BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 8 November 2014

எளிய இயற்கை மருத்துவம் : கோதுமை,பீட்ரூட்



  • யை நல்லா கழுவி முளைகட்ட வைக்கணும். முதல் நாள் சாயங்காலம் முளைகட்டி, மறுநாள் காலையில எடுத்து அதோட கொஞ்சம் தண்ணிவிட்டு நல்லா அரைச்சி பால் எடுக்கணும். அதுல கொஞ்சம் தேங்காய்ப்பால், சுவைக்கு தேன் சேர்த்துச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்ல பலம் கிடைக்கும்.இது, வாத நோயை குணமாக்கும். வெள்ளை அணுக்களோட எண்ணிக்கையை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, மூக்குல நீர் வடியறது உள்ளிட்ட சின்னச் சின்ன தொந்தரவுகளையும் அண்ட விடாது. இன்னும் சொல்லப்போனா, புற்றுநோயைக் எதிர்க்கக்கூடிய சக்திகூட இருக்கு இந்த கோதுமைப்பாலுக்கு. இதைச் சாப்பிடும்போது சிலருக்கு வயிற்றுப்போக்கு வந்தாலும் வரும். அப்படி வந்தால் குடிக்கறத நிறுத்திடணும். வயிற்றுப்போக்கு நின்னதும், ஒருநாள்விட்டு கோதுமைப்பாலைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடம்பு ஏத்துக்கும்.
  • பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பல் மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். மற்ற கீரைகளைப்போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.

வங்கிகளை வழிக்கு கொண்டுவர என்ன செய்ய வேண்டும்


ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க கட்டணம்(ரூ.20) விதித்த வங்கிகளை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம். "அனைத்து பகுதிகளிலும் வங்கிகளை திறக்க முடியாது என்பதால்தான் ஏடிஎம் மையங்களை வங்கிகள் திறந்தன. இப்போது நம்மிடமிருந்தே பணத்தை பறிக்கும் செயலிலும் வங்கிகள் இறங்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, நாம் வங்கிகளுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும். வங்கி கணக்கு வைத்திருக்கும் நண்பர்கள் குரூப்பாக வங்கிக்கு சென்று, ஆளுக்கு ரூ.100 மட்டும் சலானை நிரப்பி எடுக்க வேண்டும்.

இப்படி நண்பர்கள் ஐந்து பேர், பத்து பேர் என தினமும்போய் பணத்தை எடுக்க வேண்டும். ஊருக்கு ஊர் இதேபோல செய்ய வேண்டும். அப்படி பணம் எடுப்பதில் எந்த தவறும் கிடையாது. ஏன் இப்படி குறைந்த பணத்தை எடுக்கிறீர்கள் என்று கேட்டால், இப்படி ஏ.டி.எம்மில் எடுத்து எங்களுக்கு பழக்கம் என்று கூறிவிடுங்கள். இவ்வாறு நாம் பணம் எடுக்க சென்று தொல்லை தந்தால், வங்கி ஊழியர்கள் அதை மேலிடத்துக்கு எடுத்துச் சொல்வார்கள். ஒரே மாதத்தில் புதிய நடைமுறையை வங்கிகள் திரும்ப பெறும்"

ஐ.எஸ் எதிர்ப்பு : ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமேனிக்கு ஒபாமா ரகசியக் கடிதம்



இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு கோரி, ஈரான் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ரகசியக் கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் வெளியாகும் "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகையில் வெளியான செய்தி: ஈரானில் உச்ச அதிகாரம் படைத்த மதத் தலைவர் அயதுல்லா கமேனிக்கு, அதிபர் ஒபாமா கடந்த மாதம் ரகசியக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு ஈரானின் ஆதரவை அவர் கோரியிருந்தார்.

எனினும், நவம்பர் 24-ஆம் தேதி கெடுவுக்குள் அணுசக்திப் பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் காணப்பட்டால்தான், ஐ.எஸ். விவகாரத்தில் அமெரிக்காவும், ஈரானும் இணைந்து செயலாற்றுவது சாத்தியமாகும் எனவும் ஒபாமா தெளிவுபடுத்தியுள்ளார். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை ஒடுக்க, ராணுவ ரீதியாகவும், ராஜீய ரீதியாகவும் அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியில், ஈரானுக்கு முக்கியப் பங்குள்ளதாக ஒபாமா கருதுவது இந்தக் கடிதத்தின் மூலம் வெளிப்படுகிறது என்று அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டிலிருந்து, அயதுல்லா அலி கமேனிக்கு ஒபாமா எழுதும் 4-ஆவது கடிதம் இது. இந்தச் செய்தி வெளியானதையடுத்து, ஒபாமாவுக்கு குடியரசுக் கட்சி எம்.பி.க்களான ஜான் மெக்கெய்ன், லிண்ட்úஸ கிரஹம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐ.எஸ்.ஸýக்கு எதிராக, மிதவாத சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவிமடுக்க மறுக்கும் ஒபாமா, அயதுல்லா கமேனியை அணிசேர அழைப்பது கண்டிக்கத்தக்கது என ஜான் மெக்கெய்ன் கூறினார். லிண்ட்úஸ கிரஹம் கூறுகையில், ""ஒபாமா கூட்டணி அமைக்க விரும்பும் அதே ஈரான்தான், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தது'' என்று குற்றம் சாட்டினார்.

இந்திய புராதன கலைப்பொருள்கள் கடத்தப்படுவது கவலை தருகிறது : உச்ச நீதிமன்றம்

இந்தியாவைச் சேர்ந்த புராதன கலைப் பொருள்கள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் கலைப்பொருள் பாதுகாப்பு அதிகாரியாக சுனில்குமார் உபாத்யாய என்பவர் பணியாற்றி வந்தார். அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஊழல்களை அம்பலப்படுத்தி வந்த இவர், சமீபத்தில் காணாமல் போய்விட்டார். இந்நிலையில், சுனில்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடக் கோரி, ஆட்கொணர்வு மனுவை அவரது உறவினர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் செலமேஸ்வர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது மூத்த வழக்குரைஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார். அவர் கூறியதாவது: இந்தியாவைச் சேர்ந்த புராதன கலைப் பொருள்கள் கடத்தப்பட்டு, வெளிநாடுகளைச் சேர்ந்த சோத்பிஸ், கிறிஸ்டிஸ் போன்ற ஏல நிறுவனங்களுக்குச் செல்வதாக மத்திய தலைமைத் தணிக்கையாளர் அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களிலும் இதுபோன்ற குறைபாடுகள் உள்ளன என்று துஷ்யந்த் தவே கூறினார். அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டுக் கூறுகையில், இந்தியக் கலைப்பொருள்கள் வெளிநாடுகளைச் சென்றடைவதற்கு கவலை தெரிவித்தனர். ""கொல்கத்தா அருங்காட்சியகத்துக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இது குறித்து எந்தவிதமான விசாரணை நடத்துவது என்பது பிறகு முடிவு செய்யப்படும்'' என்று நீதிபதிகள் கூறினர்.

கங்கை தூய்மைத் திட்டம் : ஒரு நாள் கூட்ட செலவு ரூ.44 லட்சம்



"கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டம் தொடர்பாக நடைபெற்ற ஒரு நாள் ஆலோசனைக் கூட்டத்துக்கு செலவு செய்யப்பட்ட ரூ.44 லட்சம் வீணடிக்கப்படவில்லை' என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி விளக்கம் அளித்துள்ளார். தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அந்த ஆலோசனைக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் கவனித்தது. செலவுத் தொகை முழுவதும் அரசின் நிறுவனமான இந்திய சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்திடம் கொடுக்கப்பட்டது. அந்த நிறுவனம் தனியாருக்குச் சொந்தமானது அல்ல. அரசின் நிதியானது, அரசிடமே சென்று சேர்ந்துவிட்டது. எனவே, அந்தத் தொகை வீணடிக்கப்படவில்லை என்றார் உமா பாரதி.

முன்னதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அரசு அளித்த பதிலில், "கங்கை நதி தூய்மைத் திட்டம் தொடர்பாக, தில்லி விஞ்ஞான் பவனில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஒரு நாள் கூட்டத்துக்கு ரூ.44 லட்சம் செலவிடப்பட்டது. அதில், விருந்தினர்கள் தங்குவதற்கு ரூ.26.7 லட்சமும், அதிகாரிகளின் பயணத்துக்கு ரூ.8.8 லட்சமும், விளம்பரத்துக்காக ரூ.5.1 லட்சமும் செலவிடப்பட்டது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான கேள்விக்கு அமைச்சர் உமா பாரதி மேற்கண்டவாறு பதிலளித்தார்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு சட்டவிரோதம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

"ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சட்டவிரோதமானது' என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. மேலும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி மக்கள்தொகைப் பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2010-இல் பிறப்பித்த உத்தரவையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதுதொடர்பாக மக்கள் தொகைப் பதிவாளர் சார்பில் 2012-இல் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் ஃபாலி நாரிமன், யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:

அரசு நடவடிக்கை சரியே: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கையில் எந்தெந்த விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவின்படி 2000, ஜனவரி 13-இல் ஓர் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், குடும்பத் தலைவர் ஆணா, பெண்ணா? அவர் தலித் வகுப்பினரா? அல்லது பழங்குடியின வகுப்பினரா? அல்லது வேறு வகுப்பினரா? என்பதை மட்டும் பதிவு செய்ய வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. எந்த ஜாதியை சேர்ந்தவர் என்ற விவரத்தைப் பதிவு செய்வது குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மேலும், 2010-இல் அரசு எடுத்த கொள்கை முடிவின்படி வெளியிடப்பட்ட மற்றொரு அரசாணையில் மேற்கண்ட விவரத்துடன், வீட்டில் வசிப்பவர்கள் விவரம், திருமண நிலை, குடிநீர் வசதி, குடியிருப்பில் உள்ள கழிப்பறை வசதிகள், கழிவுநீர் வசதிகள், சமையல் எரிவாயு, தொலைக்காட்சி, வானொலி, தொலைபேசி, கைப்பேசி, வாகனங்கள் போன்றவை தொடர்பான விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. 

வரம்பு மீறிய உயர் நீதிமன்றம்: இதுதொடர்பான ஆவணங்களைச் சரியாக ஆராயாமல் சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு பதிவாளருக்கு 2010-இல் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, அதன் அதிகார வரம்பை மீறிய செயலாகும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். அரசின் கொள்கை முடிவுகள் சரியா, தவறா என்பது குறித்து நீதிமன்றங்கள் கருத்துக் கூறலாமே தவிர, அவற்றை மாற்றியமைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. இந்த வழக்கை உணர்வுப்பூர்வமாக அணுகியுள்ள சென்னை உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கையை சட்டம் அனுமதிக்காது. ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். பின்னணி: "1931-ஆம் ஆண்டுக்குப் பிறகு அரசியல், சமூக, பொருளதார ரீதியில் பின்தங்கியுள்ள மக்களைக் கண்டறிய வேண்டியது அவசியம். எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என 2008-இல் மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அந்த உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லை எனக் கூறி சமூக நீதிப் பேரவையின் வழக்குரைஞர் கே. பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், "எந்தெந்த ஜாதியை சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்? பழங்குடியினர், தலித்துகள் விவரங்கள் கணக்கெடுக்கப்படுவதைப்போல பிற வகுப்பினரும் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற கணக்கெடுப்பு நடத்த பரிசீலிக்க வேண்டும்' என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, "மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பதிவு செய்ய வேண்டிய விவரங்கள் தொடர்பான படிவங்கள் ஏற்கெனவே (2010, ஏப்ரல்) அச்சடிக்கப்பட்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. அதனால், 2011-ஆம் ஆண்டில் நடத்தப்படும் கணக்கெடுப்பின் போது அரசின் கொள்கை முடிவின்படி தலித், பழங்குடியினர், பிற வகுப்பினர் என்ற விவரத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும்' என்று நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கைத் தொடர்ந்த பாலுவுக்கு மத்திய அரசு பதில் அனுப்பியது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி தொடுத்த வழக்கில், முந்தைய உத்தரவின்படியே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்' என உயர் நீதிமன்றம் 2010-இல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து மக்கள்தொகைப் பதிவாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2012-இல் மேல்முறையீடு செய்யப்பட்டது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media