BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 2 November 2014

தமிழரின் வரலாறு : தமிழனின் நாகரீக வீழ்ச்சிக்குச் சில காரணங்கள்



1. தமிழ் உணர்வு அற்றுப் போயிற்று

2. கலப்பு மன்னர்கள் ஆட்சியும் 
( குலோத்துங்கன் )
வேற்று மன்னர்கள் ஆட்சியும்
( விசயநகர மன்னர்கள் )
தோன்றின.

3. வேற்று மத மன்னர்கள் ஆட்சி ( மதுரை சுல்தான்கள், ஆற்காட்டு நவாப்புகள், ஆங்கிலேய் ஆட்சி ) தோன்றியதால் தமிழன் உணர்வற்றுப் போனான்

4. ஆரியக் கூத்தாடிகளையும், அவர்களது அபத்தக் கருத்துகளையும் ஏற்றமை

5. தமிழ் மன்னர்களைத் தமிழ் மன்னர்களே காட்டிக் கொடுத்தல் ( மாலிக்கபூரை வரவேற்றல், மதுரை வீரபாண்டியன் - சுந்தர பாண்டியன் போராட்டம் )

6. குறிப்பிட்ட சிலரை வீர வழிபாடு செய்தல். அடிமைப்புத்தி ஏற்பட்டதன் விளைவு இது திரைப்பட நடிகனையும், நடிகையையும் வழிபட நேர்ந்தது

7. சாதி சமயப் பிணக்குகள், வலங்கை - இடங்கை போராட்டம் இன்னபிற தமிழனை தமிழனாகக் காட்டாமல், சாதி சமயப் பிரிவினை உடையவனாகக் காட்டுதல்

8. அரபியக்கொள்ளைக் காரர்களால் தமிழரது கடல் வாணிகமும் கடல் ஆதிக்கமும் குன்றத் தொடங்கல்

9. இடைத் தரகராக மாறிய ஆரேபியரும், ஐரோப்பியரும், தமிழர் வணிகத்தைச் சீரழித்தல்

10. கல்விக் கூடங்கள் பாமரருக்கு இல்லை.

11. மேற்கல்வி, பூணூல் பார்ப்பனனுக்கு மட்டுமே
( ராமப்பையனின் குளறுபடிகள் )

12. போர் முறையில் துப்பாக்கியும், பீரங்கியும் ஆங்கிலேயரின் திறமையை உயர்த்தியது தமிழர் வீரத்தின் தரத்தைத் தாழ்த்தியது.

13. மிளகாய் மலிவாக வந்தது மிளகின் ஆதிக்கம் குன்றியது

14. ஐரோப்பியர்கள் இயந்திரங்கள் மூலம் துணிகளை நெய்து இந்தியத் துணிவணிகத்தை வீழ்த்தினர்

15. இரும்பு உற்பத்தி, கப்பல் கட்டுதல், போன்ற பல முயற்கிகளுக்கு ஆங்கிலேய கம்பனியர்களும், அதன் பின் வந்த ஆங்கிலேயரும் பல்வேறு தடைகள் வித்தனர் எந்தெந்த காரணங்களால் தமிழ் நாகரிகம் உச்சம் பெற்றதோ, அதற்கு மாறான காரணங்களால் தமிழ் நாகரிகம் வீழ்ச்சியற்றது.

உணவே மருந்து : சோயாவை பயன்படுத்துவோம் மார்பக புற்று நோய் வராமல் தடுப்போம்



தற்போது புற்றுநோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தகைய புற்றுநோயில் நிறைய வகைகள் உள்ளன. அவற்றில் மார்பக புற்றுநோயால் பெரும்பாலான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் 30 வயதுள்ள 229 பெண்களில் ஒருவருக்கும், 40 வயதுள்ள 68 பெண்களில் ஒருவருக்கும், 50 வயதில் 37 இல் ஒருவருக்கும் நிச்சயம் மார்பக புற்றுநோயானது இருக்கிறது என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
பொதுவாக மார்பக புற்றுநோயானது அம்மா, பாட்டி போன்றவர்களுக்கு, 50 வயதிற்கு முன்னரே மார்பக புற்றுநோயானது வந்தால், அவை நிச்சயம் அவர்களது குழந்தைகளுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சொல்லப்போனால், இதை ஒரு பரம்பரை நோய் என்றும் சொல்லலாம். ஆகவே இத்தகைய நோய் வருவதற்கு முன்பே, அதனை வராமல் தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக, இந்த நோய் ஒருசில பழக்கவழக்கங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளின் மூலமாகவும், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. உதாரணமாக, உணவுக்கட்டுப்பாடு இல்லாதால் உடல் எடை அதிகரித்தல், புகைப்பிடித்தல், போதைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவையும் மார்பக புற்றுநோயை அதிகரிக்கும். சரி, இப்போது அத்தகைய மார்பக புற்றுநோயை தடுப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பார்ப்போமா. தினமும் 30-45 நிமிடம் உடற்பயிற்சியை செய்தால், மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு பாதியாக குறைகிறது. குறிப்பாக தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சியை மேற்கொள்வது நல்லது. உடலுக்கு தகுந்த எடை இல்லாமல் அதிகமாக இருந்தால், அதுவும் 18 வயதிலிருந்து சரியாக இல்லாவிட்டால், மாதவிடாய் சுழற்சி நிற்கும் நேரத்தில் மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதுமட்டுமின்றி, ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக எடை அதிகரித்தால், அந்த நேரத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்து, புற்றுநோய் உண்டாகும். கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெய்களான சூரியகாந்தி எண்ணெய், சோள எண்ணெய் மற்றும் பல எண்ணெய்களை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், புற்றுநோய் அபாயம் உள்ளது. எனவே உணவில் கொழுப்பு இல்லாத எண்ணெய்களான ஆலிவ் ஆயில் போன்ற எண்ணெய்களை சேர்ப்பது மிகவும் நல்லது.

பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரோட்டினாய்டு அதிகம் உள்ளது. இவை புற்றுநோயை உண்டாவதைத் தடுக்கும் ஒரு சிறந்த பொருள். ஆகவே கரோட்டினாய்டு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஆனால் உடலில் கரோட்டினாடு குறைவாக இருந்தால், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பு இருமடங்கு அதிகம் உள்ளது. எனவே தினமும் பழங்கள் மற்றும் காய்கறிகளில், கேரட், தக்காளி, தர்பூசணி மற்றும் கீரைகள் போன்றவற்றை தவறாமல் சேர்ப்பது நல்லது. சோயா பொருட்களை அதிகமான அளவில் உணவில் சேர்ப்பதன் மூலம் மார்பக புற்றுநோயை தடுக்க முடியும். ஏனெனில் அதில் உளள பைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், மார்பக புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளின் தாக்கத்தை குறைத்துவிடும். எனவே பெண்கள் சோயா பொருட்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளுக்கு மட்டும் நல்லதல்ல, தாய்க்கும் தான். இதனால் ஈஸ்ட்ரோஜனின் அளவு சீராக இருக்கும். எனவே தாய்ப்பால் கொடுத்தால், மார்பக புற்றுநோய் வருவதைத் தவிர்க்கலாம். புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அது மாதவிடாய் சுழற்சி நிற்கும் நேரத்தில், மார்பக புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை பெண்கள் தவிர்ப்பது நல்லது.

நிலாவுக்கு சீனா அனுப்பிய விண்கலம் : பத்திரமாக பூமியை வந்தடைந்தது



நிலவை ஆய்வு செய்ய சீனாவின் விண்வெளி ஆய்வு மையத்தால் அனுப்பப்பட்ட விண்கலம் தனது பணியை முடித்துக் கொண்டு சனிக்கிழமை பத்திரமாக பூமியை வந்தடைந்தது. நிலவை ஆராய்ச்சி செய்ய விண்கலம் அனுப்பி அதனை பத்திரமாக பூமியில் தரையிறக்கியுள்ள நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யாவை அடுத்து 3வது நாடாக சீனா சாதனை படைத்துள்ளது. வரும் 2017ஆம் ஆண்டு நிலவுக்குச் சென்று அங்கிருந்து கல் மற்றும் மணல் துகள்களைக் கொண்டு வரும் விண்கலத்தை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.

அகில இந்திய வானொலியில் இன்று காலை 11 மணிக்கு பிரதமர் உரை


பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கி பாத்’ மனதின் குரல் என்ற பெயரில் இன்று ஞாயிற்றுக்கிழமை வானொலியில் உரையாற்றுகிறார். இன்று காலை 11 மணிக்கு அனைத்து வானொலி நிலையங்களிலும் பிரதமரின் உரை ஒலிபரப்பாகிறது. இதன் தமிழாக்கம் இரவு 8 மணிக்கு தமிழகத்தில் உள்ள அகில இந்ந்திய வானொலியின் அனைத்து நிலையங்களிலும் ஒலிபரப்பாகும்.
முன்னதாக கடந்த அக்டோபர் 3–ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி முதன் முறையாக வானொலியில் உரையாடினார். அப்போது அவர் மக்கள் கதர் அணிவதை ஊக்குவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டு மக்கள் அனைவரையும் வானொலி வழியாக தொடர்பு கொள்வதாகவும் தன் மனதின் வார்த்தைகளை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று நவம்பர் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு பிரதமர் வானொலியில் உரையாற்றுகிறார்.

5 தமிழக மீனவர்களுக்காக மேல்முறையீடு: மத்திய அரசின் முடிவுக்கு பாஜக வரவேற்பு



போதைப் பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இலங்கை மத்திய மாகாண உயர் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களுக்காக அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மத்திய அரசு எடுத்துள்ள முடிவை பாஜக மேலிடம் வரவேற்றுள்ளது. இதுகுறித்து அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பித்ரா செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மீது போதைப் பொருள் கடத்தியதாக வழக்குத் தொடரப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக மீனவர்கள் தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் முன்வைக்க போதுமான வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று மத்திய அரசு கருதுகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே முந்தைய ஆட்சிக் காலத்தில் இருந்ததைவிட தற்போது இணக்கமான உறவு நிலவுகிறது. இதைப் பயன்படுத்தி ராஜீய முறையில் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது.

இந்த விவகாரத்தில் முதல் கட்டமாக, தமிழக மீனவர்கள் சார்பில் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மத்திய அரசு முன்வந்துள்ளது. இது, தமிழக மீனவர்களுக்கு சாதகமான நடவடிக்கைதான். இதை பாஜக வரவேற்கிறது. எனினும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை நாட்டுச் சட்டப்படி அந்த நாட்டு சிறையில் உள்ளனர். எனவே, அந்த நாட்டு அரசுடன் ராஜ்ஜிய முறையிலும், சட்ட ரீதியாகவும் பேசி மீனவர்களை விடுதலை செய்யவோ, இந்தியாவுக்கு கொண்டு வரவோ மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பித் பித்ரா கேட்டுக் கொண்டார்.

இந்திய தூதரகம் நடவடிக்கை : இலங்கை சிறையில் உள்ள ஐந்து தமிழக மீனவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.இது தொடர்பாக அங்குள்ள தூதர் ஒய்.கே. சின்ஹா, வெளியுறவுத் துறைச் செயலர் சுஜாதா சிங்குக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதில், தமிழக மீனவர்கள் உள்பட எட்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு, அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதாக தில்லியில் உள்ள வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை நாட்டு சட்டப்படி, மரண தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட கைதிகள் மேல்முறையீடு செய்ய பதினான்கு நாள்கள் அவகாசம் உள்ளது. எனவே, வரும் வாரத்தில் தமிழக மீனவர்கள் 5 பேர் சார்பிலும் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media