இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்

இதை மட்டும் பேசிடாதிங்க! ஆணும் பெண்ணும் சந்தோஷமாக இருப்பதை கெடுக்கும் 10 வரிகள்

அம்மா இன்டர்நெட் சேவை, முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு



செல்ஃபிஷ் நடிகையில் செல்பி புத்தகம், செல்பிக்களை மட்டும் வைத்து புக் வெளியிட உள்ள கவர்ச்சி நடிகை 

சம்ந்தாவுக்கு யாருடன் திருமணம் நடக்க உள்ளது? கசந்ததா காதல்?

ஸ்டாலினை சகுனி என்று கூறிய அழகிரி, அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது ஸ்டாலின்-அழகிரி பிரச்சனை !!

'கத்தி' படத்துக்கு மாணவர்கள் எதிர்ப்பு எதிரொலி : விஜய் நீலாங்கரை வீட்டுக்கு 24 மணி போலீஸ்...

தன் காதலர் கோலியை அடிக்கடி அவுட்டாக்கும் ஆண்டர்சன்க்கு ராக்கி கட்டிய காதலி அனுஷ்கா ஷர்மா

இளம் ஹீரோக்களின் ‘ஓசி’ நடிப்பு, கோடிகளில் பிசினஸ் பேரம்? : ‘புதிய பாதை’யில் பணம் சம்பாதிக்கும் பார்த்திபன்!

இணையதள புகைப்பட போட்டியின் இறுதிசுற்றில் உள்ள 5 புகைப்படங்கள்

இந்தியாவில் இதுவரை எபோலா நோய் பரவில்லை !! சந்தேகப்பட்ட ஒரு நபருக்கும் இல்லை என்று உறுதியானது

இங்கிலாந்து தொடரில் இந்தியாவின் தோல்விக்கு முக்கியமான ஐந்து காரணங்கள்

மரடோனா மனைவி பற்றி கேட்டதால் பத்திரிக்கையாளரை கன்னத்தில் அறைந்த கால்பந்து ஜாம்பவான்

உங்கள் குழந்தைகளுக்கு பிலாஸ்டிக் டிபன் பாக்ஸில் உணவு கொடுக்குறீர்களா ?? - அதிர்ச்சி ரிப்போர்ட் !!

விண்ணில் செலுத்தப்பட்ட வைரம் கீழே விழுந்தது !! தேடி எடுப்பவர்களுக்கு வைரம் சொந்தம்

இனி மாம்பழத்தில் கொட்டை இருக்காதாம் ! கண்டுபிடித்தனர் இந்திய ஆராய்சியாளர்கள் !!

அம்மா இன்டர்நெட் சேவை, முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு


கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியை பிடித்தவுடன் முதன்முதலில் அம்மா கேண்டீன் ஆரம்பிக்கப்பட்டு குறைந்த விலையில் தரமான சுத்தமான இட்லி மற்றும் உணவுகள் வழங்கப்பட்டன, இதனால் பலரும் பயனடைந்தனர், இதையடுத்து அம்மா குடிநீர், அம்மா பார்மசி என்று பல திட்டங்கள் ஆரம்பிக்கபப்ட்டு செயல்படுத்தப்படுகின்றன, அவ்வளவு ஏன் அம்மா திரையரங்கம் கூட வரப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் இன்று யாரும் எதிர்பாராத ஒரு அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக பிராட்பேண் மற்றும் மற்றும் இண்டெர்நெட் ஆகியவை குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இனி வழங்கும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை வரவேற்கின்றீரா? இல்லையென்றால் கமெண்ட்டில் உங்கள் கருத்துகளை எழுதுங்கள்

அம்மா நர்சரி, அம்மா ஸ்கூல் ஆரம்பிங்க மேடம்


# லைக் போடு! கொண்டாடு!!

Tamilnadu chief minister J.Jayalalitha announced cheap broad band and internet service will be provided by arasu cable, this scheme is welcome by many in tamilnadu

விஜய்யின் கத்தி படத்துக்காக ராஜபக்க்ஷே காந்தியை விட சிறந்தவர் என கூறும் விஜய் ரசிகர்கள் - அதிர்ச்சி தரும் பேஸ்புக் பதிவுகள்




கத்தி படம் தற்போது ஒரு பிரச்சனையில் உள்ளது. அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா நிறுவனம் கொடூரன் ராஜபக்க்ஷேவுக்கு உறவினரான ஒருவரின் நிறுவனம். அப்படிபட்டவரின் தயாரிப்பை எதற்கு கத்தி படம் ஏற்றுக்கொண்டது. அதனால் கத்தி படத்தை தடை செய்ய வேண்டும் என அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது குறித்து மாணவர் அமைப்பிற்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஆங்காங்கே பேஸ்புக்கில் சண்டை நடந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாக விஜய் மக்கள் இயக்கம் வெறியர்கள் என்னும் பக்கத்தில் இருந்த ஒரு பதிவு அஹிம்சைவாதியையும் கத்தியை தூக்க செய்யும். இப்போது வரை அந்த பதிவை 172 புத்தி கெட்டவர்கள் ஷேர் செய்து உள்ளார்கள். அந்த கேவலமானவன் செய்த பதிவு,


"கத்தி" படத்தினை எதிர்த்து சிலர் "நான் தமிழன்" என்ற போர்வையில் திரியும் சில தமிழ் கோமாளிகள் சொல்லும் வசனங்கள் மிக வேடிக்கையாக உள்ளது.

"தமிழ் தமிழ்" என்று கொந்தளிக்காதீர் ! தமிழ் உங்களுக்கு சோறு போட போவதில்லை ! "கத்தி" படத்தினை பார்த்தோமா இல்லையா என்று சென்று கொண்டே இருக்க வேண்டும்.

"லைகா" நிறுவனத்தை எதிர்க்கும் அளவுக்கு அவர்கள் என்ன செய்து விட்டார்கள் ?

ராஜபக்சே உன்னதமான ஒரு மனிதன். தனது நாட்டுக்காகவும், தனது இனத்துக்காகவும் போராடுகிறார். அவர் தரப்பில் நீங்கள் இருந்தாலும் அதனை தான் செய்வீர்கள்.

காந்தி ஒரு இழித்த வாயன். அவர் தான் இந்தியாவை பிரித்து கொடுத்தார் என்றால், ராஜபக்சேவும் இழித்த வாயாக இருக்க வேண்டுமா ?

ரொம்ப அழுவாதீங்க ! உங்களுக்கு வேணும்னா "கத்தி" படத்தோட இலவச டிக்கெட் தரோம். அதுவும் பத்தலைனா சாப்பாடும் தரோம். அதை அள்ளிக்கிட்டு போங்க !

ராஜபக்சே அவர்களே நீங்கள் கவலைப்படாதீர். உங்களுக்காக உயிர் கொடுக்க "விஜய் மக்கள் இயக்கம்" செயல்படுவோம். உங்களது படம் எந்த தடையும் இன்றி வெளிவரும்.

அந்த பதிவை தட்டி கேட்டு சிலர் கமென்ட் செய்து உள்ளார்கள். அதற்கு அவர்கள் பிரபாகரன், காந்தி ஆகியோர் தேச துரோகி என்றும், ராஜபக்க்ஷே சிறந்த மனிதர் என்றும் கூறியுள்ளார்கள்.






இவ்வாறு கேவலமான செயல்களில் ஈடுபடுபவர்கள் விஜய் ரசிகர்களாக இருப்பதற்கு தகுதியற்றவர்கள். விஜய் ஒரு சிறந்த மனிதர், அவரது ரசிகர்கள் என கூறி கொண்டு  இவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அது நடிகர் விஜய்யின் பெயரை தான் கெடுக்கும். எனவே விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுத்தால் தான், அவர் ராஜபக்க்ஷேவுக்கு எதிரானவர் என்பது தெரிய வரும்.

அந்த பேஸ்புக் பக்கத்தின் முகவரி   https://www.facebook.com/vmifans

இந்தியாவில் இதுவரை எபோலா நோய் பரவில்லை !! சந்தேகப்பட்ட ஒரு நபருக்கும் இல்லை என்று உறுதியானது !!


உலகம் முழுவதும் அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நோய் எபோலா . இது இப்போது ஆப்ரிக்க நாடுகளில் வேகமாக பரவி வருகிறது . மத்திய அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆப்ரிக்க நாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதித்து தீவிர சோதனைக்குப் பின்னரே அனுப்பப்படுகின்றனர் .

ஆகஸ்டு 9 ஆம் தேதி சென்னையில் ஒரு பயணிக்கு நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இருந்ததாக தெரிந்தது . ஆனால் பரிசோதனையில் அவருக்கு எபோலா இல்லை என்பது உறுதியானது .

இதைப் போன்று மும்பையில் ஒரு பயணியும் சந்தேகம் ஏற்பட்டது . அதுவும் இல்லை என்று நிரூபணமானது .

இதற்காக மத்திய அரசு உதவிக்காக ஒரு ஹெல்ப்லைன் ஒன்றை அமைத்துள்ளது . அந்த ஹெல்ப்லைனை தொடர்பு கொள்ள :

 23063205
23061469  
23061302 



தான் எடுத்த செல்பிக்களை மட்டும் வைத்து புக் வெளியிட உள்ள நடிகை !!



ரியாலிட்டி டிவி ஷோக்களில் வந்து பிரபலம் அடைந்தவர் கிம் கர்தாஷியன் ( 33 ) . இவர் அடிக்கடி தன்னுடைய செல்பிக்களை இணையத்தில் வைத்து தன் ரசிகர்களை மகிழ்விப்பார் . அதுவும் இவர் தான் கற்பமாக இருக்கும்போது எடுத்த செல்பி மிகவும் பிரபலம் .

இவர் இதுவரை தான் எடுத்த செல்பிக்கள் அனைத்தையும் தொகுத்து 352 பக்கத்தில் ஒரு புத்தகம் ஒன்றை வெளியிட உள்ளார் . இந்த புக் ஒன்றின் விலை 1,200 ரூபாய் . இந்த புத்தகத்தின் பெயர் " செல்பிஷ் "

அவர் எடுத்த சில செல்பிக்களை கீழ்க் காணலாம் .







ஆணும் பெண்ணும் சந்தோஷமாக இருக்க தங்களுக்குள் பேசி கொள்ள கூடாத 10 வரிகள்






ஆண் பெண்ணுடன் பேசும் போது பேச கூடாதவை :

* உன்னுடைய எடை சற்று அதிகமாகி விட்டது என நினைக்கிறேன்.

* எனது தாய்/தங்கை/அக்கா இதனை எப்படி செய்தார் என உனக்கு தெரிய வேண்டுமா.

* நான் உனக்கு பிறகு கால் செய்கிறேன்.

* நான் மறந்துவிட்டேன் என ஒரு வரியில் பதில் அளிப்பது.

* நீ அதனை சாப்பிட போகிறாயா



பெண் ஆணுடன் பேசும் போது பேச கூடாதவை :

* ஏன் உன்னுடைய போன் எப்போதும் பிஸியாக உள்ளது.

* நீ இரவு மேட்ச் பார்த்தாயா.

* நீ இப்போது என்ன நினைக்கிறாய்.

* எனக்கு உன்னுடைய அந்த நண்பனை பிடிக்கவில்லை,

* இதோ 5 நிமிடங்களில் ரெடியாகி விடுவேன்.


இதனை பின் பற்றினால் உங்கள் நட்பு அல்லது காதல் சந்தோஷமாக இருக்கும்.

ஸ்டாலினை சகுனி என கூறிய அழகிரி, அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது ஸ்டாலின்-அழகிரி பிரச்சனை




ஸ்டாலினுடன் பிரச்சனை செய்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இப்போது தனியாக இருந்து வருகிறார் அவரது சகோதரர் அழகிரி. இந்த பிரச்சனைக்கு எப்படி முற்று புள்ளி வைப்பது என தெரியாமல் இருக்கிறார் கருணாநிதி. திமுக வில் இருக்கும் சகுனி யார் என்பதை கட்சி தலைமை உணர்ந்து கொள்ள வேண்டும் என மறைமுகமாக ஸ்டாலினை தாக்கி பேசியுள்ளார் அழகிரி. இது குறித்து அவர் பின் வருமாறு கூறியுள்ளார்.

திமுக அமைப்புச் செயலர் பொறுப்பில் இருந்த பெ.வீ.கல்யாண சுந்தரம் தலைவர் கருணாநிதிக்கு அனுப்பிய கடிதத்தில், கட்சி தோல்வி பாதையில் செல்கிறது, கட்சிக்காக உழைக்கும் ஸ்டாலின், 2016 சட்டசபைத் தேர்தலுக்கான, முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் தயாநிதி, கனிமொழி, ஆ.ராஜா ஆகியோரை, கட்சியில் இருந்து நீக்க வேண்டும், அப்போது தான், கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயர் நீங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அவர் மீது கடும் ஆத்திரமடைந்த கட்சித் தலைமை, கழகக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், பெ.வீ.கல்யாண சுந்தரத்தை கழகத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக பொதுச் செயலர் அன்பழகன் அறிவித்திருந்தார். இனி யாரும், கட்சித் தலைமையை ஏமாற்ற முடியாது, கட்சியின், அதிகார மையமாக துடிக்கும் ஸ்டாலின் தான், இப்படிப்பட்டவர்களின் பின்னணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை கட்சித் தலைமை உணர்ந்து விட்டது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். 

மனைவி பற்றி கேட்டதால் பத்திரிக்கையாளரை கன்னத்தில் அறைந்த கால்பந்து ஜாம்பவான்





மரடோனா அவரது  குழந்தை  டிகோ பெர்ணான்டோ மற்றும் காதலியுடன்  தலைநகர் பியோனஸ் ஏர்ஸில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு   வந்து இருந்தார் அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். அப்போது பத்திரிக்கையாளர் அவரை சூழ்ந்து கொண்டனர். அந்த நாள் முழுவதும் தனது மகனும் செலவிட்டு அந்த நாளை தனது மகனுக்கு பரிசாக அளிப்பதாக மரடோனா கூறி இருந்தார்.

அப்போது ஒரு பத்திரிக்கையாளர் அவரிடம் ஏதோ சைகயில் கேட்டார். அவர் குழந்தையின் தாயார் பற்றி கேட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக கோபமடைந்த மரடோனா, குழந்தையின் தாய் ஏன் குழப்பமடைய வேண்டும் என சொல்லி விட்டு காரில் இருந்து இறங்கி அந்த பத்திரிக்கையாளரை கன்னத்தில் அறைந்தார். இதனால் மரடோனாவுக்கு புதிய பிரச்சனை வந்து உள்ளது. 

இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன்னுக்கு ராக்கி கட்டிய அனுஷ்கா ஷர்மா




இந்தியா இங்கிலாந்து தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் தடுமாறி வருகிறது. இதில் அதிகம் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது நம்பிக்கை நாயகன் விராத் கோலி தான். இந்த தொடருக்கு முன்பு வரை எல்லாரும் விராத் கோலியை புகழ்ந்து தள்ளி கொண்டு இருந்தார்கள். இப்போது விராத் சோபிக்காததால் அதே கூட்டம் கோலியை விமர்ச்சித்து வருகிறது.

கோலி சரியாக ஆடாததற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அனுஷ்கா ஷர்மா தான். அவரின் அழகில் மயங்கி அவரை பற்றியே நினைத்து கொண்டு இருப்பதால் இவரால் முழு கவனத்துடன் ஆட முடியவில்லை. அதனால் தான் ரன் எடுக்க தடுமாறுகிறார் என்று கூறுகிறார்கள்.  இந்த தொடரில் அதிக முறை ஆண்டர்சன் பந்தில் தான் கோலி அவுட்டாகி உள்ளார். எனவே அனுஷ்கா ஷர்மா ஆன்டர்சன்னுக்கு ராக்கி கயிறு கட்டி உள்ளார். அதற்கு கைம்மாறாக அடுத்த போட்டியில் அவர் கோலி விக்கெட்டை எடுக்க மாட்டார். இவ்வாறு பேஸ்புக்கில் கோலியை கலாய்த்து வருகிறார்கள்.

இது மிகவும் தவறான செயல் ஆகும். ஒரு வீரர் நன்றாக ஆடும் போது அவருக்கு துணையாக இருப்பதை விட அவர் நன்றாக ஆடாத சமயத்தில் துணை இருப்பவன் தான் உண்மையான ரசிகன்.

சம்ந்தாவுக்கு திருமணம் நடக்க உள்ளது ??




இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்து கொள்ள போவதாக ஜிகர்தண்டா படத்தின் நாயகன் சித்தார்த் கூறியுள்ளார். இவரும் நடிகை சமந்தாவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது. இவர் இது குறித்து பேட்டி அளித்துள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். அது காதல் திருமணமாக இருக்குமா என தெரியவில்லை என கூறியுள்ளார். மணப்பெண் யார் என்று இப்போது சொல்ல மறுத்து விட்டார். சித்தார்த்துக்கு திருமணம் சமந்தாவுடன் தான் நடக்க போகிறது என பலரும் நம்புகிறார்கள். 

இந்தியாவின் தோல்விக்கு முக்கியமான ஐந்து காரணங்கள்




இந்திய அணி வெளிநாடுகளில் தொடர்ந்து தடுமாறி வருகிறது. இப்போது இங்கிலாந்து உடனான தொடரில் தொடர்ந்து 2 போட்டிகளில் தோற்று விட்டது. கடைசி போட்டியில் வென்றால் தான் தொடரை சமன் செய்ய முடியும் . அதற்கு இந்தியா கடுமையாக போராட வேண்டி இருக்கும். இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கான காரணம் என்ன என்பது குறித்து காரணங்கள் ஆராயப்பட்டு உள்ளது. அவை,

* 2 வது டெஸ்டில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த இஷாந்த் ஷர்மா காயம் ஆனது.

* இந்தியாவின் பீல்டிங் மோசமாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஸ்லிப் பீல்டிங் மோசமாக உள்ளது. இதுவரை 8 கேட்சுகளை தவறவிட்டு உள்ளனர்.

* தோனியின் கேப்டன்சியில் சில தவறுகள் உள்ளன. அவரது அனுகுமுறை டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு உதவவில்லை.

* சச்சின், டிராவிட், லட்சுமணன் என இந்திய பேட்டிங்கை வலிமையாக்கிய இவர்களுக்கு மாற்று உருவாகவில்லை.

* இந்தியாவின் தூண்களாக நம்ப பட்ட கோலி ரன் அடிக்க வில்லை, நிலைத்து நின்று ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா விரைவில் அவுட் ஆகி விடுகிறார்.

ஆகஸ்ட் மாதத்தில் 15 ஆயிரத்துக்குள் இருக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள்



* சியோமி எம்.ஐ. 3 - ரூ. 13,999



* அசுஸ் ஜென்போன் 5 - ரூ. 9999



* நோக்கியா லுமியா 630 - ரூ. 11,500



* பிளாக்பெர்ரி கியூ 5 - ரூ. 13,990


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media